விடுதலைப்புலிகளும் புலம்பெயர் தமிழர்களும்

itb.bmpஇலங் கையின் அரச பயங்கரவாதம் தொடர்கின்ற நிலையில் விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் குறித்து பேசுவது அர்த்தமற்றது என உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இமானுவல் அடிகளார் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசியலில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையிலான கருத்து முரண்பாடுகள் கவலையளிப்பதாகவும், எந்தக் கட்சியினர் தமது குறிக்கோளில் உறுதிப்பாட்டுடன் உள்ளார்களோ அவர்களை தாம் ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் விடுதலைப்புலிகள் ராணுவ ரீதியாக தோற்கடிக் கப்பட்ட பின்னரான காலகட்டத்தில் வெளிநாடுகளில் வாழும் இலங்கை தமிழர்களின் அரசியல் நடவடிக்கைகள் எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து, ஐ சி ஜி எனப்படும் சர்வதேச நெருக்கடிகள் தொடர்பான ஆய்வு மையம் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது அறிக்கையில் சில யோசனைகளை பரிந்துரை செய்திருந்தது.

அதில் முக்கியமாக, வெளிநாடு வாழ் இலங்கை தமிழர்கள் இனிமேலாவது விடுதலைப்புலிகளின் வழிமுறைகளை நிராகரிக்க வேண்டும் என்று ஐ சி ஜி அமைப்பு கூறியிருக்கிறது.

BBC தமிழோசை

Show More
Leave a Reply to பல்லி Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

15 Comments

  • BC
    BC

    அருட்தந்தை என்றால் பாதிரியார் தானே? நந்தா பாதிரியார்களை பற்றி சொன்னது சரியாக தானே இருக்கிறது.

    Reply
  • மாயா
    மாயா

    புலத்தில் தாம் இருக்க இது போன்ற மதம் பரப்புவோர் ஈடுபடுகிறார்கள். இப்படியான அறிக்கைளை வைத்து இவர்களால் வாழ முடியும். இவர் ஒரு புலி என்பது தெட்டத் தெளிவு. அருட்தந்தை என்ற பதத்துக்கே அர்த்தமற்றோர் இவர்கள். நமது எழுத்துகள்தான் இவர்களை மக்களிடம் இருந்து ஒதுக்கும். அடுத்தவர் ஜெகத் கஸ்பார். ஒரு இந்துவையே கிறிஸ்தவன் என காட்ட முற்பட்டது, அதில் கஸ்பார் சொன்ன பெரிய புளுகு.

    Reply
  • thurai
    thurai

    //இலங்கையின் அரச பயங்கரவாதம் தொடர்கின்ற நிலையில் விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் குறித்து பேசுவது அர்த்தமற்றது என உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இமானுவல் அடிகளார் தெரிவித்துள்ளார்.//

    அரச பயங்கரவாதம் பற்ரி பேசு முன், பல தமிழர்களை பயங்கரவாதத்தால் அழித்துவிட்டு, புலம் பெயர்நாடுகளில் சுக வாழ்வு வாழ்வோரை சட்டத்தின் முன் நிலைநிறுத்த அடிகளார் உதவுவாரா?

    துரை

    Reply
  • chandran.raja
    chandran.raja

    மதத்திற்கெதிராக மதத்தை எதிர்நிறுத்துவது எந்த விதத்திலும் நாம் உடன்பாடு இல்லாதிருக்கும் போது நீளஅங்கிபோட்ட வெள்ளை பாதிரிகளின் நடவடிக்கைகளாலே மனத்சுத்தமான பாதிரிகளையும் எம்மால் பாதுகாக்க முடியாமல் இருக்கிறது. ஆனாபடியால்தான் நந்தாவின் வாதங்களுக்கும் நாம் மெளனம் சாதிக்க வேண்டியுள்ளது. விரியட்டும்..நல்ல பயன்யுள்ள கருத்துக்களைத் தேடிச்செல்வோம்.

