புலிகளின் குரல் வானொலி சேவையின் மாவீரர் நாள் சிறப்பு ஒலிபரப்பை சிற்றலை, செய்கோள் மற்றும் இணையம் ஊடாக கேட்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
இது தொடர்பில் புலிகளின்குரல் வானொலி சேவையினர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-
மதிப்புக்குரிய தமிழீழ மக்களே! தமிழக உறவுகளே! புலம்பெயர் வாழ் தமிழீழ மக்களே! உலகவாழ் எம்முறவுகளே! தமிழீழத்தின் தேசியக்குரலான புலிகளின்குரல் வானொலியின் மாவீரர் வார சிறப்பு ஒலிபரப்புக்களை அனைத்துலகத்திற்கும் ஒலிக்கும் வண்ணம் புலிகளின்குரல் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
அந்த வகையில் எமது இணைய தளத்திலும், செய்கோள் ஊடாகவும் 24மணி நேரமும் புலிகளின்குரல் வானொலியினை நீங்கள் கேட்கலாம். மாவீரர் வார சிறப்பு ஒலிபரப்புகளை தாயக நேரம் அதிகாலை 5.00 மணி தொடக்கம் 22.00 மணி வரை pulikalinkural.comல் ஒலிக்கவுள்ளது
செய்கோள்
அலைவரிசை விபரம்:
Name: NTR- Tamil
Satellite: Eurobird 9
Frequency: 11919
Polarization: Vertical
Symbol Rate : 27500
Fec : 3/4
அதே நேரம் புதன்,வியாழன்,வெள்ளி ஆகிய நாட்களில் சிற்றலையூடாக தமிழீழம், இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து ஆசிய நாடுகளுக்கும் ஒலிக்கவுள்ளது அதன் அலைவரிசை விபரம் இங்கு தரப்பட்டுள்ளது.
புதன்,வியாழன் ஆகிய நாட்களில் தாயக நேரம் 15.30மணி தொடக்கம் 18.30மணிவரை 17560 என்ற அலைவரிசையிலும், 18.30மணி தொடக்கம் 19.30மணிவரை 11510 என்ற அலைவரிசையில் எமது சிறப்பு ஒலிபரப்புக்களை கேட்கலாம்.
வருகின்ற மாவீரர் நாள் சிறப்பு ஒலிபரப்பினை பிற்பகல் 15.30மணி தொடக்கம் 18.30மணிவரை 17560 என்ற அலைவரிசையிலும்
18.30மணி தொடக்கம் 20.30மணி வரை 11510 என்ற அலைவரிசையிலும்
20.30மணி தொடக்கம் 23.30மணி வரை 6225 என்ற அலைவரிசையிலும் மாவீரர் நாள் ஒலிபரப்புக்கள் ஒலித்து நிறைவு பெறும்.
தமிழீழத்தின் தேசிய நாளான மாவீரர் நாள் சிறப்பு ஒலிபரப்புக்களை மேற்கூறப்பட்ட அலைவரிசைகள் ஊடாக நீங்கள் கேட்கலாம்
இவ்வண்ணம்
புலிகளின்குரல் நிறுவனம்
info@pulikalinkural.com
பார்த்திபன்
பேசாமல் எலிகளின் குரலென்றே மாற்றித் தொடங்கியிருக்கலாம். அப்பெயர் தான் எனி எந்தக் காலத்திலும் பொருந்தும் (உண்மையான எலிகள் கோபிக்காதவரை).
palli
மாவீரரால் மாவீரர் ஆக்கபட்ட பல வீரர்களுக்கு இந்த தினத்தில் நினைவு கொள்வோம்; இதில் அண்ணன் அமிரும் அடக்கம்;