எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுடனும் ஈ. பி. டி. பி.யுடனும் நேற்று (10) முதல் பேச்சுவார்த்தை ஆரம்பித்துள்ளதாக ஐ. ம. சு. முன்னணி செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
ஐ. ம. சு. முன்னணியில் உள்ள சகல கட்சிகளும் இம்முறை வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று (10) மகாவலி நிலையத்தில் நடைபெற்றது.
வட பகுதியில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுட னும், கிழக்கில் போட்டியிடுவது தொடர்பாக கிழக்கு முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனுடனும் பேசவுள்ளோம்.
Appu hammy
You will promised sun and moon but after election you will be under control of Karuna. You have strong support from Batti people so go as a separate party. Even if you have 2 seat you will have a bargain power in Parliament when they seek 2/3 power. other wise you will be a yes boss for everyboady
NANTHA
தமிழ் கட்சிகள் “தமிழர்களுடைய” கட்சிகளாக மாறினால் தமிழர்களுக்கு பயன் உண்டு. தமிழர்கள் தற்போதுள்ள சூழ் நிலையில் அரசியல் “பலம்” என்று எதையும் காட்ட முடியாது. சம்பந்தன் கோஷ்டிக்கு அதிக ஆசனங்கள் கிடைக்கும். அதனால் பயன் எதுவும் கிடைக்காது.
ராஜபக்சவின் கூட்டணி வெற்றி பெறுவதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என்பது தெரிந்த விஷயம். இந்த நேரத்தில் தமிழர்கள் “தமிழ்” என்று கூவி சம்பந்தனுக்கு வாக்களித்து விட்டு “அரசு” தமிழ் பகுதிகளைப் புறக்கணிக்கிறது என்று பின்னர் ஓலம் வைப்பதிலும் பயன் கிடைக்காது.
palli
//சகல கட்சிகளும் இம்முறை வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். //
இதுக்கு ஏன் இவ்வளவு கஸ்ற்ற படுவான், மக்ந்தாவின் கட்ச்சியில் அனைத்து தமிழ் தொகுதிக்கும் அவருக்கு அல்லது
அவருக்கு பிடித்த சிலரை நிப்பாட்டி விட்டால் பிரச்சனை இல்லை, எதிராக யாரும் கேட்டால் அம்மானிடம் சொல்லி ஒரு மிரட்டல் (உபயம் சங்கரியர்) அதுகும் போக மகிந்தா அணி தோற்றால் தமிழருக்கு ஏதும் கேக்க முடியாதாமே. அதனால் தேர்தல் பிரசாரத்தில் மகிந்தா வென்றால் தமிழருக்கு வாழ்வு, தோற்றால் சாவு என சொன்னால் வாக்கு யாவும் வெத்திலைக்கு இது எப்படி இருக்கும்;