மாவீர்கள் என்றால் யார்? வணங்கப்பட வேண்டியவர்கள் யார்? – கார்த்திகை 27 ஒரு சுயவிமர்சனம் (2) : வாசு (முன்னாள் போராளி)

Pirabakaran_Mahathayaபுலிகளால் படுமோசமாக சித்திரவதைக்கு உட்பட்டு பின்னர் கொல்லப்பட்ட புலிகள் அமைப்பின் முன்னாள் உப தலைவர் மாத்தையா உட்பட 700 போராளிகளை எல்லோருக்கும் ஞாபகமிருக்கும். புலிகளால் துரோகி முத்திரை குத்தப்பட்ட இவர்கள் தமிழ் மக்களின் நலனுக்காக தானே இயக்கத்தில் இணைந்தவர்கள்? பிரபாகரனின் முட்டாள்தானமான முடிவுகள் தமிழ் பேசும் மக்களிற்கு ஒரு விதமான விடிவையும் ஏற்படுத்தாது என்பதை உணர்ந்து தானே அவர்கள் புலிகளின் தலைமையை மாற்ற அன்று முனைந்தார்கள். இந்தியாவுடன் இணைந்து அவர்கள் செயற்பட முனைந்தது அன்று ஒரு முட்டாளை தலைமைப் பதவியில் இருந்து தூக்கவே என்பதை இன்று நாம் நன்கே உணர முடிகிறது. தமது பாதுகாப்புக்காக மக்களை ஆயிரக்கணக்கில் இன்று பலி கொடுத்த பிரபாகரனின் தலைமையுடன் ஒப்பிடுகையில் அன்று மாத்தையா வென்றிருந்தால் இந்த அவலங்கள் தடுக்கப்பட்டிருக்குமல்லாவா? புலிகளின் இன்றைய அழிவு தமிழ் மக்களின் நீதியான போராட்டத்தையும் அல்லவா அழித்து விட்டு சென்றுள்ளது.  ஆனால் இந்த அழிவை தடுத்து நிறுத்த முனைந்த மாத்தையா மற்றும் அவருடன் கொல்லப்பட்டவர்கள் இன்னமும் துரோகிகள். அவர்களை கொன்றவர்கள் மாவீரர்கள்.

நான் ஒரு வாதத்திற்காக மேற்சொன்ன விடயத்தை எடுத்தாலும் 1986 ரெலோ மீதான தாக்குதலுடனேயே புலிகளின் அனைத்து தலைவர்களும் தமிழ் மக்களின் விரோதிகளாக மாறி விட்டார்கள்.  அன்று ரெலோ மீதான தாக்குதல் நடாத்துகையில் யாழ் மக்கள் கொக்கோகொலா கொடுத்ததை நேரில் கண்டவன்! ரெலோ மீதான தாக்குதல் நடாத்துகையில் யாரும் கேள்வி கேட்கவில்லை. மாறாக உற்சாகப்படுத்தினார்கள். ரெலோவின் தாக்குதலை நியாயப்படுத்த நாமே (புலிகள்) கொள்ளையடித்த வாகனங்களை வரிசையில் நிற்பாட்டி விழா நடாத்துகையில் மக்கள் கைகொட்டி ஆரவாரம் செய்தார்கள். புலிகள் தொடர்ந்தும் மிகமோசமாக மாற்று இயக்கங்களை வேட்டையாடினார்கள். அதையும் மக்கள் பார்த்து மௌனித்து இருந்தார்கள். புலிகளின் கையில் இருந்த துப்பாக்கி அவர்களை மௌனிக்க வைத்தது. புலிகளால் கொல்லப்பட்ட அனைவரும் தமிழ் மக்களின் விடுதலையை உண்மையில் நேசித்தவர்கள். அரசியல் சித்தாந்த சிந்னையற்று  புலிகள் அமைப்பால் வளர்க்கப்பட்ட பலர் புலிகளின் பாசிச குணத்தை புரிந்து கொள்ளாது மேலும் மேலும் சகோதர படுகொலைகளை புரிந்து வந்தார்கள். இந்த கொலைகளை செய்தவர்கள் பிரபாகரனினால் புலிகளின் முக்கிய தளபதிகள் ஆக்கப்பட்டார்கள்.

கந்தன் கருணை படுகொலை! மக்களின் விடுதலையை நேசித்தவர்கள், நிராயுதபாணியாக தடுத்து வைக்கப்பட்டவர்கள்! அருணா என்ற புலிகளின் மூத்த தளபதியால் படுகோரமாக கொல்லப்பட்டவர்கள்! மக்கள் விடுதலையை நேசித்து இயக்கங்களுக்கு சென்றவர்கள் துரோகிகள். ஆனால் நிராயுதபாணிகளான அந்த போராளிகளை கொன்ற அருணா ஒரு மாவீரனாக கார்திகை 27இல் தரிசிக்கப்படுவான்.

