ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் ஐக்கிய தேசிய முன்னணி

031109unf.jpgஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் பொதுக் கூட்டமைப்பான ஐக்கிய தேசிய முன்னணி இன்று செவ்வாய்க்கிழமை காலை உத்தியோகபூர்வமாக கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டமைப்பில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு, புதிய சிஹல உறுமய உள்ளிட்ட 20 கட்சிகளும், அமைப்புக்களும் கைச்சாத்திட்டுள்ளன. நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் வைத்து முற்பகல் 11.30 மணி வரையிலான சுபநேரத்தில் இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பது உட்பட 10 அம்ச இணக்கப்பாடுகளை கருத்தில் கொண்டே எதிர்க்கட்சிகளின் பொதுக் கூட்டமைப்பான ஐக்கிய தேசிய முன்னணி உருவாக்கப்படுள்ளது. ஐக்கிய தேசிய முன்னணி என்ற இந்த புதிய அரசியல் முன்னணி ஆட்சியமைத்ததன் பின்னர் 180 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகாரத்தை முழுமையாக ரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 Comments

  • குகபிரசாதம்
    குகபிரசாதம்

    ஐந்து மாதத்துக்கு முன் புலிவாலை பிடித்திருந்த மணி கணேசன் இப்ப புலி ஒழித்து நாட்டை காப்பாற்ற கருணாவை பிரித்து பேச்சுவார்த்தைக்கு புலிகளை அழைத்து அவர்களை சோர்வடையச் செய்து கிளிநொச்சியும் முல்லைத்தீவும் படைகள் பிடிக்க யூஎன்பீ தான் காரணம் என்று சொல்கிறார்.
    பதவிக்கும் பணத்துக்கும் பல்டி அடிப்பதில் எங்களை யாரும் வெல்ல முடியுமோ???

    Reply
  • மாயா
    மாயா

    மகிந்தவின் ஆட்சியில், வன்னி புலிகள் அழிவு இத்தோடு நின்றது. இதே சந்திரிகா, ரணில் ஆட்சியாக இருந்தால் கட்டுப்பாடே இல்லாமல், இராணுவம் தான் நினைத்த மாதிரி இன்னும் அழிவுகள் அதிகமாகியிருக்கும்.

    கோட்டாபாயவின் கட்டுபாடு காரணமாக இராணுவம் ஒரு அளவோடு நின்று கொண்டது. அது தன் சகோதரனை காக்க வேண்டியதால். அதுவே சந்திரிகா – ரணில் காலத்தில் நடந்திருந்தால் இவர்களால் இராணுவத்தை கட்டுப்படுத்தியே இருக்க முடியாது. அது ஒட்டு மொத்த தமிழினத்தைம் அழித்திருக்கும். இதே ஐதேக காலத்தில்தான் (1983) பயங்கர இனக் கலவரம் உண்டானது. அதுபோல அதன் பின்னர் இல்லை. அதை யாரும் மறக்கலாகாது.

    Reply
  • குகபிரசாதம்
    குகபிரசாதம்

    இன்றை வரையான நீண்ட அரசியல் வாழ்க்கையில் எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க பொதுசன ஐக்கிய மக்கள் முன்னணியினால் தமிழ் மக்களின் நியாயமான அரசியல் உரிமைகளைப் பிரதிபலிக்கும் வண்ணமாக முன்வைக்கப்பட்ட அரசியல் தீர்வுப்பொதியை (03.08.2000) பாராளுமன்றத்தினுள்ளேயே எரித்த அசிங்கமான அரசியல் வரலாறு அவருக்குண்டு. அதற்கு மேலாக 1983ம் ஆண்டில் அரசாங்க ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்கெதிரான இனக்கலவரத்தில் ரணிலுக்கும் பங்கிருந்ததை யாராலும் மறுக்க முடியாது.

    அன்றைய காலகட்டத்தில் ரணில் அரசாங்கத்தின் ஒரு பலமிக்க அமைச்சராக இருந்தது மாத்திரமன்றி, அவரது மாமனாரான ஜே.ஆர்;. ஜயவர்த்தனதான் அன்றைக்கு நாட்டின் நிறைவேற்றதிகாரம் மிக்க ஜனாதிபதியாக இருந்தார். அப்படியான கட்டத்தில் ரணில் ஒரு சாதாரண தலையீட்டைச் செய்திருந்தாலே அந்தக் கலவரத்தை தடுத்து நிறுத்தியிருக்க முடியும். ஆனால் அவர் அதனைச் செய்யவில்லை. தமிழ் மக்களின் அவலங்களையும், படுகொலைகளையும் பார்த்துக்கொண்டு மௌனமாக இருந்தார்.

