என்மேல் குற்றம் என்று நிரூபித்தால் தீக்குளிக்கவும் தயார்: பரமேஸ்வரன்

parameswaran.jpgஎன் மீது குறைகூறுபவர்கள் குற்றத்தை நிரூபித்தால் தீக்குளிக்கவும் தயார் எனப் பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார் லண்டனில் கடந்த வருடம் மே மாதம் உண்ணாவிரம் இருந்த பரமேஸ்வரன் பிரித்தானிய அரசு கொடுத்த வாக்குறுதி ஒன்றிக்கமைவாக அதைக் கைவிட்டார்.

இருப்பினும் அவரைப் பற்றி பல விமர்சனங்கள் எழுந்தது. கடந்தவருடம் அவர் உண்ணாவிரதம் இருந்த காலகட்டத்தில் மக்டொனால்ஸ் பேகரைச் சாப்பிட்டார் என்று ஸ்காட்லன் யாட் பொலிசார் தெரிவித்ததாக பல பத்திரிகைகள் செய்திவெளியிட்டிருந்தது. இதனை திட்டவட்டமாக மறுத்த பரமேஸ்வரன், தற்போது “சன்” மற்றும் “மெயில்” பத்திரிகைகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இருப்பினும் இவர்மேல் எழுந்துள்ள விமர்சனங்களால், இவர் சமூக வாழ்கை பாதிப்படைந்தது என்றும், உண்ணாவிரதத்தை நிறுத்த பிரித்தானியாவில் சிலர் முயன்றதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் இவருக்கு, பிரித்தானிய குடியுரிமையும் கிடைத்துவிட்டதாக தன் மீது வீண் பழிபோடுகிறார்கள் என பரமேஸ்வரன் தெரிவித்தார். குடியுரிமை கிடைக்கவில்லை எனத் திட்டவட்டமாக மறுத்த அவர் அவ்வாறு யாராவது நிரூபித்தால் தாம் தீக்குளிக்கக் கூடத் தயார் எனத் தெரிவித்துள்ளார். தனது தற்போதைய நிலைப்பாடு தொடர்பாகவும், தன்மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வீண் பழிகளைப் பற்றி விளக்கியும் அவர் ஒரு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

24 Comments

  • john
    john

    பேகர் சாப்பிட்டதைக் காட்டிக்கொடுத்த பிரிஎவ் உம் பரமேஸ்வரனும் டீல் ஏதோ போட்டுவிட்டார்கள் போலுள்ளது.

    Reply
  • Kusumpu
    Kusumpu

    தொடங்கி விட்டார்கள் விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை என்று தட்டிச் சுத்திக் கொண்டு. இதைத்தான் செல்லுறது புலிப்பாசை என்று. இதைப் பார்த்தால் புலிகளை இலங்கை இராணுவம் அழித்ததுதான் தலைவரைப் பிடிக்கேல்லைத்தானே என்றமாதிரி தலைவர் இருக்கிறார் என்பது போல். எங்கே நிரூபி பாப்பம் என்ற நிற்கிறார்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    பிரித்தானிய அரசு இவருக்கு விடுத்த எச்சரிக்கையை மறைத்து, தனக்கு பிரித்தானிய அரசு இரகசியமாக வாக்குறுதி கொடுத்தாக கதையளந்து உண்ணாவிரதத்தை கைவிட்டவர். அது என்ன வாக்குறுதி என்று வெளியிடாமல் (வெளியிட முடியாமல்) தனக்குள்ளேயே அமுங்கிப் போனவர். 40 நாட்களுக்கு மேல் உண்ணாவிரதமிருந்து, இறுதிவரை தெம்பாக இருந்தவர். இது சாதனையாக ஏன் ஏற்றுக் கொள்ளப்படவில்லை?? உண்ணாவிரதத்தைக் கைவிட்டன்று தொலைக்காட்சிகளில் பேட்டி கொடுத்த போது எந்தவித களைப்போ அலுப்போ இல்லாமல் தெம்பாகவே பேட்டி கொடுத்தார். இப்போ இவரோடு அன்று கூட இருந்தவர்களே இவரை மறந்திருப்பார்கள். அதனால் மீண்டும் தன்னை ஞாபகப்படுத்த இந்த அறிக்கையை விட்டுள்ளார். முடிந்தால் வழக்கில் வென்று தன்னை நிரபராதி என்று நிரூபிக்கட்டுமே……

