அவுஸ்திரேலியாவுக்கு படகுகளில் புகலிடம் கோரி வருவோர் தொகை குறைவடைந்துள்ள நிலையில், 40 ஆயிரம் டொலர் செலுத்தி இப்போது விமான மூலம் சட்டவிரோத குடியேற்றவாசிகள் வந்து கொண்டிருப்பதாக அந்த நாட்டு பத்திரிகையொன்று நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாக ஆட்களை கடத்திக் கொண்டு வருவோருக்கு 40 ஆயிரம் டொலர்கள் கொடுக்கப்படுவதாகவும் விமானக் கட்டணம், போலிக் கடவுச்சீட்டு, போலி அவுஸ்திரேலிய விசா என்பனவற்றுக்கான கட்டணங்களும் இதில் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.