யாழ். முஸ்லிம்கள் மீள் குடியேற எவ்விதத் தடையுமில்லை – அமைச்சர் டக்ளஸ்

011109dag.jpgபலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் தங்களது சொந்த இடங்களில் குடியேற எவ்வித தடையு மில்லையென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

“யாழ். முஸ்லிம்கள் எந்த நேரத்திலும் இங்கு வந்து குடியேறலாம். தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் எப்படி கெளரவமான முறையில் சகோதரத்துவத்துடன் வாழ்ந்தார்களோ, அதேமுறையில் வாழ அம்மக்கள் மீளக்குடியமர வேண்டும்” எனவும் அவர் கூறினார்.

பலவந்த வெளியேற்றமும் கெளரவமான மீள் குடியேற்றமும் “எனும் தொனிப் பொருளிலான கலந்துரையாடலொன்று யாழ். ஒஸ்மானியாக் கல்லூரியில் இடம்பெற்றது.

மக்கள் பணிமனை நேற்று முன்தினம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

கெளரவமான மீள் குடியேற்றம் என்ற சொற்பதம் இங்கு உபயோகப்படுத் தப்பட்டிருப்பினும் இதனை தன்னால் ஏற்றுக் கொள்ள இயலாதென்றும் ஏனெனில், இந்தப் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம்கள் எப்போதும் வந்து இங்கு குடியேறலாம் என்றார்.

இதற்கு யாரும் தடையாக இருக்கப் போவதில்லை என்றும் தெரிவித்த அவர், வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களது இருப்பிடங்கள் அம்மக்களுக்கே கொடுக்கப்பட வேண்டும் என்றும் இதனை யாரும் தட்டிப் பறிக்க இயலாது என்றும் முஸ்லிம் மக்களது வீடுகளை எவராவது எடுத்திருப்பின் அவற்றை அம்மக்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்றும் தெரிவித்தார்.

நடந்தவற்றை மறந்து ஐக்கியப்பட்டு ஒன்றிணைந்து வாழ்வதே சிறந்த வாழ்க்கையாக அமையும் என்பதை வலியுறுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இங்குள்ள தமிழ் மக்கள் தங்களது சகோதர முஸ்லிம் மக்களை கெளரவமாக வரவேற்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

Show More

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • chandran.raja
    chandran.raja

    தமிழ்முஸ்லீம் மக்களின் பத்தொன்பது வருட அஞ்ஞானவாழ்வு முடிவுக்கு வந்தது என்று நினைக்கும் போது மனது பூர்ரிப்படைகிறது. அவர்கள் அவலங்களும் இழப்புகளும் வன்னிமக்கள் பட்ட துன்பங்களுக்கு கொஞ்சமும் குறைந்தது இல்லை. அவர்கள் வரவிற்கு புலம்பெயர்மக்கள் சார்பில் வரவேற்கிறேன்.
    அமைச்சர் டக்கிஸ்தேவானந்தா பெருமைப்பட கூடியவர். அவரும் அவர்களது தோழர்களின் தியாகங்களாலும் தான் யாழ்பாணம் இன்னொரு வன்னியாக மாறாமல் தடுக்கப்பட்டது இல்லையேல் யாழ்மக்களும் வவுனியா முகாங்கள் போல் பல முகாம்களை யாழ்பாணத்தின் எங்கோ ஒரு மூலைகளில் சந்தித்திருக்க வேண்டும். இந்த விதத்தில் யாழ்மக்கள் பாக்கியம் செய்திருக்கிறார்கள்.

    புலம்பெயர் தேசங்களில் டக்கிளஸ்தேவானந்தாவுக்கு அடிக்கபட்ட சேறுகள் ஏராளம். அவையாவும் புலிகளால் மேற்கொள்ளப்பட்டவை என்றாலும் அதை நம்பியிருந்தவர்கள் ஏராளம். இன்று காற்றில் அடிபட்டு அள்ளுப்பட்டு சென்றுவிட்டது என்றே நினைக்கிறேன். இவரை நினைக்கும் போது அடிக்கடி அல்பிரட் துரையப்பாவின் நினைப்பு வரும் அல்பிரட் துரையப்பாவை எவரும் போய் சந்தித்து உரையாடமுடியும். இவரும் அப்படியே! துரையப்பா இறுதியில் தான் நெருப்பை கண்டார். டக்கிளஸ் தேவானந்தா சென்ற இடமெல்லாம் நெருப்பை கண்டு தாண்டியும் வென்றும் வந்தான். நீண்ட ஆயுளை அவருக்கு வழங்க ஆணடவன் அருள்புரியட்டும்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    வெறும் பேச்சோடு நிறுத்தி விடாமல், டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முஸ்லிம் மக்களின் சொத்துகள் அவர்களிடமே திரும்பக் கிடைக்க முன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பல முஸ்லிம் மக்கள் யாழில் மீண்டும் குடியேற தயக்கம் காட்டுவதாக செய்திகள் வருகின்றன. அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் மீள்குடியேற்ற அமைச்சராகவிருக்கும் றிச்சார்ட் பதியுதின் அவர்களும் இணைந்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    Reply
  • appu hammy
    appu hammy

    மீனவர்கள், தனியார் பேரூந்து உரிமையாளர்களிடம் அமைச்சர் டக்ளஸ் பணவசூல். யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டுள்ள சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனியார் பேரூந்து ஒட்டுனர்கள், மீனவர்களிடம் நிதி அறவிட்டு வருவதாகவும், நிதியை பெற்றுக்கொண்டே அவர்களுக்கான அனுமதிகளை பெற்றுக்கொடுப்பதாகவும், இவ் நிதி வசூலிப்பு தினசரி இடம்பெற்று வருவதாக வடக்கில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    Reply