காரத்திகை 27 மாவீரர் நாள்! புலிகள் அமைப்பில் இருந்து தமிழீழ விடுதலைக்காக தம் இன்னுயிர்களை அர்ப்பணித்த புலி வீரர்களை மட்டும் நினைவு கூரும் நாள்! தம் சுயநலம் பாராது பொது நலனுக்காக தமது உயிர்களை அர்ப்பணித்த இந்த மனிதங்களை நினைவு கூர வேண்டியது ஒவ்வொருவரினதும் கடமை. இயக்க வேறுபாடுகளை மறந்து இன்னுயிர்களை தியாகம் செய்த இந்த மறவர்கள் காலா காலத்திற்கு வணங்கப்பட வேண்டியவர்கள். மறுக்கப்பட முடியாத உண்மை.
ஆனால் கடந்த மே மாத நிகழ்வுகள் அதன் பின்னான அரசியல் மாற்றங்கள், அதற்கு முன்னான விடுதலைப் புலிகள் என்ற அமைப்பின் செயற்பாடுகள் அனைத்தும் இந்த மாவீரர்களின் வீர மரண நியாயத்தை ஒரு அநியாயமான மரணமாக மாற்றி விட்டது என்பது சகிக்க முடியாத உண்மை. இன்று இலங்கையில் வாழும் பெரும்பாலான தமிழ் மக்களின் வெறுப்பை விடுதலைப் புலிகள் சம்பாதித்துள்ளனர். வெளி நாடுகளில் வாழும் தமிழர்களும் மெல்ல மெல்ல புலிகளின் பாசிச போக்கை உணர ஆரம்பித்துள்ளனர்.
ஆனால் புலிகள் இயக்கத்தில் இணைந்த 99 வீதமான போராளிகள் தேச விடுதலை என்ற ஒரு நோக்கோடுதான் அந்த அமைப்பில் இணைந்தார்கள். பலர் பலவந்தமாக இணைக்கப்பட்டார்கள். ஆயிரக்கணக்கில் தம் இன்னுயிர்களை தியாகம் செய்த இந்த போராளிகள் அனைவரும் புலிகள் அமைப்பின் இருப்பை காக்கவே பலி கொடுக்கப்பட்டார்கள் என்ற உண்மையை இன்று நாம் வெளிப்படையாக காண முடிகிறது. முள்ளிவாய்கால் முற்றுகைக்கு முன் புலிகளின் பாரிய தாக்குதலை புதுக்குடியிருப்பில் இராணுவம் முறியடித்தததை நாம் அறிவோம். அந்த தாக்குதலில் புலிகளின் அதி சிறந்த பல தளபதிகள் கொல்லப்பட்டார்கள். நூற்றுக்கணக்கான போராளிகள் அவர்களுடன் கொல்லப்பட்டார்கள். இவர்களை அனைவரும் கொல்லப்பட்டது தனி ஒரு மனிதனை காப்பாற்றவே! பிரபாகரன் என்ற ஒரு மனிதனை காக்க புலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட 500 போராளிகள் கொல்லப்பட்டனர்.
இதற்கு பின்னர் பிரபாகரனிடம் சென்ற பொட்டு ‘நாங்கள் இங்கையிருந்தால் எல்லாரும் கொல்லப்படுவோம், உடைத்துக்கொண்டு வெளியேறுவோம்’ என்று கூற இந்த சமயத்திலும் பிரபாகரன் ‘இஞ்சை பாராடா பொட்டுவுக்கு மரண பயம் வந்திட்டது’ என்று அங்கு கூடியிருந்த சகபோராளிகளிடம் நக்கலடித்தார். இறந்த தளபதிகளின் பெயர்களை வெளியிட மறுத்ததுடன் ஏனைய போராளிகளை காப்பாற்றும் எந்த நடவடிக்கையையும் எடுக்க அவர் முனையவில்லை. மாறாக மேலும் பல போராளிகளை பலி கொடுக்கவும் மக்களை ஆயிரக்கணக்கில் பலிக்கடாக்கள் ஆக்கி வெளிநாடுகளில் இருந்து ஒரு அனுதாப அலையை பெறவே முழுமையாக முயற்சித்தார். இதன் விளைவு மக்கள் கூடியிருந்த இடங்களில் இருந்து வலிந்து தாக்கி அந்த இடங்களை இராணுவத்தின் குறிகள் ஆக்குவது.
மக்களும் போராளிகளும் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட போதும் சரணடையவோ அல்லது தப்பி செல்லவோ பிரபாகரன் முயற்சிக்கவில்லை. ஆனால் முள்ளிவாய்க்கால் முற்றுகையில் தனது புத்திர செல்வம் காயமுற்றதும் பதைபதைத்து அவரை அங்கிருந்து அப்புறப்படுத்த நடேசன் மூலம் இராணுவத்திடம் உடனடியாக சரணடைய உத்தரவிட்டார். பிரபாகரனை ஒரு மிகமோசமான சுயநலவாதி என்பதை அன்றுதான் பல புலிப் போராளிகள் உணர்ந்தார்கள். ஏற்கனவே தலைமையை காப்பாற்ற இவ்வளவு அழிவு வேண்டுமா என பல போராளிகள் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்தார்கள். இதன் உச்சக்கட்டம் பானுவை போட்டுத்தள்ள தலைவர் பிறப்பித்த உத்தரவு பல அதிர்வலைகளை புலிகள் மத்தியில் உருவாக்கியது.
