சிறுபான்மை மக்களுக்கான எந்தத் தீர்வும் ஐக்கிய தேசிய கட்சியிடம் கிடையாதென்றும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வு காண முடியமென்றும் ஐக்கிய தேசிய கட்சி செயற்குழுவின் முன்னாள் உறுப்பினரும், கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயருமான ஆசாத் சாலி தெரிவித்தார். ‘தினகரன்’க்கு வழங்கிய விசேட பேட்டியொன்றிலேயே ஆசாத் சாலி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
1994ம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராகப் பதவியேற்றதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்க சிறுபான்மை, தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. ஜே.ஆர், ஆர். பிரேமதாச ஆகியோர் மாத்திரமே சிறுபான்மையினருக்குச் சார்பான திட்டங்களை நடைமுறைப்படுத்தினார்கள். ஆனால், ரணில் விக்கிரமசிங்க தலைமைப் பதவியேற்றதிலிருந்து சிறுபான்மையினருக்கு பாதகமான செயற்பாடுகளையே முன்னெடுத்து வருகிறார்” என்று தெரிவித்த ஆசாத் சாலி, ரணில் விக்கிரமசிங்க, கட்சியின் அங்கத்தினர்களை மதிக்காது தன்னிச்சையாக செயற்படுகிறார். ஜனாதிபதிக்கும், சரத் பொன்சேகாவுக்குமிடயில் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் உள்ளது. எனவே சரத் பொன்சேகா ஒருபோதும் வெற்றிபெறப் போவதில்லை. என்றும் கூறினார்.
சிறுபான்மை மக்களுக்குத் தீர்வொன்றை முன்வைப்பேன் என்று ரணில் விக்கிரமசிங்க நீண்டகாலம் கூறி வருகிறார். எந்தத் தீர்வும் நடைபெறவில்லை. அவரிடம் சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கு எந்தத் தீர்வும் கிடையாது. இதுதான் உண்மை!
VS
We cannot brush aside the dutugemunu story. he recruited some with questionable character to his band of 10 great warriors.