ஆசிரியர் வழிகாட்டி நூல்கள் மற்றும் மாணவர்களுக்கான இலவசப்பாடப் புத்தகங்கள் இம்மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் விநியோகிக்கப்படவுள்ளதாக கல்வி வெளியீட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலவசப் பாடப்புத்தகங்கள் வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலக மட்டத்தில் விநியோகிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
தரம் 12இல் கற்பிக்கவுள்ள ஆசிரியர்கள் அடுத்த ஆண்டுக்கான கற்பித்தல் நடவடிக்கைகளைத் திட்டமிட்டு, தயார் செய்து கொள்ள வசதியாக ஆசிரியர் வழிகாட்டி கைநூல்கள் வழங்கப்படவுள்ளன.
ஒவ்வொரு பாடத்திட்டத்திற்கும் என அச்சிடப்பட்டுள்ள ஆசிரியர் வழிகாட்டிகைநூல்கள் இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன் சகல பாடசாலைகளுக்கும் விநியோகிக்கப்படவுள்ளது.