    அதற்கு முன்பு 1981ம் ஆண்டு நடைபெற்ற யாழ். மாவட்ட சபைத்தேர்தலின் போது தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் உரிமைக்கு வேட்டு வைக்கும் விதமான அராஜகத்தைக் கட்டவிழ்த்து விட்டது ரணிலும் அமைச்சராகச் செயற்பட்ட அதே அரசாங்கம்தான். ரணில் போன்றோரின் பலமான ஆதரவுடேனேயே யாழ்ப்பாணப் பொதுநூலகம் தீயிட்டு எரிக்கப்பட்டது. மேற்கண்ட செயற்பாடுகளில் ரணிலின் பங்களிப்பு இல்லாதிருந்தால் அவற்றைக் கண்டித்து ஒரு வார்த்தை தானும் வெளியிட்டிருப்பார். ஆனால் அப்படிச்செய்யவில்லையே.

    ரணில் அமைச்சுப் பதவி வகித்த அரசாங்கத்தின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட 1983ம் ஆண்டின் ஆடிக் கலவரத்தில் பாதிக்கபட்ட மக்களுக்கான நஷ்டஈட்டை வழங்குவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதான் நடவடிக்கை எடுத்தார். அதற்கு முன்பு கலவரத்தின் பின் சுமார் 11 வருடங்கள் ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அப்படியான செயற்பாடுகள் எதனையும் முன்னெடுக்கவில்லை. அதிலும் அந்தக் காலகட்டத்தில் ரணில் இரண்டு வருடங்கள் மட்டில் பிரதமராகவும் இருந்திருக்கின்றார். அந்த வகையில் மனப்பூர்வமான தேவைப்பாடு இருந்திருந்தால் அவரால் அதனைச் செய்திருக்க முடியும்.

    அதுமட்டுமன்றி 1977ம் ஆண்டு ரணில் அங்கம்வகித்த ஐ.தே.கட்சியினர் ஆட்சி அமைத்ததன் பின்னரான (1993) வரையான காலத்தில் வரலாற்றில் தமிழ் மக்கள் மறக்கமுடியாதவாறான (1977, 1981, 1983 ) ஆகிய மூன்று பாரிய இனக்கலவரங்களை ஏற்படுத்தி நாட்டில் வாழ்ந்த தமிழ் மக்களை பயங்கரவாதிகளான ஆயுதக்குழுவினரின் பின்னால் அணிதிரள்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தவர்களும் ஐக்கிய தேசியக் கட்சியினரே என்பதனை தமிழ் மக்கள் இலகுவில் மறந்துவிட முடியாது.

    இந்நிலையில் பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சி அமைத்ததன் பின்னரேயே இலங்கையில் இனக்கலவரம் என்னும் கொடிய நடவடிக்கைகள் இல்லாதொழிக்கப்பட்டது என்பதனை தமிழ்மக்கள் மறுக்கமுடியாது

    1983ம் ஆண்டின் ஆடிக் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நஷ்டஈடு வழங்கி வைத்ததுமன்றி அதன் போது வீடிழந்த மக்களுக்கென அருணோதய வீடமைப்புத்திட்டத்தின் கீழ் சீத்தாவக்கபுர மற்றும் கல்கிஸ்ஸையின் படோவிற்றை பிரதேசங்களில் வீடமைப்புத்திட்டங்களை ஏற்படுத்திக் கொடுப்பது வரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மக்கள் மீதான தனது தனிப்பட்ட கரிசனையை வெளிப்படுத்தியுள்ளார்.
    குருநகரிலுள்ள தேவாலயம் ஐக்கிய தேசியக் கட்சியினரின் ஆட்சியின்போது (05.04.1993) விமானத் தாக்குதல்மூலம் சேதமாக்கப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியினரின் ஆட்சிக்காலத்தின்போது குருநகரில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாம் தமிழ் இளைஞர்களுக்கான பாரிய சித்திரவதை முகாமாக செயற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