இறுதிக் காலத்திலும் தனது பாசிச குணத்தை பிரபாகரன் விடவில்லை என்பது இதன் மூலம் நிரூபணமாகியது. ஆரம்ப காலங்களில் மைக்கல் என்ற விடுதலை புலி உறுப்பினரை தனது சொந்த நலனுக்காக பாயில் வைத்து சுட்டுக்கொன்ற பிரபாகரன் இறுதியில் அதேவிதமாக தன் மரணத்தை தழுவினார். பிரபாகரன் மரணம் பற்றி பல விதமான கதைகள் வந்தாலும் நான் நம்பகரமாக கேள்வியுற்றது இவரின் மெய்பாதுகாலரே இவரை போட்டுத் தள்ளியதாக! இரவு நந்தி கடலை கடக்க முயற்சிசெய்து அது முடியாது போக சற்று ஓய்வெடுத்த பிரபாகரனை அவரின் மெய்பாதுகாவலர்கள் திட்டமிட்டு நெற்றிப்பொட்டில் சுட்டுவிட்டு நந்திக் கடலில் தூக்கி போட்ட பின் அந்த பாதுகாவலர்கள் பின்னர் இறந்தவர்கள் போல் பாசாங்கு செய்து தப்பிச் சென்றுள்ளனர். இந்த தகவல்களை வன்னியில் இருந்து தப்பி சென்ற புலிகளின் முக்கியமான ஒரு தளபதியின் துணைவியார் உறுதிப்படுத்தினார்.
தனது சொந்த நலனுக்காக தனது போராளிகளை மாவீரர்கள் ஆக்கிய பின்னர் அவர்களை வணங்கும் பிரபாகரன் தனது இயக்கத்தின் முதலாவது போராளி இறந்த தினத்தை மாவீரர் தினமாக பிரகடனம் செய்தார். இந்த மாவீரர் தினம் பின்னர் மாவீரர் வாரமாக ஒரு வாரம் அனுட்டிக்கப்பட்டு கார்திகை 27இல் உலகெங்கும் மாவீரர் தினமாக கொண்டாடப்பட்டு வந்தது. தாயகத்தில் இந்த நாட்கள் உணர்ச்சிகரமாக கொண்டாடப்பட்டு வந்தாலும் புலம்பெயர் நாடுகளில் இது பணம் கறக்கும் சடங்காகவே மாற்றப்பட்டது. 2002 இற்கு பின்னர் புலிகளின் தொழில் நுட்ப வளர்ச்சி உச்சத்தில் இருக்கையில் பிரபாகரனின் கொள்கை விளக்க உரையை நேரடியாக ஒலிபரப்பும் ஒரு விழாவாக இது மாற்றப்பட்டது.
லண்டனில் நடைபெறும் மாவீரர் நிகழ்வில் வாசலில் ஒரு கார்திகை பூ ஐந்து பவுண்களுக்கு விற்பார்கள். பிறகு உள்ளே வரிசையாக கோயில் திருவிழா வியாபாரிகள் போல் உதவியாளர்கள் பலர் புலி விளம்பர பொருட்களை விற்பார்கள். இதில் புலி சின்ன கோப்பையிலிருந்து புலிச்சின்ன துவாய், புலிச்சின்ன குடை, போன்ற பொருட்களை மக்களிடம் திணிப்பதுடன் மறுபுறத்தில் கொத்துறொட்டி முதல் கொக்கோகோலாவை 3 மடங்கு விலையில் மக்களிடம் விற்பார்கள். ஆக இறந்த மறவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாளையும் புலிகளின் தலைமை தனது இயக்கத்தை சந்தைப்படுத்தும் நாளாக மாற்றியது.
இன்று புலிகளின் தலைமை முற்றாக அழிக்கப்பட்டு ஐந்து மாதமாகிறது. புலிகளின் தலைவர் இருக்கிறார் இல்லை என்று முட்டாள் தனமான ஒரு விவாதத்துடன் இருக்கும் புலம்பெயர் புலி உறுப்பினர்கள் மீண்டும் கார்த்திகை 27ஐ விமர்சையாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர். பாரிய செலவில் லண்டனில் ஒரு பெரிய மண்டபம் இந்த முறையும் இதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நிதி திரட்டலுக்கு மாவீரர் தின ரிக்கற்றுகள் புலிகளின் லண்டன் உறுப்பினர்களால் தற்போது விற்கப்பட்டு வருகிறது. ரிக்கற் அனுமதி பத்திரமா அல்லது செலவிற்கான நன்கொடையா என்று தெரியவில்லை.
வன்னியில் தம் வாழ்விடங்களில் இருந்து மந்தைகள் போல் மிரட்டி தமது பாதுகாப்பிற்காக பிரபாகரானல் கடத்திச் செல்லப்பட்ட மக்கள் கூட்டம் இன்று அரச தடுப்பு முகாம்களில் அவல வாழ்வை எதிர் கொள்ளும் இந்த நேரத்திலும் இந்த புலிகள் மாவீரர் தினத்தை விமர்சையாக கொண்டாட மக்களிடம் ரிக்கற்றுகளை விற்பது மிகவும் கேவலமானது! இந்த புலம்பெயர் புலிகள் வன்னி இறுதி யுத்தத்திற்காக எனக்கு தெரிந்த பல நண்பர்களிடம் கெஞ்சி கூத்தாடி பின்னர் மிரட்டி கடந்த மே மாதம் கூட ஆயிரக்கணக்கான பவுன்ஸை புடுங்கினார்கள். இந்த காசு அங்கு போய் சேர முன்பே தலைவர் போய்ச் சேர்ந்து விட்டார். காசை கமுக்காமாக அடித்த புலிப் பிரதிநிதிகள் இப்ப தலைமறைவு! ஆனால் இப்ப புதிதாக சில முகங்கள் மாவீரர் தின நிதிப்புடுங்கலுக்காக புலம்பெயர் புலித் தலைமையினால் வீடுகள்தோறும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். புலம்பெயர் தமிழ் மக்கள் மௌனமாக பார்த்துக்கொண்டு பணத்தை மீண்டும் இந்த பினாமிகளிடம் கையளிப்பது வன்னியில் தடுப்பு முகாம்களில் இருக்கும் அனைத்து மக்களிற்கும் செய்யும் மிக மோசமான துரோகம்! இதை விட மிக மேசமான துரோகம் காரத்திகை 27ஐ மாவீரர் தினத்தை விமர்சையாக கொண்டாடுவது!
