2010ம் ஆண்டுக்கான இடைக்கால கணக்கறிக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 3ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் திகதி சமர்ப்பிக்கப்படும் இந்த இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதம் நவம்பர் மாதம் 5ம் திகதி வரையும் பாராளுமன்றத்தில் நடைபெறவிருக்கின்றது. இந்த இடைக்கால கணக்கறிக்கை மீது நவம்பர் மாதம் 5ம் திகதி பின்னேரம் வாக்கெடுப்பு நடத்துவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.