புலம்பெயர் புனைகதைக்குள் புகுந்துவந்த பயணம். : வவுனியன்

IDP_Child_Carrying_Bucket_of_Waterமே 16ம் திகதிவரை வெள்ளான் முள்ளிவாய்க்காலிலிருந்து பின் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசம் வந்துள்ள என் ஊராரையும், உறவினரையும் பார்ப்பதற்காக அண்மையில் வவுனியா சென்றேன். புறப்படுமுன் லண்டனிலிருந்து வெளிவந்த செய்திகள் எம்மை சற்று சிந்திக்க வைத்தாலும் இவையெல்லாம் உண்மைதானா என்பதை நேரே சென்று அறியவேண்டும் என்ற ஆவல் எம் பயணத்தை தொடரும்படி தூண்டியது.

விமானத்திலிருந்து வெளியேறும்போது எனக்குள்ளே சற்று தயக்கம். காரணம் பிரித்தானிய கடவுச்சீட்டு கொழும்பு விமானநிலையத்தில் விரும்பப்படாத ஒன்றென்றும், பலர் இம்சைப்படுத்தப்பட்டு வருவதாகவும் புலம்பெயர் ஊடகங்களின் விடாது தொடர்ச்சியான செய்திகளாக இருந்தன.

விமானநிலையத்தின் உள்ளே சென்றதும் swine flu வை அறியும் camera முன்னே வரிசையாக செல்லும்படியான அறிவித்தல் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் செய்யப்பட்டது. அதிகாரிகள் monitor முன் இருந்து எமது உடல் வெப்பத்தை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

பிரமாண்டமான புத்தர் சிலை ஒன்று எம்மை வரவேற்பதுபோல் குடிவரவு அதிகாரிகளின் இருக்கைக்குப் பின்னால் வைக்கப்பட்டிருந்தது. கடவுச்சீட்டை கையளித்தபோது எந்த விதமான முகமாற்றமும் இல்லாது தனது கடமையை செய்துவிட்டு கடவுச்சீட்டை கையளித்தார் அந்த அதிகாரி.

விமான நிலையத்திலிருந்து hotel சென்றபோது இரவு 11 மணி இடையிடையே இராணுவமும் பொலிசும் எம்மை நிறுத்தி சோதனை செய்தார்கள். எந்த இடையுறுமில்லாது நடந்து கொண்டார்கள்.

மறுநாள் காலை வவுனியா செல்வதற்காக கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு சென்றோம். காலை 5.45 மணிக்கு யாழ்தேவி புகையிரதம் கோட்டையிலிருந்து புறப்பட்டது. புறப்படுமுன் அத்தனை அறிவிப்புகளும் சிங்கள மொழியிலேயே செய்தார்கள் எனக்கு எதுவுமே புரியவில்லை. புகையிரதம் மதவாச்சியை அடைந்தபோது அனைவரையும் அவரவர் பொதிகளுடன் வெளியே வருமாறு கேட்கப்பட்டோம். அத்தனை பொதிகளையும் சோதனை செய்தபின் என்னை அந்த அதிகாரி ‘வவுனியா போகமுடியாது’ என்று கூறிவிட்டார். ‘வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கு MOD (ministry of Defence) அனுமதி வேண்டும்’ என்றார். அந்த அதிகாரியின் கடமை உணர்வை புரிந்துகொண்டு கடவுச்சீட்டுக்குள்ளே வைத்துக் கொடுத்தேன் என்னை வவுனியா செல்வதற்கு அனுமதித்தார்.

1985 ம் ஆண்டு லண்டன் செல்வதற்காக வவுனியா புகையிரத நிலையத்தில் நின்றபோது என் நண்பர் கொக்காவில் இராணுவமுகாம் தாக்குதலில் கொல்லப்பட்ட செய்தி கிடைத்தது. புகைவண்டி வவுனியாவை அடைந்தபோது அந்த ஆண்டு என் கண்முன்னே வந்து போனது. 25 ஆண்டுகால நகர்வு ஓர் சினிமாவை பார்த்தது போன்ற உணர்வை கொடுத்தது.

புகையிரத நிலையத்திலிருந்து வீடுசென்ற போது இது வவுனியாவோ இல்லை யாழ்ப்பாணமோ என்ற குழப்பம் எனக்குள்ளே. பார்க்குமிடமெல்லாம் பசுமையான வயல்களும் குளங்களுமாக வேலிகளேயில்லாமல் இருந்த வவுனியா நகர்ப்புறம் இன்று வயல்களும் குளங்களும் மண்ணால் நிரப்பப்பட்டு மேட்டு நிலங்களாகவும் நான்கு பக்கமும் கிடுகுகளால் மூடி அடைக்கப்பட்ட வேலிகளாலும், ஒலிபெருக்கி மூலம் இரவுபகலாக ஓலமிடும் இந்துக் கோயில்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை உணர்ந்தேன்.

வவுனியாவை யாழ்ப்பாண இந்து மயமாக்கும் திட்டமிட்ட செயல்பாடோ இதுவென்று என்மனம் என்னையே கேட்டது. அடங்காத் தமிழன் சுந்தரலிங்கம் வாழ்ந்த காலப்பகுதிக்கு வவுனியா தள்ளப்பட்டு விட்டதென்று முணுமுணுத்தார் என்னை கூட்டிச்சென்ற நண்பர்.

சில நாட்களே வவுனியாவில் தங்கிநிற்கக் கூடிய நிலையிருந்ததால் கிடைக்கின்ற பொழுதெல்லாம் அவர்களிடமிருந்து தகவல்களைப்பெறும் நோக்கில் அவர்களோடு பேசிக்கொண்டேன்.

“எம்மை யாருமே காப்பாற்றவில்லை கடவுள்தான் காப்பாற்றினார்” என்று  ஆரம்பித்தார்கள். நடந்தவற்றை அறியும் ஆவலில் கடந்த ஒரு வருடமாக தொடர்ச்சியாக நடந்த சம்பவங்களை மிகவும் ஆவலுடன் கேட்டுக்கொண்டேன்.

மன்னாரில் நடந்த போரில் பல போராளிகள் கொல்லப்பட்டதாகவும், ”கிளிநொச்சியை இராணுவம் அண்மித்ததும் பொதுமக்கள் மீது விடுதலைப் புலிகள்  பலாத்காரத்தை பிரயோகிக்கத் தொடங்கிவிட்டார்கள்” என்று கூறினார்கள்.