மாவீர்கள் என்றால் யார்? வணங்கப்பட வேண்டியவர்கள் யார்? – கார்த்திகை 27 ஒரு சுயவிமர்சனம் (2) : வாசு
BC
லண்டனில் வைகோவுடனும், ஆவுஸ்திரேலியாவில் நெடுமாறனுடனும், டென்மார்க்கில் திருமாவளவனுடனும், கனடாவில் சீமானுடனும், பிரான்சில் பாமகட்சி ஜி.கே.மணியுடனும் கொண்டாட்டங்கள் நடக்க இருக்கிறதாம்.
arul
கடைசி பந்pதியில் சொல்லப்படும் விடயங்களை இந்த வியாபாரத்தை நிறுத்த வேண்டும்.
lio
/ 99 வீதமான போராளிகள் தேச விடுதலை என்ற ஒரு நோக்கோடுதான் அந்த அமைப்பில் இணைந்தார்கள்.
பலர் பலவந்தமாக இணைக்கப்பட்டார்கள்/
அப்படியானால் ஒரு வீதம்தான் பலர் என்பதில் அடக்கமா??
விசுவன்
இது கனடாவில் மாவீரர் தினம் சம்பந்தமாக வெளிவந்த புளட்டின் துண்டுப்பிரசுரம்;
மாவீரர்களின் அர்ப்பணிப்புக்களை கொச்சைப்படுத்தாதீர்!
அடக்கி ஒடுக்கப்பட்டுவந்த எமது இனத்தின் விடியலுக்காக துடிப்புடன் ஆயுதம் ஏந்தி போராடி தம்முயிர்களை நாட்டுக்காகவே அர்ப்பணித்தவர்கள்தான் இந்த மாவீரர்கள்,போராளிகள். அவர்களின் இழப்புக்களை கொச்சைப்படுத்தி வியாபாரம் செய்யாதீர்கள்.
இந் நாளில் அந்த உத்தம ஜீவன்களுக்காக ஆலயங்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்களில் விசேட வழிபாடுகளை மேற்கொண்டு அவர்களது ஆத்ம சாந்தியடைய வேண்டும் என்று பூஜியுங்கள். அவர்கள் போற்றப்பட வேண்டியவர்களேயன்றி மறைக்கப்படகூடியவர்கள் அல்ல. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழினத்திற்கு ஒர் விடுதலையை பெற்று கொடுக்கவேண்டும் என்பதற்காக தன்நலம் இல்லாமல் அல்லும், பகலும் விழித்திருந்து ஆன உணவின்றி கல்லிலும், முள்ளிலும, காடுகளிலும்; தமது பாதங்களை பதித்து இறுதியில் தங்களின் உயிர்களையே இந்த நாட்டிற்கும், மக்களிற்கும் தந்துள்ளார்கள்.
அவர்களது இழப்புக்கள் அளவிடமுடியாதவை. ஆகவே புலம்பெயர் தேசங்களில் செல்வ செழிப்புடன் வாழ்ந்து கொண்டு ‘நாடுகடந்த தமிழீழம்’ என்று ஒர் குழுவும் அதற்கு பணம் சேகரிப்பதற்காக மாவீரர் தினம் என்று ஒர் குழுவும், இந்த ஆண்டு பொட்டு அம்மான் உரையாற்றுவார், தலைவர் இன்னும் இரு ஆண்டுகளில் உரையாற்றுவார் என்று ஒர் குழுவும், அதிர்ச்சிதரும் வீடியோ வரும் என்று ஒர் குழுவும் மீண்டும் மீண்டும் எம்மினத்தையே ஏமாற்றி பணம் சம்பாதிப்பாதிப்பதை கண்டிப்போம்.
போராட்டம் என்ற பெயரில் இவர்களால் சேகரிக்கப்பட்ட பணங்கள் எல்லாம் இங்கே கட்டிடங்களாகவும், தனிநபர் பெயரில் வீடுகளாகவும், வர்த்தக நிலையங்களாகவுமே உள்ளது. உண்மையாக இனத்தின் மீது அக்கறையிருக்குமாயின் வன்னியில் மக்கள் பசியோடும், பட்டினிpயோடும் வாடியபோது அவர்களது பசியை போக்கிட இந்த சொத்துக்களையாவது விற்று அவர்களது பட்டினியை போக்கியிருக்க வேண்டும். மக்களிடம் சேகரிக்கப்பட்ட இவ் சொத்துக்கள் எதுவுமே அந்த மக்களை சென்றடையாத நிலையில். தொடர்ந்தும் மக்கள் பட்டினியால் வாடியபோது அந்த மக்களுக்கு உதவபோகிறோம் என்று யுத்தம் முடிவுற்ற மே மாதத்திற்கு பின்னரும் தமிழர் புனர்வாழ்வு கழகத்தினர் நிதி சேகரித்தனர் என்பது சுட்டிக்காட்டதக்கது.
நம் மக்கள் உயிருக்காக போராடிய போது கூட மக்களாகிய உங்களிடம் பணத்தை கறந்த இந்த கொள்ளை கூட்டத்தினர் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். இனப்பற்றையும், விடுதலை உணர்வையும் வியாபாரம் ஆக்கும் முயற்சிக்கு துணைபோய்விடாதீர்கள். கடந்த பல ஆண்டுகளாக அனுபவித்த துன்பங்களில் இருந்து வெளியேறி அவலத்திற்கு உள்ளாகி நிற்கதியாகியுள்ள மக்களிற்கு உதவிடும் வழிகளை கண்டறியுங்கள்.
தேசத்திற்காக தம்முயிர்களை அர்ப்பணித்த போராளிகளிற்கு உங்களது உதவிகளை வழங்குங்கள் அதுவே நீங்கள் தாய்நாட்டிற்காக தம்முயிரை அர்ப்பணித்த வீரர்களுக்கு ஆற்றும் அஞ்சலியாகும். வெறுமனவே மாவீரர் தினம் என்ற பெயரில் இங்கிருந்து கொண்டு கார்த்திகை பூ என்றும், மெழுகுவர்த்தி என்றும் விற்பனை செய்து மேற்கொள்ளப்படும் பணப்பறிப்பு முயற்சிகளுக்கு துணைபோகாதீர்கள்.
