வாக் கெண்ணும் நிலையங்களில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட அனுமதி வழங்கும் படி தேர்தல் ஆணையாளரிடம் கோர பெப்ரல் அமைப்பும், தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையமும் தீர்மானித்துள்ளன. இந்த விடயம் தொடர்பாக தேர்தல் ஆணையாளருடன் அடுத்துவரும் தினங்களில் கலந்துரையாடவிருப்பதாக அந்த அமைப்பு க்களின் முக்கியஸ்தர்கள் நேற்றுக் கூறினர். எமது இக்கோரிக்கைக்குத் தேர்தல் ஆணையாளர் திருப்திகரமான பதிலை அளிப்பார் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
இதேவேளை, வாக்களிப்பு நிலையங்களுக்குள் இருந்தபடி தேர்தல் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையாளர் இவ்விரு அமைப்புக்களுக்கும் ஏற்கனவே அனுமதி வழங்கி இருப்பது தெரிந்ததே. இதேநேரம் பெப்ரல் அமை ப்பு நாளை மறுதினம் சனிக்கிழமை தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்கவுடன் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.