தமிழர் பிரச்சினையில் கருணாநிதிக்கு உறுதியான நிலைப்பாடு இல்லை – சிவத்தம்பி

24prof-karthgesu.jpgஇலங்கைத் தமிழர் பிரச்சினையில் முதல்வர் கருணாநிதியிடம் உறுதியான நிலைப்பாடு இல்லை. அவர் மீது புலம் பெயர்ந்த தமிழர்கள்  அதிருப்தியுடன் உள்ளனர் என்று ஈழத் தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில்,

இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதியின் போக்குக் குறித்து தமிழ் மக்கள்  அதிருப்தி அடைந்துள்ளனர். குறிப்பாக, புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களிடையே பலத்த எதிர்ப்பை இது தோற்றுவித்துள்ளது.

நான் இம் மாநாட்டில் கலந்து கொள்வது குறித்து தீர்மானிக்க கால அவகாசம் உள்ளது. மாநாட்டில் நான் கலந்து கொண்டால் இலங்கைத் தமிழர்  பிரச்சினை பற்றியும் தமிழக முதல்வருடன் விவாதிப்பேன். மாநாட்டில் நான் கலந்து கொள்வேன் என்று தமிழக முதல்வர்  அறிவித்துள்ளார். ஆனால் அவர் என்னுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு இது தொடர்பாக எதுவும் பேசவில்லை. கலந்து கொள்ள வேண்டும் என்று எனக்கு அழைப்பு கிடைத்துள்ளது என்றார் சிவத்தம்பி.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • BC
    BC

    //அவர் (கருணாநிதி)மீது புலம் பெயர்ந்த தமிழர்கள் அதிருப்தியுடன் உள்ளனர்//

    மிக மிக முக்கியமானவர்களின் அதிருப்தியை கருணாநிதி பெற்றுவிட்டார்.

    Reply
  • gobi
    gobi

    புலம் பெயர் தமிழர்கள் அல்ல புலம்பெயர் புலிகள் என்பதே சரி;

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //இலங்கைத் தமிழர் பிரச்சினையில் முதல்வர் கருணாநிதியிடம் உறுதியான நிலைப்பாடு இல்லை. – சிவத்தம்பி //

    சுருக்கமாக தங்களுக்கு “செம்மொழி மாநாடு” பற்றி உள்ள நிலைப்பாடு போல் என்றே சொல்லியிருக்கலாம்.

    Reply
  • nallurkanthan
    nallurkanthan

    Dont call him a Professor. It is disgrace. One time Marxist can not understand what is Tamil Problem. It is the Jaffna bourgeiose menatality.

    Reply
  • Velu
    Velu

    Dear Comrade Prof.Sivathamby,Before you comment on the other people, please think about you and look after your errors. After all you have identified yourself as a Marxist-Leninist in the past ,then how it is possible to support the Mafia ,reactinary,pro- imperialist and fascist LTTE or Tamil Tigers?

    Reply
  • suda
    suda

    தமிழ் மக்கள்தான் புலிகள் புலிகள் தான் தமிழ் மக்கள் என்பதுபோல ‘வீஷ்மர்தான் சிவத்கம்பி சிவத்தம்பிதான் வீஷ்மர்’ சிவத்கம்பியின் அரசியல் நிலைப்பாடுமாதிரித்தான் கலைஞருடையது. கலைஞர் பக்க அரசியல்வாதி ஆனால் சிவத்தம்பி? முஸ்லீம்கள் வடக்கைவிட்டு விரட்டியடிக்கப்பட்டது படுமுட்டாள்தனம் என்று பேசிய சிவத்தம்பி அடுத்தநாள் பத்திரிகைகளுக்கு தான் அப்படியான அர்தத்தில் பேசவில்லைஎன்று அறிக்கைகொடுத்தார். எல்லாம் பொட்டனின் கொட்டனுக்கு பயந்துதான். துரோகிகள் தண்டிக்கப்படவேண்டியவர்கள் அவர்களைத் தப்பவிடக்கூடாது என்று புலிகளுக்கு உரைத்தவர்தான் இந்த மூன்றாம்தரப் பேராசிரியர்!

    Reply