நொந்து போயுள்ள மக்களிடம் தொடர்ந்தும் சுறண்டும் இவ் கொள்ளை கூட்டத்தின் செயற்பாடுகள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும், நாட்டிற்காக தம்முயிரை அர்பணித்த போராளிகளின் குடும்பங்களுக்கு உங்களது உதவிகளை செய்யுங்கள். அவ் குடும்பங்கள் தொடர்பான விபரங்கள் தேவைப்பட்டால் நாம் அவற்றை இயன்றளவு சேகரித்து உங்களுக்காக ஊடகங்கள் ஊடாக அறிவிக்கின்றோம். பிள்ளைகளை பலிகொடுத்த பெற்றோர் இன்றும் அயலவரிடம் கையேந்தும் நிலையிலேயே வாழ்கின்றனர். இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்து அவர்களும் எமது சமூகத்தில் தலை நிமிர்ந்து வாழ்வதற்குரிய உதவிகளை புரியுங்கள் அவையே நாம் ஒவ்வொரு போராளிக்கும் செய்யும் அஞ்சலியாகும். இதைவிடுத்து மண்டபங்கள் அமைத்து பூ தூவி, தமிழகத்தில் உள்ள பிழைப்புவாதிகளை இங்கே அழைத்து பேச்சு பேச வைத்து, படம் காட்டுவதல்ல போராளிகளுக்கு செய்யும் அஞ்சலி. எந்த எதிர்பார்ப்புடன் தம் உன்னதமான உயிர்களை நாட்டுக்காக அர்ப்பணித்தார்களோ அவ் வீரர்களின் தியாகங்களுக்கு நாம் மதிப்பு செலுத்தவேண்டுமாயின், அவர்களது குடும்பத்தினருக்கு நாம் செய்யும் உதவியே நாட்டுக்காக தம்முயிர்களை அர்ப்பணித்த போராளிகளுக்கு செய்யும் சமர்ப்பணமாகும்.
தொடர்ந்தும் ஏமாளிகள் போல் இந்த பிழைப்புவாத கூட்டத்தினரின் போலி பிரச்சாரங்களுக்கு மயங்கி விடாதீர்கள். இவர்கள் துணியளவும் அந்த மாவீரர் குடும்பத்தினருக்கு உதவமாட்டார்கள். இதனை கடந்து சென்றுள்ள ஆண்டுகள் வரலாறாக பதிவு செய்துள்ளன என்பதை தெளிவுபடுத்தி கொள்வதுடன். உங்களது உழைப்பினை சரியான வழியில் செலவிடுங்கள்.
வர்த்தக நிலையத்தை மூடி உங்களது வியாபாரத்தை பாழடிக்காமல் அன்றை தினம் உங்களது வர்த்தக நிலையங்களை திறந்து அதன் மூலம் கிடைக்கும் இலாபத்தை மாவீரர்களாகிபோன போராளிகளின் குடும்பங்களிற்கு வழங்கி உதவிடுங்கள். கடந்த காலங்களில்தான் அச்சுறுத்தல்கள், பயமுறுத்தல்களிற்காக உங்களது வர்த்தக நிலையங்களை மூடி உங்களது ஒத்துழைப்புக்களை இங்கிருக்கும் புல்லுருவிகளுக்கு வழங்கினீர்கள்.
இனியாவது நாம் மேலே குறிப்பிட்டுள்ளதை உங்களிடம் வருகைதரும் புல்லுருவிகளுக்கு சுட்டிக்காட்டி இதனை உரிய முறையில் உரிய போராளிகளின் குடும்பங்களுக்க வழங்க முன்வாருங்கள். இதை விடுத்து வர்த்தக நிலையத்தை மூடுவதோ அல்லது இங்கு பிழைப்புக்காக மாவீரர் கொண்டாட்டம், பிறந்தநாள் விழா நடாத்தும் இவ் கூட்டத்தினருக்கு ஸ்பொன்சர் செய்வதோ மாவீரர்களுக்கு செலுத்தும் காணிக்கையாகிவிடாது.
நாம் போராளிகளின் தியாகங்களை கொச்சைப்படுத்தவில்லை. புல்லுருவிகள், பிழைப்புவாதிகளின் செயற்பாடுகளைதான் விமர்சிக்கின்றோம். இதில் தவறு இருக்கின்றதா! இல்லை நியாயம் இருக்கின்றதா என்பதை உணர்ந்து செயலாற்றுங்கள். விடுதலையின் பெயரால் பணம் சுறண்ட முயலும் இந்த கூட்டத்தினரின் முயற்சியை தொடர்ந்து அனுமதிக்க முடியாது. ஆகவே மக்களாகிய உங்களுக்கு நாம் இதனை தெளிவுபடுத்தி உண்மையின் பக்கமும், நியாயத்தின் பக்கமும் வழியமைத்து கொடுப்பதற்காகவே மேற்குறிப்பிட்டவற்றை உங்கள் கவனத்திற்கு தருகின்றோம்.
மக்களாகிய நீங்கள் இங்கிருந்து விட்ட தவறுகள்தான் எமது தாயக தேசத்தில் இரத்த ஆறுகள் ஒடுவதற்கும், முகாம்களில் மக்கள் முடக்கப்படுவதற்கும், அங்கவீனர்களாக வாழ்வதற்கும் வழியேற்படுத்தியதுடன், இன்று ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் போராட்டம் என்ற பெயரில் தவறான பாதையில் வழிநடாத்தப்பட்டு கை, கால், பார்வை இழந்து அங்கவீனர்களாக தடுப்பு முகாம்களிலும், புனர்வாழ்வு முகாம்களிலும் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. இவை குறித்து மக்களாகிய நீங்கள் சிந்தியுங்கள்.
