பிலிப் பைன்ஸ் படுகொலைகளை வன்மையாக கண்டித்த ஜனாதிபதி கலோரியா அரோயா குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின்முன் கொண்டுவரப்படுவரென சூளுரைத்துள்ளார்.
பிலிப்பைன்ஸில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கு நியமனப்பத்திரம் தாக்கல் செய்யச் சென்ற அரசியல்வாதிகள் ஆதரவாளர்கள் ஊடகவியலாளர்கள் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
தேர்தலைப் பகிஷ்கரிக்குமாறு எச்சரிக்கை விடுத்த குழுவொன்றே இப்படுகொலைக ளைப் புரிந்துள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது ஆரம்பத்தில் 21 பேரின் சடலங்கள் கண் டெடுக்கப்பட்டன. பின்னர் 41 பேரின் சடலங்களைப் பொலிஸார் கண்டெடுத்தனர். தேடுதல் நடவடிக்கைகள் இன்னும் தொடர்கின்றன.
பெண்கள், ஊடகவியலாளர்கள் இதில் மிகமோசமாகக் கொலைசெய்யப்பட்டு தலைகள் துண்டிக்கப்பட்டிருந்தன. இதையடுத்து பிலிப்பைன்ஸின் சில இடங்களில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அரசியல் நோக்கங்களுக்காக இப்படுகொலைகள் நடந்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார் அரசியல்வாதிகள் சிலருக்கும் இக்கொலைகளில் சம்மந்தமுள்ளதாகத் தெரிவித்தனர். இது குறித்து ஜனாதிபதி அரோயா கூறியதாவது,
படுகொலைகளுக்கு பின்னால் யார் இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் கொண்டு வந்து தண்டிக்கப்படுவர். கொலையாளிகள் தண்டனையிலிருந்து தப்பிக்கமுடியாது மனித குலத்துக்கெதிரான இப்பாரிய கொலையால் பிலிப்பைன்ஸ் அதிர்ச்சியடைந்தது இப்படுகொலைகளை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றார்.