    Reply
  • thurai
    thurai

    புலிகள் இருந்தாலும் புலத்தில் வாழும் தமிழர்களிற்குத் தொல்லை புலிகள் இறந்தாலும் தொல்லைதான். ஈழத்தின் அழுகுரலைக்காட்டி புலத்தில்
    பிழைப்பு நடத்தினீர்கள். உமக்காக புலத்தில் அழுவதற்கு எத்தனை பேர்கள் என்பதை முதலில் எண்ணிப்பார்க்கவும்.

    துரை

    Reply
  • palli
    palli

    //குடியுரிமை கிடைக்கவில்லை எனத் திட்டவட்டமாக மறுத்த அவர் அவ்வாறு யாராவது நிரூபித்தால் தாம் தீக்குளிக்கக் கூடத் தயார் எனத் தெரிவித்துள்ளார்.//
    அறிக்கையை கவனியுங்கள்; அவரது கவலை என்ன என்பது புரியும்; ஈழம் அவர்கள் மூச்சு ஆனால் குடியுரிமை கிடைக்காதது கவலை;

    Reply
  • Kumaran
    Kumaran

    தீக்குளித்து தமிழர்களுக்கு மேலும் பெருமை தேடித் தரவா??

    Reply
  • palli
    palli

    //தீக்குளித்து தமிழர்களுக்கு மேலும்//
    முதல் உழைத்து உங்கள் பணத்தில் ரீ குடியுங்க; அப்புறமாய் தீ குளிப்பதா அல்லது மிதிப்பதா என சிந்திக்கலாம்; முள்ளிவாய்க்கால் தீமிதிப்புக்கு தாங்களும் ஒரு காரனம் என்பதை மறக்க வேண்டாம், சாட்ச்சி வேண்டுமாயின் உங்க வீட்டு கண்ணாடி முன் நில்லுங்கள், அது சொல்லும் நீங்கள் எம்மினத்துக்கு செய்த செய்கிற துரோகங்களை;

    Reply
  • shaminie
    shaminie

    பரமேஸ்வரன்
    நீர் பேர்கர் சாப்பிட்டீரா இல்லையா? உண்மை சொல்லும்.

    Reply
  • padamman
    padamman

    அது என்ன வாக்குறுதி?
    பேர்கர் சாப்பிட்டதை வெளியிடப்படும் என்று பிரித்தானிய அரசு கூறியதை இவரால் எப்படி வெளியில் சொல்லமுடியும்.

    Reply
  • santhanam
    santhanam

    இவரின் நீண்ட மாத அமைதியின் பின் இப்ப இவரின் உளறலின் பின்னனி என்ன??

    Reply
  • puligesi
    puligesi

    பேகர் சாப்பீட்டீரா? என்ற கேள்வியை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். ‘உண்ணாவிரததின்போது பேகர் சாப்பிட்டீரா?’ என்று கேட்கவேண்டும்.

    தீ குளிப்பேன் என்று பின் ‘ஸ்டார்பக்ஸ’இல் டீ குடிக்கக்கூடாது. பிறகு நான் அழுதுடுவன்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //தீ குளிப்பேன் என்று பின் ‘ஸ்டார்பக்ஸ’இல் டீ குடிக்கக்கூடாது. பிறகு நான் அழுதுடுவன். //

    புலிகளின் அரசியல் சித்து விளையாட்டுகளில், இதெல்லாம் ரொம்ப சகசம். இதுக்கு போய் நீங்க…. எனக்கே கண்ணைக் கட்டுதே……

    Reply
  • NANTHA
    NANTHA

    “உண்ணும் விரதம்” இருந்தவரை சிலர் தப்பாக புரிந்து கொண்டுவிட்டார்கள். புலிகள் உண்ணா விரதம் இருந்த “மதிவதனி” உட்பட சில பெண்களைக் கடத்தி அவர்களின் உண்ணா விரதத்தை நிறுத்தினார்கள். “ஆயுதம்” மூலமாகவே தமிழர்களுக்கு விடுதலை என்ற புலி ஆதரவாளர்கள் உண்ணா விரதம் இருந்து “காந்தி” என்று காட்டுவார்களா?