”எதற்காக பொதுமக்கள் மீது பலாத்காரத்தை செலுத்தினார்கள்” என்று கேட்டபோது ”இழந்த பிரதேசங்கள் இராணுவத்திடம் பறிபோகுமென்று அவர்கள் என்றுமே எண்ணியதில்லை, பறிபோனதால் அவர்கள் மனஉளைச்சலுக்கு தள்ளப்பட்டு விட்டார்கள்” என்றனர். தளபதி திலீபனிடம் ”எதற்காக மக்கள்மீது இப்படி பலாத்காரம் செய்கிறீர்கள்” என்று கேட்க ”இது மேலிடத்து உத்தரவு” என்றாராம்.

பலாத்காரமாக பிள்ளைகளைப் பிடிக்க வரும்போது பெற்றோர் அவர்களை எதிர்த்தால் அவர்களை அவ்விடத்திலேயே சுட்டுவிட்டு பிள்ளையை பிடித்துச்சென்ற சம்பவங்களை சிலர் கூறினார்கள். பிள்ளை மறுத்தால் பெற்றோருக்கு முன் பிள்ளையை சுட்டுவிட்டு இப்போ என்ன செய்வீர்கள் என்று கேட்டுவிட்டுப் போவார்களாம் போராளிகள்.

”பலாத்காரமாக இயக்கத்தில் இணைத்துக் கொண்ட போராளிகளே தோல்வியின் முதல்காரணி” என்றார்கள். ஒருவாரகால  ஆயதப் பயிற்சியோடு களம் இறக்கி விடுவார்களாம். அவர்கள் எப்போதும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துள் தப்பிச் செல்லவே விருப்பம் கொண்டிருந்தார்களாம்.

தளபதி தீபன் இறப்பதற்கு முன்னதாக மிகப்பாரிய இராணுவ ஊடறுப்பொன்றை செய்வதற்காக சொர்ணம் தலைமையில் சென்றதாகவும், சென்ற வழியில் இராணுவத்தினர் முன்கூட்டியே நிலையெடுத்திருந்ததால் அதில் 450 க்கும் மேற்பட்ட போராளிகளையும், சொர்ணம் தனது காலையும் இழந்ததாக குறிப்பிட்டார்கள்.

நெஞ்சின் தோள்பகுதியில் குண்டுபட்ட தீபன் இரண்டு நாட்களாக களத்தில் நின்று போராடி மூன்றாம் நாள் எறிகணை பட்டு இறந்ததாகவும், பங்கர் வாசலிலே படுத்திருந்த விடுதலைப் புலிகளின் நிதிப்பொறுப்பாளர் தமிழேந்தி மீது செல் விழுந்து வெடித்து அவர் மரணித்துள்ளார்.

இறந்த உடல்கள் ஆங்காங்கே நாட்கணக்கில் துர்நாற்றம் வீசியபடி கிடந்த காட்சியையும், காயப்பட்டவர்கள் மருத்துவ வசதியின்றி ஆங்காங்கே கிடந்ததாகவும்; துர்நாற்றமெடுத்து ஈ மொய்க்கின்ற காட்சி சர்வசாதாரணமாக இருந்தது என்றார்கள்.

இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் தப்பிவர முனைந்த பலர் புலிகளினால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவங்களை சிலர் விபரித்தனர்.

இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிளை கொடுத்து இரண்டு தேங்காய் வாங்கிய கதையை கூறிய அதேவேளை ஓரு இலட்சம் வரையான நெல் மூட்டைகளை விடுதலைப் புலிகள் அப்படியே இராணுவத்திடம் கைவிட்டு வந்ததாக கூறியபோது உணர்ச்சிவசப்பட்டார்கள்.

ஓவ்வொரு இடப்பெயர்வின் போதும் கைவிட்டுச்சென்ற தமது உடைமைகளையும் இழந்த உறவுகளையும் எண்ணி கண்ணீர் வடித்தார்கள்.  பார்க்குமிடமெல்லாம் பிணங்களும், கேட்பதெல்லாம் மரணஓலங்களுமாக பல வாரங்கள் கழிந்தன என்று தேம்பித் தேம்பி அழுதார்கள்.

பங்கருக்குள் இருந்தபோது விடுதலைப் புலிகளின் ஆலோசகர் திருநாவுக்கரசு கடந்த இரு வருடங்களாக பிரபாகரனுக்கு சித்த சுவாதீனம் பிடித்து விட்டதென்று கூற அங்கிருந்த மற்றய விடுதலைப் புலிகளின் விசிறிகள் அவரோடு கைகலப்பிற்கு சென்று விட்டார்களென்று ஒருவர் தெரிவித்தார்.

இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்தபோது எப்படி இராணுவம் நடந்து கொண்டது என்று விடுதலைப் புலிகளின் மிகவும் நெருக்கமானவரிடம் கேட்க ”என் மனச்சாட்சியை தொட்டுச் சொல்கிறேன் மனிதர்களைப்போல் நடந்துகொண்டார்கள்” என்றார்.

அடுத்தநாள் வவுனியா நகரைப் பார்ப்பதற்காக சென்றோம். 25 ஆண்டுகால போரின் அழிவுகளை மக்கள் முகங்கள் மட்டுமல்ல வவுனியா நகரும் காட்டிக் கொடுத்தது.

நகருக்கு அண்மையில் உள்ள சிங்களப் பாடசாலையான காமினி மகாவித்தியாலயத்தில் போராளிகளை மட்டும் வைத்து பராமரிக்கிறார்கள். வெறும் முட்கம்பிகளால் அடைக்கப்பட்ட வேலிக்குள் அவர்கள் மிகவும் லாவகமாக நடமாடுகிறார்கள்.

உறவினர்கள் முட்கம்பிக்கு வெளியே நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். கிடுகுகளால் வேயப்பட்ட கொட்டகைகளுக்குள் ஏதோ வகுப்புகள் நடந்துகொண்டிருந்தன.

முகாமிலிருந்து சில நாட்களுக்கு முன் வெளியேறிய சிலருடன் பேசியபோது முகாமுக்குள் பல குழந்தைகள் திடீர் திடீரென இறந்து போவதாகவும், இந்த இறப்புக்கு அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பொலித்தீன் கூரைகளே காரணம் என்று வைத்தியர்கள் சந்தேகப்படுவதாக கூறினர்.

மேலும் சில நாட்கள் தங்கியிருந்துவிட்டு யாழ்தேவி மூலம் கொழும்பை வந்தடைந்தோம். மறுநாள் லண்டன் பயணிப்பதற்காக விமான நிலையம் சென்றபோது உள்ளேயும் வெளியேயும் விமானப்படை அதிகாரிகள் மிகவும் கண்ணியமாக நடந்துகொண்ட முறை என்னை 2005 ம் ஆண்டு புலிகளின் புளியங்குள விசா காரியாலயத்தோடு ஒப்பிட வைத்தது.

