ஓய்வுபெறுவதற்கான காரணங்களை விளக்கி ஜெனரல் பொன்சேகா ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதம்

031109sarathfonseka.jpg12. நவம்பர்.2009.
மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களுக்கு,

இலங்கை இராணுவத்தின் படையிலிருந்து ஓய்வு பெறுவதற்கான கோரிக்கை.

1.கூட்டுப் படைகளின் தலைமையதிகாரியாக தற்போது பணிபுரியும் ஜெனரல் ஜி.எஸ்.சி.பொன்சேகா ஆகிய நான் 1970 பெப்ரவரி 5 இல் இலங்கை இராணுவத்தில் இணைக்கப்பட்டு 1971 ஜூன் 1 இல் உறுப்பினராக உள்ளீர்க்கப்பட்டேன். 2005 டிசம்பர் 6 இல் மேன்மை தங்கிய ஜனாதிபதியாகிய தாங்கள் என்மீது வைத்த நம்பிக்கையின் பிரகாரம் லெப்டினன்ட் ஜெனரலாக தரம் உயர்த்தப்பட்டு இலங்கை இராணுவத்தின் தளபதியாக நியமிக்கப்பட்டேன். பயங்கரவாதத்தின் அழிவில் நாடு சிக்கியிருந்த வேளையில், அரசியல் ரீதியாகவோ அல்லது வேறு வழியாகவோ 25 வருடங்களுக்கு மேலாக வெற்றியை ஈட்டியிருக்காத, ஸ்தம்பித நிலையான காலகட்டத்தில் நான் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டேன்.

2. எனது தலைமைத்துவத்தின் கீழான 3 வருடங்கள் 7 மாதங்களான காலப்பகுதியில் இலங்கை இராணுவத்தால் பயங்கரவாத இயக்கத்தை அழிக்க முடிந்தது. அத்துடன், நம்பமுடியாத அளவு தொகையான ஆயுதங்கள், தளபாடங்கள் என்பவற்றையும் கைப்பற்றி விடுதலைப் புலிகளையும் அதன் கொலைகாரத் தலைமைத்துவத்தையும் அழிக்க முடிந்தது. இதனை மேன்மைதங்கிய ஜனாதிபதியான தாங்கள் அறிவீர்கள். இந்த வரலாற்று ரீதியான வெற்றிக்கு இராணுவத்திற்கு தலைமைதாங்குவதற்கு நான் கருவியாக இருந்தேன் என்பதை மிகைப்படுத்திக் கூறவில்லை. நிச்சயமாக மேன்மைதங்கிய ஜனாதிபதியாகிய தங்களின் ஆதரவும் இந்த நடவடிக்கையை நிறைவேற்ற உதவியது. அத்துடன், களத்தில் உள்ள தளபதிகள், இராணுவத்தின் சகல உறுப்பினர்களும் இந்தப் பொதுவான இலக்கை வென்றெடுக்க பணிபுரிந்தனர். எனது தொலைநோக்கு, தலைமைத்துவம் என்பவற்றுடன் இந்த உன்னதமான இலக்கில் வெற்றிகொள்ளப்பட்டது.

3. நாடும் மேன்மைதங்கிய ஜனாதிபதியாகிய தாங்களும் எனது சேவைகளை அடையாளங்கண்டுகொண்ட உண்மையை நான் மெச்சுகிறேன். இதன்மூலம் நான்கு நட்சத்திர ஜெனரலாக இராணுவத்திற்குத் தலைமை தாங்குவதற்கு நான் பதவியுயர்த்தப்பட்டேன். ஆயினும், அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அதிகளவுக்கு எனக்கு அழுத்தத்தை ஏற்படுத்தின. அவற்றை நான் கீழே இணைத்திருக்கிறேன்.

4. இணைப்பில் குறிப்பிடப்பட்ட விபரங்கள் மற்றும் அதிகமான விடயங்களின் அடிப்படையில் ஜனாதிபதியாகிய தாங்களும் அரசாங்கமும் என்மீது கொண்டிருந்த நம்பிக்கையை இழந்துவிட்டதாக நம்புவதற்கான நிர்ப்பந்தம் எனக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணங்களை தாங்கள் நன்கு அறிந்துள்ளீர்கள். 40 வருடங்களுக்கும் மேலாக சேவையாற்றிய மிகவும் சிரேஷ்ட அதிகாரியாக நான் உள்ளேன். அத்தகைய நிலையில் தற்போதைய நிலைமையானது எனது கடமைகளை மேலும் தொடர்வதற்கு இடமளிக்கின்றதாக இல்லை. ஆதலால் எனது சேவையை முடிவிற்குக் கொண்டுவந்து 2009 டிசம்பர் 1 முதல் இராணுவத்திலிருந்து ஓய்வுபெறுவதற்கு எனக்கு அனுமதி வழங்கப்படவேண்டுமெனக் கோருகிறேன்.

5. மேலும், ஓய்வுபெற்ற காலத்தில் போதியளவு பாதுகாப்பை எனக்கு வழங்கவேண்டுமெனக் கோருகிறேன். பயிற்சி பெற்ற படைவீரர்கள், போதியளவு பாதுகாப்புடனான (புல்லட் புரூவ்) பொருத்தமான வாகனம், பாதுகாப்பு வாகனங்கள் என்பனவற்றை எனக்கு வழங்குமாறும் கோருகிறேன். விடுதலைப் புலிகளின் இலக்குகளில் அதிக முன்னிலைப்படுத்தப்படுபவர்களில் ஒருவராக நான் இருக்கிறேன். அவர்கள் அதனை நிறைவேற்றுவதற்கு இப்போதும் ஆற்றலுடையவர்களாக உள்ளார்கள் என்ற காரணத்தினால் எனக்குப் போதியளவு பாதுகாப்பை வழங்கவேண்டுமெனக் கோருகிறேன். அத்துடன், முன்னாள் கடற்படைத் தளபதியான டபிள்யு.கே.ஜே.கருணாகொட விற்கு நூற்றுக்கணக்கான ஆட்களும் 6 பாதுகாப்பு வாகனங்களும் ஒரு புல்லட் புரூவ் வாகனமும் வழங்கப்பட்டிருப்பதை தங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன். அத்தகைய ஏற்பாடுகள் எனக்கும் மேற்கொள்ளப்படுமென நான் அனுமானிக்கின்றேன். நான் எதிர்நோக்கும் அச்சுறுத்தல் தொடர்பாக தாங்கள் நன்கு அறிவீர்கள். எனவே இதனை பரிசீலனைக்கு எடுத்து இவற்றை வழங்குமாறு கோருகிறேன்.