    Reply
  • தமிழ்வாதம்
    தமிழ்வாதம்

    மக்களை மந்தைகளாக்குவதில் கருத்தாடும் மதவெறியர்களும்,மற்றவர்களும் ஒன்றாகவே சிந்திக்கின்றார்கள்.
    ஒரு பானைச் சோறுக்கு ஒரு சோறு தேடிக் கொள்கிறார்கள்.இங்கு எழுதுபவர்கள் புலி,பாதிரி என்ற பயப்பிராந்தியில் பயணிக்கிறார்கள்.மகிந்த அரசும்,மேற்குலகும் தமிழர் தலையில் பூச்சூடுவதை பார்க்க மறுக்கிறர்கள்.

    கிழே தொடர்ந்து படியுங்கள்.

    டேவிட் மிலிபான் பேசியது:இலங்கை அரசிற்கான பிரச்சாரம்.

    …..It’s also important to say as Tamils lived in fear, some expelled from their country, that they, you also lived in the shadow of the LTTE, a terrorist organisation which committed countless atrocities itself, which refused to tolerate dissent, which forcibly recruited children as soldiers and which again refused to allow Tamil civilians to escape from the fighting. I think it’s important to say those things as well.
    …………….

    But it’s important that we say that we are in solidarity with all those Sri Lankans, whatever their background, who want to live up to the commitments in the Sri Lankan constitution and who want to live up to the founding ideals of a country that respects every single one of its citizens without fear or favour……..
    British Foreign Secretary David Miliband to members of the GTF at the House of Commons on 24 February 2010:

    கெஹெலிய ரம்புக்வெல கூறியது.GTF என்பது புலிகளின் தொடர்பாளர்களாக இருந்தால் நாம் கவலைப்படுவோம்..

    “ ‘If’ the GTF is affiliated with the LTTE, then we regret that a nation such as Britain would preach democracy while attending a forum that preaches terrorism…
    Defence Spokesman Keheliya Rambukwela.

    உங்கள் தலைகளில் பூ சுற்றப்பட்டது தெரிகிறதா!
    GTF என்பது மேற்கினதும்,மகிந்தவினதும் கூட்டுத்தயாரிப்பு இல்லையா? வட்டுகோட்டை,நாடு கடந்ததை முந்துகிற முந்திரிக் கொட்டை அல்லவா.

    Reply
  • NANTHA
    NANTHA

    //இலங் கையின் அரச பயங்கரவாதம் தொடர்கின்ற நிலையில் விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் குறித்து பேசுவது அர்த்தமற்றது என உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இமானுவல் அடிகளார் தெரிவித்துள்ளார்.//

    பாதிரியார் புலிக் கொலைகாரர்களுக்கு “பாவமன்னிப்பு” கொடுத்துவிட்டார் போல் தெரிகிறது. அரசின் பயங்கரவாதம் தொடர்கிறதாம்! “ஆட்கடத்தல், வெள்ளைவான் கடத்தல், A-9 வீதியில் கப்பம் வசூல் நின்றுவிட்டது, வடக்கு உற்பத்திகள் தென்னிலங்கை நோக்கி செல்ல தொடங்கி தமிழ் விவசாயிகளும், மீனவர்களும் உழைப்பின் பலனை அனுபவிக்க தொடங்கியுள்ளனர்” இவற்றைத்தான் இந்த பாதிரி “அரச பயங்கரவாதம் என்று கூறுகிறாரோ?

    இந்த பாதிரிதான் புலிகளை “DIVINE SOLDIERS OF CHRIST” என்று புகழ்ந்த பாதிரி. இதற்கு வத்திக்கான் மறுப்பே தெரிவிக்கவில்லை. கத்தோலிக்கர் அல்லாதவர்களை கொன்று குவித்த ஸ்பானிய, போர்த்துக்கீச படைகளுக்கு அந்த நாள் வத்திக்கான் போப் கொடுத்த புகழ் ஆரம்தான் அது. அது எப்படி “தமிழ்” விடுதலையோடு தொடர்பாகிறது? அதனை புலிகள் நிரூபித்துள்ளனர். இந்து ஐயர்களையும், இந்து தலைவர்களையும் கொன்று தள்ளியுள்ளனர். புத்த வழிபாட்டுத் தலங்களின் மீது கொலைகார தாக்குதல் செய்துள்ளனர்.

    இந்த பாதிரி யாழ்ப்பாணத்து மாவட்டத்து பெரிய பாதிரியின்(பிஷப்) அடுத்த ஸ்தானத்திலிருந்த(விகார் ஜெனரல்) ஆள். இந்த பாதிரிக்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம் என்று யாராவது சொன்னால் நல்லது.