Kittu_Colநினைக்கவே மனம் கொந்தளிக்கிறது! புலிகளின் முக்கிய தளபதி கிட்டு! ஆயிரக்கணக்கான ரெலோ, புளட், மற்றும் பல இயக்கங்களின் போராளிகளை கொன்று குவித்த ஒரு போர்க் குற்றவாளி! இவரினது படங்கள் கார்த்திகை 27இல் பாரிய மண்டபத்தை அலங்கரித்து நிற்கும். மக்கள் அதற்கு பூ போட்டு வணங்குவார்கள்! ஆனால் இவரால் கொல்லப்பட்ட அத்தனை மனிதங்களும் துரோகிகள்! ரெலோ சிறீ சபாரட்னம், புளட் சின்ன மென்டிஸ் உட்பட பல நூற்றுக் கணக்கான மாற்று இயக்கப் போராளிகளை தனது சொந்த கைகளால் நிராயுதபாணிகளாக வைத்து கொலை செய்த கிட்டு ஒரு மாவீரன். விடுதலையை நேசித்து சென்ற மாற்று இயக்கத்தினர் துரோகிகள்!

புலிகளின் கிழக்கு மாகாண தளபதிகள் புலேந்திரன், குமரப்பாவின் மரணத்தை அண்மையில் ஐரோப்பா எங்கும் சிறப்பாக கொண்டாடினார்கள். இவர்களும் இந்த முறை மாவீரர் தின மண்டபங்களில் புலம்பெயர் தமிழ் மக்களின் சிர வணக்கத்திற்குள்ளாகும் முக்கிய தளபதிகள். ஆனால் இந்த இருவரது தலைமையிலும் கொல்லப்பட்ட எல்லைக் கிராம அப்பாவி சிங்கள மக்கள் மற்றும் சிறு குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்? இவர்களின் கொலை வெறிக்கு நூற்றுக்கணக்கான அப்பாவி சிங்கள மக்கள் மட்டும் கொல்லப்படவில்லை. கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பல போராளிகளும் இவர்கள் இருவரினதும் கட்டளையால் கொல்லப்பட்டனர்.

மன்னார் தளபதி விக்டர். இவரின் படமும் மாவீரர் மண்டபங்களை அலங்கரிக்கும் ஒரு படம். ஆனால் அனுராதபுரம் தாக்குதலை தலைமை வகித்து சென்று  அப்பாவி நிராயுதபாணி சிங்கள மக்கள் வெட்டியும் சுட்டும் கொலை செய்த இந்த மனிதன் ஒரு மாவீரன்? தமிழ் சமூகமே வெட்கி தலைகுனிய வேண்டிய கொலைகளை மிக சர்வசாதாரணமாக செய்த இந்த புலித் தலைமைகள் மாவீரர்கள்? மக்களை நேசித்து மக்களிற்காக இவர்களால் கொல்லப்பட்டு இறந்தவர்கள் துரோகிகள்?

இதற்கெல்லாம் சிகரம் வைத்தால் போல் புலித் தலைமை செய்த இனச்சுத்திகரிப்பு! தமிழ் பேசும் முஸ்லீம் மக்களை யாழ் குடாவில் இருந்து சில மணித்துளிகளுக்குள் வெளியேற சொன்ன புலிகளின் தலைவருக்கும் நாசிகளுக்கும் ஒரு கொஞ்ச வித்தியாசமே. நாசிகள் யூதர்களை கொன்று குவித்தார்கள், புலிகள் முஸ்லீம் மக்களை உயிருடன் நடை பிணமாக யாழ் குடாவை விட்டு வெளியேற்றினார்கள். இந்த நிகழ்வுக்கு காரணமான பல தளபதிகள் இன்று மாவீரர் பட்டியலில் விளக்கேற்றி கௌரவிக்கப்படுவார்கள். ஆனால் இவர்களால் வெளியேற்றப்பட்ட முஸ்லீம் சகோதரர்கள் இன்னமும் புத்தளத்தில் அகதிகளாக வாழ்கிறார்கள்.

கார்த்திகை 27இல் நீங்கள் இறந்த போராளிகளை வணங்குவதில் தவறில்லை. ஆனால் வணங்கப்படுபவர்கள் தவறானவர்கள். இவ்வளவு காலமும் புலிகளிடம் ஆயுதம் இருந்தது கேட்க பயந்தோம். இனியும் இதை கேட்காது போனால் நாம் தமிழ் பேசும் மக்கள் அனைவருக்கும் மட்டுமல்ல மானிட குலத்திற்கே துரோகம் செய்தவர்கள் ஆகி விடுவோம். ஹிட்லரும் ஜேர்மனி என்ற தேசத்தை நேசித்தவன் தான். ஆனால் அவன் மனித நேயத்தை முழுவதுமாக மறந்த மனிதன். நாம் மாவிரர் தினம் கொண்டாடுவது கிட்டத்தட்ட நாசிகளின் மரணத்தை கொண்டாடுவதற்கு ஒப்பானது. புலிகளில் இருந்து கரும்புலிகளாகி பிரபாகரனை நம்பி மோசம் போனவர்கள் வணங்கப்பட வேண்டியவர்கள்! புலிகள் இயக்கத்தில் மக்களின் விடுதலையை நேசித்து சென்ற இறந்தவர்கள் வணங்கப்பட வேண்டியவர்கள். இவர்கள் மட்டுமல்ல மக்களை நேசித்து மக்களிற்காக போராடி இறந்த அனைத்து இயக்கப் போராளிகளும் வணங்கப்பட வேண்டியவர்கள். இந்த யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களும் வணங்கப்பட வேண்டியவர்கள்.