6. இந்தியாவின் முன்னாள் இராணுவத் தலைமையதிகாரி ஜெனரல் ஏ.எஸ்.வைத்தியாவிற்கு இடம்பெற்ற விடயத்தை இங்கு நான் உதாரணமாக மேற்கோள் காட்ட விரும்புகிறேன். ஏ.எஸ்.வைத்தியா 1984 இல் அமிர்தசரஸில் பொற்கோவிலில் சீக்கியர்களுக்கு எதிராக புளூஸ்ரார் இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்வதற்கு தலைமைதாங்கியிருந்தார். 1986 இல் ஓய்வுபெற்ற வேளை அவர் படுகொலை செய்யப்பட்டார். அவர் ஈட்டிய வெற்றிகளுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்பட்டது. அந்தமாதிரியான சம்பவமொன்று எனக்கு ஏற்படுவதை நான் விரும்பவில்லை. புலிகளின் தற்கொலைப் படையாளியால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது நான் ஏற்கனவே பாரதூரமான காயங்களுக்கு இலக்காகியிருந்தேன். ஆதலால் எனது பாதுகாப்புத் தொடர்பாக தங்கள் மீது நம்பிக்கை வைத்து கோரிக்கைவிடும் நிலைமைக்கு நான் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளேன்.

7. இராணுவத் தளபதியாக நான் பதவி வகித்த காலத்தில் என்னால் விடுக்கப்பட்ட அறிக்கையை நான் அழுத்தி உரைக்க விரும்புகிறேன். எப்போதுமே நான் தலைமைதாங்க விரும்பவில்லை என்றும் யுத்தத்தில் சண்டையிடும் சுமையை எனக்குப் பின் பதவி வகிப்பவருக்கு விட்டுச் செல்ல விரும்பவில்லை என்றும் நான் குறிப்பிட்டிருந்தேன். அதனை நான் நிறைவேற்றியுள்ளேன். பதவியிலிருந்து ஓய்வுபெற வேண்டிய காலத்திற்கும் மேலதிகமாக ஏற்கனவே நான் 4 வருடங்கள் பணியாற்றியிருக்கிறேன். ஆதலால் மேலும் தாமதமின்றி இளைப்பாறுவதற்கு நான் விரும்புகிறேன்.

8. மேன்மைதங்கிய தங்களின் அன்பான பரிசீலனைக்காக இதனை சமர்ப்பிக்கிறேன்.

இணைப்பு ஏ

இராணுவத்திலிருந்து நான் ஓய்வுபெறுவதற்கு பாதிப்பை ஏற்படுத்திய காரணிகள்;

1. விடுதலைப் புலிகளை வெற்றிகொண்டதையடுத்து உடனடியாகவே சதிப்புரட்சி ஏற்படும் சாத்தியம் தொடர்பாக பல்வேறு முகவரமைப்புகள் தங்களை தவறாக வழிநடத்திச் சென்றமை இராணுவத் தலைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு வழிவகுத்ததை விளங்கிக்கொள்ளக்கூடியதாக உள்ளது. இராணுவம் 60 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வரைக்கும் தலைமைப் பதவியில் இருப்பதற்கு நான் கோரிக்கை விடுத்திருந்தேன். சதிப்புரட்சி தொடர்பான இந்தப் பீதி குறித்து பாதுகாப்பு வட்டாரங்கள் நன்கு அறிந்துள்ளன.

2. ஒழுக்காற்று விசாரணை நிலுவையிலுள்ள அதிகாரியொருவர் எனக்குப் பின் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியை நியமிக்குமாறு நான் மேற்கொண்ட சிபார்சுகள் பொருட்படுத்தப்பட்டிருக்கவில்லை. மேஜர் ஜெனரல் சந்திரசிறி தலைமையதிகாரியாகவும் யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதியாக 3 வருடங்களும் பணியாற்றி உன்னதமான சேவையை ஆற்றியிருந்தவர். இராணுவத்தில் நான் அறிமுகப்படுத்தியிருந்த உயர்மட்டப் பெறுமானங்களை தளம்பலடைய வைப்பதாக இது அமைந்திருந்தது. இந்த விடயம் எனக்கு கசப்பான ஏமாற்றத்தை அளித்தது.

3. கூட்டுப்படைகளின் தலைமையதிகாரியாக என்னை நியமித்தீர்கள். அது சிரேஷ்ட நியமனமாக இருந்தாலும் அடிப்படையில் அதிகாரமற்றதாகும். வெறுமனே பொறுப்புகளை ஒருங்கிணைத்து செயற்படுத்துவதாக அது அமைந்ததுடன், பொதுமக்கள் மத்தியிலும் ஆயுதப்படைகளின் அநேகமான உறுப்பினர்கள் மத்தியிலும் இது தவறான எண்ணத்தை ஏற்படுத்தியது. யுத்தத்தில் வெற்றிபெற்று இரு வாரங்கள் கழிந்த நிலையிலேயே இராணுவத் தளபதி பதவியிலிருந்து வெளியேறுமாறு பாதுகாப்புச் செயலாளர் என்னைத் தூண்டினார். தாங்களும் இரண்டு மாதங்களுக்கிடையில் எனது பொறுப்புகளைக் கையளிக்குமாறு வலியுறுத்தினீர்கள். யுத்தத்தில் தீர்க்கமாகப் போராடியவர்களுக்குத் திறமையான நிர்வாகத்தை வழங்குதல் மற்றும் அவர்களின் நலன்புரி நடவடிக்கைகளை சீர்படுத்துதல் போன்ற எனது தார்மீகக்கடப்பாடுகள் என்னிடமிருந்து பறிக்கப்பட்டன.

