இந்திய இராணுவ குழுவும் பாதுகாப்பு செயலாளரும் சந்திப்பு!

000gotabhaya_rajapaksa.jpgஇலங்கை வந்துள்ள உயர் கட்டளை கற்கைநெறியை பயிலும் இந்திய இராணுவ அதிகாரிகள் குழு பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. கொழும்பில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் இந்த் சந்திப்பு இடம்பெற்றது. பிரிகேடியர் மொனி சன்டி தலைமையில் பதினான்கு அதிகாரிகள் அடங்கிய இந்தக் குழுவில் இந்தியாவின் இராணுவ மற்றும் விமானப்படை உயர் அதிகாரிகள் அடங்குகின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

    தோழர்களே!

    சிந்தனை செய்து பாருங்கள்! இந்தியா என்னும் நாடு இந்து என்னும் ஆறிபோன ஆரிய சித்தாந்ததினை அடிப்படையாகவும், இந்தி என்னும் வடமொழியை செயல்திட்டமாக கொண்டு கண்ணுக்குப் புலனாகாத ஒரு பூணூலால் கட்டப் பட்டுள்ளது. பார்ப்பனியம் ஆதிக்கம் செலுத்தும் காங்கிரஸ்,மார்க்சிய கம்யூனிஸ்டு, அ தி மு க, போன்ற மிதவாத அரசியல் அமைப்புகள்; ஆர் எஸ் எஸ் , இந்து முன்னணி, பஜ்ரங் தளம், பாரதிய சனதா, மா லெ குழுக்கள், மக இ க போன்ற தீவிர அரசியல் பேசும் இயக்கங்கள், இந்திய இராணுவத் தலைமை, மையப் புலனாய்வுத் துறை, இந்திய தலைமை செயலகம், நீதித் துறை, வானொலி, தொலைக்காட்சி, பத்திரிக்கை ஆகிய அனைத்தும் இந்தப் பூணூல் கட்டமைப்பின் ஒவ்வொரு இழைகளாகும்.

    இந்தக் கட்டமைப்பு மிக நுணுக்கமாக, வஞ்சகமாக பின்னப் பட்டுள்ளதால் தமிழக தமிழர்கள் மிக மிக கவனமாக அணுகப்பட வேண்டும். இல்லையென்றால் நாம் ஒருவருக்கு ஒருவர் அவர்களுடைய வருணா சிரம் தர்மபடி அடித்துகொள்ள நேரிடும் .ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். காசுமீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து ஒடுக்கப் படும் தேசிய இனங்களும் ஒன்று பட்டு விடுதலைகான போராட்டத்தை மேற்கொள்ள முடியும் என்பது, இந்தியா என்கிற பார்ப்பனிய உருவாக்கம் உள்ள வரை சாத்தியமாகக் கூடிய வாய்ப்புகள் மிக மிக குறைவே. ஏன் சாத்தியம் இல்லை என்று கூடக் கூறலாம். இங்குள்ள தேசிய இனங்கள் அடிப்படையிலேயே ஒன்றை ஒன்று முரண்பட்டு நிற்கின்றன. கன்னடன் தமிழனின் தனித்துவ முயற்சி கண்டு மனம் பொறாதவனாய் அவன் தன்னை விட தாழ்ந்தவன் எனக் காட்ட முற்படுகிறான். மலையாளி, இந்தியா என்ற கட்டமைப்புக்குள் அங்கங்கின்னாதபடி நிறைந்து ஒட்டுண்ணியாக வாழ்ந்துகொண்டு, தமிழனின் தனித்துவ வேட்கை தன் அடிப்படை வாழ்வாதாரத்தை பிளந்து விடும் என எண்ணி தமிழனின் மென்னியை திருகுகிறான். பிகாரியையும் ஒரியாக்காரனையும் மதராசியையும் வட நாட்டவன் வெறுக்கிறான், அவமதிக்கிறான். உறங்கும் எரிமலையான பஞ்சாப், எரியும் காசுமீர், அசாம், வட கிழக்கு மானிலங்கள் என எத்தனை முரண்பாடுகள். இத்தனை முரண்பாடுகளிலும் பார்ப்பனியவாதிகளும், பெரு முதலாளிகளும், அரசியல் அற்பர்களும் மட்டுமே ஒருமைப்பாடு, இந்தியா, இந்தியன் என்று அலறிக் கொண்டிருப்பதை கவனியுங்கள். பார்ப்பனியத்தை ஒழிக்க முற்படுங்கள். நீங்கள் புரட்சியெல்லாம் செய்ய வேண்டிய அவசியம் கூட இல்லாமல் இந்தக் இந்தி கட்டமைப்பு தானே உதிர்ந்துவிடும்!!.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    //பார்பனியத்தை ஒழிக்க முற்படுங்கள்//புரட்சிகரதமிழ் தேசிகன்.
    ஒரு இனத்தையும் சமூகத்தையும் பகைப்பதும் பகையை தூண்டிவிடுவதும் அறிவாகாது. அது ஒரு வெறியுணர்வு. அவலத்தை முடிவில்லாது கொண்டுசெல்லக் கூடியது. இரண்டு பிரிவைத் தவிர வேறுஒன்றில்லை. இந்த அனுபவத்தை வெகுமதியான உயிர்களையும் உடமைகளையும் விலையாகக் கொடுத்து பெற்றிருக்கிறார்கள் தமிழ்மக்கள.
    நீங்கள் ஓர்ரளவு கற்றவர்களாக இருந்தால் பார்பனியத்திலும் யூதசமூகத்திலும் இருந்து தான் மானிடத்தை நேசிக்கிற மகான்கள் தோன்றினார்கள் என்பதை அறிந்து கொள்வீர்கள். ஆகவே பலஆண்டுகளாக இலங்கையில் ஓடிய இரத்தஆற்றை இந்தியாவுக்கும் திசைதிருப்பிவிட முயற்சிக்காதீர்கள். அது உங்கள் இனத்திற்கு செய்யும் துரோகமாகும்.உங்கள் மனத்தை முதலில் புரட்சிகரமாக்குங்கள்.

    Reply