வட பகுதியில் இவ்வாண்டு இறுதிக்குள் சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டு இடம் பெயர்ந்து வாழும் மக்களில் ஒரு இலட்சம் பேர் தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்படுவர் என்று பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம நேற்று தெரிவித்தார்.
பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சும், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டமும் (யு. என். டி. பி.) இணைந்து இதற்கென பாரிய திட்டம் ஒன்றை அமுல்படுத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
யு. என். டி. பியின் பிரதிநிதி நீல் பூனுக்கும், தனக்கும் இடையில் இடம் பெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த திட்டத்திற்கு இணக்கம் கண்டதாகவும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சில் இடம் பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம மேலும் உரையாற்றுகையில்:-
கிராம சேவகர் பிரிவு தொடக்கம் பிரதேச செயலாளர் மற்றும் அரசாங்க அதிபர் வரையான சகல செயற்பாடுகளும் முழுமையாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு தொலைத் தொடர்பு உட்பட உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை நிர்வாக வசதிகள் வெகு விரைவில் ஏற்படுத்தப்பட்டு இந்த மக்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.
சுனாமி அனர்த்தத்தின் போதும், கிழக்கு மீட்டெடுக்கப்பட்ட பின்னரும் இது போன்ற நிர்வாக கட்டமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்தோம்.
கிராம மட்டத்திலிருந்து நிர்வாக நடவடிக்கைகளை ஸ்தாபிக்க தேவையான சகல செயற்பாடுகளையும் முன்னெடுத்துச் செல்கின்றோம்.
குகபிரசாதம்
கடந்த ஐந்து மாதமாக குண்டு வெடித்தோ பதுங்கு குளிகளிலோ நூற்றுகணக்கானோர் தினசரி இறந்துபோவது முற்றாக நின்றுவிட்டது.
அனைவரும் மீளக்குடியேற இன்னமும் நாலு மாதம் எடுக்கும். மீளக் குடியேற்றுவதில் இலங்கை அரசு இன்னமும் துரிதமாக செய்ய முடியாமல் இருப்பதற்கு முக்கிய மூன்று காரணங்கள் ஆயிரக்கணக்கான புலிகள் இடம்பெயந்த மக்கள் மத்தியில் ஒளிந்திருப்பது.
மீளக் குடியேறக்கூடிய இடங்களில் மில்லியன் கணக்கான கண்ணிவெடிகள் இன்னமும் புதைந்திருப்பது இன்னமும் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் ஏவுகணைகள் தற்கொலை அங்கிகள் ஆயுதங்கள் மீளக் குடியேற்றவேண்டிய இடங்களில் இருந்து கண்டுபிடித்து எடுக்கவேண்டியிருப்பது
அப்படியிருந்தும் உலக வரலாற்றிலேயே இவ்வளவு தொகையாக இடம்பெயந்த மக்களை உள்நாட்டில் வைத்து பராமரித்த சம்பவம் இலங்கையில்தான் நடந்துள்ளது. அத்துடன் இவ்வளவு விரைவாக இடம் பெயந்தவர்களை மீளக் குடியேற்றி வருவதும் இதுவரை உலகில் வேறு எங்கும் நடைபெறவில்லை.
இடம்பெயர்ந்த மக்கள் மீளக் குடியேறிய பின் அத்தனை தமிழ்ஈழ ஊடகங்களும் தமிழக சினிமாவை நோக்கி நகர வேண்டியதுதான் ஏற்கனவே பல தமிழ்ஈழ ஊடகங்கள் கவர்ச்சி படங்களை இணைக்க ஆரம்பித்து விட்டன
அவுஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியாவில் கடந்த வருடம் பரவிய காட்டுத்தீயில் எழுநூறு ஆமாம் ஆக எழுநூறு குடும்பங்கள் தமது வீடுகளை விட்டு இடம்பெயர்ந்தனர். இவர்களில் ஒரு சிலரை தவிர பெரும்பான்மையான குடும்பங்கள் இன்னமும் இடம்பெயந்தவர்களாகவே தற்காலிக இடங்களில் வாழ்ந்து வருகின்றனர் . அவுஸ்திரேலிய அரசாலோ விக்டோரியா மாகாண அரசாலோ அல்லது காப்புறுதி நிறுவனங்காலேயோ இவர்களை இன்னமும் மீளக் குடியமர்த்த முடியவில்லை.
நாலு வருடத்திற்கு முன் கத்ரீனா என்ற புயல்காற்றில் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் உள்ள லூசியானா மாநில மக்களில் இன்னமும் பல ஆயிரக்கணக்கானோர் இடம்பெயந்த தற்காலிக இடங்களிலேதான் வசித்து வருகின்றனர். இன்னமும் தமது சொந்த இடங்களுக்கு எப்போது திரும்பலாம் என்று ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
கண்ணிவெடியோ புதைத்து வைத்த ஆயுதங்களோ ஒளித்திருக்கும் புலிகளோ இல்லாத இந்த நாடுகளில் பொருளாதார தொழில்நுட்ப வலிமை இருந்தும் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றுவதில் இலங்கை மாதிரி துரிதமாக செயல்பட முடியவில்லை.
நடைமுறை யதார்த்தம் புரியாமல் கனவு காண்பவர்களால்தான் ஏனிந்த மந்தம் என குறை சொல்லமுடியும்
Rohan
யாரை யார் ஏமாற்றப் பார்க்கிறோம்?
விக்டோரிய அரசு இடம்பெயர்க்கப் பட்டோரை பொன்டிகோ காட்டிற்குள்ளும் லூசியானா அரசு இடம்பெயர்க்கப் பட்டோரை பொன்டிகோ காட்டிற்குள்ளும் நியூ ஓர்லியன்ஸ் உப்பளங்களிலுமா அடைத்து வைத்திருக்கிறது?
மறைந்திருக்கும் புலிக் கதை வெறும் பம்மாத்து! எனக்குத் தெரிய, பஞ்சம் பிழைக்க வன்னி போன குடும்பம் ஒன்று குடும்பத் தலைவனை இழந்து அம்மாவும் மூன்று இளம் (12க்குக் கீழ்) பிள்ளைகளுமாக இன்னமும் உள்ளே இருக்கிறது.
மெனிக் முகாமிலிருந்து ‘வெளியே விட்டதாக’ கதை பண்ணிய பின்னலர் குடாநாட்டு முகாம்களில் ஆயிரக் கணக்கில் மீள அடைக்கப்பட்டவர்களை என்ன கணக்கில் சேர்க்கப் போகிறோம்?