ஜெனரல் சரத் பொன்சேகாவின் கூற்றுக்கு இராணுவத் தளபதி கண்டனம்

jagath_jayasuriya.jpgபுலிப் பயங்கரவாதிகளைத் தோற்கடித்து படையினர் அடைந்த வெற்றியை காட்டிக்கொடுக்கும் வகையில் இராணுவத்துக்கு எதிராக ஜெனரல் சரத் பொன்சேகா சுமத்தும் பொய்க் குற்றச்சாட்டுக்களை தான் வன்மையாகக் கண்டிப்பதாக இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய கூறினார்.

பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கிய படைவீரர்களை கௌரவிக்கும் வைபவம் இன்று கொழும்பில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், உறுதிமிக்க தலைமைத்துவம் கிடைக்காதிருந்தால் இந்த வெற்றியை இராணுவத்தினரால் அடைந்திருக்க முடியாது.  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ ஆகியோரின் வழிகாட்டல் காரணமாகவே இந்த வெற்றி படையினருக்குக் கிடைத்தது என்றும் இராணுவத் தளபதி மேலும் கூறினார். 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 Comments

 • Anonymous
  Anonymous

  இராணுவத் தளபதிகள் அரசியல் கருத்துகளில் ஈர்க்கப்படுவதும், இராணுவத் தளபாடங்கள் குவிக்கப்படுவதும், அரசியல்வாதிகள் இராணுவத்தை முதன்மைப்படுத்துவதும் ,ஒரு பேரழிவை நோக்கிய பயணந்தான். முள்ளிவாய்க்கால் முடிவல்ல, இன்னொன்றின் ஆரம்பம்.

  Reply
 • DEMOCRACY
  DEMOCRACY

  சரத் பொன்சேகா சில தமிழ்த் தலைமைகள்போல் ஈவிரக்கமின்றி சுயநலமாக செயல்படுகிறார். தேர்தலில் வெற்றிப் பெறுவதற்கு, முதலில் சிங்கள ஓட்டுகள்தான் அதிகம்தேவை. தமிழர் ஓட்டுகளை யு.என்.பி.யும் ,த.தே.கூட்டமைப்பும் பார்த்துக் கொள்ளும், நாம் சிங்கள இன வெறி உணர்ச்சிகளைத் தூண்டி, தென்இலங்கை இராணுவ இளைஞர்களை கவருவோம் என்பதாகத்தான் சரத்தின் இறுதிநோக்கம் இருக்கிறது!. இதில் அடிபடுவது “தர்க்கரீதிதான்(லாஜிக்)”.இப்படிப்பட்ட ஒரு பலவீனத்தைதான் இந்திய அதிகார வர்கமும் விரும்புகிறது!. சுமூக சூழலுக்கு அடிப்படை, இரு இனங்களும் குறைந்தப் பட்சம் ஒரு புள்ளியில் இணங்க வேண்டு.”போருக்குள் இப்புள்ளி”,”துட்டகைமுனு – எள்ளாலனால்” வரலாற்றில் இனங்காணப் பட்டுள்ளது. புலன் பெயர்ந்த சிங்கள -தமிழ் மக்களைவிட,(குறிப்பாக இலண்டன் இலங்கை தூதுவராலயத்தில்), “அதிகார மயப்படுத்தபடாத” போரில் சண்டையிட்ட இளைஞர்களே “இந்தப் புள்ளி”! .இந்த சூழலை இழுத்து செல்ல மகிந்த ராஜபஃஷே பரவாயில்லை என்று தோன்றுகிறது. இதை இந்தியா அனுமதிக்குமா??!!.

  Reply
 • மாயா
  மாயா

  DEMOCRACY, இனியாவது மீதியுள்ள தமிழர்கள் சிந்திக்க வேண்டும். மண்டையை யாரிடமாவது அடகு வைத்து விட்டு, யதார்த்தவாதி மகிந்தவை புறம் தள்ளி , சரத் பொண்சேகாவை , அடுத்த அதிபராக கொண்டு வந்தால், புலிகள் மகிந்தவை அதிபராக்கியதை விட அதிக விலையை கொடுக்க வேண்டி வரும். அன்று ரணில் பரவாயில்லை. இன்று மகிந்த பரவாயில்லை.