    புலிகளின் விஷயங்களை தோண்டினால் பாதிரிகள் எப்படி கொலை கொள்ளைகளுக்கு உடந்தையாக இருந்தார்கள் என்ற விஷயங்கள் வெளியில் வரும் என்ற அச்சம் காரணமாகவே இந்த பாதிரி “புலிகளின் பயங்கரவாதம்” பற்றி பேச வேண்டாம் என்கிறார்.

    Reply
  • Ajith
    Ajith

    பாதிரியார் புலிக் கொலைகாரர்களுக்கு “பாவமன்னிப்பு” கொடுத்துவிட்டார் போல் தெரிகிறது. அரசின் பயங்கரவாதம் தொடர்கிறதாம்! “ஆட்கடத்தல், வெள்ளைவான் கடத்தல், A-9 வீதியில் கப்பம் வசூல் நின்றுவிட்டது, வடக்கு உற்பத்திகள் தென்னிலங்கை நோக்கி செல்ல தொடங்கி தமிழ் விவசாயிகளும், மீனவர்களும் உழைப்பின் பலனை அனுபவிக்க தொடங்கியுள்ளனர்” இவற்றைத்தான் இந்த பாதிரி “அரச பயங்கரவாதம் என்று கூறுகிறாரோ?
    Mr. Nantha
    So, You say Rajapkse has stopped running the white van company. Do you no that a nine year girl was raped by your master’s brilliant army. When did Basil Rajapkase stop bribes from those who were in the refugee camps.
    Your attack on Christian community clearly identify yourself as a buddhist fundamentalist that is equivalent to Bin Laden’s Al-queda
    Who killed Lasatha wickrematunga?
    Who abduct the former army commander?
    Who threatened buddhists monks holding a conference?
    Do you how many buddhists priests were killed by Rajapkase government?
    Over 200,000 tamils were killed by Sinhala state terrorism.
    Buddhists monks were responsible for the killing of thosands of tamils? You may call them libeartion of Sinhalese from Christians.

    Reply
  • NANTHA
    NANTHA

    AJITH:
    BETTER LEARN TO TYPE IN TAMIL.
    FURTHER YOUR COMMENTS ARE USELESS AND I BELIEVE YOU ARE A “LEARNER” TO THIS KIND OF WEBSITES.

    DO A FOLLOWUP ON THE NEWS OF OF THE RAPE CASE.

    YOU SHOW YOUR STUPIDITY IN YOUR POSTS ALWAYS.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    நந்தா,
    நீங்கள் இவரின் பாவமன்னிப்பு பற்றிக் குறிப்பிட்டதால், சுவிசில் இவர் செய்த அட்டகாசங்களையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். சில வருடங்கள் முன்பு இவர் மதப்பிரச்சாரம் செய்ய சுவிசிற்கு வந்தபோது, இவரிடம் சிலர் பாவமன்னிப்பும் தேவாலயத்தில் வைத்துக் கேட்டனர். இவர் பாவமன்னிப்பளித்து விட்டு, கணவன் கேட்ட பாவமன்னிப்பை மனைவியடமும், மனைவி கேட்ட பாவமன்னிப்பை கணவனிடமும் போட்டுக் கொடுத்து குடும்பங்களில் பிரைச்சினைகளை ஏற்படுத்திவிட்டுச் சென்றுவிட்டார். அதனால் பின்பு மதப்பிரச்சாரத்திற்கு இவர் வந்த போது அடித்து விரட்டப்பட்டார். இந்த விடயம் சிலவேளை மாயாவும் அறிந்திருக்கலாம். எந்தவகையிலும் ஒரு போதகராக இருக்கத் தகுதியற்ற இவர் தான், இன்று இலங்கைத் தமிழரின் தலைவராம். நினைக்கவே கண்ணைக் கட்டுது.

