எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவடையும் வரையில் காத்திருக்காமல் அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரியுள்ளார். தேர்தலின் பின்னர் அமைச்சர்களின் எண்ணிக்கையை 35 ஆக குறைக்க முடியுமாயின், தேர்தல் வரையில் காத்திராது அமைச்சர்களின் எண்ணிக்கையை தற்போதே குறைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
புத்தளத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.