  சரத் அதிபராக சிங்களவர்களே விரும்பவில்லை. அது அவர்களது உணர்வுகளில் தெரிகிறது. புலி வேட்டைக்கு பிறகு , மீண்டும் செய்தியாளர்களுக்கு வேலை கிடைத்துள்ளது. அவ்வளவுதான். அன்று ரணில் அதிபராகியிருந்தால், புலி பிழைத்து , ஏனையோர் செத்திருப்பார்கள். ஆனால் , எதிர்காலத்தில் சரத் அதிபரானால் ஏகப்பட்டோர் சாவார்கள். மண்டையில் போட்டுத்தான். சரத்துக்கு சாமரம் வீசுவோரும் இவர்களில் அடங்கலாம்?

  Reply
 • chandran.raja
  chandran.raja

  உலக பொருளாதார நெருக்கடி மாபெரும் யத்ததின்பின் இந்த முதாலிளித்துவம் மீண்டு எழுந்த பின் இருபத்தியொருவது நுhற்றண்டில் திரும்பவும் தன்னை புதைசேற்றில் இருந்து மீளமுடியாதபடி திக்குதிணறி அவஸ்தைப் பட்டு கொண்டிருப்பதை மகிந்தா-சரத்பொன்சேகரா என்ற இருவருக்கும் ஊடாக நாம் இலங்கையில் கண்யார கண்டு களித்துக் கொண்டிருக்கிறோம்.

  தொழில்துறை வளர்ந்த ஐரோப்பா அமெரிக்கா தமது மிருகத்தனமான அதிகாரத்தையும் அடக்குமுறையும் பொருளாதாரரீதியில் எப்படி தம்பிடியில் வைத்திருந்தார்கள் என்பதை இந்த அறுபது ஆண்டுகால சரித்திரமும் விலாவாரியாக அக்குவேறு ஆணிவேறாக பல கதை சொல்லும்.
  இன்று நிலைமை அதுவல்ல. விடாப்பிடியாக உங்கள் கட்டுப்பாட்டில் நாம் இருக்க தயார் இல்லையென சவால் விடும் வரை கிழக்காசிய நாடுகள் வளர்ந்து வந்திருக்கிறது மட்டுமல்லாமல் இவ்வளவு காலவரை கோவணத்தையும் கழற்றிவிட்ட நாடுகளான ஆபிரிக்கா லத்தீன்அமெரிக்க நாடுகளையும் பெரும்பகுதியை தம்வசம் கொண்டுள்ளது.
  இதுஒருவகையில் முதாலிளித்துவ போட்டியின் விளைவாக ஏற்பட்ட பகைமுகாம்களே!
  இதுவே நாம் மகிந்தா சரத்பொன்சேரா மூலமாக இலங்கையில் காட்சி தந்துகொண்டிருக்கிறது. இதில் தொழிலாளிவர்கம் எந்தபக்கத்தில் நிற்கவேண்டும்? நிச்சியமாக சரத்பொன்சேகராவின் பக்கத்தில் இல்லை என்பதை உறுதியாச் சொல்வேன். அழிவில்லிருந்து ஆக்கத்தை தேடுகிற முதலாளித்துவத்தின் பிரதான தூண்காகிய ஐக்கியதேசிய கட்சியின் பொதுவேட்பாளர் ஆன சரத்பொன்சேகராவின் கொள்கைகளையும் அரசியல் அதிகாரங்களையும் தேற்கடிப்பதே இலங்கை தொழிலாள வர்கத்தின்-கிழக்காசிய தொழிலாளவர்கத்தின் முதல் கடமையாகும்.
  மிகுதியாவும் இரண்டாம் பட்சமே!.

  Reply
 • பல்லி
  பல்லி

  :://அன்று ரணில் பரவாயில்லை. இன்று மகிந்த பரவாயில்லை//
  நாளை??
  அதை தேர்தல்தான் சொல்லும் அல்லவா?

