உருப்படுமா இந்த யாழ் இனவாதச் சிந்தனை? : யூட் ரட்ணசிங்கம்

Palmyra_Treeyarl_instrumentதமிழரசுக் கட்சியிலிருந்து தமிழர் விடுதலைக் கூட்டணி தொட்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் அதன் இராணுவப் பிரிவான விடுதலைப் புலிகள் வரை அத்தனையும் யாழ் இனவாதச் சிந்தனையின் பிரதிபலிப்பாகவே இருந்திருக்கிறது. கடந்த 60 ஆண்டுகாலம் சிங்கள இனவாத அரசில் சிக்குண்டு தமிழ்பேசும் மக்கள் என்ன என்ன கொடுமைகளை அனுபவித்தார்களோ அதேயளவு கொடுமைகளையும் வெட்டியோட்டங்களையும் யாழ் இனவாதச் சிந்தனையில் சிக்குண்ட மற்றைய மாவட்டத்து மக்களும் அனுபவித்தார்கள் என்பதை நாம் மீண்டும் மீண்டும் எடுத்துக் கூறவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு அண்மைக் காலமாக நடந்து வருகின்ற சம்பவங்கள் எம்மை தள்ளியிருக்கின்றன.

வீரகேசரி, டான் ரிவி  என்று யாழ் இனவாதச் சிந்தனைக்கு வக்காலத்து வாங்கும் ஊடகங்கள் குடாநாட்டுச் செய்திகள் யாழ் செய்திகள் என்று special attention கொடுத்து மற்றைய மாவட்ட மக்களை குறிப்பாக கிழக்கு மாகாண மக்களை கடுப்பேத்தும் வேலையைச் செய்யத் தொடங்கிவிட்டார்கள்.

டான் ரிவி  வக்காலத்து வாங்குவதென்றால் வாங்கட்டும் அதன்பின் பார்வைகள் போர்வைகள் நேர்காணல் ஓற்றுமை சமத்துவம் என்று தமிழ் பேசும் மக்களுக்கு காதில பூவைக்கிற வேலையை விட்டிருஙகோ. இது 21ம் நூற்றாண்டு குடாநாட்டிலிருந்து வந்து மற்ற மாவட்டங்களின் மீது சவாரி விடுகின்ற நோக்கம் இருந்தால் ஒன்றுக்குப் பலமுறை சிந்தித்து விட்டு வாருங்கள்.
 
கைகழுவிய தண்ணீரை புகையிலையில் தெளித்து சிங்கள மக்களுக்கு புகையிலை வியாபாரம் செய்த காலம் இல்லை இது. சிங்கள மக்களுக்குச் செய்த புகையிலை வியாபாரம் கடைசியில புதுமாத்தளனில கொண்டுவந்து விட்டுது. திரும்பவும் டான் ரிவி  வீரகேசரி போன்ற வடிகட்டிய யாழ்ப்பாணத்து இனவாதச் சிந்தனையின் பிரதிநிதிகள் வெளிக்கிட்டிற்றினம் புகையில வியாபாரத்துக்கு.

மற்றைய மாவட்ட மக்களையும் அவர்களின் தனித்துவங்களையும் தெரிந்து கொள்வதற்கு உங்களுக்கு வாய்ப்பில்லைத்தானே. நீங்கள் கிணற்றுத் தவளைகள்போல் நான்கு வேலிகளையும் கிடுகுகளால் அடைத்து நடுவிலே ஒரு சிறிய ஓட்டையைப் போட்டு அதனூடாக பக்கத்து வீட்டையும் உலகையும் பார்ப்பவர்கள் உங்களுக்கு எங்கே உண்மையான உலகம் தெரியப் போகிறது?

முஸ்லீம் மக்களுடன் வியாபாரத்தில் ஈடுகொடுக்க முடியாத யாழ் சமூகம் ஆயுதப் பலத்தோடு இருந்த புலிகளைப் பயன்படுத்தி அவர்களை அந்தப் பிரதேசத்திலிருந்து விரட்டியடித்து அத்தனை வியாபார ஸ்தாபனங்களையும் தமதாக்கிக் கொண்டதைப் பார்த்தோம் தானே. அதற்கு கொடுக்கப்பட்ட விளக்கம் காட்டிக்கொடுப்பு என்றது. காட்டிக்கொடுப்புதான் அவர்களின் வெளியேற்றத்துக்கு காரணம் என்றால் யாழ்ப்பாணத் தமிழரின் முதல் துரோகி யாழ்ப்பாணத் தமிழன் துரையப்பாதானே (இதை நான் சொல்லவில்லை சொல்லியவர்கள் யார் என்பது கொன்றவர்கள் யார் என்பதும் யாவரும் அறிந்ததே.)

Eelam_and_Panaiயாழ்ப்பாணத்திலிலுந்து வந்து வன்னியில் பாராளுமன்ற உறுப்பினரான சுந்தரலிங்கத்தை வன்னி மக்கள் பாடசாலை கட்டித்தரும்படி கேட்க நீங்கள் படித்தால் யாழ்ப்பாண மக்கள் என்ன மாடா மேய்ப்பது என்று வன்னி மக்களைக் கேட்டதும், இராசதுரையை ஓரம்கட்டி அமிர்தலிங்கத்தை தலைவனாக்கியதும், காசிஆனந்தனை ஒதுக்கி புதுவை ரத்தினதுரையை ஆஸ்தான கவிஞன் ஆக்கியதும் பாலசிங்கத்தைப் பயன்படுத்தி யாழ்ப்பாணத்தை கலாச்சார நகரமாக்க முயன்றதும் புலிகள் யாழ் முரியை அறிமுகம் செய்ததும் அதன்பின் வந்த அத்தனை புலிகளின் அடையாளச் சின்னங்களிலும் யாழ் கருவியையும் பனை மரத்தையும் இழுத்து வந்து இருத்தியதும் யாழ்ப்பாண இனவாத சிந்தனையின் வெளிப்பாடே. இது இலங்கை அரசின் திட்டமிட்ட பௌத்த சிங்கள மயமாக்கும் செயல்பாட்டிற்கு ஒப்பானது.

