இங்கி லாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல முன்னாள் சர்வதேச கிரிக்கெட் நடுவர் டேவிட் ஷெப்பர்ட் மரணம் அடைந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நீண்ட காலம் சிகிச்சை பெற்று வந்த அவரது உயிர் நேற்று பிரிந்தது.
68 வயதான டேவிட் ஷெப்பர்ட் 1983 ஆம் ஆண்டு முதல் 2005 ம் ஆண்டு வரை 172 ஒரு நாள் போட்டி மற்றும் 92 டெஸ்ட் போட்டிகளுக்கு நடுவராக பணியாற்றி இருக்கிறார்.
இதில் 3 உலக கோப்பை போட்டி இறுதி ஆட்டமும் அடங்கும். 282 முதல் தர போட்டியில் விளையாடியுள்ள ஷெப்பர்ட் 1981 ஆம் ஆண்டில் முதல் தர போட்டியில் நடுவராக நியமிக்கப்பட்டார். 2005 ஆம் ஆண்டில் சர்வதேச நடுவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.