பொதுத் தேர்தலைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தவென 75 வெளிநாட்டுப் பிரதிநிதிகளை பெப்ரல் அமைப்பும், தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான மத்திய நிலையமும் வரவழைக்க விருக்கின்றது.
இந்த இரு நிறுவனங்களும் இம் மாத பிற்பகுதியில் இவர்களை இலங்கைக்கு வரவழைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன.
எதிர்வரும் 8 ம் திகதி நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலைக் கண்காணிக்கும் பணியில் வெளிநாட்டுப் பிரதிநிதிகளை வரவழைத்து ஈடுபடுத்த மேற்படி இரு நிறுவனங்களுக்கும் தேர்தல் ஆணையாளர் அனுமதி வழங்கியுள்ளார்.
எதிர்வரும் 25 ஆம் திகதிக்குப் பின்னர் இவர்கள் இலங்கைக்கு வருகை தருவார்கள். பெப்ரல் அமைப்பின் இணைப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார். இதன்படி, பெப்ரல் அமைப்பு 50 கண் காணிப்பாளர்களையும் தேர்தல் வன்முறையைக் கண்காணிக்கும் மத்திய நிலையம் 25 கண்காணிப்பாளர்களையும் வர வழைக்கவுள்ளது.
பெப்ரல் அமைப்பானது ஜப்பான், மலேசியா, தாய்லாந்து, இந்தோனேஷியா உட்பட ஆசிய நாடகளிலிருந்தே கண்காணி ப்பாளர்களை வரவழைப்பதாகத் தெரிவித் ததுடன் தேர்தல் வன்முறையைக் கண் காணிக்கும் மத்திய நிலையமானது ஆசிய – ஐரோப்பிய நாடுகளிலிருந்து கண்காணிப்பாளர்களை வரவழைக்கவுள்ளதாகவும் தெரிவித்தது.
இதேவேளை, தேர்தல் காலங்களில் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடபடுவோர் தொடர்பில் கவனஞ் செலுத்துவதுடன் அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் கட்சித் தலைவர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் பெப்ரல் அமைப்பு வேண்டுகோள் விடுக்கின்றது.
rohan
//பொதுத் தேர்தலைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தவென 75 வெளிநாட்டுப் பிரதிநிதிகளை பெப்ரல் அமைப்பும், தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான மத்திய நிலையமும் வரவழைக்க விருக்கின்றது.//
Rubber stamp எல்லாம் செய்து வைத்திருப்பர்கள். வந்து குத்திவிட்டுப் போவது தானே!