இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவை கைது செய்துள்ளது சட்டவிரோதமானது, ஜனநாயகத்துக்கு எதிரானது என்று கருத்து வெளியிட்டுள்ளார் இலங்கையின் எதிர்கட்சித் தலைவரான ரணில் விக்ரமசிங்க
அவரது கைது இராணுவச் சட்டங்களுக்கு எதிரானது மட்டுமல்ல நாட்டின் பொதுவான சட்டங்களுக்கும் எதிரானது என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க பிபிசி சந்தேஷ்யவிடம் தெரிவித்தார். அவரது கைது என்பது நாட்டின் அரசியல் சாசனத்தை மீறும் செயல் என்றும் அவர் கூறுகிறார்.
அவர் கைது செய்யப்பட்டுள்ளதை தாங்கள் கண்டிப்பதாகவும் அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார். இதுகுறித்து பல்தரப்பினருடனும் தான் பேசி வருவதாகவும், அனைவரும் இதே கருத்தை கொண்டுள்ளனர் எனவும் அவர் மேலும் கூறுகிறார்.
இது சில இராணுவ அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஜனநாயக விரோதச் செயல் என்றும் அவர் கூறுகிறார். அவர் மீது ஏதாவது குற்றசாட்டுகள் இருந்தால் அவை வழக்கமான நீதிமன்றங்கள் முன்னர் தெரிவிக்கப்பட வேண்டும் எனவும் ரணில் கருத்து வெளியிடுகிறார்.
Kusumpu
மகிந்தர் பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடுகிறார். நான் இரஸ்சியாவில் நின்றனான் எனக்கு ஒன்றும் தெரியாது. நான் நல்ல பிள்ளைதான் என்பார் மகிந்தர்
thaya
பொன் சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவதோடு 85 இல் யாழ் பொலிகண்டியில் வாசிகசாலைக்குள் வைத்து 90 இளைஞர்கள் குண்டு வைத்து கொல்லப்பட கொடுமையை நேரில் நின்று செய்து முடித்தமை குறித்த விசாரணைகளை சர்வதேச நீதி மன்றத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டும்.
சாந்தன்
thaya,
நல்ல ஐடியா. அப்போது அண்மையில் நடந்த குற்றங்களையும் இவர் சொல்ல வாய்ப்புக் கிடைக்குமல்லவா?
NANTHA
ரணில் ஏன் வரலாறு காணாத தோல்விகளை சந்தித்தார் என்று இப்போது புரிகிறது.
இலங்கை அரசு(போலிஸ்) பொன்சேகாவைக் “கைது செய்யவில்லை”. ஆனால் இலங்கை இராணுவம் அவரை கைது செய்துள்ளது. சட்டப்படி அதுதான் நடந்தது.
இராணுவ நீதிமன்றம் பொன்சேகாவை விசாரிக்கும். தீர்ப்பும் கொடுக்கும். ராஜபக்ச இது பற்றி” பெரிதாக” அலட்டவோ அறிக்கை விடவோ எதுவும் இருப்பதாக தெரியவில்லை.
பார்த்திபன்
உதெல்லாவற்றையும் விட நகைச்சுவைகளை புலன் பெயர்ந்த சில ஊடகங்கள் நடாத்துகின்றன. முன்பு கூத்தமைப்பு சரத்திற்கு ஆதரவாகப் பிரச்சாரம் மேற்கொண்ட போது, சரத் வெறும் அம்பு தான், எய்தவன் மகிந்த எனவே சரத் நிரபாரதி என்று வாதிட்டார்கள். சரத்தின் தோல்வியின் பின், தற்போது சரத் கைது செய்யப்பட்டவுடன், இதே ஊடகங்கள் கொலைகாரன் சரத் கைது செய்யப்பட்டது சரியானது தான், அதில் எமக்கு எந்தவித கரிசனையும் கிடையாதென்று பல்டியடிக்கின்றனர். பாவம் “புலன்” பெயர் புலிகள். சரத் வெல்வாரென நம்பி அதிபர் தேர்தலில் முன்பு மக்களிடம் சுரண்டிய பணத்தை ஓடும் குதிரையில் பணம் கட்டுவது போல் கட்டி நொந்து போனதன் விளைவோ இப்படியான பல்டிகள்???