2005ம் ஆண்டு யாழ் செல்வதற்காக தரைவழியாக புளியங்குளம் சென்றோம். வாகனத்தை விட்டு இறங்கியதும் “அ” க்கு போங்கள் “இ” க்கு போங்கள் “பு” க்கு போங்கள் என்று பயணிகளையும் வாகன உரிமையாளர்களையும் மந்தைகள் போல் நடாத்திய காட்சி என் கண்முன்னே வந்துபோனது.

கிளிநொச்சியிலுள்ள விசா காரியாலயத்துக்கு சென்றபோது அந்த இளம் அதிகாரி ”லண்டனிலே விடுதலைப் புலிகளிற்கு பணம்கொடுத்த ரசீது இருக்கிறதா?” என்றார். ”இல்லை” என்றேன். ”அப்படியென்றால் விசா கிடைக்காது” என்றார். ”விசா எடுக்க வேண்டும் என்ற நோக்கில் எவரும் பணம் கொடுப்பதில்லை” என்றேன்.

”அப்படி அறிவதாயின் உங்கள் area  பொறுப்பாளருடன் தொடர்புகொண்டு அறியுங்கள்” என்றேன். என்னை கூட்டிச் சென்றவரின் முகமாற்றம் என்னை தொடர்ந்து பேசவிடாது தடுத்தது.  அப்போது எம் நீண்ட இருக்கையின் மூலையில் ஒருவர் காத்திருந்தார், அவரைக் காட்டிய அந்த அதிகாரி ”அதோ பாருங்கள் அந்த நபர் லண்டனிலிருந்து வந்தவர். இரு வாரங்களாக இங்கே வந்து போகிறார். இவர் லண்டனில்  விடுதலைப் புலிகளிற்கு எதிராக பிரச்சாரம் செய்தவர். அதனால் அவருக்கு தண்டனை இது” என்று சொன்னார்.

”சுனாமி அடித்தபோது புலம்பெயர் தமிழ் மக்களிடம்தானே பணம் பெற்றீர்கள். இப்போது ஏன் அவர்களை இப்படி நடாத்துகிறீர்கள்?” என்று கேட்டேன். ”தமிழீழத்துக்கு உல்லாசப் பயணியாக எந்தத் தமிழனும் வரத்தேவையில்லை” என்றார் இறுமாப்போடு. ”அப்படி உல்லாசப் பயணிகள் தேவையென்றால் நாம் ஐரோப்பியரை அழைப்போம் இங்கே” என்றார்.

நடந்தவற்றை  அன்று பல விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு தெரியப்படுத்தினேன். அதை அன்று அவர்கள் விடுதலைப் புலிகளின் வளர்சியாகவே பார்த்தார்கள். மே18 வரை அதே நம்பிக்கையோடு வாழ்ந்தார்கள்.

அதனால்தான் அவர்களால் இன்றுள்ள உண்மை நிலையை ஏற்றுக்கொள்ள முடியாமல் தொடர்ந்தும் புனை கதைகளை கட்டவிழ்த்து விட்ட வண்ணம் உள்ளனர்.

இந்தக் கலையை கற்றுக் கொடுத்தவர்கள் நம்முடைய TULF என்பது அனைவரும் அறிந்ததே. 1977 ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து முன்தோன்றிய மூத்தகுடி’ என்றார்கள். ‘ஆண்ட பரம்பரை மீண்டுமொருமுறை ஆளநினைப்பதில் என்னதடை’ என்றார்கள். இவ்வாறே என் மனம் அங்குமிங்கும் போய்வர விமானம் லண்டனை வந்தடைந்தது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

92 Comments

 • பார்த்திபன்
  பார்த்திபன்

  எந்த வித மிகைப்படுத்தலோ அல்லது கற்பனைகளையோ புகுத்தாமல் உள்ளதை உள்ளபடியே தந்துள்ளீர்கள். தற்போது வன்னிக்குச் செல்லும் வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்போர் இராணுவத்திற்கு கையூட்டு வழங்கியே பிரயாணம் தொடர வேண்டியுள்ளதாக சமீபத்தில் நியூசிலார்ந்திலிருந்து வவுணியா சென்ற எனது நண்பரொருவரும் தெரிவித்தார். இது சம்மந்தமாக வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதுவராலயங்களுக்கு அறிவித்துள்ளோம். அவர்கள் இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சினூடாக இதற்குரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், இவ்விடயங்களை பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலஙகளுடன் வெளிநாட்டு ஊடகங்களில் வெளியிடவும் முடிவெடுத்துள்ளோம்.

  மேலும் சமாதான காலத்தில் யாழ்ப்பாணம் சென்றவர்கள் புலிகளின் சோதனைச்சாவடியில் பட்டபாட்டை நேரடியாகவே அனுபவித்தவர்களில் நானும் ஒருவன். அவர்கள் அன்று செய்த அட்டகாசங்களை இன்று நினைத்தாலும் ஆத்திரம் வருகின்றது. அங்கு போ இங்கு போ என்று தேவையில்லாமல் அலைக்கழித்து சுமார் 4 மணித்தியாலங்களுக்கு மேல் அவர்களின் சோதனைச் சாவடியில் காக்க வைத்தார்கள். என்னோடு வந்த குடும்பபத்தினர் பலர் கைக் குழந்தைளோடு சிரமப்பட்டபோது கூட, அவர்கள் அதைக் கண்டு கொள்ளவில்லை. வரியென்ற போர்வையயில் பணம் பறிப்பதிலேயே குறியாகவிருந்தார்கள். போதாக்குறைக்கு விண்ணப்பப் படிவங்களுடன் கொடுத்த எமது கடவுச்சீட்டுகளுடன், நாம் வாடகைக்கு அமர்த்திச் சென்ற வாகனத்தின் சாரதியின்; சாரதி அனுமதிப்பத்திரத்தை எல்லாவற்றையும் திருப்பித் தந்தபோது தரவில்லை. அதுபற்றி அவர்களிடம் திருப்பிச்சென்று கேட்டபோது, எல்லாவற்றையும் ஒருமித்தே திருப்பித் தந்ததாக வாதாடினார்கள். திரும்பவும் ஒருமுறை தேடிப்பாருங்கள் என்று தன்மையாகக் கூட கேட்டுப் பார்த்தேன். அதற்கும் சத்தம் போட்டார்கள் கடமையிலிருந்த 3 பெண்களும். வாகனச்சாரதியோ அழாத குறை தனது அனுமதிப்பத்திரம் கிடைக்காவிட்டால், தனது வாழ்க்கையே பாழாய்ப் போய்விடும் என்று கெஞ்சினார். அதற்கும் அவர்கள் செவி மடுக்கவில்லை. பின்பு நானும் உள்ளே வந்து தேடிப் பார்க்கலாமா எனக் கேட்டதற்கு, உனக்கென்ன பைத்தியமா என்று என்னையே திருப்பிக் கேட்டார்கள்.

