மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சஹீத் எமது வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவை அவரது அமைச்சுக் காரியாலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்து உரையாடினார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபகயஷ பெற்ற மாபெரும் வெற்றி குறித்து மாலைதீவு மக்களின் வாழ்த்துக்களை கலாநிதி சஹீத் தெரிவித்துக் கொண்டார். இதற்கு நன்றி தெரிவித்த அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய தெளிவான வெற்றியை அலட்சியம் செய்து நாட்டில் ஜனநாயகத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுவருவதாகக் குற்றஞ்சாட்டினார்.