தென் மாகாண சபை முதலமைச்சர், அமைச்சர்கள் ஆகியோர் இன்று (29) பதவிப் பிரமாணம் செய்கின்றனர். முன்னாள் முதலமைச்சர் சான் விஜேலால் த சில்வா மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்கவுள்ளதோடு முன்னாள் அமைச்சர்களான ஹேமால் குணசேகர, வீ. கே. இந்திக, யூ. ஜி. டீ. ஆரியதிலக மற்றும் மாத்தறை மாவட்ட ஐ. ம. சு. முன்னணி உறுப்பினர் பிந்து வீரசிங்க (கம்யூனிஸ்ட் கட்சி) ஆகியோர் அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளதாக அறிவிக்கப்படுகிறது.