  அவர்களோடு கதைக்கும் போது அவர்களால் வயது வித்தியாசமின்றி மக்களை பண்பாக அழைக்க பாவிக்கும் அதி உயர்ந்த வார்த்தைகளே நீ, உன்னை போன்றனவே. இதன் பின்பு நானும் கொஞ்சம் கடுமையாக கதைக்க வெளிக்கிட, அவர்களோடு வாய்த்தகராறாக மாறிவிட்டது. இதனால் அவர்களுக்கு பொறுப்பானவர் என்று ஒருவர் அங்கு உடன் விரைந்து வந்தார். வந்தவர் தீப்பொறி என்ற இயக்கப் பெயருள்ள எனக்கு ஏற்கனவே தெரிந்த ஒருவர். அவரிடம் நான் நடந்தவற்றைச் சொன்னேன். பொறும் நான் போய்ப் பார்க்கின்றேன் என்று அவர் உள்ளே சென்று தேடினார். அப்படித் தேடிய போது அவர்கள் விபரஙங்கள் பதிய வைத்திருந்த பெரிய கொப்பியின் கீழிலிருந்து சாரதி அனுமதிப்பத்திரம் பல்லிழித்தது. அதை எடுத்து என்னிடம் தந்தார். நடந்த தவறுக்கு ஒருவர் கூட வருத்தம் தெரிவிக்கவில்லை. தீப்பொறிக்கு எனது எண்ணம் தெரிந்தோ என்னவோ விடடாப்பா உனக்கு பொருள் கிடைத்து விட்டது தானே என்றவாறு போய்விட்டார்.

  அதன் பின் இராணுவச் சோதனைச் சாவடியை நெருங்க, இவங்கள் இன்னும் எத்தனை மணிநேரம் அலைக்கழிக்கப் போறான்களோ என்ற ஆத்திரம் கலந்த கவலையுடன் சென்றோம். ஆச்சரியமாக இருந்தது. சரியாக 20 நிமிடங்களில் எம்மையும் எம்முடன் கொண்டு வந்த உடமைகளையும் சோதனை செய்து அனுப்பினார்கள். அதில் இன்னொரு ஆச்சரியமுமம் நடந்தது. அங்கு நின்ற பெண் இராணுவத்தினர் எம்முடன் கைக்குழந்தைகளைக் கொண்டு வந்த பெண்களிடம், அந்தக் குழந்தைகளை வாங்கிக் வைத்துக் கொண்டு விரைவாகச் சோதனைகளை முடிக்க உதவினார்கள். இதனை அந்தச் சோதனைச் சாவடியில் ஆச்சரியமாகப் பார்க்காதவர்களே இல்லையெனலாம்.

  Reply
 • Thaksan
  Thaksan

  நீர் ஒரு தேசத்துரோகியோ அல்லது ஒட்டுக்குழு உறுப்பினரோ என கண்டுபிடிக்க இந்த கட்டுரையின் முதல் பந்தியே போதுமானதாக இருந்திருக்கும் புலிகளின் புலனாய்வு புலன் பெயர்ந்தவர்களுக்கு. இந்த கட்டுரையை நவம்பர் 26 க்கு பின்னர் எழுதியிருக்கலாம். தே.தலைவரின் குரல் நயத்தோடு மாவீரர் உரை தயாராகிக்கொண்டிருக்கிறது. கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என சிறுவயதிலேயே கற்பித்துவிட்டார்கள். ஆண்டவனேயெண்டு இதை சின்னவயதிலேயே நம்பத்தொடங்கியிருந்தபடியால் இப்ப நம்புறதில் (அல்லது நம்புறமாதிரி நடிப்பதில்) பெரிய பிரச்சினை ஒண்டும் இருக்காது. ஓம்! ஓமோம்! நமச்சிவாய.

  Reply
 • சோழன்
  சோழன்

  ……In the second incident that took place on Friday eighteen Tamil students were arrested by the State Intelligence Unit personnel when they arrived in Katunayake International Airport to take a flight to London. The youths had valid student visas issued by the UK embassy, sources said…..

  http://www.tamilnet.com/art.html?catid=13&artid=30474

  Reply
 • மாயா
  மாயா

  உண்மைகள் , புலத்தில் உள்ளவர்களால் உணர காலம் எடுக்கும். இருந்தாலும் இப்படியான தகவல்கள் உண்மைகளை ஓரளவாவது மக்களுக்கு கொண்டு செல்லும். இன்னும் லஞ்சம் பல இடங்களில் , தலை விரித்தாடுகிறது. அதுதான் , புலிகளின் ஊடுருவல்களுக்கு இடமளித்தது. இவற்றை எழுதுங்கள். முடிந்ததை கொண்டு செல்ல வேண்டியவர்களிடம் கொண்டு செல்ல முனைகிறோம். முழுத் தேசமும் வழமைக்கு திரும்ப வேண்டும். அதுவே நமது பிராத்தனையாகும்.

  Reply
 • varathan
  varathan

  சாந்தி வவுனியன் என்ற பெயரில் புலிப்பத்திரிகைகளில் எழுதிய பெண்மணியின் கணவரா இவர்?……….

  Reply
 • Vannikkumaran
  Vannikkumaran

  வவுனியன் நீர் சொல்லுறதைப் பார்த்தா இலங்கையில தமிழருக்கு ஒரு பிரச்சனையும் இல்லைப் போல தெரியுது. இது உண்மையோ உம்மட கற்பனையோ? நீர் சொன்னது மட்டும் உண்மையெண்டா கடவுள் எங்களைக் கைவிடேல்லை எண்டது மட்டும் உண்மையெண்டு உறுதிப்படுத்தலாம்.
  பொறுத்திருந்து பார்ப்போம் கார்த்திகை 27 கதையா கற்பனையா?
  புதினம் மூடினதால பார்த்தா பிரபாகரன் டெபினிற்றா அவுட் எண்டுமட்டும் தெரியுது. மற்றதை பிறகு பார்ப்போம்.
  அன்புடன்
  வன்னிக் குமரன்

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  // ……In the second incident that took place on Friday eighteen Tamil students were arrested by the State Intelligence Unit personnel when they arrived in Katunayake International Airport to take a flight to London. The youths had valid student visas issued by the UK embassy, sources said…..- Tamilnet //

  சோழன்,
  தாங்கள் தமிழ்நெற்றின் செய்தியை இணைத்துள்ளீர்கள். ஆனால் கட்டுநாயக்கா விமான நிலையத்தினூடாக வெளியேற முயலும் முன்னாள் புலிப்போராளிகளை, முன்னாள் புலிப்போராளிகளை வைத்தே அரசு கைது செய்கின்றதென்ற தகவலைத் தாங்கள் அறியவில்லையா?? இதனை சமீபத்தில் இத்தாலிய விசா பெற்று ஐரோப்பா நாடொன்றுக்கு வந்திருக்கும், எனது உறவினர் ஒருவரும் உறுதி செய்தார்.