  Reply
 • DEMOCRACY
  DEMOCRACY

  புலன் பெயர்ந்த இலங்கைத்தமிழர் – சிங்களவர் மத்தியில் ஏதாவது பிரச்சனை (சிராய்ப்புகளாவது) வந்ததை கண்டிருக்கிறீர்களா?. இவர்களைதான் லங்கா சமசமாஜ கட்சியின் பெயரால், உதய நாணயக்காராவும், விக்கிரமபாகு கருணாரட்னாவும் பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள். பின் ஏன் இலங்கைப் பிரச்சனை?. அதிகார மயப்படுத்தாத தமிழ்- சிங்கள இளைஞர்கள் இவர்களுக்காக (அதிகார மயப்படுத்தப்பட்ட) சண்டையிடுகிறார்கள்(அவ்வளவு உக்கிரமாக). ஆகவே பிரச்சனை தீரவேண்டுமென்றால், மற்றவர் பிரச்சனையை விட்டுவிட்டு, தங்களுடைய பிரச்சனை என்னவென்று உணரவேண்டு. நானும்கூட இலங்கைத் தமிழர் பிரச்சனையை என்னுடைய பிரச்சனையாக கருதவில்லை, ஆனால், “இந்த இளைஞர்களின் பிரச்சனையை” எங்களுடைய பிரச்சனையுடன் சேர்ப்பதற்கு, சில தமிழக அரசியல்வாதிகளும், இந்திய ஆளும் வர்கமும் முயலுகிறது. இதற்கு முண்டு கொடுப்பதற்கு, யு.என்.பி.யும்., இலங்கைத்தமிழ் அரசியல் தலைமைகளும் தயாராகவே உள்ளன- இலாபமிருப்பதால்.//இது ஒருவகையில் முதாலிளித்துவ போட்டியின் விளைவாக ஏற்பட்ட பகைமுகாம்களே!

  இதுவே நாம் மகிந்தா சரத்பொன்சேரா மூலமாக இலங்கையில் காட்சி தந்து கொண்டிருக்கிறது. இதில் தொழிலாளிவர்கம் எந்தபக்கத்தில் நிற்கவேண்டும்? நிச்சியமாக சரத்பொன்சேகராவின் பக்கத்தில் இல்லை என்பதை உறுதியாச் சொல்வேன்//— இதற்கமைய, இந்திய ஆளும் வர்கத்தின் ஒரு பகுதி, ஆட்டம் கண்டுக் கொண்டிருக்கிறது, அவர்கள் தங்களின் நிலையை ,இருப்பை தக்கவைத்துக் கொள்ள இத்தகைய அரசியல் ஜில்மால் தேவைப்படுகிறது.

  Reply
 • DEMOCRACY
  DEMOCRACY

  மேலே வாசுதேவ நாணயக்காரா என்று இருக்க வேண்டும். மற்றப்படி, 1971ல் ஜே.வி.பி.யை தாக்கிய இந்திய உதவி, பண்டாரநாயகா – இந்திராகாந்தி குடும்பங்களின், ரஷிய இடதுசாரி சார்புடைய “வார்சா” அரசாங்ககளாகும். ஆனால் மகிந்த ஜே.வி.பி.யின் தளத்திலிருந்து வந்தவர். இலங்கைத் தமிழ்த் தலைமைகளின் 30 ஆண்டு அணுகுமுறை, ரணில் பின்ணணியின் வலையில் மாட்டி, தமிழர்களை ஒரே படுகொலை மயமாக்கியது. இதற்கு முடிவு கட்டியது மகிந்தா என்று கூறலாமா!- எனக்குத் தெரியாது. ஜே.வி.பி. படுகொலையும், தமிழர் படுகொலையும், ஒரே திசையை நோக்கி நகர்ந்ததாகப் படுகிறது. இந்தப் படுகொலையில் இலாபம் அடைந்த குழுவினரே தற்போது சரத்தின் பின்னால் அணிதிரண்டிருப்பதாகப் படுகிறது. நகரும் திசை தமிழர் படுகொலையென்றால், அது தொடர்ந்து நகரும். இதை ஒரு இனம் என்ற வகையில் பாதுகாப்பு தரப்பட வேண்டும். தமிழினம் என்பதற்கான அர்த்தம் இங்கு மாறுபடுகிறது. இதை அந்நிய ஆதிக்கங்களால் அதிகாரம் பிடுங்கப்பட்ட பூர்விகக் குடிகள் என்று கொள்ளலாம்!.

  Reply
 • HATTON
  HATTON

  It is very clear army killed all those who came to surrender. Army killed more than 25000 civilians with the motive to finish the war as quick as possible before intervention of any international forces. When 25000 people killed overnight, do you think they will leave any LTTE personal alive? GOSL and SF are now bluffing, a true man will not be interested in it.

  TRUTH WILL NEVER DIE.

  Reply
 • SHANE
  SHANE

  Some are getting crystal clearer. Nobody knows who the lier is, Gota or SF? UN accepts that LTTE approched it. So there had been some activities like what happened to JVP’s Wijeweera and Gamanayake. Yet you call this a buddhdist country. UN sent Nambiyar as rep of the UNSG to Sri Lanka? Why, Nambiyar? This man is an Indian agent and his brother Satish is an advicer to Indian defense establishment. And now it is clear that UN is also an acompalice. Yet you call it a world body.

  Reply