வே பிரபாகரனின் மரண அத்தாட்சிப் பத்திரம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டது.

Pirabakaran 2007தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மரணமடைந்ததை இலங்கை அரசு இந்திய அரசுக்கு உறுதிப்படுத்தி உள்ளது. வே பிரபாகரன் மரணமடைந்ததை உறுதிப்படுத்தம் ஆவணங்களை இலங்கை அரசு இந்தியாவின் மத்திய புலனாய்வுப் பிரிவான சிபிஐ க்கு அளித்துள்ளதாக மத்திய உள்நாட்டு அமைச்சர் ப சிதம்பரம் உறுதிப்படுத்தி உள்ளார்.

வே பிரபாகரனது உடல் மே18ல் சர்வதேசத்திற்கும் காட்டப்பட்ட நிலையிலும் தமிழ் மக்கள் தரப்பில் குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களின் பக்கத்தில் அதனை பல்வேறு காரணங்களுக்காகவும் ஏற்றுக்கொள்ளாத நிலை காணப்பட்டது. பிரபாகரனது மரணத்தை ஏற்றுக் கொள்ளாததற்கு வழங்கப்பட்ட காரணங்களில் இலங்கை அரசு இந்தியாவுக்கு பிரபாகரனின் மரணத்தை உறுதிப்படுத்தி ஆவணங்களைச் சமர்ப்பிக்கவில்லை என்பதும் ஒன்று. தற்போது அதுவும் செய்யப்பட்டு உள்ளது.

Pirabakaran V & Mahathayaதமிழீழ விடுதலைப் புலிப் போராளிகள் பல்லாயிரம் பேருக்கும் அஞ்சலிகள் செலுத்தப்பட்ட போதும் அதன் தலைவருக்கு இதுவரை தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதான பிரிவினர் இதுவரை எவ்வித அஞ்சலியும் செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட மாத்தையா மற்றும் அவருடன் கொல்லப்பட்டவர்களுக்கும் புலிகள் அஞ்சலி செலுத்தி இருக்கவில்லை.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 Comments

  • மாயா
    மாயா

    இனி கோவணத்தோடு முள்ளிவாய்க்காலில் கிடந்த பிரேதம் பிரபாவுடையது என நம்பலாம்? இனி அஞ்சலி செலுத்தலாமே. புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு எனது அஞ்சலிகள். அவரது குடும்பத்தினருக்கும் , ஆதரவாளர்களுக்கும் என் வருத்தங்கள்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    மாயா,
    அதுக்குள்ளே அவசரப்பட்டால் எப்படி? இந்தியாவிற்கு வழங்கப்பட்ட மரணசான்றிதழ் போலியானது, இந்தியா ஏமாந்து விட்டது என்று அறிக்கை விட்டு பிரபாகரன் இருக்கின்றார் என்று வாதாடுவினம், எனி புலியை வைத்து பிழைப்பு நடத்துவோர். சட்டுப்புட்டென்று கடையைக் கல்லாவை மூட முடியுமா??

    Reply
  • santhanam
    santhanam

    இனி எமது விதிசெய்வோம் தமிழனிற்கு அன்னிய சக்தியிடமிருந்து விடிவு

    Reply
  • suman
    suman

    தேர்தல் முடியும்வரை காத்திருந்து கொடுத்திருக்கிறார்கள். கொத்தியது யார் என எப்போ வருமெனப் பார்த்திருப்போம்.

    Reply
  • Rohan
    Rohan

    அது சரி – மரணத்துக்கான காரணம் என்று என்ன போட்டிருப்பார்கள்?

    Reply
  • palli
    palli

    //தேர்தல் முடியும்வரை காத்திருந்து கொடுத்திருக்கிறார்கள்//
    இதை இப்படியும் பார்க்கலாம் வேலுப்பிள்ளை இறப்பின் பின் கொடுத்துள்ளார்கள், புரிந்தால் சரிதான்;

    Reply
  • sintha
    sintha

    இலங்கை அரசை நினைத்தால் எனக்கு அழுகை வருகிறது. உள் நாட்டுக்குள் நாறினது காணாது என்டு இந்தியாவையும் நாறப்பண்ணப் போகிறார்கள். மரணச்சாண்றிதழ் ரொம்ப பெரிசோ??? இவளவு நாளாகுது

    Reply