தவறுகள் இடம்பெறும்போது அவற்றை தட்டிக்கேட்டு நல்வழிகளை தெளிவுபடுத்தியிருந்தால் இன்றைய இந்த அவலம் ஏற்பட்டிருக்க முடியாது. மண்மீட்பு, இறுதி யுத்தம், ஆனையிறவு முகாம் தகர்ப்பு, பூநகரி முகாம் தகர்ப்பு என்று ஒவ்வொரு முறையும் உங்களை தேடி புல்லுருவிகள் வந்தபோது பணத்தையும், நகைகளையும் அள்ளி அள்ளி கொடுத்தீர்கள். இவ்வாறாக பணத்தை சுறண்டி கொண்டவர்கள். உண்மைகளை மற்றையோர் வெளிப்படுத்தியபோது துரோகிகளாகவும், மற்றையவர்களின் கைப்பொம்மையாகவும் வீண்பழி சுமத்தினர்.
நியாயத்தின் பக்கமும், உண்மையின் பக்கமும் நின்று தயாகத்தில் என்ன நடக்கின்றது என்ற உண்மையை கூறிய எத்தனையோ ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டும், அவர்களது வீடுகள், வாகனங்கள் என்று விடுதலையின் பெயரால் கொள்ளையடிக்கும் புல்லுருவிகள் கூட்டத்தினரால் தாக்கப்பட்டனர். அப்போது யாராவது வீதிக்கு இறங்கி போராடியிருந்தால் எமது தாயக விடுதலை சரியான வழியில் சென்றிருக்கும், அன்று அதனை கண்டிக்க தவறியதே இன்று இவைகள் எல்லாவற்றிற்கும் பிரதான காரணியாக அமைந்தது.
இவை எல்லாம் கடந்த கால வரலாற்று பதிவுகள், இவற்றை மீண்டும் மீண்டும் உங்களுக்கு நாம் தெளிவூட்டவேண்டிய நிலையில் உள்ளோம். ஏன் என்றால் மீண்டும் பழைய தவறுகளையே விட்டு ‘நாடுகடந்த தமிழீழம்’ என்ற போர்வையில் வெளிநாடுகளில் முன்னெடுக்கப்படும் இவ்வாறான நிகழ்வுகள் நாட்டிலே முட்கம்பி வேலிகளுக்குள்ளும், மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களையே பாதிக்கும்.
ஆகவே எம்மை பொறுத்தவரை தொடர்ந்தும் மக்களை அழிவுக்கும், துன்புறுத்தலுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாக்கும் முயற்சிகளுக்கு அனுமதிக்க முடியாது. அவ் மக்களின் இயல்பான வாழ்வுக்குரிய உதவிகள் குறித்தே செயலாற்றி வருகின்றோம். நீண்டகால இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயம் குறித்தும் அரசுடன் தொடர்ந்து நாம் பேசி வருவதுடன், எம் மக்களின் இனப்பிரச்சினைக்கு ஒர் சுயகௌரவத்துடன் கூடிய தீர்வை பெற்று கொடுப்பது குறித்தும் எமது அரசியல் முன்னெடுப்புக்களை நாம் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றோம். இன்றைய நிலையில் எமது மக்களிற்கு சமஷ்டி முறையிலான தீர்வு திட்டம் ஒன்றே சிறந்த தீர்வாக முடியும் என்று கருதி அதற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றோம். ஆயுத போராட்டம் மூலம் ஒர் தீர்வினை பெற்றுகொள்ள முடியும் என்ற நம்பிக்கையை எமது மக்கள் இழந்துள்ள நிலையில், மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து அவர்களது தேவைகளை உணர்ந்து செயலாற்றிவருவதே பொறுப்புள்ள அரசியல் கட்சியின் கடமையாகும். அதனையே நாம் முன்னெடுத்து வருகின்றோம்.
சாத்தியப்படாத விடயங்கள் குறித்து மக்களை தொடர்ந்தும் யாரும் ஏமாற்றுவதை நாம் அனுமதிக்கபோவதில்லை. இன்று மக்களின் மீள் குடியேற்றம் அவர்களது பாதுகாப்பு குறித்தே அதிக அக்கறையை செலுத்திவரும் நாம் மக்களுக்குரிய தேவைகள் குறித்து அரசுக்கும், உதவிக்கரம் நீட்டிவரும் சர்வதேச நாடுகளுக்கும் எடுத்துக்கூறி மக்களின் இயல்பு வாழ்வுக்கு எம்மாலான உதவிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றோம். தாயக தேசத்தில் சொத்துக்கள், சொந்தங்கள் அனைத்தையும் இழந்து துன்பத்திலும், துயரத்திலும் வாழும் எமது மக்களின் மறுவாழ்வே எம் முன்னால் உள்ள ஒர் முக்கிய கடமையாகும். ஆகவே எமது தாயக உறவுகளின் மறுவாழ்வு குறித்து அக்கறையுள்ளவர்கள் அனைவரும் கைகோர்த்து மக்களின் இயல்பு வாழ்வினை மேம்படுத்தும் பணிக்கு உதவிடுமாறு கேட்டுகொள்கின்றோம்.
அனைத்து அதிகாரங்களும் உழைக்கும் மக்களுக்கே!
அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம்
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்-PLOTE
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி-DPLF
வெளியீடு: தகவல் பிரச்சார பிரிவு-கனடா
appu hammy
கற்களாலும் சுண்ணாம்பாலும் கட்டப்பெற்ற சிறைகளைக் காட்டிலும் கொடுமையான சிறை மனிதனின் சுயமரியாதையை மறுத்து இழிவு படுத்தும் மனச்சிறையே! (தாகூர்)
தன்னம்பிக்கை , அஞ்சாநெஞ்சம், உறுதி ஆகியவற்றினுடைய ஆற்றலினால் தலைமை நிலைக்கு உயர்ந்தவர்களே உலக வரலாற்றிலே இடம் பெற்று இலங்குகிறார்கள். (மகாத்மா)
குழந்தைகளை நல்லவர்களாக ஆக்குவதற்குரிய மிகச்சிறந்த வழி.. அவர்களை மகிழ்ச்சியாய் இருக்கச் செய்வதேயாகும். (ஒஸ்கார் வில்டே).