ஆனால் மக்களை ஏமாற்றி இந்த போராளிகளை மற்றும் தமிழ் சமூகத்தையே ஏமாற்றிய புலித் தலைமைகள் காலத்தால் மறக்கப்பட வேண்டியவர்கள். தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் வாழ்வை துறந்தவர்களை வஞ்சித்த புலி, புளொட், மற்றும் ரெலோ அமைப்புகளின் தலைமையை வணங்குவது மனித குலத்திற்கு அவமானம் தேடித்தரும் ஒரு செயல்! மக்கள் இதை மறந்தால் தமிழ் சமூகமே மனித குலத்திற்கு அவலத்தை தந்த ஒரு இனமாகவே மற்றவர்களால் பார்க்கப்படும்!

மாவீரர்களை நினைவுகூருவோம்!!!
அவர்களைக் கொச்சைப்படுத்தாமல்!

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

24 Comments

  • jalpani
    jalpani

    பிரபாகனில் இருந்து சிறிசபாரட்னம் வரையான அனைத்து மக்கள் விரோதிகளின் பெயர்களையும் துரோகிகளாக பிரகடனம் செய்ய வேண்டும்.

    Reply
  • Kulan
    Kulan

    நான் எழுத நினைத்ததை அப்படியே எழுதியிருக்கிறீர்கள். பரீட்சையில் நீங்கள் எவ்வளவு படித்தீர்கள் என்பது யாருக்கும் தெரியாது. பரீட்சையின் பெறுபேறுதான் நீங்கள் சரியாகப்படித்தீர்களா அல்லது படிப்பது போல் நடித்தீர்களா என்பதை சொல்லும். இன்று புலிகளின் பலப்பரீட்சையின் முடிவு சரியாகத் தெரிகிறது. இந்தப்பரீட்சைதான் புலிகள் தியாகிகளா? துரோகிகளா? என்பதை காட்டவல்லது. புலிகளின் தமிழீழப்பரீட்சையின் முடிவு புலிகள் தமிழினத்துரோகிகள் என்பதேயாகும். நான் இங்கு புலிகள் என்று கருதுவது புலித்தலைமையை. இது தியாகத்திருநாளா அரக்கராக உருமாறிய தமிழ்துரோகிகள் அழிந்த தீபாவளிப் பெருநாளா என்பதை மக்கள் உணரக்கடவது. நான் மாத்தையாவுடன் மிகநெருங்கிய தொடர்வில் இருந்தவன் என்பதால் கூறுகிறேன்.மாத்தையா எந்தவகையிலும் பிரபாகரனை விடச் சிறந்தவராக முடியாது. மாத்தையா; கருணா; பிள்ளையான்; கிட்டு எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். மாத்தையா இந்தியாவின் உதவியுடன் எதைச் செய்தாலும் ரெலோவை மாதிரி புலிகளோ அல்லது வேறு இயக்கமோ அழிக்கப்பட்டிருக்கும். புலிப்பாசறையில் வளர்ந்த எந்தக் குட்டியும் மனிதம் மறுக்கப்பட்டு நஞ்சூற்றியே வளர்க்கப்பட்டனர். இது கடுமையாக சொற்பிரயோகமாக இருந்தாலும் உண்மை இதுதான்.

    Reply
  • BC
    BC

    //வாசுதேவன் – தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் வாழ்வை துறந்தவர்களை வஞ்சித்த புலி, புளொட், மற்றும் ரெலோ அமைப்புகளின் தலைமையை வணங்குவது மனித குலத்திற்கு அவமானம் தேடித்தரும் ஒரு செயல்! //

    அதில் சந்தேகமில்லை.

    Reply
  • Velu
    Velu

    Dear Comrades, Thanks for your article which speaks your own experience.The ex-carders and fighters who came out to serve for the people by mistake, have joined with the mafia movements like LTTE ,TELO,PLOTE and ect. and have to speak now in favour of the people.
    Who is the Maaveerar? It is an important question?.
    We have to answer this question without any doubt.The next thing is can we celebarate the Nazis? NO,Never, Ever it is possible.Then how can we celebarate the death of the Tamil/Eelam Nazis who have massacred poor Sinhala village people with their children,Shot and burned TELO carders who had been still in a conscious stage and asked for little drop of warter (most of them were the sons and daughters of Eastern province),KanthanKarunai Home Killing,massacre of intellectuals ,revolutinories and dedicated prolatarion fighters like com.ANNAMALAI from NSSP party and Com.VIYANANTHAN from Communist party and etc.
    Now you can judge the statement on so-called maaveerar which is published by the Canadian branch of the PLOTE group and it is published in the pro EPRLF sooddram web site.

