ஜனாதிபதி வேட்பாளர் எம் கெ சிவாஜிலிங்கம் இலண்டன் வந்தடைந்தார்! இன்று கிழக்கு லண்டனில் பொதுக்கூட்டம்!! – கேள்விநேரம்

Sivajilingam M K_TNA MPஜனாதிபதி வேட்பாளர் எம் கெ சிவாஜிலிங்கம் நேற்று (டிசம்பர் 20) லண்டன் வந்தார். ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதை உறுதிப்படுத்திய பின் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். மேலும் ஜனாதிபதி வேட்பாளரான பின்னர் முதற் தடவையாக இன்று (டிசம்பர் 21) புலம்பெயர்ந்த தமிழர்களை நேரடியாகச் சந்திக்கின்றார். கிழக்கு லண்டனில் உள்ள குவாக்கர்ஸ் ஹவுசில் இன்று மாலை எம் கெ சிவாஜிலிங்கத்துடன் கேள்வி நேரம். இச்சந்திப்பில் அரசியல் ஆர்வமுடையவர்கள் கலந்தகொண்டு தங்கள் கேள்விகளை சந்தேகங்களை நேரடியாக எம் கெ சிவாஜிலிங்கத்திடம் முன் வைக்கமுடியும். இக்கேள்விநேரத்தை தேசம்நெற் ஏற்பாடு செய்துள்ளது.

கேள்வி நேரம் : ஜனாதிபதி வேட்பாளர் எம் கெ சிவாஜிலிங்கத்துடன் சந்திப்பு
காலம் : மாலை 5:30 டிசம்பர் 21 2009 திங்கட்கிழமை
இடம்: Quakers Meeting House, Bush Road, Wanstead, London, E11 3AU.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளராக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் லண்டனிலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் நடாத்தப்பட்ட போராட்டங்களில் தோளோடு தோள் கொடுத்து வந்தவர் எம் கெ சிவாஜிலிங்கம். தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் எம் கெ சிவாஜிலிங்கத்திற்கு எதிராகத் திரும்பி உள்ளனர். ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை வெல்ல வைப்பதற்காகவே இவர் தனித்துப் போட்டியிடுவதாக புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் சிவாஜிலிங்கத்தின் மீது குற்றம்சாட்டுகின்றனர்.

2005 ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கு தமிழர்களை வாக்களிக்க விடாமல் தடுத்ததன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் இன்றைய ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற அன்று வழிவகை செய்து கொடுத்தனர். அதற்கு பெரும்தொகைப் பணத்தையும் தமிழீழ விடுதலைப் புலிகள் பெற்றுக் கொண்டனர். கடைசியாக நடந்த யுத்தம் பொல்லுக் கொடுத்து அடிவாங்கிய கதையாக நிறைவு பெற்றது. சென்றமுறைக்கு மாறாக இம்முறை தமிழீழ விடுதலைப் புலிகள் எதிரணிக் கூட்டில் நிற்கும் முன்னால் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு பொல்லுக் கொடுக்க களம் இறங்கி உள்ளனர்.

தனது அரசியல் நடவடிக்கை ஒரு சில சக்திகளால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவித்த சிவாஜிலிங்கம் தனது அரசியல் நகர்வு பற்றிய விளக்கமளிக்க லண்டனுக்கும் தமிழகத்திற்கும் அவசர விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

கேள்வி நேரம் : ஜனாதிபதி வேட்பாளர் எம் கெ சிவாஜிலிங்கத்துடன் சந்திப்பு
காலம் : மாலை 5:30 டிசம்பர் 21 2009 திங்கட்கிழமை
இடம்: Quakers Meeting House, Bush Road, Wanstead, London, E11 3AU.

தொடர்பு:
த ஜெயபாலன்: 07800 596 786 அல்லது 0208 279 0354
ரி சோதிலிங்கம்: 07846 322 369
ரிகொன்ஸ்ரன்ரைன்: 0208 905 0452

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 Comments

 • jalpani
  jalpani

  வரலாற்றைப் படைப்பது சிவாஜிலிங்கங்கள் அல்ல.

  வரலாற்றில் இருந்து கற்றுக் கொள்ள தெரியாதவர்கள் இருந்த சுவடின்றி அழிந்து போவதே வரலாறு! இது தமிழ்மக்களுக்கு புரியுமா?