நிலைமாறாத நண்பன் தனது ரகசியங்களை நிச்சயம் உன்னிடம் சொல்வான். (பித்தியாஸ்)
ஒருவரது நல்ல முயற்சிகளுக்கெல்லாம் அப்போது பலன்; இல்லையாகினும் பின்னொரு நாளில் கிடைக்கும். (ஓளவையார்)
Thaksan
புலித் தலைவர் சரணடைந்த பின்பே இராணுவத்தினால் தலையில் கோடாரியால் கொத்தி கொல்லப்பட்டார் என்பதே உண்மை என்பது ஆதாரத்துடன் வெளிவர இன்னமும் கொஞ்ச காலமே உள்ளதென்பதை மட்டும் இப்போதைக்கு சொல்லி வைக்கிறேன். அவர் கைதாகி கொழும்புக்கு(பனாகொட ராணுவ முகாமுக்கு)கொண்டுவரப்பட்டதும்> மகிந்த ஜோர்டானில் நடைபெற்றுக்கொண்டிருந்த மாநாட்டில் இருந்து அவசரமாக இலங்கைக்கு திரும்பியதும்> அயல்நாட்டின் ஆலோசனையில் திரும்பவும் முள்ளிவாய்காலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு கொத்திக் கொலை செய்யப்பட்டதுவும் பூரண ஆதாரங்களுடன் வெளிவரும் நாள் நெருங்கிவிட்டதென்பதற்கு சரத் பொன்சேகாவின் அரச எதிர்நிலைப்பாடு கட்டியம் கூறுகிறது. மெய்ப்பாதுகாவலர்களே பிரபாவை கொன்றார்களென்பது பிரபா இனியும் வழிபாட்டிற்கு உரியவராக இருக்கவேண்டுமென்ற நப்பாசையின் வெளிப்பாடாகவே தெரிகிறது.
arulan
வாசு நீர் இந்தக் கட்டுரையில் பிரபாகரனை சரணடையவில்லை அவர் போராளிகளாலே கொல்லப்பட்டார் என்றெல்லாம் புலிகளுக்கு மரியாதை எடுத்துக்கொள்ளவே முயற்ச்சிக்கின்றீர் என்பது தெட்டத்தெளிவாக தெரிகிறது பிரபாகரன் சரணடைந்தது தனது உயிரைப் பாதுகாக்க முயற்ச்சிதவன் என்பதை மறந்துடவேண்டாம் தக்ஷன் சொன்னதுபொல் இது வெளிவரும்போது அறியமுடியும்
வேறு இயக்கத்தை சார்ந்தவர் தற்போது அரச படைகளில் முக்கியமானவர் இந்த சாட்சியங்களடன் உள்ளார் என்பதும் இது சில தமிழ் அரசியல்வாதிகளிடம் இருந்து அறியப்பட்டுள்ளது.
புலிப்போராளிகளை குறைத்துப்பார்க்வில்லை புலிகளின் தலைமை போராட்ட வரலாற்றின் ஆரம்பத்திலிருந்தே துரோகம் செய்துவந்துள்ளது அதுவும் காலத்திற்கு காலம் இதை தொடர்ந்து செய்து இறுதியில் பிரபாகரன் தன்னைக் காப்பாற்றவே இளம் பிள்ளைகளையும் அப்பாவி மக்களையும் பலிக்களத்துக்கு அனுப்பினான்
வாசு
கார்த்திகை 27 சுயவிமர்சனம் என்ற கட்டுரை லண்டன் குரலிற்காக எழுதப்பட்ட கட்டுரை. இந்த கட்டுரை பிரசுர வசதிக்காகவும் வாசிப்பு வசதிக்காகவும் இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன் இரண்டாவது பாகம் மாவீரர்கள் என்றால் யார் வணங்கப்பட வேண்டியவர்கள் யார் என்ற தலைப்பில் இங்கு வெளிவர உள்ளது. இங்கு கேட்கப்பட்ட பல கேள்விகழுக்கு அந்த பகுதியில் விடைகள் உள்ளது என நான் நம்புகிறேன். போராட்டத்தில் தாமாக இணைந்த போராளிகளில் 99வீதம் தேசிய விடுதலை என்ற நோக்கிலும் மற்றவர்கள் சுயவிளம்பரம் மற்றும் விலாசம் காட்டவே தாமாக இணைந்தார்கள். பலவந்தமாக பலர் இணைக்கப்பட்டார்கள் அவர்கள் மேற்கண்ட கணக்கில் வரமாட்டார்கள். பிரபாகரன் எப்படி செத்தார் அல்லது சாகவில்லை என்ற விவாதத்திற்குள் நான் வர விரும்பவில்லை. நான் பெற்ற தகவல்களை அப்படியே கூறியுள்ளளேன். பிரபாகரன் சரணடைந்து சாவதை விட தன் சக போராளிகளால் கொல்லப்படுது மிகவும் அவமானமான விடயம் என நான் கருதுகிறேன். காரணம் பிரபாகரனை கடவுளாக நினைத்தவர்கள் அவரை கொல்வது என்பது சாதாரண விடயம் அல்ல! மற்றும் இறந்த புலிகளின் யாருக்கு மரியாதை கொடுக்கவேண்டும் யாருக்கு கொடுக்க கூடாது என்பதும் இரண்டாம் பாகத்தில் கூறப்பட்டுள்ளது.
