பஹ்ரெய்னில் இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவமொன்றில் இலங்கைப் பெண்கள் மூவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் பொது முகாமையாளர் எல்.கே. ரு{ஹணகே தெரிவித்துள்ளதாக இணையத் தளம் ஒன்று செய்தி வெளியொட்டுள்ளது. பிலியந்தல பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பெண்களே இவ்வாறு உயிரிழந்திருப்பதாகவும், இவர்கள் மூவரும் உறவினர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மின்சார ஒழுக்கினால் தீ விபத்து ஏற்பட்டதாகவும், சுவாசப் பிரச்சினை காரணமாக இவர்கள் உயிரிழந்திருக்கக் கூடும் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் சடலங்களை இலங்கைக்குக் கொண்டுவர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.