புலிகள் இயக்க சொத்துக்கள் நாட்டின் அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படும் – பிரதமர்

ratna.jpgபுலிகள் இயக்கத்தின் பெயரில் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களைப் பொறுப்பேற்று அவற்றை நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்குப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகப் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க நேற்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

புலிகளின் சொத்துகள் தொடர்பில் தற்போது புலனாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருதாகவும், விசாரணைகள் நிறைவடைந் ததும், தகவல்கள் பாராளுமன்றத்தில் வெளியிடப்படுமென்றும் பிரதமர் கூறினார்.

2009 மே மாதம் 18 ஆம் திகதி புலிகள் இயக்கம் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், அந்த இயக்கத்தின் தங்கம் உள்ளிட்ட பெருமளவு சொத்துகள் கைப்பற்றப்பட்ட தாகவும் அவை தொடர்பான தற்போதைய நிலவரம் யாதென்றும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா ஜோசப் மைக்கல் பெரேரா சபையில் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க, மே மாதம் 18 ஆம் திகதி புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதன் பின்னர் பாதுகாப்புப் படையினர் சொத்துக்களை மீட்டுள்ளனர். தங்கம் உள்ளிட்ட சொத்துகள் குறித்து புலன் விசாரணைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள கே. பீ. மூலம் புலிகள் இயக்கத்தின வெளிநாட்டுச் சொத்துகள் தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன. அவர்களுக்குச் சொந்தமான பல கப்பல்களில் சிலவற்றைக் கடற்படையினர் அழித்துள்ளனர். எஞ்சிவை தொடர்பாக விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன. இது தொடர்பான தகவல்கள் பின்னர் வெளியிப்படும்” என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 Comments

 • sivam
  sivam

  புலியின் சொத்துக்கள் நாட்டின் அபிவிருத்திக்கு பயன் படுத்தப்பட வேண்டும். KP உடன் உடன்பட்டு கோத்தபாயவுடன் பங்கு போடுவதை நிறுத்த வேண்டும்.

  அத்துடன் மகிந்த நிறுவனத்தில் தொடங்கி டக்லஸ், கருணா ஊடாக சித்தன் வரையும். ரணில் இல் தொடங்கி பொன்சேகா ஊடாக சம்பந்தன் குழு வரையும் வெளி நாட்டு உள்நாட்டு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபிவிருத்திக்கு பயன் படுத்த வேண்டும்.

  இதனை செய்வதற்கு ஒரு புது அரசியல் வேண்டும்.

  Reply
 • பல்லி
  பல்லி

  பளம் இரும்பை போட்டு புது இரும்பை வாங்காமல் வசதியற்ற மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யுங்கோ சாமி;

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  வன்னியில் வாழ்க்கையை தொலைத்த அந்த மக்கள் மீளவும் தமது வாழ்க்கையைத் தொடங்க, புலிகளின் மீட்கப்பட்ட சொத்துகளையும் பணங்களையும் கையாள்வதே முறையானது.

  Reply
 • chandran.raja
  chandran.raja

  “தேசம்நெற்” றில் தனது புது அரசியலை வெளியிடவேண்டும் திரு சிவம் அவர்கள். அதற்காக காத்திருக்கிறோம். சிகப்பு மஞ்சள் மகிழம் பூ வுடன் வராதிருந்தால் மகிழ்சியே!.

  Reply
 • பல்லி
  பல்லி

  இதென்னடா புது வம்பாய் போச்சு;
  போற போக்கிலை தேசம் நெற்றின் வருமானம், வரி தொடங்கி பலரது அறிவு, சிலரது கேனைதனம் வரை போய் பல்லியை போன்றோரின் குத்தாட்டம் வரை கணக்கு கேப்பியள் போலை கிடக்கு; கேளுக்கோ கேளுங்கோ இப்போதாவது தோன்றிச்சே;

  Reply
 • chandran.raja
  chandran.raja

  பல்லி இதற்கு பதில் சொல்லுங்கள். பொது பயன்பாட்டிற்கு பயன்படுத்தகூடிய கணக்கு வழக்குகள் ஒளித்து வைக்கக்கூடியதா? திரைமறைவில் வைக்கக்கூடிய சம்பவமா? தேசம்நெற்றின் கணக்கு வழக்குகள் கேள்வி கேட்கக் முடியாதபடி புனிதச் சொத்துகளா?. என் கணிபீட்டின் படி கடன்யாளியாகி இருக்க வேண்டியதே விதியாகவுள்ளது. உங்கள் கணிப்பின்படி? மக்களிடமிருந்து சிறு உதவியை நன்கொடையை பெற முடியாது போல் உள்ளது.

  Reply
 • பல்லி
  பல்லி

  சந்திரா இதுக்கான பதிலை பல்லி சொல்லமுடியாது; காரனம் இதுவரை பல்லி தேசம்நெற்றுக்கென எந்த உதவியும் செய்யவில்லை; அவர்கள் எப்படி அதை செய்கிறார்கள் என்பதும் எனக்கு தெரியாது; அதையும் விட தேசம் நிர்வாகம் இதுவரை தேசத்துக்கு என உதவி கேட்டதாய் நான் அறியவும் இல்லை; தேசம் புத்தகம் கூட இலவசமாக தான் கொடுத்தார்கள், ஆனால் கேள்வி கேக்க யாருக்கும் உரிமை உண்டுதானே, அதுக்கான பதிலை நிர்வாகம் சொல்லும் என நினைக்கிறேன், எனது கருத்து கேக்க வேண்டியதை விட்டு தேசத்தை கேக்கிறார்களே என்பதுதான்; இருப்பினும் அது தப்பில்லை என்பதாயே எனது பின்னோட்டம் முடிகிறது; (கவனிக்கவும் முந்தய பின்னோட்டத்தை)

  Reply
 • sinna
  sinna

  தேசம்நெற்றின் கணக்கு வழக்குகள் கேள்வி கேட்கக் முடியாதபடி புனிதச் சொத்துகளா?./ காலையில்தான் ஆண்டுச்சந்தா கட்டாமல் அறுந்தது தெரியாதா சந்திரன் ராஜா.