4. மேலும், எனது நியமனத்திற்கு முன்பாகவே கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரிக்கு வழங்கப்படும் அதிகாரம் தொடர்பாக நான் தவறாக வழிநடத்தப்பட்டேன். முன்னரிலும் பார்க்க எனக்கு அதிகளவு பொறுப்புகளும் அதிகாரமும் கிடைக்குமென விளக்கமளிக்கப்பட்டிருந்தது. ஆனால், பாதுகாப்பு செயலாளருக்கான தந்திரோபாய விவகாரங்களுக்கான ஆலோசகரால் வழங்கப்பட்ட எனது நியமனக்கடிதத்தில் எனது நியமனமானது வெறுமனே படை சேவைத்துறையுடன் ஒருங்கிணைந்து செயற்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. முழுமையான கட்டளை அதிகாரம் அதில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. அந்தக் கடிதத்தை தங்களுடைய தகவலுக்காக இதில் இணைத்திருக்கிறேன். தலைமைதாங்கும் பொறுப்புகளை எனக்கு வழங்குவதற்கு தாங்களும் அரசாங்கமும் விருப்பமற்றிருக்கும் நிலைமையையே இத்தகைய நடவடிக்கைகள் தெளிவாக வரையறைப்படுத்துகின்றன. அத்துடன், இவை என்மீதான வலுவான அவநம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. யுத்தத்தில் வெற்றிபெற்ற பின் எனக்கு மிகவும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் விடயமாக இது உள்ளது.

5. படைத்தளபதிகளின் சந்திப்பைத் தொடர்ந்து பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்ட விடயமானது தார்மீகமற்றதாகக் காணப்பட்டது. “முப்படைகளின் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரிக்கு வழங்கப்பட்டால் அது மிகவும் அபாயகரமானதாக அமையும்%27 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது அடுத்த தரத்தில் உள்ள தளபதிகளின் முன்னிலையில் எனக்கு உண்மையில் மிகவும் அவமதிப்பான விடயமாக அமைந்திருந்தது.

6. 2009 மே 18 இற்குப் பின் இடம்பெற்ற முதலாவது பாதுகாப்பு சபையில் தாங்களும் ஒரு அறிக்கையை விடுத்திருந்தீர்கள். யுத்தம் முடிவடைந்தது எனப் பிரகடனப்படுத்தப்பட்ட பின் இடம்பெற்ற பாதுகாப்புச் சபை அமர்வாக அது அமைந்திருந்தது. “மேலும் ஆட்சேர்ப்பு அவசியமற்றது., பலமான இராணுவம் இருப்பதாக பொதுமக்கள் மத்தியில் அபிப்பிராயம் உள்ளது%27 என்று தாங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். யுத்த வெற்றியின் பின்னர் திரும்பத் திரும்ப தங்களிடமிருந்து இத்தகைய கருத்தைக் கேட்பது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. உங்களுக்கு சொந்தமான, விசுவாசமான இராணுவத்தின் மீது நீங்கள் அவநம்பிக்கை கொள்கிறீர்களா என நான் தனிப்பட்ட முறையில் கருதினேன். ஒரு வாரத்திற்கு முன்னர்தான் பாரிய, கற்பனை செய்து பார்க்கமுடியாத வெற்றியை இராணுவம் ஈட்டியிருந்தது. நான் இராணுவத் தலைமை பதவியை கையளித்தும் கூட மீண்டும் அந்தக் கருத்தைத் தெரிவித்திருந்தீர்கள். இவற்றால் நான் வெறுப்புணர்வடைந்தேன். அவர்கள் மேற்கொண்டிருந்த உன்னதமான தியாகத்தை இத்தகைய கருத்துகள் அவமதிப்பதாக நான் கருதி வெறுப்படைந்திருந்தேன்.

7. தற்போதைய இராணுவத் தளபதி, பதவியை ஏற்றுக்கொண்ட உடனடியாகவே சிரேஷ்ட அதிகாரிகளை இடமாற்ற ஆரம்பித்தார். அவர்கள் யுத்த முயற்சிக்கு எனது தலைமைத்துவத்தின் கீழ் அளப்பரிய பங்களிப்பை மேற்கொண்டவர்கள். அத்துடன், இராணுவத்தின் சேவாவனிதா பிரிவில் எனது மனைவியுடன் இணைந்து பணியாற்றிய கனிஷ்ட அதிகாரிகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இது அதிகாரிகளின் விசுவாசத்திற்கு சவாலானது என்பது தெளிவானது. அத்துடன், இராணுவத்தின் அதிகாரிகள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தும் விடயமாகும்.

8. நாட்டுக்கு வெற்றியை ஈட்டித்தந்த இராணுவமானது சதிப்புரட்சியை மேற்கொள்வதாக சந்தேகப்பட்டது மிகவும் மனவருத்தத்தை ஏற்படுத்தும் விடயமாகும். 2009 அக்டோபர் 15 இல் மீண்டும் இந்திய அரசாங்கத்திற்கு விழிப்பூட்டப்பட்டது. தேவையற்ற விதத்தில் அதிகளவு இந்தியப் படையினர் உசார்நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். இந்த நடவடிக்கையானது இலங்கை இராணுவம் ஈட்டிய புகழுக்கும் பிரதிமைக்கும் சேறு பூசுவதான நடவடிக்கையாகும். உலகின் பார்வையில் மலாயா அவசரகாலநிலைக்குப் பின்னர் பயங்கரவாதக் குழுவொன்றை தோற்கடித்த ஆற்றல் கொண்ட, தொழில்சார் திறமையுடைய அமைப்பான இலங்கை இராணுவத்தின் புகழை மழுங்கடிப்பதாக இந்த நடவடிக்கை அமைந்திருந்தது. இராணுவத்தின் வரலாற்று வெற்றியை வழிநடத்திச் சென்ற அதன் முன்னாள் தளபதியான என்மீது இலங்கை இராணுவத்தின் விசுவாசம் தொடர்பாக சந்தேகத்தை ஏற்படுத்துவதாக இது அமைந்தது.