    இந்த பரமேஸ்வரனின் “சாகும் வரை உண்ணும் விரதம்” அவரை புலிகளின் ஆதரவாளராகவே காட்டுகிறது.

    செல்வநாயகம் கோஷ்டியும் கொழும்பில் “காந்திகள்” என்று காடுவார்கள். ஊருக்கு வந்தவுடன் “இராஜராஜ சோழன்கள்” ஆகிவிடுவார்கள். கூட்டமொன்றில் கேள்வி கேட்ட என்னையும் நண்பர்களையும் “செல்வநாயகத்தின் காந்திய தொண்டர்கள்” ஓட ஓட விரட்டினார்கள். மதிலேறி ஒளிந்து தப்பவேண்டியிருன்தது.

    என்ன இருந்தாலும் “ஈழ”தமிழரின்” காந்தியம் தனி ரகம்!

    Reply
  • மாயா
    மாயா

    புலிகளையோ அல்லது வேறு இயக்கங்களையோ நம்பி உயிர் விட்டவர்களை நினைத்தால் பாவம் என்பதா? பரிதாபம் என்பதா? தலை சுத்துது? மக்களை கொன்று கொள்ளையடித்து வாழ்ந்தவர்கள் இன்னும் புலத்தில் இருக்கிறார்கள்.

    Reply
  • thurai
    thurai

    உண்ணாவிரதம்,
    தீமூட்டித்தற்கொலை
    தண்டவாளத்தில் படுத்தல், பெரும்சாலைகளை மறித்தல்
    இவர்களே 99 வீதமான தமிழீழ ஆதரவாளர்கள் என்பதை நாடுகடந்த தமிழீழத் தேர்தல் காட்டுகின்றது.

    புலத்துத் தமிழர் தொகையில் 30 வீதத்திலும் குறைந்தவர்களே இவர்கள். இவர்களில் ஒருவரே இந்த பேர்கர்.

    துரை

    Reply
  • shaminie
    shaminie

    பரமேஸ்வரன்
    சும்மா கதையளக்காதேங்கோ. முதலில் வழக்குப்போட்டு நீர் பேர்கர் சாப்பிடவில்லையென்பதை நிரூபித்துக் காட்டுங்கள். இரண்டாவது நீர் தலைவரால் சமாதான காலத்தில் அனுப்பப்பட்ட இரகசியமான புலி உறுப்பினனா?

    Reply
  • sumi
    sumi

    புலி பசித்தாலும் பேர்கர் தின்னுமா?

    Reply
  • padamman
    padamman

    புலி பசித்தாலும் பேர்கர் தின்னுமா?
    இந்த புலி தின்னும் ஏன் என்றல் இது புளி

    Reply
  • Mayan
    Mayan

    பேகர் சாப்பிட்டதை நிரூபித்தால் தீக்குளிக்கத் தயார் என்று ஏன் கூறமுடியவில்லை ?