  Reply
 • மாத்தையா
  மாத்தையா

  //புதினம் மூடினதால பார்த்தா பிரபாகரன் டெபினிற்றா அவுட் எண்டுமட்டும் தெரியுது. //
  வன்னிக் குமரனுக்கே டவுட்டா?

  Reply
 • Naane
  Naane

  வாசிக்கச் சந்தோசமாக தான் இருக்கு.புலிகளின் பண்பாடு உலகம் முழுக்கத் தெரிந்த விடயம் தானே. நீர் எழுதியதுபோல் இப்படி இருந்தால்தான் எங்கட ஆட்கள் வழிக்கு வருவினம் சான்றிதழ் வேறு.ஆனால் அதற்காக இலங்கை இராணுவத்திற்கு வக்காலத்து வாங்காதையுங்கோ.நீர் செய்த புண்ணியம் ஒன்றும் நடக்காமல் தப்பி வந்து விட்டீர் ஆனால் கனபேர் படாத‌பாடு பட்டு,அடி வாங்கி,காசு கொடுத்து வந்த சம்பவங்கள் நிறைய உண்டு.
  போர்க்காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் இப்போது கொஞ்சம கொஞ்சமாக வெளிவரத் தொடங்குகின்றன. முன்னர் புலிகளில் இருந்தவர்கள் இயக்கத்தை விட்டு விட்டு வந்தாலும் புலியைப் பற்றி வாய் திறக்க மாட்டார்கள்.இந்த விடயத்தில் புளொட்டில் இருந்தவர்களைக் கேட்டுத்தான் அ என்ற முதல் ஆயிரம் கதை சொல்வார்கள்.
  உங்கள் பிரயாண அனுபவம் எங்களையும் ஒருமுறை வவுனியாவிற்கு ஓசியில் சென்று வர வைத்து விட்டது.அதற்கு நன்றி. ‌

  Reply
 • மாயா
  மாயா

  //போர்க்காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் இப்போது கொஞ்சம கொஞ்சமாக வெளிவரத் தொடங்குகின்றன. முன்னர் புலிகளில் இருந்தவர்கள் இயக்கத்தை விட்டு விட்டு வந்தாலும் புலியைப் பற்றி வாய் திறக்க மாட்டார்கள். இந்த விடயத்தில் புளொட்டில் இருந்தவர்களைக் கேட்டுத்தான் அ என்ற முதல் ஆயிரம் கதை சொல்வார்கள்.- Naane on October 20, 2009 3:23 am //

  புலிகளில் இருந்தவர்கள் மந்தைக் கூட்டம். தஞ்சாவூர் பொம்மைகள்.புளொட்டில் இருந்தவர்கள் , தட்டிக் கேட்ட கூட்டம். அதனால்தான் அதிகமானவர்கள் 200 – 300 சாவுகளோடு வெளியேறி உயிர் வாழவும் , இன்று பலருக்கு உதவவும் முடிகிறது. புளொட் தலைமைகள் அழிந்திருக்கும். புளொட் அழியாது. அது ஆத்மா போல. புளொட்டில், இன்றும் சுய விமர்சனம் செய்வோர் அதிகம். தமிழர்கள் புளொட்டை ஒரு காலம் சரியென்று சொல்வார்கள். வானம் வெளுத்தாலும், இருண்டாலும் வானம், வானம்தான்.

  Reply
 • chandran.raja
  chandran.raja

  வன்னிக்குமரன் வன்னியில் தான் இருக்கிறாரா? அல்லது உண்டு குடித்து எம்மைப் போல் உல்லாசமாக உலாவுகிறாரா? வன்னிச்செய்திகளை உடனுக்குடன் அறியும் வாய்ப்பும் வசதியும் எமக்குத்தான் நிறையயிருக்கிறது. பிரபாகரனுக்கு “புதினம்” இணையத்தளம் மாதிரி. தலைவரின் உடனடிக்கொலைகள் சுடசுட புதினத்தில் தான் எதிர்பார்கலாம். சாட்சி இல்லாதவர்களுக்கு சூரியனையோ நிலவையோ சாட்சி வைப்பார்கள். எமக்கு வானம் தான் சாட்சி. குண்டுவீச்சு விமானங்களும் பறப்பதில்லை. செல்லடியும் நடப்பதில்லை. புதுபுது அகதிகளும் உருவாகுதல் இல்லை. “வேக்கவுட்”.

  Reply
 • குகபிரசாதம்
  குகபிரசாதம்

  தன்னனை நம்பியவரின் கழுத்தறுக்கும் தமிழருடன்தான் யாரும் ஒற்றுமையாக வாழ முடியாது. சிங்கள எதிர்ப்பை தவிர தமிழ் அரசியல் வாதிகளுக்கு வேறு எதுவும் தெரிந்திருக்கவில்லை. முப்பது வருடமாக தமிழ் அரசியல் வாதிகள் அநியாயமாக செய்த படுகொலைகள் அண்ட புளுகுகள் அடாவடித்தனங்கள் தான் இன்று தமிழரை சர்வதேச ரீதியில் தலை குனிந்து அம்மணமாக நிற்பது போன்ற நிலைமைக்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கு. எம்மவர்களால் எம்மவருக்கு இழைக்கப்பட்டு வந்த கொடுமையை கடைசியாக சிங்கள் படைவீரர் ஆயிரக்கணக்கில் தம்மை தியாகம் செய்து எம்மரையும் மீட்டு நாட்டையும் அழிவுப் பாதையில் இருந்து மீட்டுள்ளார்கள். தயவு செய்து கண்ணை திறந்து பார்க்கவும்.

  வன்னியில் புலிகளின் கோரப் பிடியில் இருந்து தப்பி ஓடி சிங்களவருடன் தான் ஒற்றுமையாக தமிழர் இலங்கையில் வாழ்ந்து வருவது தெரியாத விளங்காத அளவுக்கு புலிகளின் புளுகு ஊடகங்கள் ஊட்டி வளர்த்த இன வெறி கண்ணை முழுதாக மறைத்து விட்டது. கொழும்பையும் கொழும்பை சுற்றி உள்ள பகுதியிலும் இருக்கும் தமிழர், மலை நாட்டில் இருக்கும் தமிழர் எல்லாம் சிங்களவருடன் வாழாமல் வேறு யாரோடு வாழ்கிறார்கள்? பொய்யையே கேட்டு பொய்யாக கனவில் வாழ்ந்து கானல் நீரை அடைய துடிக்கும் முட்டாள்களாக இருக்காமல் தயவு செய்து கண்ணை திறந்து பார்க்கவும்.