9. நாட்டில் நான் இல்லாத 23 அக்டோபர் 2009 தொடக்கம் 05 நவம்பர் 2009 வரை இராணுவத் தலைமையகத்தில் பாரிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. பாதுகாப்பு அதிகாரிகள் ஏ.எஸ்.கீயூவின் பிரதான நுழைவாயிலினுள்ளும் பாதுகாப்பு அமைச்சுக்கும் நகர்த்தப்பட்டனர். சிங்க ரெஜிமென்ட் படைகளை வாபஸ்பெறுவதற்கான வலியுறுத்தல் விடுக்கப்பட்டது. அவர்கள் என்னுடன் இணைக்கப்பட்டவர்களாக இருந்தனர். அதுவே எனது தாய்ப் படையணி என்பதை நீங்கள் அறிவீர்கள். சிங்க ரெஜிமென்ட் பாதுகாப்பு அமைச்சுக்கு 4 வருடங்களாக பாதுகாப்பை வழங்கிவந்தது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அபிப்பிராயத்தின் அடிப்படையில் அந்தப் படையினரின் யுத்தத் திறமையானது எவ்வாறு ஒரே இரவில் கைவிடப்பட்டது என்பது ஆச்சரியமான விடயமாகும். ஏ.எஸ். கியூவின் பிரதான நுழைவாசலில் சிங்க ரெஜிமென்டைச் சேர்ந்த போரிடாத நால்வர் வாகன சோதனைக் கடமைக்காக அமர்த்தப்பட்டிருந்தனர். 14 ஆயுதம் தரித்த அதிகாரிகளுக்குப் பதிலாக இவர்கள் அங்கு நியமிக்கப்பட்டிருந்தனர். அத்துடன், சிங்க ரெஜிமென்டைச் சேர்ந்த இந்த நால்வரும் கடமையைச் செய்வதைத் தடுப்பதற்காக மேலும் இரு படையணிகள் தருவிக்கப்பட்டிருந்தன. இது சில வெளிநாட்டுத் தூதரகங்கள் உட்பட பொதுமக்கள் மத்தியில் பரிகாசமான நிலையை ஏற்படுத்தியது. எனது ரெஜிமென்டைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள் என்பதற்காக 4 வருடங்களுக்கு மேலாக பணியாற்றிய படையினரின் விசுவாசத்தை கேள்விக்குறியாக்கும் விடயமாக இது உள்ளது. அத்துடன், மறைமுகமாக என்மீதான அவநம்பிக்கையை பிரதிபலிப்பதாகவும் இது காணப்பட்டது. அல்லது எனது நடமாட்டங்கள், என்னிடம் வரும் விருந்தாளிகளை கண்காணிப்பதற்காக கரிசனையுள்ளவர்கள் விரும்புகின்றார்களா என்பதாகவும் இது அமைந்திருப்பதுடன் என்மீதான சந்தேகத்தின் வெளிப்பாடாகவும் காணப்பட்டது.

10. பாதுகாப்பு அமைச்சின் கட்டிடத் தொகுதிக்கு கஜபா ரெஜிமென்டைச் சேர்ந்த படையினர் பாதுகாப்புச் செயலாளரின் அறிவுறுத்தலின் பேரில் தருவிக்கப்பட்டிருந்தனர். இது இராணுவத்தின் மத்தியிலான விசுவாசத்தை பிளவு படுத்துவதாக உள்ளது. அத்துடன், இராணுவம் தற்போது அரசியல் மயமாக்கப்பட்டிருக்கின்றதா என்று நம்புவதற்கான காரணங்களையும் கொண்டதாகக் காணப்படுகிறது.

11. எமது நாட்டின் வரலாற்றை மாற்றியமைப்பதற்கு அரசாங்கத்திற்கு தனிப்பட்ட முறையில் நான் பங்களிப்பை மேற்கொண்டிருந்தபோதிலும் என்னைத் துரோகியாக அடையாளப்படுத்துவதற்கு இட்டுச் செல்லும் வகையில் அரசாங்கத்தின் பல சிரேஷ்ட அரசியல்வாதிகள் உட்பட ஆர்வம்கொண்ட தரப்பினரால் வதந்திகளும் செய்திகளும் தரக்குறைவானவிதத்தில் வெளியிடப்பட்டன.

12. நாட்டில் நான் இல்லாத சமயம் பதில் கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டிருக்கவில்லை. இது கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி நியமனமானது அரசாங்கத்திற்கும் தேசிய பாதுகாப்பு சபைக்கும் முக்கியமற்றதாக இருப்பதைப் புலப்படுத்துகிறது. இந்தப் பதவி முக்கியமானதாக இருந்திருந்தால் பதிலுக்கு அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டிருத்தல் வேண்டும். இதன் மூலம் முக்கியமற்ற ஒரு நியமனம் வழங்கப்பட்டிருக்கின்றது என்ற அபிப்பிராயம் எனக்கு ஏற்பட்டிருந்தது. சாதாரண இராணுவத்தை நான் அதிகபட்ச தொழில்சார் நிபுணத்துவம் கொண்டதாக மாற்றியிருந்தேன். கடந்த இரண்டு மாதங்களில் ஆட்திரட்டல்களிலும் பார்க்க விட்டுவிலகிய உறுப்பினர்களின் தொகை அதிகமாகும்.

13. இடம்பெயர்ந்தவர்களின் நிலைமை எனக்கு மிகவும் கவலையை ஏற்படுத்தும் விடயமாகும். விடுதலைப் புலிகளின் குரூரத்தனத்திலிருந்து இந்த துரதிர்ஷ்டமான பொதுமக்களை விடுவிப்பதற்கு ஆயிரக்கணக்கான படைவீரர்கள் தங்கள் பெறுமதியான உயிர்களை தியாகம் செய்திருந்தனர். சுதந்திரம், ஜனநாயகமான சூழலில் அந்த மக்கள் வசிப்பதற்காக அவர்கள் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்தனர். இன்றுவரை அவர்கள் தொடர்ந்தும் துன்பமான நிலைமையிலேயே வாழ்கின்றனர். அரசாங்கத் தரப்பில் பொருத்தமான திட்டம் இல்லாமையால் இந்த நிலைமையில் அவர்கள் உள்ளனர். இடம்பெயர்ந்த மக்களுக்கு நாட்டில் எல்லாப் பகுதியிலும் நண்பர்களும் உறவினர்களும் உள்ளனர். அவர்களுடன் சென்று வாழ்வதற்கான தெரிவை அவர்களுக்கு வழங்கியிருக்க வேண்டியது அவசியமாகும். அவர்களின் பகுதிகளிலுள்ள கண்ணிவெடிகளை அகற்றுதல் உரிய முறையில் மேற்கொள்ளப்படும் வரை அவர்கள் உறவினர்கள், நண்பர்களுடன் சென்று வாழ்வதற்கு அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும்.

14. எனது தலைமைத்துவத்தின் கீழ் இராணுவம் யுத்தத்தில் வெற்றிபெற்றிருக்கின்றது என்பது நிதர்சனமாகும். ஆனால், தங்களின் அரசாங்கம் இன்னமும் சமாதானத்தை வென்றெடுக்கவில்லை. தமிழ் மக்களின் மனதை வென்றெடுப்பதற்கான தெளிவான கொள்கையில்லை. இது நிச்சயம் வெற்றியை அழித்துவிடும். எதிர்காலத்தில் மற்றொரு புரட்சி ஏற்படுவதற்கு இது வழிசமைத்துவிடும்.