    Reply
  • Kusumpu
    Kusumpu

    புலிகளின் இரட்டை வேடத்தில் இதுவும் ஒன்று. சாத்வீகப்போராட்டம் உ.ம். உண்ணாவிரதம் போன்ற போராட்டத்தால் ஈழம் வெல்ல இயலாது என்று மதிவதனியைத் தூக்கிய பிரபாகரனும் புலிகளும்; திலீபனையும் பூபதியையும் உண்ணாவிரதம் இருக்கப்பண்ணிச் சாகடித்தார்கள். இங்கே புலிகள் விரும்புவது அகிம்சைப் போராட்டத்தையா? ஆயுதப்போராட்டத்தையா? அடித்துத்தின்னும் புலிக்கு என்ன அகிம்சை என்று கேட்கிறீர்களா? அதான் தமிழ் புலி. ஊரை அடித்து உலகத்தை அடித்து அதாவது உலகத்தமிழர்களை அடித்து உண்டவர்கள் தானே தமிழ்புலிகள். மதிவதனியைத் தூக்கத்தான் அன்று உண்ணாவிரதத்தைக் கலைத்தார் பிரபாகரனே தவிர ஈழம் கீழம் என்று ஒன்றும் கிடையாது. உண்ணாவிரதப் போராட்டத்துக்கு உடல்வலிமை இல்லாவிட்டாலும் மனவலிமை தேவை. சுட்டுவிட்டு ஓடி ஒளிக்கும் கள்ளன் பொலிஸ் விளையாட்டல்ல இது. ஒரு நாளோ ஒருசில நாட்களோ உணவை ஒதுக்க முடியாத பரமேஸ்வரன் போன்றவர்களுக்கு எத்தனையோ நாட்கள் உணவின்றி இருக்கும் ஏழை மக்களின் ஏன் புலிகளால் மறுக்கப்பட்ட மக்களின் மனவலிமையை எப்படிப் புரிவார்ர்கள். மனவலிமை இல்லாதவர்களுக்கு மானம் ரோசம் போராட்டம் விடுதலை மண்ணாங்கட்டி. மனவலிமை இல்லாதவர்கள். தேகம் விரும்பும் தேசியவாதிகள். தீக்குளிக்கப் போகிறாராம் இவர்களை தீ தொடாது. தொட்டால் தீ செத்துவிடும்

    Reply
  • மாயா
    மாயா

    இவரது வீடீயோவை வைத்தே இவரை உள்ளே தள்ளலாம் அல்லது மனநோயாளர் பிரிவில் சேர்க்கலாம். தற்கொலை செய்ய முயல்வது அல்லது பகிரங்கமாக அதை அறிவிப்பது ஆகியவை ஒரு குற்றச் செயல். இதைக் கூட விளங்காத தமிழர். இவர் இன்னொரு பிரபாகரனாக ஆகப் போவதாக சூழுரைக்கிறார். ஆனால் புலி , உட்கட்சி பூசல்களையும் சொல்கிறார். அதுதான் இங்கே பிளஸ்.
    http://www.youtube.com/watch?v=DWvnE7QfbMo&feature=player_embedded
    நல்ல காலம். இவர் உயிரை பர்கர் காப்பாற்றியுள்ளது. கடைசியில் இவர் கூறும் வார்த்தை ” எமது தேசத்துக்கு விடுதலை கொடுத்து, மாவீரர் புகழ் பரப்புவோம்” என்பது.

    உங்கள் தேசத்துக்கு எப்பவோ விடுதலை கொடுத்தாகி விட்டது. இன்னும் இருப்பவர்களையும் மாவீரர் ஆக்கி உங்கள் புகழ் பரப்ப, மீதியுள்ள அப்பாவிகளையும் சாகடிக்க வேண்டாம். புலம் பெயர் இளையோரும் , பெற்றோரும் கண் திறக்க வேண்டிய தருணம். உங்கள் குழுந்தைகளை காப்பாற்றுவது பெற்றோர் மற்றும் பெரியோர் கடமை. இல்லாவிட்டால் புலத்து புலிகள் சார்ந்துள்ள இளையோர் பயங்கரவாதிகளாகி , சிறையில் வாடுவதை யாராலும் தடுக்க முடியாமல் போய்விடும். இனியும் தாமதியாதீர்கள். இங்குள்ள மழலைகளையாவது வாழ விடுங்கள்.

    Reply
  • palli
    palli

    //பேகர் சாப்பிட்டதை நிரூபித்தால் தீக்குளிக்கத் தயார் என்று ஏன் கூறமுடியவில்லை ?//
    மாயன் விடுங்க இதெல்லாம் உண்ணாவிரதத்தில் சகஜம்தானே; ஆனாலும் அந்த பிள்ளையை தீ குழிக்க வைப்பதிலேயே உங்கள் கவனம் இருக்கு, அவருக்கு தெரியாமலேயே ஊத்தி கொளுத்த போறாங்க ஈழ வியாபாரிகள், பரேமேஸ்வரா அக்கம் பக்கம் பார்த்து நடவப்பா??

