நோர்வே ஈழத் தமிழர் அவைக்கான தேர்தல்

ncet_elected.jpgநோர்வே ஈழத் தமிழர் அவைக்கான தேர்தல்  நடைபெற்றது.  இலங்கைதீவில் இருந்து புலம் பெயர்ந்தாலும் தமிழீழ தனியரசுக்கான தேடலுடன் நோர்வேயில் வாழம் ஈழத் தமிழ் மக்கள் தமது உரிமைப் போராட்ட இலட்சியப் பணயத்தினை ஐனநாயக வழியில் மக்களின் பரந்த பங்களிப்புடன் உறுதியாக முன்னெடுத்தும் செல்லும் நோக்கில் இந்த மக்களவையானது உருவாக்கம் பெற்றுள்ளது.

தமிழீழ தனியரசு கோட்பாட்டை உறுதியாகவும் வெளிப்படையாகவும் வலியுறுத்தி தமிழ மக்களின் விருப்பங்களை பிரதிபலிக்கும் வகையில் நோர்வே முழுவதிலும் 16 வாக்குச்சாவடிகள் வைக்கப்பட்டு நடைபெற்ற தேர்தலில் 2767 பேர் வாக்களித்துள்ளனர்.

தேசிய ரீதியாக போட்டியிட்ட 9 வேட்பாளர்களில் 5 வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
விபரங்கள் வருமாறு
1. பியோனார் மொக்ஸ்நெஸ்
2. பஞ்சகுலசிங்கம் கந்தையா
3. ஜெயசிறீ பாலசுப்பிரமணியம்
4. ஆதித்தன் குமாரசாமி
5. தர்மசீலன் தர்மலிங்கம்

பிராந்திய ரீதியாக போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளர்கள் வருமாறு
வடக்கு பிராந்தியம்
1. றூபன் ஐயாத்துரை
தெற்கு தென்மேற்கு
1. றெஐி டேவிட்ராஐ்
மேற்கு பிராந்திரயம்
1. விஐயசங்கர் அசோகன்
மத்திய பிராந்தியம்
1. இராசகுமார் குமாரசாமி
கிழக்கு பிராந்தியம்
1. சிவகணேஸ் வடிவேலு
2. இராசேந்திரம் பொன்னுத்துரை
3. சிவராஐா வல்லிபுரம்
4. கண்ணன் நாகேந்திரம்
5. மேரி புளோரிடா யூடின் பிரான்சிஸ்
6. ராஐரட்ணம் வேலுப்பிள்ளை

மேற்படி தெரிவு செய்யப்பட்ட பிரதி நிதிகள் அனைவரும் நோர்வே ஈழத் தமிழர் அவையின் இரண்டு அவைகளில் ஒன்றான நோர்வே ஈழத் தமிழ் மக்கள் அவை(House of Eelam Tamils in Norway-HETN) என்ற அவையில் அங்கம் வகிப்பர்.
 

Show More

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • palli
    palli

    மேலே குறிப்பிட்ட இவர்கள்தான் இனிவரும் காலங்களில் நோர்வேயில் ஈழம் சொல்லி பிச்சை எடுக்க முடுயும் என்பதை அறிவித்து போட்டார்களா?? இல்லையா??
    அப்ப மிச்ச புண்ணாக்குகள் என்ன செய்ய போகினம்;

    Reply
  • paramu
    paramu

    Elected members are all from Jaffna District. Where is the people from Batti, Trinco, Amparai, Vavunia, Mannar, Kilinochchi, Mullai & Puttalam?….Who wants Tamil Eelam?… Only Jaffna people….

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    பரமு,
    நீங்கள் குறிப்பிடும் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள், தேர்தலில் நின்று தோற்கடிக்கப் பட்டுள்ளார்களா?? எடுத்ததற்கெல்லாம் பிரதேசவாதம் புகுத்துவது சரியல்ல. உப்பிடிப் பார்த்தால் 1995 லேயே யாழ் மக்களில் பெரும்பகுதியினர் தமிழீழத்தைப் புறக்கணித்து விட்டார்கள்.

    Reply