ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கவே ஐக்கிய தேசிய கட்சி – ஜே.வி.பி கூட்டு

dew.jpgஇலங்கை யின் ஜனநாயக விழுமியங்களை குழிதோண்டிப் புதைக்கவே ஐ.தே.க. – ஜே.வி.பி கூட்டு சரத் பொன்சேகாவைத் தேர்ந்தெடுத்துள்ளது என்று இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான டியூ குணசேகர நேற்றுத் தெரிவித்தார். எந்த விதத்திலும் ஒத்துச் செல்ல முடியாத ஐ.தே.கவும், ஜே. வி. பியும் கூட்டுச் சேர்ந்திருப்பது ஜனநாயகத்தைப் பெற்றுத் தரவோ, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கவோ அல்ல.

மாறாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைத் தோற்கடிக்க முயற்சி செய்யும் வெளிநாட்டு சூழ்ச்சியாளர்களின் தேவையை நிறைவேற்றுவதற்காகவே என்றும் அவர் கூறினார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஐ. ம. சு. முன்னணியின் தேர்தல் பிரசார செய்தியாளர் மாநாடு மகாவலி நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இச்செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் டியூ குணசேகர தொடர்ந்தும் உரையாற் றுகையில், பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுவதற்கான யுத்தம் முடிவுறுவதற்கு இரு வாரங்களுக்கு முன்னர் தொடக்கம் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது வெளிநாடுகள் யுத்தத்தை நிறுத்தும்படி கடுமையாக அழுத்தம் கொடுத்தன. இருப்பினும் இந்த அழுத்தங்களுக்கு தலை சாய்க்காது எமது ஜனாதிபதி பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டினார். இந்த சமயத்தில் மூன்றாம் மண்டல நாடுகள் தான் எமக்கு பக்கபலமாக இருந்தன. மேற்குலக நாடுகள் எமக்கு உதவிகள் நல்கவில்லை. இவ்வாறான சூழ்நிலையில் ஜனாதிபதி தேர்தல் வந்திருப்பதால் வோஷிங்டனின் இணக்கப்பாட்டுடன் சரத் பொன்சேகாவை எதிரணி அபேட்சகராக கொண்டு வந்துள்ளனர்.

இந்த நாடு சுதந்திரமடைந்த பின்னர் எதிர்கொள்ளுகின்ற மிக மோசமான அரசியல் சூழ்ச்சியே இது. வெளிநாட்டு சதியாளர்களின் தேவையை நிறைவேற்றவே ஐ. தே. க., ஜே. வி. பி. கூட்டு இந்த சூழ்ச்சியில் பங்காளியாகியுள்ளது. எதிரணி அபேட்சகர் இராணுவத்தில் 40 வருட காலம் சேவையாற்றியவர். அவருக்கு அரசியல் அனுபவம் கிடையாது. அதனால் அவரது அரசியல் பிரவேசம் இந்நாட்டு ஜனநாயகத்திற்கு பெரும் சவாலாகும்.

யுத்தம் முடிவுற்ற பின்னர் இடம்பெற்ற பாதுகாப்பு கவுன்ஸில் கூட்டத்தில் சரத் பொன்சேகா இராணுவத்திற்கு ஒரு இலட்சம் பேரைத் திரட்ட வேண்டும். முப்படைகளுக்கும் கட்டளை இடக்கூடிய அதிகாரம் தமக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இது அவரது உள்நோக்கத்தை நன்கு புலப்படுத்துகின்றது. இதனால் இந்நாட்டின் ஜனநாயக அரசியல் இராணுவ மயமாகக்கூடிய நிலைமை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

 • chandran.raja
  chandran.raja

  தற்போதைய ஜனாதிபதியை நானோ யாருமே தோளில் தூக்கி வைத்து ஆடமுடியாது. நாம் யாரையும் அப்படிடசாம். 2010 த்தை தாண்ட
  போகிற இந்த நேரத்தில் தமிழனுக்கு யார் துரோகம் செய்தார்கள் என்றால் எமக்கு வருகிற பதில் தமிழுனுக்கு தமிழனே துரோகம் செய்தான் என்பதே!.
  நவகாரீக உலகில் இனங்களும் மதங்களும் தமது வேற்றுமையை மறந்து உலகமக்களுக்குரிய முரண்பாடுகளை களைந்து பசி பிணி நோய் அதுதுடன் சேர்ந்த யுத்தபயம் (அணுவாயிதயுத்தம்) ஐக்கியப்படும் நேரத்தில் எனக்கு நீ தீர்வைத்தரவில்லை உன்க்கெதிராகத் தான் செயல்படுவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தால்.. காலம் காலமாக வந்த தமிழ்தலைமைகளின் வாழையடி வாழையாக வந்த தமிழ் செயல்பாடுகளே அன்றி வேறு ஒன்றில்லை.
  எல்லாவித பின்னோட்டங்களை கவனித்ததின் விளைவு ! ஒரு கிறிமினல் பேர்வழியை தலைவனாக ஏற்று முப்பது வருடங்கள் காத்திருந்த
  தமிழ்மக்கள் இன்னும் பதின்னைந்தோ இருபதுவருடங்களோ ஒரு இராணுவ அதிகாரியின் தலைமைக்காக காத்திருக்கும் படி துணிகரமாகக் கட்டியம் கூறுவது அவர்களது அரசியல் மேலான்மையை வெளிப்படுத்துவதல்ல. தமது பற்றாத அரசியல் அறிவுஜீவித்தை தனத்தையும் பொறுமையின்மையும் பருவமாககாமல் பறித்திட வேண்டுமென்ற மத்தியதரவர்கத்து குணாம்சத்தையே காட்டிநிற்கிறது

  இந்த தன்மை புலம்பெயர் தமிழரையோ மாஜிபுலி விசுவாசிகளைகளையோ பற்றிக்கொண்டால் கவலைப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. ஆனால் காலம்காலமாக தமிழ்மக்களின் வாழ்வை சிதைத்த புலிகளுக்கு எதிராக உக்கிர போராட்டம் நடத்திய தேசம்நெற் வாசகர்களில் ஒரு சிலர் இந்த மூடத்தனமான அதாவது ஒரு பிற்போக்கு கொள்கையுடைய இராணுஅதிகாரிக்கு ஆதரவுஅளிப்பதென்பது துரதிஷ்டம் பிடித்த ஊழ்வினை தமிழ்மக்களை சூழ்ந்திருக்கிறது என்பதை விட என்னால் வேறு ஒன்றும் சொல்லமுடியாது

  Reply
 • பல்லி
  பல்லி

  சந்திரா நீங்க சொன்ன பலரில் பல்லியும் அடங்கும் என்பதால் எனது மனநிலையை தெரிவிக்கிறேன்; என்னை பொறுத்த மட்டில் இருவருமே ஒன்றுதான் ஒருவர் கட்டி போட்டு அடிப்பார், (சேகரா) மற்றவர் அடித்து போட்டு கட்டுவார்; ஆனால் பல்லியின் நிலையில் அனைத்து அதிகாரமும் (அதிகபடியான அதரவுடன்) அற்ற ஒரு ஜனாதிபதி ஆட்ச்சி எமக்கு தேவை, பயம் இருக்க வேண்டும், எந்த நேரத்திலும் எனக்கு எதுவும் ஆகலாம் என்னும் (கவிழ்ப்பு)பயம் வேண்டும்;சில காலத்துக்கு முன்பு மகிந்தா சூப்பர் கீரோ; ஆனால் இப்போது கீரோ என சொல்லமுடியாது; இதுவே எனது பார்வை;

  Reply