    ரணில் பலமிக்க அமைச்சராக இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் தான் வடக்கு-தெற்கின் உறவுப் பாலமாக விளங்கிய யாழ்.தேவி புகையிரதப் பயணத்தை அரசாங்கம் இடைநிறுத்தியது. அதே காலகட்டத்தில் கல்வி அமைச்சராக விளங்கிய ரணில் விக்கிரமசிங்க தமிழ்ப் பிரதேச கல்வி வளர்ச்சிக்கென எதுவித சேவையும் ஆற்றியிருக்கவில்லை. குறைந்த பட்சம் தமிழ் மாணவரின் கல்வி நிலை குறித்த கலந்துரையாடல் ஒன்றைக் கூட நடாத்தியிருக்கவில்லை. மேலும் முன்னாள் ஜனாதிபதி டீ.பீ.விஜேதுங்க தமிழ் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மைச் சமூகங்களை மரத்தைச் சுற்றிப்படரும் கொடிக்கு ஒப்பிட்டுப் பேசிய காலகட்டத்தில் ரணில் பிரதமர் பதவியை வகித்துக் கொண்டிருந்தார். அன்றைய காலகட்டத்தில் அது பற்றி ஒரு வார்த்தை கூட அவர் மறுதலித்துப் பேசியதில்லை. அதிலிருந்தே அவரும் அவ்வாறான ஒரு கருத்தை ஆமோதிக்கின்றார் என்பதாகத் தானே அர்த்தப்படுகின்றது?

    ரணில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக பதவியேற்கும் வரை ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பதவிகளுள் ஒன்றுக்கு தமிழ் இனத்தவர் ஒருவரை நியமிக்கும் வழக்கம் இருந்து வந்தது. ரணில் பதவியேற்கும் காலத்தில் கட்சியின் பொருளாளராகச் செயற்பட்டவர் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் நகரபிதாவான கே.கணேசலிங்கம் ஆவார். ஆனால் ரணில் கட்சித் தலைமையை ஏற்றபின் கணேசலிங்கம் ஒதுக்கப்பட்டார். கடைசியில் அவர் மனம் வெறுத்து, கட்சியை விட்டே விலகி பொதுசன ஐக்கிய முன்னணியில் இணைந்து கொண்டார்.

    Reply
  • குகபிரசாதம்
    குகபிரசாதம்

    இலங்கை பாராளுமன்ற ஹன்சார்ட் ஆகஸ்ட் 05, 1956 அத்தியாயம் 31 பகுதி 1971 பிரதமர் பண்டாரநாயக்கே ஆற்றிய உரையில் ஒரு பகுதி

    “டிசம்பர் 1960க்கு பிறகு தனி சிங்கள சட்டம் அமுலுக்கு வரும். அப்போது தமிழ் மொழி பேசுவோர் தமிழில் தொடர்பு கொள்ளக்கூடியதாக இருக்கும். ஆனால் அரசகரும மொழியாக சிங்களம் இருக்கும். தமிழ் மொழி மட்டுமே தெரிந்தவர்களுக்கு தமிழில் மொழி பெயர்ப்பு வழங்கப்படும. இதில் என்ன தவறு இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை”

    ஐக்கிய தேசியக்கட்சியின் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவே 1944ல் இலங்கை சட்டசபையில், இலங்கையின் ஆட்சிமொழியாக சிங்களம் மட்டுமே இருக்கு வேண்டுமென்ற தீர்மானத்தை முதன்முதலில் கொண்டுவந்தவர். அத்துடன் 1952 பொதுத்தேர்தலுககு முன்பதாக களனியில் நடைபெற்ற ஐக்கிய தேசியக்கட்சி தேசிய மாநாட்டில் ;சிங்களம் மட்டும்’ தீர்மானத்தை ஜே.ஆர். ஜெயவர்த்தன முன்மொழிந்து ஏகமனதாக நிறைவேற்றியவர் . 1956ல் பண்டாரநாயக்க அரசு தனிச்சிங்களச் சட்டத்தை பாராளுமன்றத்தில் கொண்டுவந்தபோது ஐக்கிய தேசியக்கட்சி அதை மறுப்பேதுமின்றி பூரணமாக ஆதரித்தே வாக்களித்தது. தமிழ் மக்களுக்கு வடக்கு கிழக்கு பிரதேசங்களில் அதிகாரங்களை வழங்கும் பொருட்டும், அங்கு தமிழை ஆட்சி மொழியாக்கும் பொருட்டும் வடக்கு கிழக்கில் பிராந்திய சபைகள் அமைக்கும் ஒப்பந்தம் ஒன்றை பிரதமர் பண்டாரநாயக்கே ஏற்படுத்தினார். அந்த ‘பண்டா – செல்வா ஒப்பந்தத்தை’ அமுல்படுத்தவிடாமல், ஜே.ஆர்.ஜெயவர்த்தன பௌத்த பிக்குகளையும் அழைத்துக் கொண்டு ‘கண்டி யாத்திரை’ சென்று அதை கிழித்தெறிய வைத்தார்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    பல்லி! நீர் நினைக்கிற மாதிரி எனக்கு பெரிய அளவில் இந்த ரகசியங்கள் தெரியாது. 1979 ஆண்டு கடைசிப்பகுதியில் இலங்கைவிட்டு வெளிவந்து விட்டேன். இருந்த காலத்தில் இருந்த தொடர்பு இடதுசாரிகளுடன் தான். இன்றளவும் அதுவே. இது பற்றி எல்லோரிடமும் பயமில்லாமல் கதைப்பேன் ஒருவரின் கதையை உடனடியாக நம்பமாட்டேன். பலரின் கதையோடு சம்பந்தப்படுத்தி பார்த்து எனக்கு சரிப்பட்டதை எடுத்துக் கொள்வேன்.
    பிறந்தஇடம் யாழ்பாணம். பத்துவருடம் வன்னிவாழ்கை. புதுகுடியிருப்பு முத்தையன்கட்டு விசுவமடு ஒட்டிசுட்டான் அக்கராயன்குளம் கனகராயன்குளம் அத்துப்படி. தரைப்பாதை மட்டுமல்ல காட்டுப்பாதையும் தெரியும். கூலி விவசாயிகளுடன் பழகியிருக்கிறேன். சேர்ந்து வாழ்திருக்கிறேன். இன்றுவரைக்கும் அவர்களைப் பற்றியநினைவுதான்.