  கள்ளக் கடத்தலும் கொலை செய்யவும் மட்டுமே தெரிந்தவனிடம் போராட்டத்தை குத்தகை கொடுத்து விட்டு அதை குறை சொன்னவனை எல்லாம் துரோகி என்று போட்டு தள்ள பேசாமல் இருந்து விட்ட நாங்கள் தான் இன்றைய அவலத்திற்கு பொறுப்பேற்க வேண்டும்

  Reply
 • raju
  raju

  //”சுனாமி அடித்தபோது புலம்பெயர் தமிழ் மக்களிடம்தானே பணம் பெற்றீர்கள். இப்போது ஏன் அவர்களை இப்படி நடாத்துகிறீர்கள்?” என்று கேட்டேன். ”தமிழீழத்துக்கு உல்லாசப் பயணியாக எந்தத் தமிழனும் வரத்தேவையில்லை” என்றார் இறுமாப்போடு. ”அப்படி உல்லாசப் பயணிகள் தேவையென்றால் நாம் ஐரோப்பியரை அழைப்போம் இங்கே” என்றார்.//வவுனியன்

  எங்கட பொடியங்களுக்கும் போராளிகளுக்கும் களங்கம் ஏற்ப்படடுத்தும் நோக்குடன் எழுதப்பட்டுள்ளது என்பதே என்கருத்து நான் யாழ்ப்பாணம் போனபோது என்னுடன் காரசாரமாக நடந்ததை நான் பிரச்சினையாக எடுத்துக்கொள்ளவில்லையே அப்படி நீரும் இருந்திருக்கலாம் எது என்னவோ எங்கட போராளிகள் எங்களுக்காகத்தானே இப்படி எல்லாம் நடந்தவங்கள்.

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  // நான் யாழ்ப்பாணம் போனபோது என்னுடன் காரசாரமாக நடந்ததை நான் பிரச்சினையாக எடுத்துக்கொள்ளவில்லையே அப்படி நீரும் இருந்திருக்கலாம் – raju //

  நீங்கள் பிரைச்சினையாக எடுத்துக் கொள்ளாமல் இருந்தது, உங்களது இயலாமையின் வெளிப்பாடு. அதற்காக எல்லோரும் அப்படி இருந்திருக்கலாமென்பதும், மொத்தத்தில் எல்லோரும் ஏன் ஆட்டுமந்தைக் கூட்டமாக இருக்கக் கூடாதென்று கேட்பது போலுள்ளளது. உங்களைப் போன்றவர்களின் தவறான நிலைப்பாடுகளினால்த் தான், இன்று எமது தமிழர் சமுதாயம் மீள முடியாத அதள பாதாளத்தினுள் போய் விழுந்துள்ளது. இனியும் உங்கள் சிந்தனைகளில் மாற்றம் வரவில்லையென்றால், மிகுதியுள்ள அந்த மக்கள் பலியாவதை எவரும் தடுக்க முடியாமல் போவது தான் மிச்சம்.

  Reply
 • Thaksan
  Thaksan

  நண்பர் பல்லியின் பின்னூட்டம் எதையும் காணவில்லையே…. ஏன் மெளனம்? ஓஓஓ… புதினத்திற்கு மெளன அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கிறியள் போல இருக்கு. இன்னம் கன இணையத்தளத்திற்கு அஞ்சலி செலுத்த வேண்டியிருக்கும் என்று நண்பர்கள் சொல்கிறார்கள். தே.தலைவருக்கே இன்னும் அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை எண்ட பிறகு அஞ்சலிக்கே அர்த்தமில்லாமல்போன மாதிரி நெருடலாயிருக்கு.

  Reply
 • மாயா
  மாயா

  // நான் யாழ்ப்பாணம் போனபோது என்னுடன் காரசாரமாக நடந்ததை நான் பிரச்சினையாக எடுத்துக்கொள்ளவில்லையே அப்படி நீரும் இருந்திருக்கலாம் எது என்னவோ எங்கட போராளிகள் எங்களுக்காகத்தானே இப்படி எல்லாம் நடந்தவங்கள்.- raju on October 20, 2009 3:20 pm // அப்போ , இராணுவம் காரசாரமாக நடந்து கொள்ளும் போது மட்டும் ஏன் பிரச்சனையாக எடுத்துக் கொள்கிறீர்கள்? நான் , சுனாமி அனர்த்த உதவி நிறுவனங்களுடன் பணி புரிய சிறீலங்கா சென்ற போது கூட, புலிகள் உதவ வந்தவர்களை விடவில்லை. எதைக் கொடுக்க வேணுமோ , அதை தனக்கு தந்து விட்டு போகச் சொல்லி வாங்கிக் கொண்டார்கள். இராணுவம் அப்படி நடந்து கொள்ளவில்லை.

  அன்று புலிகளும் , இராணுவமும் சேர்ந்து பணியாற்றியதை பார்த்த போது இந்த நட்பு தொடரும் போல் என மனதுக்குள் மகிழ்வாக இருந்தது. அதையும் மண் அள்ளிப் போட்டுக் கொண்டு , மக்களின் அழிவுக்கு அடிகோலியவர்கள் புலிகள் என்பது அனைவருக்கும் புரியும்.

  Reply
 • visvan
  visvan

  தமிழ் இளைஞர்களுக்குக் கதவடைக்கும் விமான நிலையங்கள் ‐ திரும்பிச் சென்றால் பிடித்து வைக்கும் புலனாய்வுத் துறை

  பிரித்தானியாவுக்கான மாணவர்களுக்கான விசா அனுமதி பெற்று பிரித்தானியா வருவதற்காக இன்று காலை கட்டுநாயக்கா விமான நிலையம் சென்ற 18 தமிழ் மாணவர்கள் தமது பயணத்தைத் தொடர அனுமதிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது………………..

  http://globaltamilnews.net/tamil_news1.php?nid=16057&cat=1

  Reply
 • மாயா
  மாயா

  //Thaksan on October 20, 2009 5:10 pm நண்பர் பல்லியின் பின்னூட்டம் எதையும் காணவில்லையே…………….//

  அஞ்சலிக் கலாச்சாரத்துக்கு அஞ்சலியை சிலர் நடத்தத் தொடங்கி விட்டார்கள். சுவிஸில் இடம்பெற்ற சில கருத்தரங்குகளில் , சில வாத பிரதி வாதங்களுக்கு பின்னர், எந்த ஒரு நிகழ்விலும் சாவை வழி மொழியும் மெளன அஞ்சலியை இல்லாதொழிக்க வேண்டுமென்ற கருத்து வைக்கப்பட்டது. அதன் பின்னர், சுவிஸ் புலம் பெயர்ந்தவர்களுக்கான சம்மேளத்தவர்கள், மக்களை வாழ வைக்க வேண்டிய சர்வ மத பிராத்தனையாக்கி நடைமுறைப்படுத்தி நடத்தத் தொடங்கியுள்ளனர். இனியாவது வாழ பிராத்திப்போம். சாவையும், கொலை வெறியையும் இல்லாதொழிப்போம்.

