எதிர்வரும் ஜனாதிபத் தேர்தலில் பொது வேட்பாளராக ‘அன்னம்’ சின்னத்தில் தான் போட்டியிடவுள்ளதாக ஜெனரல் சரத் பொன்சேகா இன்று உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார். எனினும் புதிதாக பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சியின் கீழ் தனது ஜனாதிபதி ஆட்சி நிலவுமெனவும் அவர் தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளராக இன்று இடம்பெற்ற முதலாவது ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனை அறிவித்துள்ளார்.
தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் பட்சத்தில் நிறைவேற்றும் வேலைத்திட்டங்கள் தொடர்பான கொள்கைகளை இதன் போது சரத் பொன்சேகா வெளியிட்டார். அங்கு அவர் உரையாற்றுகையில் ,நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் உதவ வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த அவர் விடுதலை புலிகளுடனான் யுத்த வெற்றி அரசியல் தலைமைத்துவமும் காரணம் எனவும் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,”பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று அரசியலமைப்பை மாற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாத்திரமன்றி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு வழங்க தயாராகவுள்ளனர். ” எனத் தெரிவித்தார்.மேலும், நாட்டையும் மக்களையும் சர்வாதிகார ஆட்சியில் இருந்து மீட்கவே முன்வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
MBBS
இராணுவ துணை குழுக்கள் ஒண்றும் இராணுவ தளபதிக்கு வாக்கு போடாமல் மகிந்தக்கு போட்டால் இராணுவ தளபதி சனாதிபதியாக வந்தால் தமிழ் குழுக்களின் நிலை என்னவாகும்? றாணுவ தளபதி தற்கொலை தாக்குதலில் காயபட்டு மருத்துவ மனையிலை படுத்திரக்கும்போது சொன்னேன் இவர் எழும்பி வந்தால் புலியின் கதை முடியும் என்று.
Upul Karu
President your concept has worked immensly to the mother Lanka and in the present situation a ex-army officer and disgusted and desperated UNP and,JVP are trying to deny that credit to you. You will emerge victorious through the manadate of patriotic people here.