கடந்த 60 ஆண்டு காலத்தில் தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா அரசு கட்டவிழ்த்து விட்ட கசப்பான அனுபவங்களை தமிழ்பேசும் மக்களின் மனங்களிலிருந்து நிரந்தரமாக நீக்கிவிட முடியாத நிலை இருக்கின்றதோ அதே நிலைதான் யாழ் இனவாத சிந்தனையில் சிக்கித்தவித்த மற்றைய மாவட்டத்து மக்களின் மனங்களிலும் நினைவுகள் நிரந்தரமாக இடம் பிடித்துக் கொண்டன.

கொழும்பு ஆட்சியாளர் தமது இனவாத அரசியலை மாற்றாதவரை தமிழ்பேசும் மக்களின் மனங்களை வெல்லமுடியாது என்ற யதார்த்த நிலையை நம்புகின்ற அதே மனங்கள் யாழ் சிந்தனை என்ற யாழ் இனவாத சிந்தனையை கைவிடாதவரை மற்றைய மாவட்ட மக்களின் மனங்களை வெல்வது என்பது முடியாத காரியம் என்பதையும் நம்ப வேண்டும். 

அதுவரை தமிழ் பேசும் மக்களின் பிரதேசம் என்பது மூன்று ஆட்சி அதிகார அலகுகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். கிழக்கு மாகாண அதிகார அலகு யாழ்ப்பாண அதிகார அலகு (ஆனையிறவுக்கப்பால்) வடமாகாண அதிகார அலகு மட்டுமே யாழ்ப்பாண இனவாதச் சிந்தனையிலிருந்து மற்றைய மாவட்டத்து மக்களைக் காப்பாற்றும் சிறந்த அரசியல் பொறிமுறையாக இருக்கும். அதுவே மற்றைய மாவட்ட மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வாகும்.

யாழ்ப்பாணத்து தனித்துவம் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் அதை அவர்கள் அந்த மண்ணிலிருந்து கொண்டு செய்யட்டும். யாழ்ப்பாண இனவாதச் சிந்தனையின் பாதுகாப்பு அரணாக  மற்றய மாவட்டங்களையும்  மக்களையும் பயன்படுத்தி பலிக்கடா ஆக்கப்படுவதை இனி ஒருபோதும் அந்த மக்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. (குறிப்பாக வன்னி மக்கள்) வைப்போம் இந்த சிந்தனைக்கு முற்றுப்புள்ளி.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

34 Comments

  • jalpani
    jalpani

    மிக மோசமான சாதாரண மக்களை காயப்படுத்தும் கட்டுரை. உங்களுக்கு தலைமைகள் மீது கடுப்பிருந்தால் தாராளமாக திட்டுங்கள். எங்கெங்கோ சதிகள் தீட்டப்பட்டு திட்டமிட்டு இனவாதம் வளர்க்கப்பட்டு சீரழிந்து போயுள்ளது இலங்கை. உங்களுக்கு யாழ்ப்பாணத்தின் புகையிலை வியாபாரம் தான் இனப்பிரச்சனையின் கரு என்றாகி விட்டது. தேசம்நெற்றில் இது வரை இப்படியான காழ்ப்புணர்வுள்ள ஆக்கம் வந்ததில்லை.

    Reply
  • விசுவன்
    விசுவன்

    ஒரு குட்டிக்கதை! சண்முகசேகரம் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர். ஒரு வாத்தியார்! இவருக்கு ஒரு மகன் ஒரு மகள். சண்முகசேகரம் 70வதுகளில் இவர் வன்னியில் வாத்தியாராக இருந்தார். இவர் வன்னியில் ஒருதலைமை ஆசிரியராக கடமையாற்றியபோதும் மகனையும் மகளையும் யாழ் பரியோவான் பாடசாலையிலும் சுண்டுக்கிளி பெண்கள் பாடசாலையிலும் காசு கட்டி படிப்பித்தார். வன்னியில் சண்முகசேகரத்திற்கு வைப்பாட்டி இருந்ததாக அரசல் புரசலாக கதை யாழ்பாணத்தில் அடிபட்டாலும் வன்னியில் பாரிய காணிகளில் சண்முகசேகரம் விவசாயம் செய்து வந்தது அனைவரும் அறிந்த உண்மை. வன்னியில் பாடசாலைக்கு வரும் பிள்ளைகளை வைத்து வெற்றிகரமாக விவசாயம் செய்த சண்முகசுந்தரம் வன்னி பிள்ளைகளின் படிப்பில் பொதுவாக அக்கறை காட்டுவதே கிடையாது. மாறாக தோட்டத்தில் நல்லாக புல்லும் பிடுங்கும் பிள்ளைகளின் கணக்கு பாடத்திற்கு அதிக புள்ளிகளை வழங்குவார். நல்லாக கத்தி கிளி கலைத்தால் அவர்களிற்கு அங்கிலத்திற்கு அதிக புள்ளி.