15. யுத்தம் முடிவடைந்து விட்டதால் சமாதானம் முழு நாட்டிற்கும் கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்டது. அது இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை. மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்துள்ளன. அதேசமயம், ஊழலும் விரயமும் அபரிமிதமான அளவைத் தாண்டியுள்ளன. ஊடக சுதந்திரமும் ஏனைய ஜனநாயக உரிமைகளும் தொடர்ந்து தடுக்கப்பட்டுள்ளன. யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர இராணுவம் செய்த பல தியாகங்கள் பயனற்றுப் போய்விடக்கூடாது. எமது தாய்நாட்டுக்கு சமாதானத்தையும் சுபீட்சத்தையும் நாம் கொண்டுவந்து புதிய சகாப்தத்தை ஏற்படுத்த வேண்டுமானால் இராணுவம் செய்த தியாகம் வீணாகிப் போகக் கூடாது.

இராணுவ சதிப்புரட்சி அச்சத்தால் தவறாக வழிநடத்தப்பட்ட ஜனாதிபதி – பதவி விலகல் கடிதத்தில் ஜெனரல் பொன்சேகா

இராணுவ சதிப்புரட்சியை ஆரம்பித்து விடக்கூடுமென்ற அச்சத்தினாலேயே தான் ஓரங்கட்டப்பட்டதாக பதவிவிலகல் கடிதத்தில் கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரியான ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்திருக்கிறார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் தேர்தலில் மோதுவார் என எதிர்பார்க்கப்படும் ஜெனரல் சரத்பொன்சேகா தான் ஓய்வுபெறுவதாக அறிவித்து எழுதிய கடிதம் ஏ.எவ்.பி.செய்திச் சேவை மற்றும் இணையத்தளங்களில் நேற்று வெள்ளிக்கிழமை பிரசுரிக்கப்பட்டிருந்தது.  யுத்தத்தில் வெற்றிபெற்ற பின்னரும் சமாதானத்தை வென்றெடுக்கும் ஆற்றலின்றி அரசாங்கம் இருக்கின்றதென்ற குற்றச்சாட்டுடன் ஊழல் மோசடி, வீண்விரயங்கள் உட்பட பல்வேறு பின்னடைவுகள் தொடர்பாக ஜெனரல் பொன்சேகா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் கடுமையான விமர்சனங்களைத் தெரிவித்திருக்கிறார்.
 
ஜெனரல் பொன்சேகாவின் கடிதமானது யுத்தம் முடிவடைந்த பின்னரான பல உள்பக்க நிகழ்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறது. அத்துடன், ஜெனரல் பொன்சேகாவிற்கும் அவருடைய மேலதிகாரிகளுக்குமிடையிலான நம்பிக்கை முழுமையாக இல்லாமல் போயிருப்பதை இந்தக் கடிதம் வெளிப்படுத்துவதாக ஏ.எவ்.பி. செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.  யுத்தத்தில் இராணுவம் ஈட்டிய வெற்றியில் ஜெனரல் பொன்சேகாவின் பங்களிப்பினால் அவர் யுத்த கதாநாயகனாக உள்நாட்டில் கருதப்பட்டார். ஆனால், அக்டோபர் 15 இல் இங்கு (இலங்கையில்) இராணுவ சதிப்புரட்சி ஏற்பட்டால் படையினரை நகர்த்துவதற்கு ஆயத்தமாக இருக்குமாறு அயல்நாடான இந்தியாவிடம் அரசாங்கம் கேட்டிருந்ததாக பொன்சேகா தனது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

“பயங்கரவாதக் குழுவொன்றை தோற்கடிக்கும் ஆற்றலுள்ள தொழில்சார் நிபுணத்துவம் வாய்ந்த திறமையான அமைப்பு என்று இலங்கை இராணுவம் ஈட்டியிருந்த புகழையும் பிரதிமையையும் மழுங்கடிப்பதாக இந்த நடவடிக்கை அமைந்திருப்பதாக ஜெனரல் பொன்சேகா தனது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.  கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி பதவியிலிருந்து நேற்று முன்தினம் வியாழக்கிழமை வெளியேறியிருக்கும் பொன்சேகா அடுத்து வரும் தேசிய தேர்தல்களில் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவுக்கு சவாலாக இருப்பார் என பரந்தளவில் பேசப்படுகிறது. ஓய்வுபெற்றதற்கான அவருடைய திட்டங்கள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் நேரடியாக பதிலளித்திருக்காத போதிலும் எதிரணி வேட்பாளராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக அவர் நிறுத்தப்படுவாரென எதிர்பார்க்கப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

“நிச்சயமாக அவர் அரசியலில் பிரவேசிப்பார், இப்போது இது தவிர்க்க முடியாத நடவடிக்கையாக அமையும் என்று பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான துறை பேராசிரியர் சுமனசிறி லியனகே ஏ.எவ்.பி. செய்திச் சேவைக்குக் கூறியுள்ளார். “குறுகிய கால அடிப்படையில் இது மிகவும் நல்லது. ஏனென்றால், பிரதான எதிரணியை ஒன்று திரட்டுவதற்கு அவர் உதவுகிறார். வலுவான எதிர்க்கட்சியானது ஜனநாயகத்திற்கு சிறப்பானது என்று லியனகே கூறியுள்ளார். பெரும்பான்மை சிங்கள இனத்தைச் சேர்ந்தவரும் தேசியவாதியென அறியப்பட்டவருமான பொன்சேகா சிறுபான்மைத் தமிழருடன் சமாதானத்தை ஏற்படுத்தும் விடயத்தில் ஜனாதிபதி ராஜபக்ஷ தவறிவிட்டதாக விமர்சித்துள்ளார்.

