பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான திருக்கேதீஸ்வரம் ஆலயப் பகுதி புனித பிரதேசமாக 270 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு வருகிறது.
மாசி மாதம் நடைபெறவுள்ள சிவராத்திரி தினத்துக்கு முன்னதாக ஆலயம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தும் முதற்கட்ட வேலைகள் யாவற்றையும் பூர்த்தி செய்யுமாறு வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி பணிப்புரை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பிற்கமைய ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ இப்பகுதிக்கு
விஜயம் செய்து மக்கள் சுதந்திரமாக ஆல யத்திற்குச் சென்று வழிபாடு செய்வதற்கான வசதிகளை செய்துகொடுக்குமாறும் கேட்டுக்கொண்டார். 1990ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆலயப்பகுதிக்கு மக்கள் சென்று வரமுடியாத நிலை ஏற்பட்டது. சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து மறுநாள் காலை பாலாவி கடல் நீரேரியில் தீர்த்த மாடுவதற்கு ஏதுவாக புனரமைப்பும் செய்யப்படுகிறது.