    வல்வெட்டித்துறையில் குட்டிமணி வீட்டிற்கு போயிருக்கிறேன். அரசியல் விஷயமாக அல்ல. குட்டிமணி அரசியலுக்கு வராதகாலம் அது. பழகுவதற்கு இனிமையாவர். கொஞ்சம் முரட்டு சுபாவம் இருக்கும். உரும்பிராய்கும் தின்னவேலி நீராவியடி இதற்கு இயக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
    75-79 காலப்பகுதிகளில் விடுதலையைச் சொல்லி ஒரு கொள்ளைக் கூட்டம் உருவாகிக் கொண்டிருந்தது. இவர்களில் பலரை எனக்கு தெரியும். அவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டிருக்கிறேன். மற்றும் மற்றும். புரிந்தால்….சரி. நேரகாலம் வந்தால் சொல்லவேண்டியதை சொல்லியே தீருவேன்.
    இந்த கொலையை யார் செய்தது என்று ஆவலாக இருக்கிறீர்? கொலையில்லாத இயக்கம் இருந்தால் அது சந்தனப் பொட்டில்லாத சைவக்காரன். அவன் சுட முன்பு இவன் சுட்டால் அவன் தேசியத்தலைவன். அதுதான் எனக்குத் தெரியும்

    Reply
  • thalaphathy
    thalaphathy

    Dear Friends,
    The comments abuts Mr.குகபிரசாதம் was wrong and against the political history of Sri Lanka.

    Reply
  • Anonymous
    Anonymous

    UNP-SLFP-CP-LSSP-JVP இவர்கள் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பிரவசங்கள். இதில் எது சிறந்தது என்று பார்த்து, ஓட்டுறவாடியே ஒரு இனத்தின் தேசியத் தன்மையை மழுங்கடித்த மாக்களின் கூட்டமாக நாமும் சிந்தித்து கொண்டிருக்கிறோம் என்பது ஒரு வேதனையான விடையம்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    கம்யூனிஸ்கட்சிக்கும் சமசமாஜ கட்சிக்கு ஒரு உலகவரலாறு உண்டு. இந்த கட்சிக்களுக்கு சர்வதேச மாற்றங்களே இலங்கையிலும் பிரதிபலித்தது. அதை காட்டிக்கொடுப்பு என்றும் சொல்லலாம் இலங்கையை தனிமைப்படுத்திப் பார்க்கும் போது. இன்று உலகம் வேறுகட்டத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. பொதுயுடைமைக் கட்சிகள் தமது இழந்த தகமைகளை மீளப்பெற்றுக் கொள்ளும். உலகத்தொழிலாளர் வர்க்கம்
    “தனியொருநாட்டில் சோசலிஸம்” என்ற வரட்டுதத்துவத்தை புரிந்து கொள்ளும். இந்த மாற்றம் இலங்கையிலும் வராமல் எப்படிப்போகும்?. காத்திருங்கள்…
    இனவெறிக்கும் மதவெறிக்கும் யுத்தத்திற்கும் எதிராக குரல் கொடுங்கள். தமிழ்நாட்டிலும் புலம்பெயர்நாட்டிலும் சிலசக்திகள் குறிப்பாக பழ.நெடுமாறன் வை.கோபாலாமி போன்றோர் முழு சிங்களமக்களையும் சிண்டு முடிகிற கைங்கரியங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். இது இறுதியில் முழுஇலங்கையும் வல்லாதிக்க சக்திகளுக்கு தாரைவார்ப்பதிலேயே கொண்டுபோய்விடும் என்பதை மறந்து விடாதீர்கள்.

    Reply