    இப்படியாக காலம் போகையில் சண்முகசுந்தரத்தின் மகனுக்கு படிப்பை விட சுண்டிக்குளி பெட்டையளை சுழட்டுவதில் தான் பொழுது போனது. விளைவு மருத்துவம் செய்ய முனைந்த மகன் தட்டுத் தடுமாறி முன்றாவது முறை பாஸ்பண்ணி தந்தையை போல் வாத்தியார் வேலை எடுத்து விட்டான். மகளுக்கு லண்டனில் மாப்பிள்ளை பார்த்து கட்டியும் கொடுத்துவிட்டார். வாத்தியார் வேலை கிடைத்த மகன் ஒரு சில காலம் மட்டுநகரில் வேலை செய்தான். அவனும் அங்கை ஒரு பெண்ணை சுழட்டி மயங்கி காதலிக்க ஆரம்பித்தான். வாலிப வயசு பெண்ணோ இப்ப கர்ப்பணி! யாழ்நகரிற்கு விடுமுறையில் வந்த மகன் தாய் தந்தையிடம் இந்த விடயத்தை சொல்ல மட்டக்களப்பாள் பாயிலை ஒட்டவைத்திட்டாள் சூனியம் போட்டு விட்டாள் என்று ஒப்பாரி வைத்து மகனின் மனதை மாற்றி அவனையும் லண்டனுக்கு நல்ல சீதணத்துடன் விற்று விட்டார்.

    காலங்கள் பல ஓடி பேரப்பிள்ளைகளையும் கண்ட சண்முகசுந்தரம் தன் பங்கிற்கு தேசிய விடுதலைப் போராட்டத்திலும் ஏதாவது செய்யும் அதேவேளை வன்னியில் வேளாண்மை பாரக்கலாம் என்று வன்னியிலேயே தங்கி விட்டார். வன்னியில் யுத்தம் தொடங்கியதும் சண்முகசுந்தரம் கவனிக்க வேண்டியவர்களை வடிவாக கவனித்து வன்னயில் இருந்து விடைபெற்று தற்போது இந்தியாவில் சந்தோசமாக இருக்கிறார். இவரால் மேய்க்கப்பட்ட வன்னி ஆடுகள் மட்டும் இன்று முகாம்களில் பலிக்கடவாகிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சண்முகசுந்தரத்தின் மகன் தற்போது லண்டனில் ஒரு பெரிய ஆள்! நாடுகடந்த தமிழீழம் அமைப்பதே தன் இலட்சியமாக கொண்டாலும் பிள்ளைகளின் படிப்பு விடயத்தில் மிகவும் கறார். தன் தகப்பனைபோல!

    Reply
  • param
    param

    கட்டுரையாளருக்கு தற்போது வடகிழக்கு இணைந்து தீர்வு ஏதும் வந்திடுமோ எனப் பயப்படுகிறார். அதற்காக அவர் கையில் எடுத்த துரும்பு புகையிலையும் கிடுகு வேலியும். கட்டுரை அவசரத்தில் தெளித்த கோலம் போலுள்ளது.

    Reply
  • palli
    palli

    ரட்னசிங்கம் இப்போ எல்லாம் யாழ் ஆதிக்கத்தை திட்டுவதெல்லாம் பட்டதாரி படிப்பு போல் ஆகிவிட்டது; அதுசரி கிழக்கு கருனா கிழக்கின் வாசு சுபாஸ் உடன் சேர்த்து 15 பேரை விருந்துக்கென அழைத்து வேரோடு வேட்டு வைத்தானே அப்போது இந்த ரட்னசிங்கம் என்ன செய்தார்;

    வடக்கோ; கிழக்கோ இல்லை வன்னியோ முதல் மனிதராய் வர பாருங்கோ மிருகமாய் தண்டலுக்கு தடிஎடுத்து கொடுக்காதையுங்கோ; பிள்ளையானுக்கும் கருனாவுக்கும் யாழ் மேலாதிக்கம் வந்து இயக்கவாதம் சொல்லி கொடுத்துதாக்கும்; போங்கையா நீங்களும் உங்கள் இளம் பிள்ளை வாதமும்,

    Reply
  • Thamil
    Thamil

    சிங்கள எதிர்ப்பு அரசியலை தவிர வேறு எதுவும் தெரியாத அடாவடித்தன கோரத்தனமான அதிகார வெறியும் பிடித்த இயக்கங்கள் எல்லாம் அவமாய் அழிந்ததை கண்முன்னாள் கண்டும் இன்னமும் அதேபாணியில் இயங்குபவர்கள் திருந்தவில்லை என்பதை நந்திக்கடல் நரபலி வேள்விக்கு பிறகு யாழ்ப்பாண மாநகரசபை தேர்தலில் வவனியா நகரசபை தேர்தலில் கண்டு மக்கள் மவுனமாக அழுகிறார்கள். இதனால்தான் மக்கள் பெருமளவில் வாக்களிக்கவே செல்லவில்லை
    நாங்களெல்லாம் பயங்கரமான திருத்தமுடியாத திருந்தாத திருதாள அரசியல் குருடர்களா?

    Reply
  • BC
    BC

    //நாடுகடந்த தமிழீழம் அமைப்பதே தன் இலட்சியமாக கொண்டாலும் பிள்ளைகளின் படிப்பு விடயத்தில் மிகவும் கறார். தன் தகப்பனைபோல!//
    விசுவன், கதையில் மட்டுமல்ல கதையின் முடிவில் யதார்த்தத்தை கண் முன்னே கொண்டு வந்து விட்டீர்கள்.

