இம்மாதம நடைபெறவுள்ள க. பொ. த சாதாரண தரப் பரீட்சைக்கு வவுனியா நிவாரணக் கிராமங்களில் இருந்து 6222 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். அவர்களுக்கென 51 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
இப்பரீட்சைக்கு நிவாரணக் கிராமங்களிலிருந்து 1310 தனிப்பட்ட பரீட்சார்த்திகள் உட்பட 6222 பேர் தோற்றுகின்றனர். இது தவிர வவுனியா மாவட்ட பாடசாலைகளில் 5611 மாணவர்கள் தோற்றுகின்றனர். இவர்களுக்கென 51 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் தமக்குரிய அனுமதி அட்டைகளை பெற்றுக் கொள்ளுமாறு வவுனியா வலயக் கல்வி பணிப்பாளர் ரஞ்ஜனி ஒஸ்வேர்ல்ட் தெரிவிததுள்ளார.