சுவிஸ் சூரிச் நகரில் புலரும் பொழுது – அரசியல் ஆய்வரங்கு : இலங்கை மக்கள் ஐனநாயக பேரவை!

சுவிஸ் சூரிச் நகரில் கலை இலக்கிய அரசியல் உணர்வாளர்களின் கரங்கள் இணைந்து எழுதும் புலரும் பொழுது!

மௌன அஞ்சலி மரியாதை! வரவேற்புரை!…. தலைமையுரை!

திருக்கோணேஸ்வர நடனாலயம் வழங்கும் பரதநாட்டியம்!…
 
கண்டிய நடனம்!… கவிதா நிகழ்வு!…

சுவிஸ் maxim அரங்க குழுவுடன் இணைந்து செயற்படும் நாடக அரங்க செயற்பாட்டாளர் விஐயசாந்தன் வழங்கும்
பூச்சியம்!

நவீன தனிநடிப்பு அரங்கம்.

சிறப்பு விருந்தினர்கள் உரை!
 
திரு. வி. சிவலிங்கம்!
அரசியல் ஆய்வாளர், இலண்டன்
திரு. எஸ். தவராஜா
சட்டத்தரணியும், அரசியல் சட்டவல்லுனரும், இலண்டன்
திரு. அழகு குணசீலன்!
அரசியல் சமூக அக்கறையாளர் சுவிஸ்

தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு!
எது?… எங்கிருந்து தொடங்குவது?. என்ன செய்வது?

பொது மக்களுடன் அரசியல் ஆய்வாளர்களும், அரசியல் சட்ட வல்லுனர்களும் கலந்து கொண்டு கலந்துரையாடும் திறந்த அரசியல் ஆய்வரங்கு! இந்நிகழ்வில் கலந்து கொண்டு எமது மக்கள் முகம் கொடுக்கும் உடனடிப்பிரச்சினைகள் குறித்தும், அரசியலுரிமை பிரச்சினை குறித்தும் பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துக்களும் இறுதியில் தொகுக்கப்பட்டு இலங்கை அரச தரப்பின் கவனத்திற்கு அறிக்கை மூலம் சமர்ப்பிக்கப்படும். உங்கள் கருத்துக்களையும் சுதந்திரமாக தெரிவிக்கலாம்!

இரவு நிகழ்ச்சிகள்
இசை அபிநயம்!.. இன்னிசை நிகழ்ச்சி!!
பிரவேசம் இலவசம்!

காலம்: 19.12.2009 பிற்பகல் 15.00 மணிக்கு
இடம: Gemeinschaftzentrum Affoltern Bodenacker 25, 8046 Zürich
தொடர்புகளுக்கு: 076 2913532, 079 5506976, 076 4732717

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்:
இலங்கை மக்கள் ஐனநாயக பேரவை! சுவிஸ்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • மாயா
    மாயா

    // திருக்கோணேஸ்வர நடனாலயம் வழங்கும் பரதநாட்டியம்!…//

    புலிகளுக்காக ஆடிய பாதங்கள். துரோகிகளின் (புலி வார்த்தையில்)மேடையில் ஆடத் தொடங்கியிருக்கின்றன. நல்ல மாற்றம். ஓடுற தண்ணியோடு ஓடத் தெரிந்தவர்கள். இவர்கள்தான் நிஜ(ழ)ல் புலிகளாம்? தலை சுத்துது. பாவம் , புலத்துக் குழந்தைகள். தமது சுயநலங்களுக்காக இக் குழந்தைகளும் சுத்து மாத்துகளை கற்றுக் கொள்கின்றன. இல்லை, கற்றுக் கொள்ள இந்த ஆசிரியர்களால் வழி காட்டப்படுகின்றர்.

    அண்மையில் லுசர்ணில் நடந்த மங்களா எனும் நடன ஆசிரியையின் நிகழ்வில் வைத்து , புலிகள் உயிர் பெற்று மீண்டும் போராடுவது போல ஒரு நாட்டிய நிகழ்வை அமைத்திருந்தார்கள். அதைப் பார்த்த பலர் , இந்த முட்டாள் தனத்தை பார்த்து நக்கலடித்தனர். அது இன்று தூணில் ஒரு நிகழ்வில் மறுபடியும் சுனாமி நிகழ்வாக அரங்கேறயிருக்கிறது. தயவு செய்து எதிர்கால குழந்தைகளை தவறாக வழி நடத்தாதீர்கள்.

    இந்த நாடுகளில் , சிறு குழந்தைகளுக்கு சில தொலைக் காட்சி நிகழ்வுகளையே தடை செய்யும் போது , வன்முறைக் காலாச்சாரத்தை தமிழர் , தமது சுயநலத்துக்காக கொண்டு செல்வது , ஒரு காலத்தில் ஆபத்தில்தான் முடியும்.

    Reply
  • பல்லி
    பல்லி

    நல்ல விடயம்தான் ஆனால் நல்லாவே இல்லை;??
    பரதநாட்டியம் கூட பார்வையாளர் நாட்டியமாகவும் ஆய்வாளர்கள் அதுக்கு சிறப்பாளர்களாக தலமையேற்ப்பதும் என்ன இது விளையாட்டு;;; போற போக்கிலை திருமணம்; இறப்பு; சாமத்தியவீடு ஏன் பிறந்ததின விளாக்களுக்கு கூட ஆய்வுகள் மேற்கொள்ளபடும் போல இருக்கு; நடக்கட்டும்
    நடக்கட்டும்??

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    ’…பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துக்களும் இறுதியில் தொகுக்கப்பட்டு இலங்கை அரச தரப்பின் கவனத்திற்கு அறிக்கை மூலம் சமர்ப்பிக்கப்படும்…’

    இதுதான் எல்லாத்துக்குள்ளேயும் பெஸ்ற்!

    Reply