பிரபாகரனின் தந்தையான திரு வேங்கடம் வேலுப்பிள்ளையின் பூத வுடல் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்திடம் நேற்று கையளிக்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரி வித்தார். இராணுவ பாதுகாப்பில் இருந்த பிரபாவின் தாயாரையும் அவ ரிடம் ஒப்படைத்ததாக அவர் மேலும் தெரி வித்தார்.
பிரபாவின் தந்தையின் இறுதிக் கிரியை யாழ்ப்பாணத்தில் நடை பெறவுள்ளதாக தெரிவித்த அவர், இறுதிக் கிரியைகளுக்கான உதவிகளை அரசாங்கம் வழங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தனது தந்தையின் பூதவுடலையும் தனது தாயாரையும் சிவாஜிலிங்கம் எம்.பியிடம் ஒப்படைக்குமாறு டென்மார்க்கிலுள்ள பிரபாவின் சகோதரியான வினோதினி ராஜேந்திரன் டென்மார்க்கிலிருந்து அட்டோர்ணி தத்துவத்தை அனுப்பிவைத்துள்ளதாக தெரிவித்த பிரிகேடியர் அதற்கமைய சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட் டதாகவும் சுட்டிக்காட்டினார்.
திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் பூதவுடல் அவரது சொந்த இடமான யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறைக்கு தரைமார்க்கமாக கொண்டு செல்ல ஏற்பாடாகியுள்ளதாகவும் பிரிகேடியர் தெரிவித்தார்.
DEMOCRACY
/இறுதி வணக்க நிகழ்வுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் திருமாவளவன் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த மூவரும் யாழ்ப்பாணம் சென்றடைந்துள்ளார்./– “சொகுசுப் போர்க்கப்பலின்”, “தலித்தியத்தில்” மிக முக்கியமான பீரங்கியாக “புரோமோட்” செய்யப் பட்டுக் கொண்டிருப்பவர் தொல்.திருமாவளவன்!. சிங்கள, புத்தமத, “இலங்கை தேசியத்தின்” “தலித்திய ஆதரவு” புரிந்துக் கொள்ளக் கூடியதே!.ஆனால் இலங்கைத் தமிழரது “கெனிபாலிச விஷக் கிருமியை” இந்தியாவிற்குள் பரவவிடுவதற்கான “இன்டரஸ்ட்” புரிந்துணர்வு ஒப்பந்த மன்னன் ரணிலிடமே எதிர்ப் பார்க்கப் பட்டது!.ஆனால் அது “இடதுசாரி பாட்டாளி வர்க்க சிந்தனை” என்ற பெயரில்,இலங்கை சுதந்திர கட்சியிலிருந்து வருவதென்றால், இதனை பரிசீலிக்க, இந்தியாவின் மற்ற மாநிலங்களின் “இந்திய தேசிய தலித்திய அமைப்புகளுடன்” கலந்துரையாடல்களையும், விவாதங்களையும் நடத்துவது தமிழகத்துக்கு நல்லது!.