  Reply
 • chandran.raja
  chandran.raja

  வரலாறு படைப்பது சிவாஜிலிங்கமல்ல. வரலாற்றை படைப்பது ஒரு இனமே! மதமோ!! அல்ல. உழைப்பாளி மக்களும் தொழிலாளவர்கமுமே என்பதை புரிந்து கொள்வாதல் மட்டுமே. வர்க்கம் முழுமையாக விடுதலையடைகிறதோ தெரியாது. நிச்சயம் ஒரு இனம் விடுதலை பெறும். விடுதலை பெறுமின்பெதின் அர்த்தம். அந்த இனம் தன்னை சுற்றியுள்ள விம்பங்களையும் பொலிவுறச் செய்து மானிடத்தின் முற்போக்கு பாதைக்கு செப்பனிடும்.
  சிவாஜிலிங்கத்தின் கடந்தகால வரலாறுகள் ஒழிமறைவற்றவை இவர் எங்குமே மானிட அவஸ்தைக்காக குரல் கொடுத்தவர் அல்ல.அட போகட்டும் போட! தமிழ் மக்களின் அவஸ்தைக்காகவும் குரல் கொடுத்தவர் அல்ல. தமிழ்மக்களின் மூடச்சிந்தனையும் பிற்போக்கு பழக்கவழக்கங்களையும் கொண்டவரே இந்த சிவாஜிலிங்கம். மகிந்தா ராஜயபக்சாவை காப்பாற்றுவத்காகத்தான் சிவாஜி ஜனாதிபதி தேர்தலில் குதிக்கிறார் என்பதாக யாரும் அபிப்பிராயம் சொன்னால் அது சிவாஜி முற்போக்கு பாத்திரம் தான் வகிக்கிறார் என்பதை யாரும் நம்புவதற்கு காரணங்கள் இருக்கிறது. ஆனால் சிவாஜிலிங்கத்தின் கடந்தகால வாழ்கை அரசியல் அணுகுமுறை இவரில் சந்தேகம் உறவே செய்கிறது. இதை அவர் நிரூபிப்பாரா?.

  Reply
 • Mohan
  Mohan

  பிரபாகரன் உயிரோடு இருந்தபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அவரே ஏக தலைவராக இருந்தார். புலிகளே தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளாக அவர்களுக்கு தெரிந்தார்கள். இப்போது பிரபாகரனை நானே கொன்றேன் என்று பெருமிதம்கொள்ளும் சரத் பொன்சேகாவை ஆதரிக்க வேண்டும் என்று கூட்டமைப்பில் உள்ள சிலர் கூறினால் அதனை சிவாஜிலிங்கத்தால் எபப்டி ஏற்றுக்கொள்ளமுடியும். வல்வெட்டித்துறை பெற்றெடுத்த சிவாஜிலிங்கத்தால் தமிழர்களின் வாக்குகள் சரத்துக்குப் போவதை எப்படி சகித்துக்கொள்ள முடியும்?

  Reply
 • santhanam
  santhanam

  இவர்களிற்கு புலத்தில் தெளிவுபடுத்தவேண்டிய கட்டாயம் என்ன முதலில் அந்த முகாம் மக்களை போய் காப்பாற்றுங்கள்

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  இன்றைய சந்திப்பில் தேசம்நெற் நிர்வாகம் சிவாஜிலிங்கதத்திடம் எனது சார்பாக ஒரு கேள்வியை முன்வைத்து அதன் பதிலை இங்கு பிரசுரிப்பீர்களா??

  எனது கேள்வி: இவ்வளவு காலமாக இவர் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து தனது தொகுதி மக்களுக்கு என்ன செய்துள்ளார்?? மற்றும் தொகுதிக்காக ஒதுக்கப்பட்ட நிதிகளை என்னென்ன அபிவிருத்திகளுக்காக பாவித்துள்ளார்??

  Reply
 • naveenan
  naveenan

  ஜனாதிபதித் தேர்தலில்> சிவாஜிலிங்கம் ஓர் கடுகளவு. கட்டுக்காசு எடுத்தால் பெரிய கெட்டித்தனமே. இந்தலட்சனத்தில் இவருக்கு விழும் வாக்குகளால் மகிந்தா தோற்கப்போகின்றார்.?

  Reply
 • thurai
  thurai

  புலித்தோல் போர்த்த நரிக்கூட்டங்கள் எத்தனையோ?

  துரை

  Reply
 • பல்லி
  பல்லி

  வந்திட்டாரா? மகாராஜன்!!

  Reply
 • மேளம்
  மேளம்

  இவர் ஜனாதிபதியாக வெளிக்கிட்டது இலங்கையில்…. அதென்ன ஜரோப்பாவில இருக்கிற வாக்காளப் பெருமக்களுக்கு விளக்கப்போகிறார்….. இவர் ஏதும் விளக்கமளிப்ப தெண்டால் மட்டக்களப்புக்கோ. வன்னிக்கோ. யாழ்ப்பாணத்துக்கோ அல்லவா போகவேணும். இதென்ன புதுப்பிரச்சினையாக இருக்கிறது. ஏதோ ஏற்பாட்டுக்குழு லண்டன்ல டமிழ் ஈழம் கேக்காட்டி சரிதான்….