  உலக நாடுகள் அனைத்தும் போர் புரிந்துள்ளன. புலிகள்தான் மட்டுமே சாவை முன்னிலைப்படுத்தி வந்தது. எல்லா நிகழ்விலும் மெளன அஞ்சலிதான். இழந்தவர்களுக்காக, வருடத்தில் ஒரு நாள் மெளன அஞ்சலியை செலுத்தலாம். ஒவ்வொரு நிகழ்விலுமா? அவர்களது எண்ணம் முழுவதும் சாவை முன்னிலைப்படுத்திய தன்மைதான். அது மரணத்துக்கே இட்டுச் சென்றது.

  Reply
 • BC
  BC

  // நான் யாழ்ப்பாணம் போனபோது என்னுடன் காரசாரமாக நடந்ததை நான் பிரச்சினையாக எடுத்துக்கொள்ளவில்லையே அப்படி நீரும் இருந்திருக்கலாம் எது என்னவோ எங்கட போராளிகள் எங்களுக்காகத்தானே இப்படி எல்லாம் நடந்தவங்கள்.- raju//

  புலம் பெயர்ந்தவர்களை புலி ஊடகங்கள் எந்தளவுக்கு மூளை சலவை செய்துள்ளார்கள்!

  // தமிழ் இளைஞர்களுக்குக் கதவடைக்கும் விமான நிலையங்கள்//
  Visvan, இது global தமிழ் செய்தியில் தான் வந்தது. அவர்கள் அப்படி தான் செய்தி போடுவார்கள்.
  வேறு நடு நிலமை செய்தி நிறுவனங்களில் இந்த செய்தி வந்ததா?

  Reply
 • பல்லி
  பல்லி

  //நண்பர் பல்லியின் பின்னூட்டம் எதையும் காணவில்லையே…. ஏன் மெளனம்? ஓஓஓ… புதினத்திற்கு மெளன அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கிறியள் போல இருக்கு. //
  பல்லியின் புதினம் பற்றிய பின்னோட்டத்தை தக்ச்சன் கவனிக்கவில்லையா?? பலர் போல் தாங்களும் பல்லியும் புலியாகி விட்டதோ என சந்தேகமா.? இருக்கட்டும் இருக்கட்டும்; பல்லி பல்லியாக இருப்பதே பல்லிக்கு சரி; இருப்பினும் பல்லியை தேடிய தக்கச்னுக்கும் அதுக்கான பதிலை தந்த மாயாவுக்கும் நன்றி, தொடரும் பல்லி;

  Reply
 • பல்லி
  பல்லி

  //இந்த விடயத்தில் புளொட்டில் இருந்தவர்களைக் கேட்டுத்தான் அ என்ற முதல் ஆயிரம் கதை சொல்வார்கள்.//Naane
  கலப்படம் இல்லாத உன்மை; சுய விமர்சனத்துக்கு கழகத்தினர்தான் முன்னோடிகள்; அது தப்பில்லையே. வரவேற்க்கபட வேண்டியதுதான்;

  Reply
 • அகதி
  அகதி

  //கொழும்பையும் கொழும்பை சுற்றி உள்ள பகுதியிலும் இருக்கும் தமிழர், மலை நாட்டில் இருக்கும் தமிழர் எல்லாம் சிங்களவருடன் வாழாமல் வேறு யாரோடு வாழ்கிறார்கள்? பொய்யையே கேட்டு பொய்யாக கனவில் வாழ்ந்து கானல் நீரை அடைய துடிக்கும் முட்டாள்களாக இருக்காமல் தயவு செய்து கண்ணை திறந்து பார்க்கவும்.//குகபிரசாதம் அப்பட்டமான உண்மையை சொன்னியள் 60வது 70வதில் கொழும்பு மற்றும் அதைசுற்றியும் சிங்களவர்களால் அங்கு வாழ்ந்த தமிழரையும் அவர்களின் உடமைகளை வெட்டி கொளுத்தி எரிக்கும்போது அவர்களுக்கு அடைக்கலம் குடுத்தது முதல் தப்பு. அதை தட்டிகேக்கபோனது இரண்டாவது தப்பு. இப்படி எத்தனையோ தப்பு செய்ததால் இன்று வடக்கில் இருந்து நாம் ஐரோப்பா வரை அகதியானோம்—நாடு இருந்தும் அகதி

  Reply
 • Thirumalai vasan
  Thirumalai vasan

  //இந்த விடயத்தில் புளொட்டில் இருந்தவர்களைக் கேட்டுத்தான் அ என்ற முதல் ஆயிரம் கதை சொல்வார்கள்.//Naane
  கலப்படம் இல்லாத உன்மை; சுய விமர்சனத்துக்கு கழகத்தினர்தான் முன்னோடிகள்; அது தப்பில்லையே. வரவேற்க்கபட வேண்டியதுதான்;

  நீங்கள் மீண்டம் ஒரு தடவை வெளி(யே)றிய புளொட் காரரின் புதியதொரு உலகம் புத்தகத்தை வாசியுங்கள். சுயவிமர்சனம் செய்த எத்தனைபேரை உப்புக்கண்டம் போட்டார்கள் என்று தெரியும்.

  Reply
 • jalpani
  jalpani

  கொழும்பையும் கொழும்பை சுற்றி உள்ள பகுதியிலும் இருக்கும் தமிழர், மலை நாட்டில் இருக்கும் தமிழர் எல்லாம் சிங்களவருடன் வாழாமல் வேறு யாரோடு வாழ்கிறார்கள்”

  தற்போது கொழும்பில் இருக்கும் தமிழர்கள் சொந்த இடங்களுக்கு திரும்ப ஆயத்தமாகி வருவதாகவும் கொழும்பில் வீட்டு விலைகள் குறைவடைவதாகவும் செய்திகள் வருகின்றன.

  Reply
 • விசுவன் 1
  விசுவன் 1

  அட என்றைபெயரையும் கொப்பியடிக்கிறாங்கள்! அதுதான் பெயருடன் 1.