எனது தலைமைத்துவத்தில் கீழ் யுத்தத்தில் இராணுவம் வெற்றியடைந்திருக்கின்ற போதும் தங்களின் அரசாங்கம் இன்னரும் சமாதானத்தை வென்றெடுக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். அத்துடன், தமிழ் மக்களின் மனதை வென்றெடுக்க தெளிவான கொள்கை கிடையாதென்றும் இது நிச்சயமாக ஈட்டிய வெற்றியை அழித்துவிடுமென்றும் எதிர்காலத்தில் மற்றொரு கிளர்ச்சி ஏற்பட வழிசமைத்துவிடுமென்று ஜெனரல் பொன்சேகா விமர்சித்திருக்கிறார்.
யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின் போது உயிர்தப்பி முகாம்களில் வைக்கப்பட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்களை முகாம்களில் தொடர்ந்து வைத்திருப்பதற்கு அவர் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்.  யுத்தம் முடிவடைந்த பின்னர் தனது அதிகாரம் தொடர்பாக அரசாங்கம் அச்சமடைந்திருப்பதாக தனது இராஜிநாமாக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதுடன், இதனாலேயே தமக்கு வெறும் வைபவரீதியான பதவி வழங்கப்பட்டதாக கூறியுள்ளார். அதிகாரத்துடனான தலைமைப் பொறுப்பை அரசு எனக்கு வழங்குவதற்கு விருப்பமின்றி இருந்தது அதுவே, என்மீது அவநம்பிக்கை கொண்டிருக்கின்றது என்பதை நான் நம்புவதற்கு வழி சமைத்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.  இராணுவத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவு வைபவம் வரை தான் இராணுவத் தளபதி பதவியிலிருக்க நான் விரும்பியிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.  சதிப்புரட்சி தொடர்பான பயப்பிராந்தியானது பாதுகாப்பு வட்டாரங்கள் மத்தியில் நன்கு தெரிந்த விடயமாக இருந்ததாகவும் அவர் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார். இலங்கையானது இராணுவ சதிப்புரட்சி இடம்பெற்ற வரலாற்றைக் கொண்டிருக்கவில்லை. ஆனால், 1960 முற்பகுதிகளில் முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டு முறியடிக்கப்பட்டது.

Show More
Leave a Reply to T Sothilingam Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

9 Comments

  • appu hammy
    appu hammy

    Respected General, no doubt you are in the confused group now. Don’t worry the president will release you immediately, instantly!You can start the campaign right now…..don’t waste time go ahead! Be assured that there won’t be cheers everywhere you go like before but jeers too. Now you are a politician – in the dirtiest game on earth. Good luck.

    Reply
  • Sarath Premasiri
    Sarath Premasiri

    Do we have to believe everything that a politician tells? Only a couple of weeks ago Mr. Tharoor got a spanking from the Congress leadership for his inflammatory statement that he would travel in “cattle class out of solidarity with all our holy cows”. I hope the statement on Army Alert too wont receive similar treatment. Whether Mr. Tharoor believes it or not, most Lankans believe the words of their gallant soldier, Gen. Sarath Fonseka.

    Reply
  • Thaksan
    Thaksan

    சரத் பொன்சேகாவுக்குள்ள என்ன ஆசை இருக்கு எண்டு புரியாத உங்களுக்கு அவரின் இரத்தத்தில ஊறி இருக்கிற இனவாதத்தை புரிய முடியுமா? சரத்தின்ர அண்ணர் ஒருவர் நீர்ப்பாசன இலாகாவில வேலை செய்தவர். அவர் அம்பாறையில வேலை செய்தபோது அவருக்கு தமிழ் சக ஊழியர் ஒருவர் நல்ல நண்பனாக இருந்திருக்கிறார். இருவரும் ஒருவரின் குவார்டர்ஸில் ஒருவர் தங்குவதும் ஒன்றாக சமைத்து சாப்பிடுவதும் வழமையாம். எப்பவாவது சரத் பொன்சேகா அவரின் அண்ணரின் குவார்டஸூக்கு வருவதுண்டாம். இது 1980களில். அந்த நேரத்தில் அந்த தமிழ் நண்பருக்கு சரத்தின் அண்ணர் சொல்வாராம் அவனுக்கு(சரத்துக்கு) தமிழனெண்டாலே பிடிக்காது.> அவன் வாற நேரத்தில் நீ என்ர குவாட்டசுக்கு வாராத எண்டு. அந்த தமிழ் அரச ஊழியர் அச்சுவேலியை சேர்ந்தவர். இப்ப அவருக்கு வயசு 70 ஆகுது. சரத் பொன்சேகா>
    சிறீலங்கா சிங்களவர்களின் நாடு: தமிழர்கள் வேண்டுமென்றால் ஒரு பகுதியில் வாழ்ந்துவிட்டு போகட்டும். ஆனால் உரிமை உழவாரம் எண்டு எதுவும் கதைக்கப்படாது எண்டு பேட்டி(கிளிநொச்சி பிடிபட்டவுடன்) கொடுத்தது அவெரின்ர துவேச உணர்வுக்கு ஒரு சின்ன உதாரணம்.

    Reply
  • மாயா
    மாயா

    // சரத் பொன்சேகா> சிறீலங்கா சிங்களவர்களின் நாடு: தமிழர்கள் வேண்டுமென்றால் ஒரு பகுதியில் வாழ்ந்துவிட்டு போகட்டும். ஆனால் உரிமை உழவாரம் எண்டு எதுவும் கதைக்கப்படாது எண்டு பேட்டி(கிளிநொச்சி பிடிபட்டவுடன்) கொடுத்தது அவெரின்ர துவேச உணர்வுக்கு ஒரு சின்ன உதாரணம்.- Thaksan //

    இவரை ஜனாதிபதியாக்கத் துடிக்கும் ரணில் மற்றும் கூட்டத்தை விட , மகிந்த எவ்வளவோ மேல். அதை நம்ம சனம் விளங்கினால் நல்லது. “மகிந்த, யதார்த்தவாதி” இதை நான் சொல்லயில்ல நம்ம தேசியத் தலைவர் சொன்னது. தேசியத் தலைவரா? யாரது என்று கேட்கிறது எனக்கு கேட்குது? எனக்கு அப்பவே தெரியும் நம்ம சனம் அப்படித்தான் என்று?

    Reply
  • T Sothilingam
    T Sothilingam

    மாயா தக்சன் சொன்னதில் என்ன தவறு உள்ளது. சரத்பொன்சேகா தான் இராணவ வெற்றி பெற்றதும் வெளியிட்ட இந்த அறிக்கை எவ்வளவு தூரம் தமிழர்ளை கீழ்த்தரமாக்கியது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அன்று யுஎன்பி போர் என்றால் போர் என்று ஜே ஆர் விட்ட அறிக்கைக்கும் பாரிய வித்தியாசம் இல்லை. இந்த பெரும்பான்மை அரசியல் கட்சிகளில் எமது தமிழர்களின் உரிமைப்போர் விடயத்தில் என்றுமே உடன்பாடு கொண்டவர்கள் அல்ல. யுஎன்பி ஓம் என்று இன்று சொல்லுகிறார்கள் பிறகு என்ன செய்வார்கள் என்று நிச்சயமாக சொல்ல முடியம் இவர்களும் தமிழர்க்கு எதிராகவே செயற்ப்படுவார்கள்.

