இன்று வெளியாகியுள்ள கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளில், கொழும்பு சைவ மங்கையர் கழகத்தில் கல்வி பயின்ற மைதிலி சிவபாதசுந்தரம் என்ற தமிழ்மாணவி அகில இலங்கை ரீதியில் விஞ்ஞானப் பிரிவில் (A/L 2009) முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இதேவேளை, அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள யாழ்.மாவட்டம், பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் மாணவனான, அன்டன் கிறிஸ்டர்ஸ் ஜோன் நிராஜ் கணிதப் பிரிவில், அகில இலங்கை ரீதியாக இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
Kusumpu
/அன்டன் கிறிஸ்டர்ஸ் ஜோன் நிராஜ் / இது 4பேரா?
அருட்சல்வன் வி,
கணித பிரிவில் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தை யாழ். பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவனின் சரியான பெயர் என்டன் கிரசங் ஜோன் ராஜன் என்பதாகும்
அருட்சல்வன் வி,
செல்வி மைதிலி சிவபாத சுந்தரம் கொழும்பு வெள்ளவத்தை சைவ மங்கையர் கழக வித்தியாலய மாணவியாவார்.
ரந்தன் கெமிக்கல் நிறுவனத்தின் ஓய்வுபெற்ற பொறியியலாளரான சிவபாத சுந்தரம், மற்றும் கொழும்பு லேடி ரிஜ்வே ஆஸ்பத்திரியின் பற் சிகிச்சை நிபுணரான டாக்டர் சுந்தரகாந்தா தம்பதியினரின் புதல்வியான மைதிலி யாழ். கோண்டாவிலை பிறப்பிடமாகக் கொண்டவர்.
இவரது மூத்த சகோதரன் திருப்பரன் (வயது 24) மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் கற்று வருகிறார். இவரது மூத்த சகோதரி லக்ஷி (வயது 27) கொழும்பு பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்பை முடித்துள்ளார் என்றும் குறிப்பிடத்தக்கது.
nathan
வாழ்த்துக்கள் சகோதரி
yatharthavathi
தான் யாழ்ப்பாணத்திலேயே இதுநாள்வரை கல்வி கற்று வந்ததாகவும் அண்மையிலேயே கொழும்பிற்கு இடம்பெயர்ந்ததாகவும் தெரிவிற்கும் இம் மாணவி தன்னை விட திறமை வாய்ந்த மாணவர்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கிறார்கள் எனவும் அவர்களுக்கு சரியான வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை எனவும் தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்திருந்தார். தான் கற்று முடிந்ததும் தனது பிரதேசத்திலேயே சேவை செய்ய விரும்புவதாகவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
பார்த்திபன்
கல்வியில் சாதனை படைத்த இரு மாணவ மணிகளுக்கும் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரித்தாகுக.
palli
தொடர்க உங்கள் சாதனையை;
பல்லி குடும்ப வாழ்த்துக்களும் பாராட்டும்;
BC
சிறந்த மாணவி,மாணவனுக்கு வாழ்த்துக்கள்.
//Yatharthavathi-தான் கற்று முடிந்ததும் தனது பிரதேசத்திலேயே சேவை செய்ய விரும்புவதாகவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.//
மாணவிக்கு மீண்டும் வாழ்த்துக்கள்.