எதிர்வரும் ஜனவரி மாதம் 26 ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் 7 இலட்சத்து 21 ஆயிரத்து 359 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் எனத் தெரியவருகிறது.
இதன்படி ஊர்காவற்துறை தேர்தல் தொகுதியில் 53111 பேரும் வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதியில் 63991 பேரும் காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் 69082 பேரும் மானிப்பாய் தேர்தல் தொகுதியில் 71114 பேரும் கோப்பாய் தேர்தல் தொகுதியில் 65798 பேரும் உடுப்பிட்டி தேர்தல் தொகுதியில் 56426 பேரும் பருத்தித்துறை தேர்தல் தொகுதியில் 48613 பேரும் சாவகச்சேரி தேர்தல் தொகுதியில் 65141 பேரும் நல்லூர் தேர்தல் தொகுதியில் 72558 பேரும் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் 64 714 பேரும் கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் 90811 பேரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.