palli
//புலித் தலைவர் சரணடைந்த பின்பே இராணுவத்தினால் தலையில் கோடாரியால் கொத்தி கொல்லப்பட்டார் என்பதே உண்மை//
இதை எப்படி உறுதியாய் சொல்ல முடியும்?? இந்திய அரசின் காலடியில் இருப்பவர் ஒருவருடன் நான் பேசியபோது இந்திய அரசு இதுவரை பிரபாகரன் இறந்ததை நம்பவில்லையாமே என சொன்னார், இப்படி புலியில் இறந்த பல தலைகள் உயிருடன் இருப்பதாக அவர்களது உறவுகள் சொல்லுகிறார்கள், இதில் முக்கியமாக பாணு; சொர்னம் இருவரும் இருப்பதாகவே சொல்லபடுகிறது; பொட்டர் பற்றி அரசே இதுவரை அடக்கி வாசிக்கிறது, மதிவதனி கனடாவில் உள்ளதாகவும் செய்திகள் ஊரதொடங்கி விட்டன, இத்தனை பேரும் இருக்கும் போது பிரபா மட்டும் கரும்புலி ஆகிவிட்டார் என்பது எனக்கு சந்தேகமாகவே உள்ளது;(சந்தேகம்தான்) இதுக்காக என்னுடன் யாரும் கோடாலியுடன் வர வேண்டாம்; ஆனால் எனது கருத்தும் பிரபா மட்டுமல்ல சில தலைபதிகள் உயிருடன் இ;;;;;;;
kovai
//ஆரம்ப காலங்களில் மைக்கல் என்ற விடுதலை புலி உறுப்பினரை தனது சொந்த நலனுக்காக பாயில் வைத்து சுட்டுக்கொன்ற பிரபாகரன் இறுதியில் அதேவிதமாக தன் மரணத்தை தழுவினார். பிரபாகரன் மரணம் பற்றி பல விதமான கதைகள் வந்தாலும் நான் நம்பகரமாக கேள்வியுற்றது இவரின் மெய்பாதுகாலரே இவரை போட்டுத் தள்ளியதாக!//
நண்பரே! விளக்கம் தருமாறு கேட்கிறேன்!
பிரபாகரனின் அப்போதைய சொந்த நலன் என்ன?
மெய்ப்பாதுகாவலரின் (இறுதியில் அதேவிதமாக) இப்போதைய சொந்த நலன் என்ன?
jalpani
ஆரம்ப காலங்களில் மைக்கல் என்ற விடுதலை புலி உறுப்பினரை தனது சொந்த நலனுக்காக பாயில் வைத்து சுட்டுக்கொன்ற பிரபாகரன் ”
இதை தெரிந்திருந்த நீங்கள் எப்படி புலியில் இருந்தீர்கள்?
வாசு
jalpani…../ஆரம்ப காலங்களில் மைக்கல் என்ற விடுதலை புலி உறுப்பினரை தனது சொந்த நலனுக்காக பாயில் வைத்து சுட்டுக்கொன்ற பிரபாகரன் ”
இதை தெரிந்திருந்த நீங்கள் எப்படி புலியில் இருந்தீர்கள்?/
இதைபற்றி மட்டுமல்ல பல உண்மைகளை தெரிந்த காரணத்தால் தான் 1987இல் இயக்கத்தை விட்டு வெளியேறினேன். இளவயது ஆயுத மோகம் பொய்களை நம்பியது இவை இணைந்தமைக்கான காரணங்கள்.
kannan
சரி பிழைகளை விட்டு வெளியில் நின்று யோசிப்பம்.
பிரபாகரன் என்ற ஒரு மனிதன் இருந்ததால் தானே இவ்வளவு விமர்சனங்கள். அவர் போராட்டம் ஒன்றை நடத்தியதால் தானே இவ்வளவு கருத்துகளும் வந்துள்ளன. உண்மையிலேயே தமிழனில் தலைமையேற்க கொண்டு நடத்த யாருக்கும் முடியவில்லை. விமர்சனங்கள் செய்யமட்டும் பலர்.
உண்மையில் தமிழீழ மண்ணிலிருந்து வெளியேறிய புலம்பெயர் மக்கள் சொல்வது போல் காசை கொடுத்தோம் காசை கொடுத்தோம் என்கிறார்கள். காசு கொடுத்து தமிழீழம் வாங்க முடியாது என்பதை உணரவேண்டும். உயிர் கொடுத்தோரெல்லாம் மரக்கட்டைகள் ஆகிவிட்டனர். இழக்கூடாதவற்றை இழந்தோரெல்லாம் அம்மணக்கட்டைகளாக உள்ளனர்.
இனிமேலும் மற்றவரை விமர்சனம் செய்வதைவிட்டு உங்களை சுயவிமர்சனம் செய்யுங்கள்.
palli
//இதைபற்றி மட்டுமல்ல பல உண்மைகளை தெரிந்த காரணத்தால் தான் 1987இல் இயக்கத்தை விட்டு வெளியேறினேன். இளவயது ஆயுத மோகம் பொய்களை நம்பியது இவை இணைந்தமைக்கான காரணங்கள்//
சரி இதெல்லாம் சகசம்தானே ஆனால் நீங்கள் வந்தபின்பு இதை வெளிபடுத்தினீர்களா? இல்லையாயின் ஏன்?, பயமென பதில் வேண்டாம், காரனம் அதன் பின்னும் புலி புகழ் பாடவில்லையா? புலி இப்படி தறுதலையானதுக்கு காரனம் அந்த இயக்கத்தில் பாதிக்கபட்டவர் கூட உன்மையை கழகத்தார் போல் வெளியில் சொல்லாததுதான்; கழகத்தார் போல் அங்கு நடக்கும் குச்சுபுடி நடனத்தை சொல்லியிருந்தால் புலியும் கழகம் மாதிரி ஓரம்கட்ட பட்டிருக்குமே;
//இனிமேலும் மற்றவரை விமர்சனம் செய்வதைவிட்டு உங்களை சுயவிமர்சனம் செய்யுங்கள்//
என்னத்தை சொல்ல; அடிவாங்கியதையா? அல்லது மிதி பட்டதையா? உறவுகளை இழந்ததையா?
