பன்றிக் காயச்சலால் பீடிக்கப்பட்ட மாணவர்களுக்கு இம்முறை க.பொ.த. பரீட்சை எழுதத் தடை விதிக்கப்படடுள்ளதாகத் தெரிவிக்கப்படும் தகவலில் எவ்வித உன்மையும் இல்லை என்று கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது. பரீட்சைக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் பரீட்சை எழுத அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் கூறுகிறது.
இவ்வருடத்துக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 22 ஆம்திகதி வரை நடைபெறவுள்ளது. விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளை இம்மாதம் 31 ஆம் திகதி ஆரம்பித்து எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதி வரை மேற்கொள்வதற்குத் திட்டமிட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவிக்கின்றது.