    Reply
  • Madakalapan
    Madakalapan

    டான் ரிவி தனது மட்டக்களப்பு கலையகத்தை திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முடித்தவிட்டதாக அறிகின்றோம். அதனைத் திறந்து வைப்பதற்காகவே ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் கொழும்புக்கும் போய்விட்டார்.
    டான் ரிவி மட்டக்களப்பில் கலையகம் திறக்கப்போவதை அறிந்துகொண்டுதான், அதனை தகர்க்குமாறு யாரையோ தூண்டுவதுபோல இருக்கின்றது கட்டுரை. குகநாதன் எதற்கும் அவதானமாக இருப்பது நல்லது.

    Reply
  • Kula
    Kula

    டான் தொலைக்காட்சியில் குடாநாட்டுச் செய்திகள் என்ற ஒரு பிரிவும் மற்றைய இலங்கைச் செய்திகள் என்று ஒரு பிரிவும் உண்டு.
    ஒரு காலத்தில் பாரிசில் இருந்து வெளிவந்த ஈழமுரசு பத்திரிகை தமிழீழச் செய்திகள் யாழ்ப்பாணச் செய்திகள் என்று இரண்டு பிரிவுகளை கொண்டிருந்தன.அப்போது புதியவன் எழுதிய ஒரு ஆக்கத்திற்கு பதிலளித்த ஈழமுரசு பத்திரிகை யாழ்ப்பாணத்தில் பிரச்சனை முனைப்பாக இருப்பதால் யாழ் செய்திகளை முதன்மைப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது என்று.

    அந்த வாதத்தை ஒரு ஒப்புக்க ஏற்றுக்கnhண்டால் டான் தொலைக்காட்சி வன்னி முகாம்கள் பற்றி அல்லவா ஒரு பிரிவான செய்தித் தொகுப்பைக் கொண்டிருக்க வேண்டும். யாழ் கறிப்பவுடரில்தொடங்கி குடா நாட்டுச் செய்திகள் வரை யாழ்ப்பாணம் முதன்மைப் படுத்தும் போது பிரதேசவாதம் கொடுத்த வலி ரட்ணசிங்கம் போன்வர்களை கோபப் படுத்தியிருக்கும் என்பதைப் ஏன் நாம் பார்க்க மறுக்கிறோம்.

    Reply
  • bala
    bala

    சண்முகசேகரத்தை சுட்டுக் கொன்று விட்டதாக கூறுகின்றார்கள் உண்மையா?

    Reply
  • Mohan
    Mohan

    அனேகமாக இலங்கையிலிருந்து வெளிவரும் எல்லா பத்திரிகைகளிலுமே யாழ். செய்திகள், கிழக்கு செய்திகள், மலையகச் செய்திகள் என்று ஒவ்வொரு பக்கம் ஒதுக்கப்பட்டிருக்கின்றது.
    டான் ரிவி யாழ்ப்பாண கலையகத்திலிருந்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப ஆரம்பித்தபோதே அதன் இயக்குநர் குகநாதன் விளக்கமாகக் குறிப்பிட்டிருந்தார். விரைவில் வவுனியாவிலும் மட்டக்களப்பிலும் டான் தனது கலையகத்தைத் திறக்கும் என்றும் அதன்பின்னர் அங்கிருந்தும் நிகழ்ச்சிகள் வரும் என்றும். இதில் என்ன பிரதேசவாதத்தை கண்டுவிட்டீர்கள் என்றுதான் புரியவில்லை.

    Reply
  • chola
    chola

    நானும் என்ர ஊரான் ஆராலும் சங்கம் வைச்சானெண்ணடா போய்ச்சேருவம் எண்டா அது நடக்குதில்லை. புங்குடுதீவார் காரைதீவார்தான் சங்கம் வைக்கிறார்கள். என்ன செய்யிறது. குகநாதன் வீரகேசரி என்ன பரட்சிப்புயலுகளே! அவர்கள் சமூகசேவையா செய்கிறார்கள். வெளிப்படையாக யாவாரம் எண்டு சொல்லித்தானே செய்கிறார்கள். கிழக்கிலும் ஏலுமெண்டா செய்வார்கள். கிழக்கு செய்திகளையும் போட்டா அவர்கள் புரட்சிப் புயலாகிவிடுவார்களா?
    உந்த இளம்பிள்ளைவாதங்கள் பெரிய அநியாயம்தான். குறுக்குவழியில கூட்டம்சேர்க்கிற முயற்சி. யாழ். மேலாதிக்கவாதத்தை உப்பிடி எல்லாம் அகத்தேலாது

    Reply
  • palli
    palli

    டன் தொலைக்காட்ச்சிக்கும் யூட்டுக்கும் உள்ள பிரச்சனையை கூட பிரதேசவாதமாக கொண்டு வந்து விட்டார்கள், இதை சுவிஸ்சில் தங்கியிருக்கும் ஒன்றுகூடல் காறர் கேட்டால் இதையே சாட்டாய் சொல்லி இன்று போய்நாளை வா என திரும்ப மாடார்களா?? யூட் பிரதேசவாதம் இருக்கோ இல்லையோ உங்களுக்கு ஏதோ இருக்கு;;

    Reply
  • jude Ratnasingam
    jude Ratnasingam

    நன்றி பல்லி!
    உங்களைப்போல் அனுபவமும், வரலாற்றுத் தகவல்களை தெரிந்தவனும் இல்லை என்றே வைத்துக்கொள்வோம் (இளம் பிள்ளை)

    ஒடுக்குமுறைக்கு எதிராக எப்படிப் போராடுவது என்பதை எனக்கு சற்று விளக்கமுடியுமா?

    ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தில் இதிலிருந்து இதுவரைதான் என்கின்ற காலவரையறை ஏதும் உண்டா?

    “ஒடுக்குமுறை எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எதிர்த்துப் போராடவேண்டியது ஒரு புரட்சியாளனின் கடமை” என்று எங்கோ ஒரு வீட்டு மதிலில் எழுதியிருந்ததைப் படித்தேன். (இது எனக்கும் பல்லிக்குமுள்ள ஒற்றுமை)

    சிங்கள மக்களின் கோபத்துக்கு தமிழ் பேசும் மக்கள் ஆளாகி விடுவோம் என எண்ணியிருந்தால் தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக பரிணமித்திருக்குமா?

    கருணா கொலை செய்த போது எங்கே இருந்தீர்கள் என்கிறீர்கள்?
    புளட்டின் உட்கொலையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நடந்த அத்தனை அநியாயப் படுகொலைகளையும் உலகம் முழுவதும் முன்நின்று எதிர்த்தவர்களில் நானும் ஒருவன் என்பதை பல்லியினுடைய கேள்விக்கான பதிலாக மட்டுமில்லாது மனிதம் கொண்ட மனிதர்களாக வாழ்ந்தோம் என்பதையும் தெரிவிப்பதற்காக மட்டுமே இதை வெளிப்படுத்துகிறேன்.

    Reply
  • Sarana
    Sarana

    இது போன்ற எழுத்துகளும் வழிகாட்டலுகளும் முதலில நிப்பாட்டவேணும். யாழ் மையவாதம்> பக்கவாதம்> இனவாதம்>.
    இந்தக்கட்டுரை என்ன வாதம்? அமொpக்கா உலகம் பூராவும் செய்யிற அநியாயத்துக்கு ஒட்டுமொத்த மக்களும் குற்றவாளிகளல்ல. கூரைக்கே கிடுகு வாங்க வக்கில்லாத ஏழைகளும் சோpகளும் யாழ்ப்பாணத்தில் ஏராளமாக உண்டு. இவர்கள் கூட இந்தக் குற்றச்சாட்டெதிலும் ஈடுபடாதவர்கள் வியாபாரப் போட்டியில் யாழ்பாண முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்கள்! பைத்தியம் ஏதுமா?உலகம் அறிந்த காரணத்தக்கு ஒரு புது விளக்கம். இந்த நடவடிக்கைக்காக இன்றும் இதயத்தால் அழுகின்ற யாழ் தமழழர்கள் ஏராளம் பேர். மக்களை மதிக்கக் கற்றுக்கொண்டு(அது எந்தப் பிரதேசமாகட்டும்)அப்புறமா எழுதுங்கோ!

    Reply
  • palli
    palli

    //“ஒடுக்குமுறை எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எதிர்த்துப் போராடவேண்டியது ஒரு புரட்சியாளனின் கடமை” என்று எங்கோ ஒரு வீட்டு மதிலில் எழுதியிருந்ததைப் படித்தேன். (இது எனக்கும் பல்லிக்குமுள்ள ஒற்றுமை)//
    நல்லதை யார்வீட்டு சுவரிலும் படிக்கலாம்; ஆனால் கெட்டதை நம் வீட்டு முற்றத்தில் கூட கிறுக்க கூடாதல்லவா?
    யூட் என்னுடைய வாதம் வடக்கு கிழக்கல்ல ஒரு குற்றத்துக்காக அந்த பிரதேசத்தை அவமானபடுத்தவோ அல்லது குற்றம் சுமத்தவோ கூடாது என்பதுதான், அமெரிக்கா வல்லரசு அங்குதான் வன்முறையை எதிர்ப்பவர்களும் உள்ளனர், சோவியத் கமினிஸம் என சொல்லுகிறார்கள் ஆனால் அங்கு இருந்துதான் மாவியாக்கள் உற்ப்பத்தி செய்யபடுகின்றனர், இனவாதம்; பிரதேசவாதம், தலித்தியவாதம்; பெண்ணியவாதம், புலம்பெயர் வாதம்; இயக்க்வாதம் இப்படி பலவாதத்தை நாம் சொல்லி கொண்டே போகலாம், இளம்பிள்ளை வாதத்துக்கு கூட மருத்துவம் கண்டாயிச்சு, ஆக வாத பிரதிவாதங்களை விட்டு மனிதரை நேசிப்போம்; மனித மிருகங்களை அம்பலப்படுத்துவோம்; அது பல்லியோ அல்லது யுட்டாக இருக்கட்டுமே தவிர கிழக்கோ வடக்கோ என வேண்டாமே:
    தொடரும் பல்லி;;

    Reply
  • thenaale
    thenaale

    நண்பர் யூட்டிற்கு
    உங்களை நான் மிகவும் அறிந்தவன் என்ற நிலையில் உங்கள் எழுத்து வெளிப்படுத்தும் உணர்வுகளில் உள்ள சிக்கல் காரணமாக என்னை வெளிப்படுத்த முடியாமல் உள்ளேன். ஏனெனில் யாழ்மேலாதிக்க வாதத்தை யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து மக்கள் மீதும் பிரயோகிக்கப் பார்க்கின்றீர்கள் என்பதே எனது எண்ணமாகும். நீங்கள் இதை உடனடியாக மறுப்பீர்கள் என தெரியும். ஆனால்அதுவல்ல உண்மை. நீங்கள் குறிப்பிடும் இந்த மேலாதிக்க சக்திகளின் எண்ணிக்கைக்கு அதிகமாக வன்னி மக்களுக்கு சேவை செய்த யாழ்ப்பாணத்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என என்னால் சொல்ல முடியும்.

