முல்லைத் தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச பாடசாலைகள் இன்று (09) முதல் மீண்டும் இயங்க உள்ளதாக முல்லைத்தீவு அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார். முதலில் யோகபுரம் மகா வித்தியாலயம் ஆயிரம் மாணவர்களுடனும் 16 ஆசிரியர்களுடனும் இன்று ஆரம்பமாகின்றது. துணுக்காயிலிருந்து இடம்பெயர்ந்த மக்களின் 50 வீதமானவர்கள் அங்கு மீள குடியேற்றப்பட்டுள்ளதாகவும் அரச அதிபர் தெரிவித்தார்.
அவர்களுக்கு 6 மாதங்களுக்குத் தேவையான உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளதோடு, முதலில் இரு வாரங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இது தவிர சமையல் உபகரணங்கள், தற்காலிக வீடுகள் அமைக்கத் தேவையான பொருட்கள், விவசாயம் செய்யத் தேவையான உபகரணங்கள் என்பனவும் வழங்கப்படவுள்ளன.
பாடசாலைகளை ஆரம்பிக்கவும் மாணவர்களுக்குத் தேவையான பாடப் புத்தகங்கள், சீருடைகள் என்பன வழங்கவும் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பாடசாலைகளுக்கு மேலதிக ஆசிரியர்களை பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை துணுக்காயில் 2366 விவசாயிகள் உள்ளதாகவும் அவர்களுக்கு இரண்டு ஏக்கர் விவசாயக் காணியும் ஒரு ஏக்கர் மேட்டு நிலமும் வழங்கப்படவு ள்ளதோடு இந்த வாரம் முதல் விவசாயம் செய்யத் தேவையான உபகரணங்கள், பசளை, விதை நெல் என்பனவும் வழங்கப்பட உள்ளன.
பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள், லக்சதோச என்பனவும் இங்கு ஆரம்பிக்கப்பட உள்ளதோடு, சகல அரச நிறுவனங்களையும் மீண்டும் ஆரம்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச அதிபர் கூறினார்.
மாயா
இன்று கிளிநொச்சியில் 5 பஸ்கள் ஓடுகின்றன. பலநோக்கு கூட்டறவுச் சங்கம் வழி புது சைக்கிள்கள் கொடுக்கப்படுகின்றன. அங்குள்ள நோயாளிகளை வவுனியாவுக்கு கொண்டு வந்து சிகிச்சை அளித்து திருப்பி அழைத்துச் செல்ல , அரசு அம்பியுலன்ஸ்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர் என வன்னியிலிருந்து , வவுனியா மருத்துவ மனைக்கு வந்த மக்கள் தெரிவித்தார்கள். மெதுவான மாற்றங்கள் தொடர்கின்றன…………
BC
//மாயா-மெதுவான மாற்றங்கள் தொடர்கின்றன…//
ஐயோ மாயா!என்ன இது? பிழைப்பில் இவங்கள் மண்ணை போடுறாங்களே!.