கொழும்பு காசல் மகப்பேற்று வைத்தியசாலையின் அலுமாரி ஒன்றில் சிசுவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பாக யுவதி ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பாதும்பை பகுதியில் உள்ள வீடொன்றில் பணிப் பெண்ணாக இருந்த போது பிரசவ வலி ஏற்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதாக, சம்பந்தப்பட்ட வீட்டில் உள்ளவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.
17 வயதான இந்த யுவதி 2 வாரங்களுக்கு முன்பு உடப்புஸ்ஸலாவை பகுதியில் இருந்து பாதும்பை பகுதியிலுள்ள குறிப்பிட்ட வீட்டுக்கு பணிப்பெண்ணாக அழைத்து வரப்பட்டதாகப் பொலிசாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே சிசுவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் பாதும்பை பொலிஸார், காசல் மகப்பேற்று மருத்துவ மனைக்கு அழைத்து வரப்பட்டு, இவர் மீது விசாரணை நடத்தப்பட்டதாகவும் பின்னர் இவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.