    //இவரை ஜனாதிபதியாக்கத் துடிக்கும் ரணில் மற்றும் கூட்டத்தை விட இ மகிந்த எவ்வளவோ மேல். அதை நம்ம சனம் விளங்கினால் நல்லது. “மகிந்தஇ யதார்த்தவாதி”//மாயா அப்படி என்றால் இன்று கூட மகிந்தா தனது சுதந்திரக்கட்சியின் மாநாட்டில் தமிழர்களது அரசியல் உரிமைகள் பற்றி எதுவுமே பேசாமல் போனது ஏன் இவர் இதைப்பற்றி ஏதும் பேசினால் சிங்கள மக்கள் தனக்கு எதிராகி விடுவார்கள் என்றா? அல்லது ரனில் சரத் தனக்கு எதிராக இலகுவாக இயங்குவார்கள் என்றா? அல்லது தமிழர்களை இப்படியே பேய்க்காட்டலாம் என்றா?

    இன்று மகிந்தா யதாரத்தவாதியாக இருந்திருந்தால் புலிகளை அழித்த உடனேயே தமிழர்களின் அரசியல் உரிமைகள் பற்றியும் அதற்கான தீர்வு பற்றியும் பேசியிருக்கலாம். யதார்த்தவாதி உண்மையயை மக்களுக்கு தெரிவித்து சிங்கள மக்களுக்கு தெரிவித்து தமிழர்களின் அரசியல் உரிமைகளை அதிகாரப் பரவலாக்கத்தை செய்ய வேண்டிய அவசியத்தை நேரடியாக பேச ஆரம்பித்திருப்பார் இன்றும் இதை செய்யாதது இந்த சு.க/யுஎன்பி யினரின் பழைய பல்லவிக்கே இது மீண்டும் வழிவகுக்கிறது போல் உங்களுக்கு தெரியவில்லையா?

    இந்தளவுக்கு அதிகாரங்களுடன் உள்ள மகிந்தா ஏன் இதைசெய்ய தவறுகிறார்? இலங்கை அரசை தமிழர்களின் அதிகாரப்பரவலாக்கத்தை செய்ய வைக்கும் வழிவகைகள் என்ன? நான் நினைக்கிறேன் இலங்கை இந்திய ஒப்பந்தத்ததை மீண்டும் எமது பிரதேச சுயாட்சிக்கு தீர்வாக முன்வைப்பதே சரி காரணம் இலங்கையில் இனக்குரோதத்தை வளர்த்து அதில் தமது அரசியல் இலாபம் ஈட்டுவதே இந்த பெரிய இரு கட்சிகளினதும் வரலாறு அது வேறு ஒருவகையில் இன்று மீண்டும் அரங்கேறுகிறது.

    குறைந்தபட்சம் இவர்கள் தமிழர்களின் தாயகம் வட-கிழக்கு என்றும் அந்த மக்களுக்கு தமதுபாரம்பரிய பிரதேசத்தை தாமாக நிர்வகிக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற இலங்கை அரசு ஏற்றுக் கொண்டதை இவர்கள் திட்டமிட்டு குழப்புவதை நிறுத்த வேண்டும்.

    Reply
  • மாயா
    மாயா

    சோதிலிங்கம், தக்சன் சொன்னது சரியென்றே சொன்னேன். மகிந்தவுக்கு தமிழர் பிரச்சனையைத் தீர்ப்பதை விட, பெரிய பிரச்சனை தமது எதிர் கால அரசியலை தக்க வைத்துக் கொள்வது. இன்று அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சில ரணிலின் யூஎன்பி, ஆட்சிக்கு வருவதை விரும்புகின்றன. இந்த யுத்தம் முடிவுக்கு வந்ததில் , இவர்களுக்கு விருப்பம் இல்லையென்றே நினைக்கிறேன். இவர்களது ஆயுதக் கடைகளும், உதவி நிறுவனங்கள் எனும் கொள்ளைக் கோஸ்டிகளும் நஷ்டத்தில் போகத் தொடங்கியுள்ளன. மீண்டும் யூஎன்பியை கொண்டு வந்து , இருக்கும் அமைதியை கெடுப்பதே இவர்களது முக்கிய குறிக்கோள்.

    சுவிஸில் நடைபெறவிருக்கும் தமிழர் கட்சிகளின் ஒன்று கூடல், அரசு நடத்துகிறது என நினைத்தேன். அது யூஎன்பீயால் ஐரோப்பிய நாடுகளின் உதவியோடு நடைபெறுகிறது எனும் தகவல்கள் வெளிவருகின்றன. மகிந்த அரசு, அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு வேண்டாதவர்களது ஒத்துழைப்போடு பல விடங்களை செய்வதில், இவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். இந்தியா, மகிந்தவை காப்பாற்ற முயல்வதாக உணர முடிகிறது.

    அடுத்து, யூஎன்பீயில் யாரை ஜனாதிபதி வேட்பாளராக்குவது? ரணிலையா? சரத் பொண்சேகாவையா? என ஒரு விவாதமே உள்ளே நடக்கிறது. இங்கேயும் பல இழுபறிகள் உள்ளன. ரணில் பொது வேட்பாளர் ஒருவரை தேர்வு செய்பவராக சரத் குறித்து பேசினாலும், இறுதியில் தானே முன்னிற்கும் வாய்ப்புகளே அதிகம் தெரிகிறது. ரணிலும் , 13வது திருத்தச் சட்டத்தை மட்டுமே பேசுகிறார். ரணில் ஆட்சிக்கு வந்து, அடைக்கப்பட்டிருக்கும் போராளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி வெளியே விட்டு, மீண்டும் பழைய குருடி கதவை திறடி வேலையை செய்யலாம் என சிங்களவர்கள் அச்சமடைகிறார்கள்.

    இதற்குள் பொண்சேகாவை தமது கட்சிக்குள் இழுக்க , ஜேவீபியும், யூஎன்பியும் பலத்த இழுபறி போட்டியொன்றை நடக்கிறது. ஜேவீபி மேலத் தேசங்களை எதிர்த்தாலும், மேலைத் தேசங்களே , ஜேவீபீயை வளர்க்க உதவிகளை வழங்குகின்றன என்பது பலரும் தெரிந்திராத உண்மை.

    அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன் , பொதுத் தேர்தல் நடத்தப்படலாம். அதற்காக அனைத்து பலமும் பிரயோகிக்கப்படலாம். அக் காலத்தில் சரத் பொண்சேகாவின் பலம் மற்றும் பலவீனத்தை உணரலாம்.

    தமிழர் வாக்குகள் மகிந்தவுக்கு நினைக்கும் விதத்தில் கிடைக்குமா என்பது கேள்விக் குறியே? அதற்காக மகிந்த, பெரும் பிரயத்தனம் ஒன்றை செய்ய வேண்டும். இது சிங்கள வாக்குகளை சிதறடித்து விடலாம். எனவே இங்கேயும் பாதிப்பு தமிழர்களுக்கேயாகும். எதிர் வரும் தேர்தலில் தமிழர் வாக்குகள் மகிந்தவுக்கு கிடைக்குமானால், அதை நம்பி பல வேலைத் திட்டங்களை முன்னெடுக்கவும் , தமிழருக்கான உரிமைகளை பெறவும் , மகிந்த ஏதாவது செய்ய முயல்வார். இல்லாதவிடத்து , தமது வாக்கு வங்கிக்காக சிங்களவர்களை நாடி எதையாவது செய்ய முயன்றால், தமிழர் பாடு வேதனையாகவேயிருக்கும்.

    இப்போதைய பிரச்சனைக்கு , சரத் பொண்சேகா பேசப் போகும் விடயங்களில் இருந்தே அடுத்த கட்ட அரசியல் நகர்வு தொடங்கும்? படையில் இருப்போரில் அதிகமானவர்கள் , குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அங்கு தேர்தலில் போட்டியிடப் போவதாக முன்னர் அறிவித்த கோட்டாபய ராஜபக்ஸ, தான் அரசியலி்ல் இறங்கப் போவதில்லை எனும் முடிவுக்கு வந்துள்ளதாக, தற்போது அறிய முடிகிறது.

    இனிவரும் தேர்தல்களில் தமிழர் வாக்குகள் , இலங்கை அரசியலில் பெரும் மாற்றங்களை கொண்டு வரும். இருந்தாலும் , தமிழர்களில் சரியான ஒரு நம்பகமான தலைமையில்லாத நிலை காணப்படுகிறது. இதே நிலை யூஎன்பீயிலும் உள்ளது.

    சரத் பொண்சேகா இன்று படையை விட்டு வெளியேறிய தருணத்தில் , ஏனைய படைத் தலைமைகள் கலந்து கொள்ளவில்லை என்பது கவனத்தில் கொள்ளபட வேண்டும். தனது இராணுவ சீருடையை அகற்றிய 48 மணி நேரத்துக்குள் , சாதாரண மனிதனாக தனது கருத்தை வெளியிடுவதாக சரத் தெரிவித்து விடை பெற்றுள்ளார்.

    48 மணி நேரத்துள் என்ன வரும்?

    Reply
  • palli
    palli

    சோதி அறிக்கையும் நடை முறையும் ஒன்றல்ல, அறிக்கை என்பது யார் வேண்டுமானாலும் எப்போ வேண்டுமானாலும் கொடுக்கலாம்; ஆனால் நடைமுறையில் பல சிக்கல் உண்டு, உதாரனத்துக்கு அமெரிக்காவின் போர் குற்ற நடவெடிக்கைகளுக்கு எதிராய் அண்ணன் தம்பி அறிக்கையை கவனியுங்கள், ஆனால் பொன்சேகரா அமெரிக்காவில் விசாரிக்கபடுகிறார் என்பதும் ஓடி வந்துவிடு ஓடி வந்துவிடு என அதே குடும்பம் ஆகாயத்தை பார்த்த வண்ணம் இருந்தது பலகாலம் அல்ல, அதுபோல் எம் தலமைகளையும் எடுத்து காட்ட முடியும்;

    சேகரா எமக்கு இப்போது தேவை, காரனம் அனைத்து அதிகாரங்களுடனும் அடங்கதனமாய் ஓடும் மகிந்தா குடும்பத்துக்கு ஒரு வேகதடை சேகரா, அவரா இவரா என்பதை சிங்கள மக்களே முடிவு செய்வார், அதுக்கு எமக்கு பலமோ அல்லது ஒற்றுமையோ கிடையாது, ஆனால் சிங்கள அரசு எமது தலமைகளை வைத்து எமது பல்லை குத்துவது போல்; நாமும் சேகராவின் வரவை வைத்து மகிந்தாவுடன் அரசியல் பேரம் பேசலாம்; பேசுவோம்; பேச வைப்போம்; சேகரா வாருங்கள்; ஆனால் தமிழ் மக்களை நீங்கள் வழம்பெற செய்ய மாட்டீர்கள் என்பது எமக்கு தெரிந்தும் உங்களை வரவேற்க்கிறோம்:

    Reply
  • குகபிரசாதம்
    குகபிரசாதம்

    சரத் பொன்சேகாவின் மகள் அப்சராவின் கணவன் தனுன திலகரத்நேயின் ஹைகோப் நிறுவனம் தான் இலங்கை ராணுவத்திற்கு கடந்த மூன்று வருடங்களாக பாகிஸ்தானில் இருந்து நூற்றுகணக்கான மில்லியன் டாலர்களுக்கு துப்பாக்கி ரவை முதல் பீரங்கி குண்டுகள் மலேசியாவில் இருந்து ராணுவத்தினருக்கான உலர் உணவுகள் போன்றவற்றை விநியோகித்து வந்தது குறிபிடத்தக்கது.

    சரத் பொன்சேகா மீது ஏற்கனவே பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன

    Reply
  • குகபிரசாதம்
    குகபிரசாதம்

    சரத் பொன்சேகாவின் மருமகனின் நிறுவனத்திற்கு இலங்கை ராணுவத்திற்கு ஆயுத தளபாட வழங்குவதற்கான அனுமதி கிடைத்த பொது அந்த நிறுவனத்திற்கு ஒரு அலுவலகமோ அன்றி முன்னர் இத்தகைய ராணுவ தளபாட விநியோகம் செய்த அனுபவமோ இருக்கவில்லை

    Reply