    Reply
  • VS
    VS

    ஐந்தாம் தலைமுறை மலையாளி சரத் பொன்சேகாவின் தலைமையில் இரண்டாம் தலை முறை மலையாளியான பிரபாகரனுக்கெதிரான போரில் பூர்வீக இலங்கையர் தம் பிள்ளைகளையும் தொலைத்து வாழ்வையும் இழந்து நிர்க்கதியாகிவிட்டனர்

    Reply
  • vetrichelvan
    vetrichelvan

    மிகச் சரியான கருத்து

    Reply
  • Gunalan
    Gunalan

    மறக்கப்பட்ட மாவீரர்கள் – THIAGARAJAH SELVANITHI

    Selvi was born into a peasant family in Semamadu, a village about 80 miles south of Jaffna. Selvi was a Tamil language poet and A third-year student in Theater and Drama Arts in the University of Jaffna.

    She was the founder of a feminist journal called Tholi and was a gifted young poet who in her work deplored the carnage brought about by the Sri Lankan civil war. Selvi also produced two plays, one about dowry payments and the other about rapes. She was a International PEN award winner in 1992.

    Selvi was arrested by the LTTE on August 30, 1991. The day before her abduction she was about to star in a play about the role of women in the Palestinian intifada.
    She was a prominent member of Poorani Illam, a women’s center in Jaffna, which gives support to women traumatized by government bombing raids and bereavement. Who was abducted and executed by the LTTE.

    In 1997, LTTE sources acknowledged that she was executed along with another dissident one Manoharan also a final year University student. Although their opposition to the LTTE was non-violent, they were both executed in the LTTE’s prison camps.

    Reply
  • senthil
    senthil

    இவ்வளவு காலமும் புலிகளிடம் ஆயுதம் இருந்தது கேட்க பயந்தோம். இனியும் இதை கேட்காது போனால் நாம் தமிழ் பேசும் மக்கள் அனைவருக்கும் மட்டுமல்ல மானிட குலத்திற்கே துரோகம் செய்தவர்கள் ஆகி விடுவோம்…..வாசு நிங்கள் மானிப்பாய் வாசுவா? ரிபிசியின் நெற்றிக்கண் வாசுவா? உங்களுக்கு இப்போது பயமில்லை தானே பதில் தரவும். ஏனெனில் உங்களை பற்றியும் சுயபரிசீலனை செய்யவேண்டியுள்ளது.

    புலிகளால் படுமோசமாக சித்திரவதைக்கு உட்பட்டு பின்னர் கொல்லப்பட்ட புலிகள் அமைப்பின் முன்னாள் உப தலைவர் மாத்தையா உட்பட 700 போராளிகளை எல்லோருக்கும் ஞாபகமிருக்கும்……

    வாசு இந்த தகவல் மிகத்தவறானது. மாத்தையாவின் மெயின் மெய்பாதுகாவலர் புனிதன் லண்டனில் தான் இருக்கிறார். அவரும் மாத்தையாவுடன் கூடவே மருதடி முகாமில் வைத்து கைதுசெய்யப்பட்டவர். பின்னர் புலிகளால் விடுதலை செய்யப்பட்டு லண்டனில் உள்ளார். அதேபோல் மாத்தையாவின் பப்பா அல்பா என்ற அணியில் இருந்த பலர் வெளிநாடுகளில் உள்ளனர்.

    புலிகளால் கைது செய்யப்பட்ட ஜெயம், தீபன், குட்டி, லோரன்ஸ், யோகி எனப்பலர் பின்னரும் புலிகள் இயக்கத்தில் செயற்பட்டனர். விடுதலையான பலர் வெளிநாடுகளில் உள்ளனர் புனிதன், புலிக்குட்டி, சலீம், சீனிவாசன் எனத் தவறவிடப்பட்ட பலர் வெளிநாடுகளில் உள்ளனர். வாசு உங்கள் கணிப்பில் 700 பேரில் 50 பெயரையாவது உறுதிப்படுத்தவேண்டும். அதனால் 50 உயிர்கள் மலிவானதாகவோ மலினப்படுத்துவதோ நோக்கமல்ல. வெறும் தொகைகளை எழுந்தமானமாக புலிப்பாணியில் கூறக்கூடாது.

    செங்கமலம், எஞினியர், சுசிலன், சுரேஸ் (கையில்லாதவர்), கிருபன் போன்றவர்கள் கொல்லப்பட்டவர்களில் சிலராகும்.