    Reply
  • palli
    palli

    மாயா இந்த பரமேஸ்வரனுக்கு இதை எழுதி கொடுத்தது யார்;?? பார்த்து பார்த்து படிக்கிறார், இந்த புலி என்றாலே பார்த்து படிக்க வேண்டும்
    என்று சட்டமா என்ன?? பரமேஸ்வரா உங்களுக்கு இது தேவையா?? குடிக்க தண்ணீர் இல்லை குழிக்க பன்னீர் கேட்டானாம் பண்டிதர் என்பது போல் இருக்கு இவரது ;அன்பான மக்களே; தெரியாமலா சொன்னார்கள் குட்டிநாய்க்கும் ;;;;பிள்ளைக்கும் எதையும் அளவோடு காட்ட வேண்டும் என,

    Reply
  • மாயா
    மாயா

    palli on February 6, 2010 11:35 am //
    மாயன் விடுங்க இதெல்லாம் உண்ணாவிரதத்தில் சகஜம்தானே; ஆனாலும் அந்த பிள்ளையை தீ குழிக்க வைப்பதிலேயே உங்கள் கவனம் இருக்கு, அவருக்கு தெரியாமலேயே ஊத்தி கொளுத்த போறாங்க ஈழ வியாபாரிகள், பரேமேஸ்வரா அக்கம் பக்கம் பார்த்து //

    பல்லியின் இந்த அறிவுரையைக் கண்டதும், சுவிஸில் தீக்குளித்த அந்த அப்பாவி லண்டன் இளைஞனைத்தான் ஞாபகத்துக்கு வந்தது. ” நீ தீக்குளிக்கிறது மாதிரி நடி, நாங்கள் காப்பாற்றுகிறோம் ” என்று சொல்லி கொண்டு சென்று சாகடித்து விட்டார்கள் என்று ஒரு புலி உறவு என்னிடம் சொன்னார். சுவிஸ் போலீசாருக்கும் அது தெரியும். எங்கோ இருந்து வந்த எவனோ ஒருவனுக்காக காலத்தை வீணடிக்காமல் காரியத்தை முடித்து விட்டார்கள். இருந்தாலும் இறந்த உறவின் பெற்றோருக்கு பக்கத்திலேயே சுவிஸ் புலிகள் நின்றதை பார்த்த போலீசார், பெற்றவர்கள் சிலரின் அழுத்தங்களுக்குள் இறுகி நிற்பதை உணர முடிந்ததாம். இதை சுவிஸ் போலீசார் நன்கு அறிவார்கள். தமிழர் குழுக்களுக்குள் , பிரச்சனைகள் வந்த போது குற்றவாளியை , பாதிக்கப்படவரே ” இவரை மாதிரி ஒருத்தர் , ஆனால் இவரில்லை ” என மழுப்பி போலீஸுக்கே அல்வா கொடுத்தவை மாதிரி காரியங்கள் அநேகம். பின்னர் அதே ஆளை வேறு ஒரு இடத்தில் தப்ப வைத்தவரே தாக்குவார். இது மாதிரி இலங்கை தமிழன் மோசமானவன்.

    நான் இவரை சாகச் சொல்லவில்லை. ஆனால் சாகச்சொன்னால் இவர் சாக மாட்டார். ஐயோ என்று தடுக்கப் போனால், எங்களுக்கே பீலா காட்டுவார்கள். நடக்கும் போது மட்டுமென்ன , இனி படுக்கும் போதும் பிரபாகரன் மாதிரி பார்த்து படுங்கள். இல்லை கொழுத்திப் போட்டு, ஒரு கடிதம் எழுதி வைத்து, அதையும் வைத்து தமது கல்லாப் பெட்டியை நிறைத்து விடுவார்கள். அப்படிப் பட்டவர்கள் புலிப் பினாமிகள். சாவை காட்டி காசு பார்த்தவர்களாச்சே?

    Reply