நீதியும், சமாதானமும் நிறைந்ததொரு சமூகத்தைக் கட்டியெழுப்புவோம் என ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராகப் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகா தமது நத்தார் செய்தியில் தெரிவித்திருக்கின்றார். அச்செய்தியில் அவர் தெரிவித்துள்ளவை வருமாறு:
உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு சுபீட்சமான வாழ்க்கையைப் பெற்றுக் கொடுப்பதற்காகவும், பாவ சாபத்தில் இருந்து மீட்கும்படியாகவும் சிலுவையில் தன்னைத் தானே ஜீவ பலியாக ஒப்புக் கொடுக்க வந்த இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும்படியாக இந்தக் கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தியை வெளியிட எனக்குக் கிடைத்த பாக்கியத்திற்காக நன்றி கூறுகிறேன்.
2009 ஆம் ஆண்டு எனக்கு விசேடமான வருடம். எனக்கு ஒரு சந்தோஷத்தைக் கொண்டுவந்த வருடம். அதாவது, இவ்வருட நத்தார் சந்தோஷத்தோடு சமாதானம் நிறைந்த ஒரு சமூகம் ஒன்று உருவாவதற்கு நான் வழிநடத்திச் சென்ற உறுப்பினர்கள் மிக அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர்.
காங்கேசன்துறையிலிருந்து தேவேந்திரமுனை வரை அனைத்து மக்களுக்கும் உரித்தான கத்தோலிக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு செல்லத் தடைசெய்யப்பட்ட பரிசுத்த ஸ்தலமாகிய மருதமடு மாதா தேவாலயத்திற்கு மறுபடியும் கத்தோலிக்கர்கள் சுற்றுலாச் சென்று பயமின்றிச் சுதந்திரமாக வணங்கி வரக்கூடியதாயிருக்கின்றபடியால் இன்று எனக்கு மிக்க மகிழ்ச்சியாகவிருக்கிறது.
கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்களின் மத வழிபாடுகளுக்காக அந்த உன்னதமான பூமியை மீட்டெடுப்பதற்கு போராட்டத்தில் உயிர்நீத்த சகல மக்களையும் அதேபோல் இராணுவத்தினரையும், பொலிஸாரையும் சிவில் படையினரையும், எல்லாப் படையணிகளையும் இங்கு நான் நினைவு கூருகிறேன்.
பல மதத்தவர்களும் வாழ்கின்ற இந்த நாட்டில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை வரவேற்கும் இந்த நத்தார் மிக முக்கியமானதாகும். சிங்களம் மற்றும் தமிழ் பேசும் கத்தோலிக்க மதத்தவர்களைப் போன்றே பௌத்த, இந்து, முஸ்லிம் மதத்தவர்களுக்கும் இன்று ஓர் புதிய இலங்கை ஒன்றை அதாவது, ஒற்றுமையான சமாதானத்தின் முன் அநீதியான காரியங்களை அகற்றி, சாதாரணமான கீரிடத்தை தரித்துக்கொள்ளவும் மத வாழ்க்கை உயர்வாக எண்ணும்படியுமான இலங்கையை நிர்மாணிக்கும் பொறுப்பு உண்டு. இந்த படிப்பினையை ஒட்டி கத்தோலிக்கர்களைப் போன்று அனைத்து மதத்தவர்களும் நடப்பதற்கு பிரதிக்ஞை செய்துகொள்ளவேண்டும்.
பௌத்தர்கள், இந்து மத குருமார்கள் போதித்தவையும் இயேசு கிறிஸ்து போதித்தவையைப் போன்றவைதான். நீதியான நாட்டைக் கட்டியெழுப்புவதே இங்கு மிக முக்கியமானது. பரிசுத்த வேதாகமத்தில் நீதிமொழியில் இவ்வாறு கூறப்படுகிறது:
உத்தம மனுஷன் தேவனுடைய கிருபையைப் பெறுவான். தீய எண்ணங்கள் உள்ளவனை நியாயம் தீர்ப்பார். மனுஷன் துன்மார்க்கத்திலே நிலைத்திருப்பதில்லை.
நீதிமானின் வேர் ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை.
அந்த உன்னதமான இயேசு கிறிஸ்துவின் நத்தார் பிறப்பைக் கொண்டாடும் நாம் நீதிமிக்க மனுஷராக, நீதிமிக்கதான ஒரு சமூகத்தையும் உண்டாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். அந்தப் பரிசுத்தர் காட்டிய உன்னதமான வழி இதுவே.
சகல கத்தோலிக்க மதத்தவர்களுக்கும் சமாதானமும் சந்தோஷமும் நிறைந்த நத்தாரைப் பிரார்த்திக்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.