  மேளம்

  Reply
 • Kusumpu
  Kusumpu

  சிவாஜிலிங்கம் கூத்தமைப்பின் இரகசிய உடன்படிக்கையின் படி தேர்தலில் நின்றால் வரவேற்கத்தக்கதே. காரணம் நாளை எவர் ஜனாதிபதியாக வருவார் என்பது இன்று தீர்மானிக்க முடியாத ஒன்று. கூத்தணி நாளை வரும் எவருடனும் தமிழர்கள் சார்பில் மனக்கறுப்பின்றி இராஜதந்திர உறவுகளினூடு சில தமிழர்களின் அபிலாசைகளை வென்றெடுக்கலாம். சிவாஜிலிங்கத்துக்கு விழும் வேட்டுக்கள் தமிழரின் ஒருமித்த பலத்தைக் காட்டலாம். இன்று 24போர் போட்டியிடுகிறார்கள் எனும் பொழுது சிங்களப் பெரும்பான்மை சிதறப்போகிறது என்பது திண்ணம். அதிலும் எதிர்கட்சிகள் இணைந்து சரத்துடன் நிற்பது யோசிக்க வேண்டிய ஒன்றுதான். சென்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்களின் வாக்கும் புலிகளின் 5 அறிவும்தான் மகிந்தவை ஜனாதிபதியாக்கியது. இந்தமுறை அப்படியல்ல. 51சதவீதமான வாக்குக்களை யார் வெறுகிறாரோ அவரே ஜனாதிபதியாகத் தகுதி பெறுகிறார். 51வீதத்தைப் யாரும் பெறமுடியாது போனால் வாக்குச்சீட்டில் இரண்டாவது தெரிவு இணைக்கப்படும். இங்கேயும் சிறுபான்மை இனரான தமிழர்கள் (முஸ்லீம்களும் தமிழர்கள்தான்) மலையகத்தமிழர்களின் வாக்குக்கள் முதன்மை பெறத்தொடங்கும். அதிலும் பெருங்கட்சிகளை விட சிறுகட்சிகளின் இரண்டாம் தெரிவு வாக்குகள் தான் இம்முறை ஜனாதிபதியைத் தேர்வு செய்யும் என்பதில் சந்தேகமே இல்லை. அதாவது சிவாஜிலிங்கத்தின் இன்றைய போக்கு முட்டாள்தனமானது அல்ல. எதையுமே நாம் நெக்கரிவாய் பார்ப்பதை நிறுத்துவது நல்லது.

  Reply
 • Kusumpu
  Kusumpu

  இன்று சிவாஜி வெளிநாடுவது கருணா அம்மான் போல் ஏற்பட்ட இவருக்கும் ஏற்பட்ட மாயைதான். வெளிநாடுகளும் புலம்பெயர் புண்ணாக்குகளும் தான் அங்குள்ள தமிழர்களின் தலைவிதியை மாற்றக்கூடியவர்கள் என்ற மாயையின் விம்பமே இந்த இலண்டன் பயணம். இவர் தேர்தலில் நின்று ஜனாதிபதியாகிறாரோ இல்லையே எமக்கு ஒரு திடமான உண்மையான ஒரு முடிவு கிடைக்கும் “அங்குள்ள தமிழர்கள் என்னத்தை விரும்புகிறார்கள்” என்று. அங்குள்ள தமிழ்மக்களின் நிலைப்பாட்டையும் புலிப்பாட்டையும் அளவிட சிவாஜி தேர்தலில் நிற்பதே சரியானது. கட்டுக்காசு வருவது சந்தேகம் தான் இருந்தாலும் நாடுகடந்த காடக்கா தமிழீழங்களுக்கு நல்ல பதில் கிடைக்கும். இதை யாரும் மறுக்க இயலாது.

  Reply
 • anwar
  anwar

  யாழ் குடாவில் பெரும்பாலும் புறக்கணிப்புதான் நடைபெறும். ஆயுத கும்பல் இல்லாத நிலையில் தேர்தல் நடந்தால்தான் , மக்களின் உண்மையான கருத்தினை அறிய முடியும். கிழக்கில் மக்கள் வாக்களிப்பார்கள்.

  Reply
 • rajah
  rajah

  yes i am all so tomaro president

  Reply