தொடராத கல்வி, தொலைந்து போன வேலை; இழந்த கிராமம், இப்படி பலவே எமது சுயவிமர்சனம்; அத்துடன் இன்று வெக்கபடாமல் கழுவி; துடைத்து; பெருக்கி; மடித்து வைத்து, சமைத்து, காருகளுக்கு பெற்றோல் நிரப்பி; புரியாத பாஸையில் திட்டு வாங்கி; வாங்கிய சம்பளத்தை புலியிடம் கொடுத்து இப்படி உலகம் உருண்டை போல் எங்கள் சுய விமர்சனமும் தொடங்கிய இடத்திலேயெ திரும்பவும் வந்து தொலைக்குறது; அதுதான் நாடு கடந்த கேவலத்துக்கு ஓட்டு போட வேண்டுமே;;;;
வாசு
சரி இதெல்லாம் சகசம்தானே ஆனால் நீங்கள் வந்தபின்பு இதை வெளிபடுத்தினீர்களா?//palli
ஆம்! ஈழபூமி என்ற பத்திரிகையூடாக நாம் பல விடயங்களை கூறியிருந்தோம். புலிகளின் அடாவடித்னத்தை லண்டனில் நான் நேரடியாக எதிர்த்த அனுபவமும் உண்டு!
palli
:://ஆம்! ஈழபூமி என்ற பத்திரிகையூடாக நாம் பல விடயங்களை கூறியிருந்தோம். புலிகளின் அடாவடித்னத்தை லண்டனில் நான் நேரடியாக எதிர்த்த அனுபவமும் உண்டு!//
இதை பல்லி அறியவில்லை, அது பல்லியின் தவறுதான்; ஆகவே அறிந்து கொண்டு தொடர்வேன்;
MBBS
பத்திரிகைகளின் பிரதிகளை கடத்திகொண்டு பிறான்சுக்கு சென்றபோது பத்திரிகையுடன் வாசு குழு பொலிசில் மாட்டியதாக கதை……….
kannan
பிள்ளை கொடுத்தோரெல்லாம் இன்னும் நரக வாழ்க்கையாக சிங்ளவனுடன் ஏக்கங்களுடன் மனதில் வலியுடன் எதிர்காலமே கேள்விக்குறியாகி நிற்க
காசு கொடுத்தவனெல்லாம் கத்திக் கொண்டிருக்கிறான்.
BC
//இனிமேலும் மற்றவரை விமர்சனம் செய்வதைவிட்டு உங்களை சுயவிமர்சனம் செய்யுங்கள்.//
நாடு கடந்த தமிழீழ அரசுக்கு பணம் கொடுத்து ஆதரிக்க நினைத்தவர்கள் இதை ஒரு எச்சரிக்கையாக எடுத்து கொள்ளவும். கடைசியாக உங்களிடம் இப்படி தான் கேட்பார்கள்.
puthiyavan
நல்ல ஆக்கம். தொடர்ந்து எழுதவும்.
senthil
இதைபற்றி மட்டுமல்ல பல உண்மைகளை தெரிந்த காரணத்தால் தான் 1987இல் இயக்கத்தை விட்டு வெளியேறினேன். இளவயது ஆயுத மோகம் பொய்களை நம்பியது இவை இணைந்தமைக்கான காரணங்கள். வாசு//
சரி அப்படியானால் 1999களில் இருந்து ரிபிசியில் இருந்து ராமராஜ் உடனா அல்லது ஈ.என்.டி.எல்.எவ் உடன் முரண்பட்டா வெளியேறினீர்கள் வாசு? அப்படியானால் ரிபிசியில் இருந்து வெளியேறி அறிக்கைவிட்டபோது இப்போதுதான் இதைநடத்துவது ஈ.என்.டி.எல்.எவ் என்ற இந்திய உளவு அமைப்பு என அறிக்கை விடுவதில் தாங்கள் தானே முழுவீச்சில் செயற்பட்டு கையெழுத்துவாங்கி அதுவரை ரிபிசியில் புலிகளை விமர்சித்ததுக்கு பிரயாசித்தம் தேட புலிக்கும் ஒரு கையெழுத்து பிரதி அனுப்பியதாக உங்கள் முன்னாள ரிபிசி சகா கூறுகிறார். அதை தொடர்ந்து பயமில்லாமல் ஏ9 வீதியால் வந்து போனதும். உங்கள் முன்னாள் புலிநண்பர்களை தேடி அலைந்து சந்தித்து புலிகளினை ஆனையிறவை மீட்டதை புகழ்ந்து பாராட்டியது எல்லாம் எந்த மோகம்.
வாசு
செந்தில்! ரீபீசியில் இருந்த வெளியேறியது தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல் பிரச்சனையே! ஆனால் கட்சி சாரந்த எந்த அமைப்பிலும் சேர்ந்து வேலை செய்ய விரும்பாமையால் தான் ரீபிசியல் இருந்து வெளியேறியதும் வேறு வானொலி தொலைக்கட்சிகளில் பணிபுரிய அழைப்பு வந்தும் நான் யாருடனும் பணிபுரிய செல்லவில்லை. தாயகம் சென்று வந்தது அவர்களின் புகழ்பாடியது என்ற உங்கள் நண்பரினதோ அல்லது யாரினதும் கற்பனைகளுக்கு நான் விளக்கம் கொடுக்கத் தேவையில்லை. ஆனால் 2002இற்கு பின் நானும் நான் சாரந்திருந்த அமைப்பும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு கொள்கையளவில் மட்டும் ஆதரவு கொடுப்பது என்ற மாயைக்குள் விழுந்தது உண்மை. அது புலிசார் கொள்கையல்ல! தமிழ் பேசும் மக்கள் சிறீலங்காவில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் அவர்கள் தமது பாதுகாப்பை தாமே உறுதி செய்ய வேண்டும் என்று கூறுபவர்கள் எல்லாம் புலிகள் என்று குற்றம் சாட்டி புலி முத்திரை குத்தினால் நாம் என்ன செய்வது. ஆனால் புலிகளின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக தொடரந்து ஏதோ ஒரு வடிவத்தில் எம்மாலான அனைத்து போராட்டங்களையும் செய்ய தவறவில்லை!
palli
வாசு ஒரே வார்த்தை பாலா போல் செந்திலிடம் சொல்லுங்கோ ; தயவுசெய்து பளசுகளை கிண்டாதையுங்கோ என, காரனம் இயக்கத்தில் இருந்த உங்களை போன்றோரைவிட; தெருவில் நின்று விடுப்பு பார்த்த எங்களுக்கு பல உன்மைகள் தெரியும், உங்களுக்கு தெரியாதது கூட;