    புலிகளால் கைது செய்யப்பட்ட மகேந்தி, நிர்மலன் (முன்னர் லண்டனில் 90களின் முன்னர் செயற்பட்டவர்) போன்றோர் பின்னரும் புலிகளில் அங்கம் வகித்து வீரச்சாவடைந்துவிட்டனர்.

    அருணா 1988இல் குருநகர் பகுதியில் இந்திய இராணுவத்துடனான மோதலில் கொல்லப்பட்டவர். ஆனால் அவரை புலிகள் தமது மாவீரர் பட்டியலில் இணைக்கவில்லை. ஆரம்பத்தில் 90ம் ஆண்டு மாத்தையா மக்கள் முன்னணிக்கு பொறுப்பாக இருந்தபோது அருணாவையும் பட்டியலில் சேர்த்திருந்ததாகவும் ஆனால் 91இல் அருணா பட்டியலில் இருந்து பிரபாகரனின் உத்தரவுக்கு அமையநீக்கப்பட்டிருந்தார் என அறியமுடிகிறது.

    வாசு தாங்கள் இங்கு கிட்டுவின் வீரபிரதாபங்களில் தனது என்னவளுக்காக கொலை செய்யப்பட்ட விஜிதரனை மறந்துவிட்டீர்கள்!! கிட்டுவின் என்னவள் கிட்டுவின் மரணம் ஆற முன்னரே அவுஸ்ரேலியாவில் மாற்றுதிருமணம் செய்து விட்டார். பாவம் விஜிதரன்!!

    Reply
  • Poorni
    Poorni

    விஜிதரன் கிட்டுவினால் கொல்லபட்டதுடன் யாரோ எழுதிய கவிதையின் சில வரிகள்

    “மரப் பிடியை கொண்ட AK47 இக்குத் தான் மூளை இல்லையென்றல் உங்களுக்குமா, முன் ஏறுங்கள் போர் முனையில்”

    யார் இதைக் காதில் போட்டது …………மே பதினெட்டம் திகதி வரைக்கும்.

    Reply
  • வாசு
    வாசு

    செந்தில் நன்றிகள்! நான் 700 என்று கூறியதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. ஆனால் நான் பழகிய முன்னை நாள் புலிப்போராளிகளின் தகவலை மையமாகவைத்தே அந்த தகவலை இங்கு கூறினேன். எண்ணிக்கையை நான் முக்கியமாக கருதவில்லை மாறாக நடந்த சம்பவத்தை மட்டுமே நான் முன்னிலைப்படுத்த முயன்றேன். என்னைப்பற்றிய சுயவிமர்சனத்தை தந்தால் மட்டுமே எனது கட்டுரை வலுப்பெறும் என்றால் அதற்கு நான் தயார். ஆனால் தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல் இழுபறிகளால் நான் புலி முகவராக முத்திரை குத்தப்பட்டமைக்கு நான் சுயவிமர்சனம் செய்யவேண்டிய தேவையில்லை. நான் புலிகளுக்கு பயந்தவனாக இருந்திருந்தால் நிச்சயம் தீப்பொறி அமைப்பில் இணைந்து வேலை செய்திருக்க மாட்டேன். ஈழபூமி பத்திரிகையில் பணியாற்றியிருக்கமாட்டேன். ரீபீசியில் பணி புரிந்திருக்கமாட்டேன். ஆதரமின்றி என்மீது சுமத்தப்படும் குற்றங்களிற்கு நான் ஏன் பதில் சொல்ல வேண்டும்?

    மன்னிக்கவும். விஜிதரன் மட்டுமல்ல பல பொதுமக்கள் புலிகளால் கொல்லப்பட்டதை நான் சொல்ல முனைந்தால் கட்டுரையின் நீட்சி மிக அதிகமாக இருக்கும். அந்த அளவிற்கு கொலைகள் இடம்பெற்றுள்ளன என்பதை தொடர்ந்தும் கேள்வியுறுகிறோம்.

    Reply
  • palli
    palli

    செந்தில் நீங்கள் வாசு மீது வைத்திருக்கும் குற்றசாட்டு நியாயம் இல்லாதது போல் உள்ளது, உங்கள் கணக்கின்படி புலி என்றால் அது பெயர் தெரிந்த சிறுத்தைகள்தானா? மாத்தையா பிரிவில் இருந்து இறந்தவர் தொகை வாசு சொல்லியதையும் விட கூட; பூனகரி முகாம் தாக்குதலில் முன்னரங்கில் நிறுத்தி போர் புரியவிட்டு பின்னரங்கில் நின்று அவர்களை ராணுவத்துடன் அழித்த பெருமை புலிக்கு உள்ளது, புலியால் கைது செய்து விசாரிக்கபட்டு கொலை செய்த கணக்கை மட்டும் வைத்து கதை அளக்கலாமா? மிக கட்டாய கரும்புலியாக்க பட்டவர்கள் யார் என கருனாவிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும்; நீங்க சொல்லிய லொண்டனில் இருக்கும் அந்த மாத்தையா உதவி புலிகளிடம் ஏன் புலிகள் ரெலோவை அழித்தனர் என கேட்டு பாருங்கள், அவர்களிடம் இருந்து தெரியாது எனவே பதில்வரும்;