    யாழ்ப்பாண மக்கள் சுந்தரலிங்கம் போன்றவர்களை தோற்கடித்தார்கள் என்பதை தயை செய்து மறக்க வேண்டாம். காங்கேசன்துறை தேர்தலில் விபூதி வேண்டுமா சிருவை வேண்டுமா என்ற பிரபலமான கோசத்தை மறக்க வேண்டாம்.

    உங்களின் கருத்திற்கு பதிலளிப்பதன் மூலம் யாழ்மையவாதம் என்ற ஒன்று இருப்பதை மறுதலிக்க விரும்பவில்லை. இது குறிப்பிட்ட ஒரு சிலர் தங்கள் சொந்த நலனுக்காக சொந்த நலனுக்காக மட்டுமே ஆதிக்கம் செலுத்தினர். இதை எவ்வாறு எதிர் கொண்டு இல்லாமற் பண்ணுவது என்ற பாதையில் போவதை தவிர புலிகளைப் போல சிங்கள இனவாதத்தை வைத்து வியாபாரம் செய்ததைப் போல பாவிக்காதீர்கள்.

    என்னால் ஒன்றை புரிய முடிகின்றது. வன்னி மக்கள் மேல் யாழ் மேலாதிக்கம் ஏற்படுத்திய கஸ்டங்கள் புறக்கணிப்புக்கள் எல்லாவற்றையும் உங்கள் நலனுக்காக நீங்கள் பாவிக்கப் பார்க்கிறீர்கள். மீண்டும் ஒரு விடயத்தை ஏற்கிறேன். வன்னி மக்களுக்கும் ஏன் இலங்கை மக்களுக்கும் யாழ் மேலாதிக்கவாதிகள் ஒரு சிலர் பல சிரமங்களை தந்துள்ளனர். ஆனால் நீங்கள் அந்த ஒரு சிலரை வைத்து இவர்கள் ஏனைய யாழ்ப்பாணத்து மக்களுக்கு பாலாறும் தேனாறும் ஓடவிட்டதாக சொல்ல முயலுகிறீர்கள். இதை நீங்கள் இங்கு சொல்லாவிடினும் உங்களின் பல எழுத்துக்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

    எனது வீட்டில் டன்னில் இருந்து ஒரு ரிவியும் இல்லை. நண்பர் வீட்டிற்கு போகும் போது யாழ் செய்திகள் என கண்டதும் எனக்கும் உங்களைப் போல் கேள்வி எழுந்தது. இந்த டன் ரிவி குகன் பரிசில் இருந்து ஈழமுரசு வெளியிடும் போது புலியுடன் சேர்ந்து கூத்தடித்தவர். தற்போது பிழைப்பை மாற்றி விட்டார். எனவே இப்படியானவர்களை வைத்து உணர்ச்சி வசப்பட வேண்டாம். உங்கள் சேவை நாட்டிற்கு தேவை.

    மூன்றாம் அலகுக்கு நீங்களும்(தமிழ் பேசும் மக்களின் பிரதேசம் என்பது மூன்று ஆட்சி அதிகார அலகுகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். கிழக்கு மாகாண அதிகார அலகு யாழ்ப்பாண அதிகார அலகு (ஆனையிறவுக்கப்பால்) வடமாகாண அதிகார அலகு மட்டுமே)என்ற நிலைக்கு வந்து விட்டீர்கள்.

    Reply
  • jude Ratnasingam
    jude Ratnasingam

    நண்பர் thenaali!
    நீங்கள் யார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் உங்கள் சமூக அக்கறையை நான் மதிக்கிறேன்.
    சிங்கள இனவாதம் என்றால் என்ன 100 வீதமான மக்களும் இனவாதிகள் என்றா கருத்து?
    இல்லை 100 வீதமான சிங்களவரும் தமிழ் மக்களுக்கு எதிரானவர்களா?
    பெரும்பான்மை துரதிஸ்ரவசமாக இப்படி.

    Reply
  • Ahmad Nadvi
    Ahmad Nadvi

    Once again Jud’s good article. Whenever the Tigers say Singhala, Sinhala they did not mean entire Singhales population, They only ment Singhales Natinalist ot Chevunists like wise, my understanding is, whenever Jude refers to Jaffna mentality or Jaffna sort natinalisam it does not and caanot mean that he accuses entire good harted and decent Tamils or Jaffna Muslims. He just tries to justify his case through some Tamils’ approach towards Singhalse and Muslims that’s all.

    I have first hand experience with good Tamils and very bad Tamils. Others may have experienced with good Muslims or very bad Muslims therefore it is good Tammils are all fantastic people and Singalese or Muslims all barbarians.

    We can only exchange our experience to learn and adjust our life. Therefore I once again salute to Jude’s article because there is something in it for people who undesrtand

    Reply
  • meerabharathy
    meerabharathy

    மேற்குறிப்பிட்ட கட்டுரையுடன் தொடர்புள்ளதால் எனது கட்டுரையை இத்துடுடன் இணைக்கின்றேன்…..