  Reply
 • Kusumpu
  Kusumpu

  பார்த்தீபன் உங்களுடன் ஒத்தே ஊதுகிறறேன். புலிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்படம் அசையும் அசையாச் சொத்துக்கள் போரினால் பாதிக்கப்பட்ட வன்னிமக்களுக்கே போய் சேரவேண்டும். அதுவும் தமிழ்மக்களின் சொத்தே. அரசாங்கம் என்பதற்காக நினைத்தமாதிரிச் செலவழிப்பது தவறு.

  Reply
 • sivam
  sivam

  பிள்ளையார் பிடிக்க குரங்கு வந்தது என்பது போல் தான் இந்த இணையத்தளத்தில் எனது அனுபவம்.

  தேசம் நிர்வாகத்திடம் கணக்கு கேட்கும் கலந்துரையாடல் எனது நோக்கம் இல்லை, அது இந்தக் கட்டுரையுடன் பொருத்தமற்றது. அத்துடன் வாசகர்களுக்கு கணக்கு காட்ட வேண்டிய தேவை இணையதளங்களுக்கு இருக்கின்றதா என்பது எனக்கு தெரியாது.

  எனது நோக்கம் புலியின் சொத்துக்களை நாட்டின் அபிவிருத்திக்கு பயன்படுத்துவது தொடர்பான அரசின் அறிவித்தல் தொடர்பாக கருத்து சொல்வது மட்டும் தான். புலியினது சொத்துக்களை ஊழல்கள் இல்லாத முறையில் இந்த அரசாங்கத்தால் அபிவிருத்திக்கு பாவிக்கும் என்ன நான் கருதவில்லை.

  கடந்த 30 வருடகால யுத்தத்தில் புலிகள் மட்டுமல்ல அனைத்து சிங்கள, தமிழ் தலைமைகள் சொத்துக்கள் உள்நாட்டிலும் , வெளிநாட்டிலும் சேர்த்திருக்கின்றனர். அக்கறையுள்ள வாசகர்கள் விபரங்களை ஆய்வு செய்து அறிந்து கொள்ள முடியும். எனது கருத்து இந்த அரசியல் வாதிகளினது சொத்துக்களையும் பறிமுதல் செய்து நாட்டின் அபிவிருத்திக்கு பயன் படுத்த வேண்டும் என்பது தான். இதனை பழைய அரசியல் வேலை திட்டங்களினால் செய்ய முடியாது. தமிழ், சிங்கள மக்களுக்கான பொதுவான ஒரு வேலைத்திட்டம் தேவை.

  இந்தக் கருத்துடன் தேசம் வாசகர்கள் மத்தியில் சில வேளைகளில் நான் தனியே நிற்கலாம். வித்தியாசமான கருத்துக்களை சொல்பவர்களை புலிகள் துரோகிகள் என்பது போல் சில வாசகர்கள் அரசுக்கு விமர்சனம் செய்யும் கருத்துக்களின் பின்னால புலி வாலை தேடுகின்றனர். புலி அதரவு, புலி எதிர்ப்பு , அரச அதரவு என்ற அரசியல் வட்டத்திற்குள் சிலர் இருக்க விரும்பினால், நல்லது இருந்து கொள்ளுங்கள். உங்களுக்கு பொருத்தமான இடம்.

  இத்துடன் இந்தக் கட்டுரை தொடர்பான எனது கருத்து முடிகின்றது

  Reply
 • chandran.raja
  chandran.raja

  சின்னாவுக்கு மிகுதியையும் பொறுமையுடன் வாசித்துப் பழகவேண்டாமா? அது இப்படித்தான் சொல்லுகிறது…..
  //என் கணிபீட்டின்படி கடனாளியாக இருப்பதே விதியாகவுள்ளது//

  Reply
 • chandran.raja
  chandran.raja

  பல்லி! எப்பவும் சரிச்சு வெட்டிக்கொண்டு போகமுடியாது.
  // தேசம்நெற்றின் வருமானம் வரி தொடங்கி பலரது அறிவு… // இதற்கு என்ன?
  அர்த்தம்.

  Reply
 • பல்லி
  பல்லி

  // பலரது அறிவு…//
  இதுவே தான் அர்த்தம் நீங்கள் என்னை துருவி துருவி கேப்பதுதுதான் அர்த்தம்; சரிச்சு போக பல்லிக்கு தெரியாது; அதனால்தான் அடிக்கடி உங்களுடன் எனக்கு புடுங்குபாடு, என் வழி தனிவழி, யாரையும் விமர்சிப்பேன், எனக்கு எதுசரி என்று படுகிறதோ அதை எழுதுவேன்; பாராட்டுபவர்களையும் பிழை செய்யும் போது விமர்சிப்பேன்; புலிகளையும் சரியாக செயல்பட்டால் பாராட்ட தயங்க மாட்டேன்; உங்களுக்கு தேசம் மீது ஏதாவது விபரம் தேவையாயின் நிர்வாகத்துக்கு ஒரு போனை போட்டு கேளுங்கோ; அதை விட்டு பக்கத்து இலைக்கு பருப்பு கேட்டு பல்லியை வம்பில் மாட்ட வேண்டாம்; என்னமாய் பிளான் பண்ணுறாரு சந்திரன்;

  Reply