மீள் குடியேற்றம் – வன்னியில் முதல் பாடசாலை இன்று ஆரம்பம்

north-governor.jpgநிவாரணக் கிராமங்களிலிருந்து மீள் குடியேற்றப்படும் மாணவர்களுக்கான முதல் பாடசாலை இன்று துணுக்காய் கல்வி வலயத்தில் வடமாகாண ஆளுனரினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

துணுக்காய் கல்வி வலயத்தில் ஆளுனரினால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்ட பாடசாலை யோகபுரம் ம.வி ஆகும்.  இன்றைய தினம் சுமார் 100 மாணவர்கள் பாடசாலைக்குச் சமுகமளித்திருந்ததாக தேசம் நெற்றுக்கு தகவல் கிடைத்துள்ளது. 

Show More
Leave a Reply to gobi Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • Hazan
    Hazan

    இனியெண்டாலும் பிள்ளைபிடிகாரங்களின் பயமில்லாமல் பள்ளிக்குப் போகட்டும்.

    Reply
  • jalpani
    jalpani

    500 ஏக்கரில் தாய்ச்சி இராணுவ முகாமும் 50 ஏக்கரில் குட்டி இராணுவ முகாமும் யாருக்காம்?

    Reply
  • குகபிரசாதம்
    குகபிரசாதம்

    யாழ்ப்பாணத்தில் டக்லஸ் விவசாயிகள் மீனவர்கள் வாகன சொந்தக்காரர்கள் எல்லாரிடமும் பணம் அறவிட்டே பொருட்களை சந்தைப்படுத்த அனுமதிக்கிறார் என குடாநாட்டை சேர்ந்த பலரும் சொல்கிறார்கள். இந்த நிலைமை தொடர ராஜபக்சே அனுமதிப்பாரா என்பது ஒருபுறம் இருக்க இந்த காசுபேய்களால் தான் இன்னமும் வடக்கின் வசந்தம் பசிலின் கையில் ஒப்படிக்கப்பட்டிருக்கு. இனிமேல்தான் டக்லஸ் தனது கைங்கரியங்களுக்கான பலனை அனுபவிக்கப் போகிறார்.

    Reply
  • gobi
    gobi

    பிரபாக்கு சொன்னாhகள் செய்த கொடுமைக்க தண்டனையென்று. ஆனால் எத்தனை கைங்கரியங்களை செய்த கருணா என்ன பலனை அனுபவிச்சார்; அமைசரானார். டக்ளஸ் உத்தமரல்ல ஆனால் கருணா போலல்ல.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    குகப்பிரசாதத்தின் பின்னோட்டத்தில் நயவஞ்சக தன்மை பொதிந்திருப்பதை காணலாம். முப்பது வருடங்களுக்கு பிறகு யாழ் ஏதோ ஒரு நிலையில் மாறிவருகிறது.கொலையில்லை இரத்தம் இல்லை. இதைநான் சொல்லவில்லை ஒரு மாதகாலம் யாழ்பாணத்தில் தங்கியிருந்து வந்தவர் சொல்லுகிறார்.
    விவசாயிகள் மீனவர் வாகனச்சொந்தக்காரர் இடம் பணத்தை அறவிடுகிறார். இதுவே குகபிரசாதத்தின் குற்றச்சாட்டு. உண்மையாகவே இருக்கட்டும். முப்பந்தைந்து வருடங்களுக்கு முன்பு திகதி தகப்பன் பெயர் கார்மாதிரி இலக்கம் எல்லவற்றையும் சொல்லக்கூடிய இந்த குகப்பிரசாதம் மீனவர் விவசாயி வாகனசொந்தக்காறன். விபரங்களை கொஞ்சம் கொடுக்கக்கூடாதா? அது வரும்வரை குகப்பிரசாதம் புலிப்பாணியிலான ஒரு மோசடிப் பேர்வழியே!.

    Reply