    விடுதலைப் போராட்டம்? தொடரும் அடக்குமுறைகள்? படுகொலைகள்? மற்றும் சிவதம்பி? சிந்தனை முறைகள்? எதிர்காலம்? சில கேள்விகள்…

    மேலும் வாசிக்க….
    http://www.awakeningawareness.org/

    இனி என்ன செய்யப்போகின்றோம்….மனம் திறந்து ஒரு மடல்…
    அரசியல் தோல்வியா? இராணுவத் தோல்வியா?

    Reply
  • Kalai
    Kalai

    ராசதுரை, கருணா,பிள்ளையான் செய்வதெல்லாம் அவர்களுடய தனிப்பட்ட விசயம். யாழ்பாணத்திலை பிறந்த சுந்தரலிங்கம், அமிர், பாலசிங்கம் செய்தால் யாழ்வாதம், இன வாதம், மேலாதிகமோ? இது என்ன வாதம்?

    Reply
  • jalpani
    jalpani

    ஒரு சுந்தரலிங்கம் அமிர்தலிங்கம் பாலசிங்கம் இவர்களுக்காக யாழ்ப்பாணத்து கல்மதில் கட்ட முடியாத, அப்பாவி மக்களின் கிடுகு வேலியிலும் ,புகையிலை மீதும் ஏன் ஆத்திரப்படுகிறீர்கள்?

    Reply
  • palli
    palli

    கலை இதுவே பல்லிக்கும் புரியாத வாதம்;
    வாதம் என்பது வரவேற்ப்புக்கு உரியதே; ஆனால் இந்த வாதத்தை வரவேற்ப்பதா? இந்த வாதத்தில் ஒரு திருப்பு முனை கருனா திடீர் கிழக்கு பயணம், ஆரப்பா அது கருனாவின் பயணத்துக்கு பின்னால் நிற்க்கும் யாழ் மேலாதிக்கவாதி;

    Reply
  • முன்னாள் யாழ் வியாபாரி
    முன்னாள் யாழ் வியாபாரி

    இன வாதத்தை தூண்டுகிற இப்படியான மட்டமான பிரச்சாரங்கள், துண்டுப்பிரசுரங்கள், சொற்பொழிவுகளை என்போன்ற வியாபாரிகள், வர்த்தகர்கள், கிழக்கில் பெற்றுக்கொண்ட அனுபவங்கள் நிறைய உள்ளன. வந்திட்டான் யாழ்பாணத்தான் சுரண்ட யாழ்பாணியே வெளியேறு என்று ‘சங்கம்’ வைத்து போராடினார்கள் இந்த இலக்கு யாழ் மக்களுடன் மட்டும் நில்லாது முசுலிம் மக்களுக்கும் சேர்த்து இன்னல்கள் கொடுக்கப்பட்டது உலகறியாத விடயமல்ல.
    தற்போதய தொழில்நுட்ப வழர்ச்சியால் இந்த மட்டமான வேலையை பல பக்கசார்பு இணையதளங்களிலும் தாராளமாகக் காணக் கூடியதாகவுள்ளது. ஒரளவுக்காதல் தரமாக உள்ள தேசம்நெட்டில் இனவாத தூண்டல் கட்டுரை ஆச்சரியத்தை தந்துள்ளது

    Reply
  • murthy
    murthy

    //ராசதுரை, கருணா,பிள்ளையான் செய்வதெல்லாம் அவர்களுடய தனிப்பட்ட விசயம். யாழ்பாணத்திலை பிறந்த சுந்தரலிங்கம், அமிர், பாலசிங்கம் செய்தால் யாழ்வாதம், இன வாதம், மேலாதிகமோ? இது என்ன வாதம்?// கலை

    கலை,
    ராசதுரை, கருணா, பிள்ளயான் போன்றோர் ஆதிக்கத்தை பயன்படுத்தி கிழக்கை டெவலப் செய்யவில்லை.தங்கள் சுயநலனுக்கும் சொந்த தேவைக்கும் மலேசியாவில் மாளிகை வீடும் வர்த்தகமும் என முதலிட்டார்கள் என்பது தெரியாதவிடயமல்ல.கிழக்கு மக்களுக்கு அல்வாதான்

    ஜீ.ஜீ பொன்னம்பலம்,அமிர் போன்றோர் அதிகாரத்தை பயன் படுத்தி பாடசாலை,தொழில்சலைகள் யாழில் கட்டி டெவலப்பண்ணினார்கள்.அது தான் இன வாதம்

    Reply
  • வந்தேறுகுடி
    வந்தேறுகுடி

    இந்த யாழ்பாண மக்கள் ஏந்தான் பனைமரத்தை எதுக்கெடுத்தாலும் இழுக்கிறார்களோ தெரியவில்லை. இந்தபனையாலை எவ்வளவு பிரச்சனை. சின்னவயதிலை பாண்டிருப்பில் படிக்கும்போது சக மாணவர்கள் எனக்கு வைத்த பட்டம் “பனங்கொட்டை யாழ்ப்பாணி”. இது தேவயா? எனது பிள்ளை லண்டனில் படிக்கிறார். தன்னை “சிமலி பாக்கி” என்று பள்ளியில் பகிடி பண்ணீனம் என்று அழுவாள். பனையையும் பாக்கியையும் அகராதியில் இருந்து எடுத்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்