    ஆனாலும் ரெலோ அழிப்பில் மிக கொடூரமாக செயல்பட்டது, மாத்தையாவின் மரமண்டைகள்தான், ஆனால் அதில் பலர் இன்று சுகமாக வாழ்வது தாங்கள் சொல்லிதான் தெரியும்; ரெலோ தொழர்களை விட மாத்தையாவின் பிரதேசமான வவுனியாவை சேர்ந்த (ஆனையிறவில் இருந்து அனுராதபுரம் வரை) கொல்லபட்டது நேரடியாகவும் போர்முனைக்கு என அனுப்பியும் பின்முதுகில் போட்டு தள்ளியது கணக்கே இல்லை; இத்தனை நடந்தும் ஒன்னுமே நடக்காதமாதிரி அவர் இருக்கார் இவர் இருக்கார் என கணக்கு காட்டுவது சரியானதா??

    Reply
  • santhanam
    santhanam

    பல்லி நீங்கள் இவ்விடயத்தை ஒப்புகொண்டதற்கு நன்றி உமக்கு தெரிந்ததை எழுதும் 1987 மே புளட் இந்தியாவில் பயிற்சி எடுத்த தோழகளிற்கு ஊரேழுவில் வைத்து கம்பியாலும் வயராலும் எங்கள் கண்முன்கதற கதற அடித்ததை பார்த்தவன் அவர்கள் இன்று புலம் பெயர்ந்த தேசத்தில் வாழ்கிறார்கள் அடித்தவர் அனைவரும் சுட்டுகொல்லபட்டுவிட்டார்கள் எங்கலை காப்பற்றிவிட்ட புலி கனடாவில் வாழ்கின்றான் அவர் புனைபெயர் நிரஞ்சன்.மாணவர் கட்டமைப்புக்கு பொறுப்பாக இந்தியாவிலிருந்து வந்தவர்.

    Reply
  • karan
    karan

    வன்னிப் பொறுப்பாளராக இருந்த ஜெயம் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார் என்பது உண்மை. ஆனால் அவர் விடுவிக்கப்பட்ட போது கால் கைகளில் எல்லாம் எத்தனை விரல்கள் இருந்தன என்று தெரியுமா? அவருடைய நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் லண்டனில் உள்ளனர் ஒரு தடவை அவர்களைக் கேட்டுப் பாருங்கள்.

    Reply
  • senthil
    senthil

    பல்லி
    பூனகரி தாக்குதல் நடந்து முடிந்த பின்னரே மாத்தையாவின் கைது நடவடிக்கை நடந்தது. இதனால் உங்களின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

    வாசு
    நான் 700 என்று கூறியதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. ஆனால் நான் பழகிய முன்னை நாள் புலிப்போராளிகளின் தகவலை மையமாக வைத்தே அந்த தகவலை இங்கு கூறினேன். …… //
    இது போன்ற மூன்றாம் தரப்பு விடயங்களை ஆதாரமில்லாமல் எழுத வேண்டாம். மாத்தையா பிரச்சனை நடந்த காலத்தில் வன்னிக் காடுகளில் பிரபா அணிக்கும் மாத்தயா அணிக்கும் இடையில் மோதல் பலநூறு புலிகள் பலி என கொழும்பு பத்திரிகையில் இவ்வாறான செய்திகள் வந்தன. ஆனால் அவ்வாறு ஒரு சிறு அசம்பாவிதமும் மாத்தையா பிரச்சனையில் நடக்கவில்லை. மிகவும் சுமூகமாகவே கைது நடவடிக்கைகள் நடந்தன. மாத்தையா அணியை சேர்ந்த எவரும் கைது செய்ய சென்ற சொர்ணம், பால்ராஜ், சூட் ஆகியோர் மீது சிறு சலசல்ப்பை கூட காட்டவில்லை. ஆனால் ஏதாவது அசம்பாவிதம் நடக்கலாமென முன் எச்சரிக்கை பாதுகாப்புகள் போடப்பட்டிருந்தன.

    Reply
  • jude
    jude

    gunalan!
    செல்வி பற்றிய தகவல்களை உங்கள் பெயரின் கீழே தந்துள்ளீர்கள். செல்வியின் சொந்த இடம் சேமமடு என்றும் யாழ்ப்பாணத்திலிருந்து 80 மைல் தூரத்தில் உள்ளதென்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
    இவ்வளவு கஸ்ரப்பட்டு யாழ்ப்பாணத்தில இருந்து அளந்திருக்கத் தேவையில்லை. வவுனியாவில இருந்து அளந்திருந்தால் வெறும் 12 மைல்தான் வந்திருக்கும். நேரத்தையும் மிச்சப்படுத்தியிருக்கலாம் செலவையும் குறைச்சிருக்கலாம்.
    நெடுகலும் உந்த ரேப்பை பாவிக்காதயுங்கோ இடைக்கிடை சின்ன ரேப்பையும் பாவியுங்கோ.

