கூட்டுப் படைகளின் பிரதானியாகக் கடமைபுரிந்து ஓய்வுபெற்ற சரத் பொன்சேகாவை கொலை செய்ய அரசு முயற்சிப்பதாக வெளியிடப்படும் தகவல்களில் எதுவித உண்மையும் இல்லை என்றும், மக்கள் விடுதலை முன்னணி ஆதரவான ‘லங்கா’ பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தி தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரசாங்கம் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு ஜனாதிபதி செயலகத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில், தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல இக்கருத்தினை வெளியிட்டார்.
“சரத் பொன்சேகாவைக் கொலை செய்யும் முயற்சி நடைபெற்று வருவதாகப் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது. அதற்கு அரசாங்கத்துடன் தொடர்பிருப்பதாக நேரடியாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளமையானது பாரதூரமான விடயமாகும். ஆகையால் இதனை தீர விசாரிக்க வேண்டியுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பொலிஸ் மா அதிபருக்கும் புலனாய்வுப் பிரிவினருக்கும் இது தொடர்பான உத்தரவினை பிறப்பித்துள்ளார். இது தொடர்பாகக் குறிப்பிட்ட பத்திரிகை ஆசிரியரின் விளக்கமும் தேவைப்படுகின்றது. அவ்வாறானதொரு செய்தி தமக்குக் கிடைக்குமிடத்து, அவர் உடனடியாகப் பொலிஸாருக்கு அறிவித்திருக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
உயர்தரத்திலான இராணுவ அதிகாரி ஒருவர் ஓய்வுபெற்றதும் அவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பை விட மேலதிகமான பாதுகாப்பை சரத் பொன்சேகாவுக்கு வழங்கியுள்ளதாகவும், அவரது வேண்டுகோளுக்கிணங்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் ஹுலுகல்ல மேலும் தெரிவித்தார்.
makeswaran
தமிழர்களைக் கொன்று குவித்துவிட்டு வெடிகொழுத்தி கொண்டாட்டம் போட்டுவிட்டு இப்போ புதிசு புதிசாய் டிராமா போடுங்கோ. அதுக்கும் தமிழர் தலை தான் உங்களுக்குத் தேவை. புலிகளை அடக்குவோம் ஒழிப்போம் நாம் ஆட்சிக்கு வந்தால் என்று மாறி மாறி பதவிக்காக தமிழரைப் பாவித்தீர்கள். 30 வருசம் எடுத்தது புலியை அழிக்க. இப்ப நாங்கள் பதவிக்கு வந்தால் தமிழருக்குத் தீர்வு கொடுப்பம் என்று புதுத் தாயத்தை உருட்டுங்கோ என்ன தமிழர் தலைதானே உருள்ளுறது. அடுத்த 30 வருசத்துக்கு தீர்வு தாறம் எண்டு உருட்டுங்கோ. ஜனாதிபதித் தேர்தல் அறிவித்தவவுடன் உங்கள் துணைவியாரும் ராஜினாமா கடிதம் கொடுக்கிறா. ஆடுங்கோ கோலாட்டம்.
Thamil
A former public servant Sarath Fonseka paying 1 million as monthly house rent, tells how much his son-in-law made through shady defense deals.