    Reply
  • Maavera
    Maavera

    //ஒரு சுந்தரலிங்கம் அமிர்தலிங்கம் பாலசிங்கம் இவர்களுக்காக யாழ்ப்பாணத்து கல்மதில் கட்ட முடியாத, அப்பாவி மக்களின் கிடுகு வேலியிலும் ,புகையிலை மீதும் ஏன் ஆத்திரப்படுகிறீர்கள்//

    ஏன் நீங்கள் மட்டும் என்னவாம் 83′ கலவரத்திலை கொழும்பில் யாழ்ப்பாணத்தாரை அடித்து கலைத்தபோது சிங்களமே தெரியாமல் பல தலைமுறையா பேக்கரி யாழில் வைத்திருந்த சிங்களவன் மேல் ஆத்திரப்பட்டு அடித்து கலைக்கவிலலையா?

    Reply
  • palli
    palli

    //ஏன் நீங்கள் மட்டும் என்னவாம் 83′ கலவரத்திலை கொழும்பில் யாழ்ப்பாணத்தாரை அடித்து கலைத்தபோது சிங்களமே தெரியாமல் பல தலைமுறையா பேக்கரி யாழில் வைத்திருந்த சிங்களவன் மேல் ஆத்திரப்பட்டு அடித்து கலைக்கவிலலையா?//

    இது எப்படி இருக்கு, கேட்டது பல்லியல்ல: மாவீராவாம்;
    இப்ப முடிவுதான் என்ன யாழ் மக்கள் எல்லாம் நிர்வானமாய் திரிய வேண்டுமா? அல்லது;;;

    Reply
  • chilli
    chilli

    யாழ் மக்கள் நிர்வாணமாய் திரியவேண்டாம். மற்றறைய பிரதேச மக்களின் ஆடையை உரியாதிருந்தல் போதும்.

    Reply
  • Amman
    Amman

    யூட்டின் “இந்தச் சிந்தனை” நல்ல சிந்தனை

    Reply
  • Yal
    Yal

    கொழும்பில் இப்போது தடக்கி விழுந்தாலும் புலம்பெயர் விஐபிக்களின் மீதுதான் விழவேண்டியிருக்கிறது. எல்லோரும் பாராளுமன்றக் கதிரைகளிலும், மாகாணசபை கதிரைகளிலும் கண்வைத்து ஓடித்திரிகின்றார்கள். நண்பர் யுட் கருணாவுடன் அல்லது பிள்ளையானுடன் சேருவதற்கு முடிவெடுத்து விட்டார் போலும். அதுதான் அவர்களை மகிழ்ச்சிப்படுத்துகின்றார். எமது முன்கூட்டிய வாழ்த்துக்கள் யுட்.

    Reply
  • jalpani
    jalpani

    யாழ் மக்கள் நிர்வாணமாய் திரியவேண்டாம். மற்றறைய பிரதேச மக்களின் ஆடையை உரியாதிருந்தல் போதும்.”

    தனது சொந்த பிரதேசங்களுக்குள்ளேயே சொந்த மக்களை பாடாய்படுத்தும் வர்க்கங்கள் எல்லா இடமும் இருக்கின்றனர். இதைப் புரிந்து கொள்ளாமல் ஏன் யாழ்ப்பாண மக்களிடம் இந்தக் கடுப்பு. ஏன் யாழ்பாணம் என பிரித்தெடுத்து சீறுகிறீர்கள்?

    Reply
  • jalpani
    jalpani

    சிங்கள இனவாதம் என்றால் என்ன 100 வீதமான மக்களும் இனவாதிகள் என்றா கருத்து? இல்லை 100 வீதமான சிங்களவரும் தமிழ் மக்களுக்கு எதிரானவர்களா?பெரும்பான்மை துரதிஸ்ரவசமாக இப்படி.”/jude

    சிங்களப் பேரினவாதம் என குறிப்பிடுவதோடு நின்று விடுவோம். சாதாரண சிங்கள மக்களின் வாழ்வோடு தொடர்பையுடைய (ஈரப்பலாய்க்காய் ,பாற் சோறு போன்ற) எதையும் தொட்டு கருத்துரைப்பதில்லை. இந்தக் கட்டுரையில் ஏழை எளிய மக்களையும் உழைப்பாளிகளையும் குரோதத்தோடு கிடுகு வேலி ,புகையிலை, பனை மரம் என குறிப்பிட்டு பேசுவது ஏன்?

    Reply
  • palli
    palli

    //யூட்டின் “இந்தச் சிந்தனை” நல்ல சிந்தனை//
    நீங்கள் அம்மான் என்பதாலா; அம்மான் என்னும் சொல்லுக்கு என்னும் ஒரு சக சொல் உண்டு; அதுவாக இருக்கபடாது, அது ரெம்ப தப்பு;

    Reply
  • Kalai
    Kalai

    //தனது சொந்த பிரதேசங்களுக்குள்ளேயே சொந்த மக்களை பாடாய்படுத்தும் வர்க்கங்கள் எல்லா இடமும் இருக்கின்றனர். இதைப் புரிந்து கொள்ளாமல் ஏன் யாழ்ப்பாண மக்களிடம் இந்தக் கடுப்பு. ஏன் யாழ்பாணம் என பிரித்தெடுத்து சீறுகிறீர்கள்?//

    யாழ்பாணி, இதைத்தானே இளம் பிள்ளை வாதம் என்று பல்லியும் சோழாவும் சொல்லிவிட்டார்கள்

    Reply