    Reply
  • Kusumpu
    Kusumpu

    தம் சொந்த மக்களையே அழிக்கக்கங்கணம் கட்டிக் கொண்ட மனித மானிட விரோதிகள் மறக்கப்பட வேண்டியவர்களே. இவர்களுக்கு எதற்கு மாவீரர் தினம். கொல்லப்பட்ட தொகை அல்ல முக்கியம் சொல்லுப்பட்ட விடயமே கவனிக்கப்பட வேண்டியது.

    Reply
  • BC
    BC

    //செல்வியின் சொந்த இடம் சேமமடு என்றும் யாழ்ப்பாணத்திலிருந்து 80 மைல் தூரத்தில் உள்ளதென்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
    இவ்வளவு கஸ்ரப்பட்டு யாழ்ப்பாணத்தில இருந்து அளந்திருக்கத் தேவையில்லை.//

    என்ன இது? யாழ்ப்பாணத்திலிருந்து 80 மைல் துரத்தில் உள்ளது என்னும் போதும் சேமமடு என்ற கிராமம் எங்கேயுள்ளது என்று அறிய முடிகிறது தானே! இதில் கஸ்டமானது புலிகளின் மக்கள் விரோத நடவடிக்கைகள் தான்.

    Reply
  • palli
    palli

    செந்தில் பூனகரி முகாம் தாக்குதலில் மாத்தையாவின் குழிவினர் அழிக்கபடவில்லை என சொல்வதால் தாங்கள் மிக விடயம் தெரிந்த நபராகதான் இருக்க கூடும், இருப்பினும் அம்மானிடம் யாராவது கேட்டு செந்திலின் சந்தேகத்தை நிவர்த்கி செய்வது நல்லது, மாத்தையாவை கைது செய்ய முதல் பிரபா தெரிவு செய்தது பால்ராசைதான், ஆனால் அதுக்கு பால்ராஜ் அது சாத்தியபடாது என கைவிரித்தார் காரனம் பால்ராஜின் பல நண்பர்கள் மாத்தையாவின் தூண்களாக இருந்தார்கள், அதனால் மாத்தையாவை பிரபாகரனிடம் கூட்டி சென்றது பாலா அண்ணன் தான்; இது பாலா அண்ணாவால் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கபட்ட விடயம், அது போலவே கருனா விடயத்திலும் பால்ராஜ் தனது உடல்நிலை கருதி போக மறுத்து விட்டார், எழுந்தமானத்தில் எழுத இவர்கள் என்ன பெரிய தியாகிகளா?? தறுதலைகளாக வந்தவன் போனவன் எல்லோரையும் போட்டு தள்ளிய பயில்வாஙளுக்கு கற்பனை கதை வேறா??
    வவுனியாவில் கழகத்தில் அம்பிகைபாலன் என ஒருவர் இருந்தார், அவர் இருக்கும் வரை மாத்தையா ரோட்டுக்கு வருவதே அரிது, மாத்தையாவையும் கிட்டுவையும் புலேந்திரனையும் தெரியாத இலங்கை தமிழன் இருக்க முடியுமா? எமன்கூட இவர்களிடம் மேலதிக வகுப்பெடுக்க வேண்டும் கொலைக்கு;

    யோகி ,இளம்வளுதி ;திலகர்; ஆகியோர் வெளியில் வந்தால் தெரியும் மாத்தையாவால் பாதிக்கபட்ட பலரின் (அவரின் குழுவில், அவருக்கு சார்பாய் இருந்ததால்) கிடைத்த பலங்கள்,

    Reply
  • palli
    palli

    சந்தானம் உங்களுக்கு அடித்தது புலியா? புளட்டா?? புரியாமல் எழுதி உள்ளீர்கள்; புலியில் கூடவா மனிதநேயம் இருந்தது, வாழ்க அந்த கனடா நண்பர், அதுசரி அந்த நண்பர் தற்ப்போது புலியில் இல்லையா? காரனம் அங்கு விட்டு விட்டு ஆடிவந்த சிலர்தான் இப்போ புலம்பெயர் தளபதிகளாம்; (புலிக்குமட்டுமல்ல) அது சரி சந்தானம் நான் எதை ஒப்புகொண்டேன், பல்லியை பொறியில் மாட்டிவிட வேண்டாம், பாவம்தானே பல்லி;;;;

    Reply
  • shivan
    shivan

    வாசு – முன்னாள் போராளி
    யார் அந்த மட்டக்களப்பு புளொட் வாசுவா?

