கூட்டுப் படைகளின் பிரதானியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விமானப்படை தளபதி ரொஷான் குணதிலகவை நியமித்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார். கூட்டுப்படைகளின் பிரதானியாக கடமையாற்றிய ஜெனரல் சரத் பொன்சேகா தனது பதவியை உத்தியோகபூர்வமாக ராஜினாமா செய்ததையடுத்து, ரொஷான் குணதிலக நியமிக்கப்பட்டுள்ளார்.
ரொஷான் குணதிலக கூட்டுப்படைகளின் பிரதானியாகக் கடமையாற்றும் அதேவேளை விமானப்படைத் தளபதியாகவும் கடமையாற்றுவார் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.