இந்தியா இலங்கை அணிகள் இடையிலான 5 வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடி வருகிறது.
இந்நிலையில் ஆடுகளம் மோசமாக இருப்பதால் இலங்ணை அணியினர் ஆட்டத்தை நிறுத்தினர். ஆடுகளம் பற்றி போட்டி நடுவர்களிடம் இலங்கை அணி கேப்டன் சங்கக்கரா புகார் கொடுத்துள்ளார். சங்கக்கரா புகார் செய்ததையடுத்து, போட்டி நடுவர்களும் ஆடுகளத்தை பார்வையிட்டு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது இலங்கை கிரிக்கெட் அணி 23.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்துள்ளது.