    Reply
  • பல்லி
    பல்லி

    ஒரு குடும்ப பிரச்சனைக்கு போலியாய் போட்டு கொடுத்ததுக்கே அடித்து விரட்டிய தமிழர் பல ஆயிரம் மக்களை காவு கொடுத்த புலிகளை நியாய படுத்துவார்களா?? கண்டிப்பாக அவர் விரட்டபடுவார், அவரை மட்டும் நாம் இனம் காட்டினால்; ஆனால் இந்த கூட்டம்தான் என நாம் அடையாள படுத்தலாமா பார்த்திபன்; (புலி கூட்டம் தவிர்ந்த)

    Reply
  • solan
    solan

    இராணுவமுகாமிலிருந்த பல புலிகள் புதியவேலைத்திட்டத்தின் கீழ் இங்குள்ள தமிழர்ஒருங்கினைப்புகுழு நிர்வாகங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் தாங்கள் தளபதிகளாக களத்தில் செயல்பட்டதாகவும் இங்கு புலத்தில்20வருடமாக வேலைசெய்தவர்களிற்கு காதில் பூ சூத்துதிவிட்டு மாதசம்பளமும் எடுத்து கொண்டு தலைவர் என்னும் 2வருடத்தில் வருவார் என்று இவர்களை மண்டையை கழுவி பணம் கறந்து கொண்டுதிரிகிறார்கள்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    பல்லி,
    இவர் ஒரு குடும்பத்திற்கு மட்டும் பிரைச்சினை ஏற்படுத்தவில்லை. இங்கு பல குடும்பத்திற்கு இவ்வேலையை இவர் செய்ததாலேயே அடித்து விரட்டப்பட்டார். குறிப்பிட்ட அமைப்பொன்றிற்கு தலைமையேற்றுள்ளவரின் யோக்கியத்தை மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?? பல ஆயிரம் மக்கள் புலிகளால் காவு கொடுக்கப்பட்டதை தாயகத்திலுள்ள மக்கள் தான் எற்றுக் கொள்கின்றார்களே தவிர, புலம் பெயர்ந்து “புலன்” பெயர்ந்தவர்கள் தமது சுருட்டல்களைத் தொடர்வதற்காக ஏற்றுக் கொண்டதில்லை. இவர்கள் மக்களை முட்டாள்களாக்கி தமது சுருட்டல்களைத் தொடரவே செய்வார்கள். அதனால் மக்கள் மேன்மேலும் முட்டாள்கள் ஆகாமல் தெரிந்ததைச் சொல்ல வேண்டிய கடமை எமக்கு மட்டுமன்றி, பல்லி போன்றவர்களுக்கும் உண்டென்று நினைக்கின்றேன்.

    Reply
  • பல்லி
    பல்லி

    பார்த்திபன் எம் சமுதாயம் மீது யார் கேடு செய்தாலும் அவர்மீது செய்யும் விமர்சனத்தில் கண்டிப்பாக பல்லியும் இனைந்து கொள்வேன்; இதை பலமுறை தங்களுக்கு சொல்லியும் உள்ளேன், அது தவறு செய்வபவர் பெயரை சொல்லி அவர் இன்ன பதவியில் இருக்கிறார் எனதான் விமர்சிக்க வேண்டும்; (உதாரனத்துக்கு நீங்கள் சுவிஸ் விடயம் சொல்லியது போல்) அதைவிட்டு ஒரு சிலருக்காக ஒரு சமுதாயத்தை வம்புக்கு இழுப்பது நாமும் பிரபாகரனின் சேவையில் பங்குதாரர் போல் ஆகிவிடாதா?? உங்கள் எந்த முயற்ச்சியிலும் நான் பங்கு கொள்வேன் ஒரு சமூகத்தை எதிர்க்காத வரை,

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    பல்லி,
    நீங்கள் எனது கருத்தையும், நந்தாவின் கருத்தையும் வைத்துக் குளப்புகின்றீர்கள். எனது கருத்தில் நான் இமானுவல் என்ற ஒருவரைப் பற்றியே குறிப்பிட்டுள்ளேன். இமானுவல் என்பவரை அடிகளார் என்று குறிப்பிடுவதே பெரும் பாவம். அவரை வேண்டுமென்றால் புலிகளின் அடியாள் என்று குறிப்பிடலாம்.

    Reply
  • பல்லி
    பல்லி

    இல்லை பார்த்திபன் எனக்கு குழப்பம் இல்லை நான் ஏன் நந்தாவுடன் வாதாடுகிறேன் என்பதை தங்களுக்கு புரிய அப்படி சொன்னேன், நன்றி பதிலுக்கு,

    Reply