    Reply
  • naane
    naane

    புலிகளால் கைது செய்யப்பட்ட மகேந்தி, நிர்மலன் (முன்னர் லண்டனில் 90களின் முன்னர் செயற்பட்டவர்) போன்றோர் பின்னரும் புலிகளில் அங்கம் வகித்து வீரச்சாவடைந்துவிட்டனர்.
    தேசம் வாசிக்கத்தொடங்கிய பின் பழையபடி பன்றிக்காச்சல் வரப்பாக்கின்றது. நிர்மலன் என்னுடன் சில காலம் லண்டனில் படித்தவர். பொல்லாத புலியாகத்தான் இருந்தார்.
    வாசுவின் கட்டுரையும் சரி, அதைதொடரும் பல பின்னோட்டங்களும் சரி, தங்கள் கருத்துக்களை நியாயப்படுத்துவதில் தான் கவனம் எடுக்கின்றார்களே தவிர, உண்மைகளை உணர்ந்தவர்களாக இல்லை. இயக்கங்கள் அனைத்துமே பிழைகள் விட்டது உண்மை. ஆனால் இயக்கங்கள் தொடங்கிய காலங்களில் அவர்களை அவதார புருசர்களாக கொண்டாடியதும் நாங்கள் தான். அப்போதே இவர்கள் பிழையாக போகின்றார்கள் எனத்தெரிந்ததும் ஆமிக்கு காட்டிக்கொடுத்திருக்கலாம் தானே?.கடைசி விமர்சனங்களாவது வைத்திருக்கலாம் தானே. சிங்களவனுக்கு அடித்தால் காணும் என்று நாங்களும் சும்மா இருந்து விட்டு இப்ப விமர்சனம் செய்வதில் என்ன பலன்.ஆயுதம் தூக்கியவன் எவனும் மற்றவன்ரை சொல்லை கேட்டதாக சரித்திரம் இல்லை. சமாதானப்படைகளே உலகம் முழுவதும் செய்யும் அநியாயங்களைப் பார்த்தால் தெரியும்.வெளியில் இருந்து எதுவும் கதைக்கலாம் ஆனால் உள்ளுக்குள் போனால் தான் தெரியும் அருமை.

    Reply
  • palli
    palli

    //வெளியில் இருந்து எதுவும் கதைக்கலாம் ஆனால் உள்ளுக்குள் போனால் தான் தெரியும் அருமை.//
    என்ன இது சின்ன பிள்ளைதனம் பல்லி தவிர்ந்த பலர் உள்ளே இருந்து வெளியே வந்தவர்தானாக்கும்; திரும்பவும் அவர்களை அனுப்புவது நியாயமா(நான் சொன்னது இயக்கத்தில் இருந்து வந்தவர்கள் என)

    Reply
  • naane
    naane

    பல்லியும் நான் சொன்னதை பிழையாக விளங்கிவிட்டது போல.வெளியில் இருந்து இப்ப கதைப்பவர்கள் அப்ப கதைதார்களா? என்றுதான் கேட்டேன்.போராட வந்தவர்கள் முதலில் இங்கிருந்து வெளியில் போவம் பின்னர் கதைப்பம் என்ற மனநிலையில் தான் இருந்தார்கள்.அதிலும் பலர் இருக்கு மட்டும் எல்லாத்திற்கும் சரியென்று தலையாட்டுவம் என்ற நிலையில் தான் இருந்தார்கள்.இதில் எவரையும் குற்றம் சொல்ல முடியாது. நிலமை அப்படி.எதையும் நேரெ கதைக்கும் பழக்கமுள்ள நான் பட்டபாடு சொல்லிமாளாது.ஆனால் போராடவந்து எது வித பிழையும் செய்யாமல் துரோகியாக சாகக்கூடாது என்றுதான் எல்லோரும் விரும்பினோம். தலை என்னிடம் ஒரு முறை கேட்டது உமக்கென்று ஒரு வேலை தந்திருக்கு பிறகு நீர் ஏன் மற்ற பிரச்சனைகளுக்குள் தலையை நீட்டுகின்றீர் என்று. நான் கேட்டேன் இயக்கமே இல்லாது போகப்போல கிடக்கு இதில நான் எப்படி என்ர வேலைமட்டும் பார்த்துக்கொண்டு இருப்பதென்று.அங்கிருக்கும் போது நாலு பேரை கேட்டுத்தானே பார்த்தேன் வாயை திறவுங்கோடா என்று ஆளை விட்டால் காணும் என்று பறந்து விட்டார்கள்.

    Reply
  • Kandaswamy
    Kandaswamy

    பல்லி,
    உள்ளே வெளியே என்பது எல்லாம் அவரவர் பார்வையை பொறுத்தது. இயக்கத்தில் இருந்து வந்தவர்கள் என்று பார்த்தால் நிறைய பேரை பார்க்கலாம். ஆனால் எல்லாருடைய அனுபவம், பார்வை வித்தியாசம்.

    Reply