  Reply
 • muthu
  muthu

  யாழ்ப்பாணி சொல்வதுபோல் நானும் கேள்விப்பட்டேன். புலிகள் அழிக்கப்பட்டபின் வீடுகளை விற்றுவிட்டும் யாழ் நோக்கிப் போகின்றார்கள் என. ஆனால் அவர்கள் பெரும்பாலும் வயதானவர்களே. குழந்தைகளுடன் இருப்பவர்கள் அவர்களின் படிப்புக்காக கொழும்பிலேயே தங்கியுள்ளார்கள் என்றும் எனது உறவினர் சொன்னார். அதேநேரம் அவர்கள் பிளட்ஸ் தற்போது வாங்கியுள்ளார்கள் 65 லட்சத்துக்குத்தான்.

  Reply
 • Karan
  Karan

  யாழ்ப்பாணி முத்து சொல்வது முற்றிலும் உண்மை. எனது அம்மா 65 வயது. லண்டன் வருவதற்காக கொழும்பில் நின்றா. தற்போது தானே பிரச்சினைகள் ஓய்ந்துவிட்டது என்று யாழ்ப்பாணம் போய்விட்டா. இப்போது யாழ்ப்பாணத்தில் வீட்டு வாடகையும் வீட்டு விலையும் எகுறுகிறது. யாழ்ப்பாணம் வழமைக்கு திரும்ப முயற்சிக்கிறது. முந்திய நிலையிலும் பார்க்க முன்னேற்றகரமாக உள்ளதாம். கொழும்பிலும் பார்க்க வாழ்கைச் செலவு குறைவு என்பதால் தற்காலிகமாக கொழுப்பில் தங்கி இருந்தவர்கள் யாழ் திரும்புகிறார்கள்.

  Reply
 • பல்லி
  பல்லி

  //நீங்கள் மீண்டம் ஒரு தடவை வெளி(யே)றிய புளொட் காரரின் புதியதொரு உலகம் புத்தகத்தை வாசியுங்கள். சுயவிமர்சனம் செய்த எத்தனைபேரை உப்புக்கண்டம் போட்டார்கள் என்று தெரியும்//
  வாசிக்க இனி ஏது நேரம்; ஆகையால் அந்த ரகசியத்தை திருமலை சொல்லுங்கோவன்; அது சரி புதியதோர் உலகத்தை எழுதியது திருமலையும் திருசிற்றம்பலமுமா?? ஏனெனில் அதைகூட கழகத்தை விட்டு வெளியேறிய சிலர்தான் எழுதியதாக சிலர் சொன்னார்களே, அப்படியாயின் அதுவும் மாயா சொல்லிய சுய விமர்சத்தில்தானே அடங்குகிறது, பல்லியும் பலருடன் பழகிய வகையில் கழகத்தினர்போல் யாரும் சுயவிமர்சனம் செய்யவும் இல்லை, அதேபோல் மிக தெளிவான அரசியல் சமூக பார்வையும் அவர்களில் பலருக்கு உண்டு; இதில் இன்றும் பலர் மாற்று கருத்தாளர்களாக செயல்படுகிறார்கள்;

  Reply
 • பல்லி
  பல்லி

  நேற்றய தினம் GTVயில் ஜெகன் என்பவர்(கடந்த கால குகநாதன் தோஸ்த்த்து) தனது நிகழ்ச்சியில் பிழையான கருத்து சொல்லுபவர்கள் வந்தாலும் தான் இடம் விடுவதாக சொன்னார், பல்லிக்கு அந்த பிழையான கருத்துக்கு அர்த்தம் புரியவில்லை, நண்பர்கள் யாராவது அதுக்கு அர்த்தம் தெரிந்தால் சொல்லவும்; இவருக்கு இந்த பிழையான கருத்தை யார் நிர்னயம் செய்தார்கள்; அவர் சொல்லுவதோ அல்லது அவர் சார்ந்தவர்கள் சொல்லும் கருத்துதான் சரி என ஏதாவது சட்டம் இருக்கா?

  குறிப்பு, இந்த அறிவிப்பாளர் கடந்தகால முள்ளி வாய்க்கல் சுற்றிவளைப்பின் போது நடந்த சதிராட்டம் எதிலும் வரவில்லை; குகநாதன் ரிஆர்ரி ஊடகம் புலி பினாமி பராவிடம் கைமாற மிக முக்கியமாக செயல் பட்டவர்தான் இவர், இருந்த போதும் ஒருசில மாதகலமே இவரை ரிஎன்ரி (புலி) அறிவிப்பாளராக வைத்திருந்தது, பின்பு தானுண்டு தன் பிழைப்பு உண்டு என இருந்த இவர் தற்போது மீண்டும் ஒரு புலம்பெயர் தேச சதிராட்டத்தை ஊக்குவிக்க களம் இறங்கியிருக்கிறாரா? அல்லது இறக்க பட்டாரா?? இந்த கட்டுரையாவது இந்த மனுஸன் வாசிக்க வேண்டாமா??

  Reply
 • kovarthana sarma
  kovarthana sarma

  நீங்கள் ஏன் london இல் இருகிறிர்கள் அங்கை போய் இருக்கலாமே இங்கு வந்து சிங்களவன் கொள்ளுறன் என்று அகதி அடிக்கிறது பின்பு bitish passport எடுக்கிறது இலங்கைக்கு போறது இப்ப சிங்களவன் நல்லவன்

  Reply
 • Naane
  Naane

  சுய விமர்சனம் தேவை தான். ஈழ போராட்டத்தில் எல்லா இயக்கங்களுமே பல பிழைகளை தொடர்ந்து விட்டதற்கு காரணம் சுயவிமர்சனம் இல்லமையே.அதற்காக சுயவிமர்சனம் என்ற பெயரில் விட்ட பிழைகளை திரும்ப திரும்ப கதைத்துக்கொண்டிருந்தால் முன்னோக்கி போவதற்கு அதுவே தடையாகி விடும்.புளொட்டில் இருந்த பலர் அதைத்தான் செய்தார்கள் என்று கேள்விப்பட்டேன்.அது இன்னமும் தொ‌டருது போல்.

  ஜெகன் என்பவரைப் பற்றி எழுதி இருந்தீர்கள்.இவர் ஒருவரல்ல,பல த‌மிழர் உலகம் முழுக்க இதே மனப்பான்மையில் இருக்கின்றார்கள் இவ‌ர்க‌ளுக்கு தம் இருப்பு தான் முக்கிய‌ம்.இவ‌ர்க‌ள் யாருடனும் கூட்டு சேருவார்கள்,யார் களுத்தும் அறுப்பார்கள்.இவர்களே வெற்றி பெற்ற தமிழர்களாக உலகம் முழுக்க வாழ்கின்றார்கள். இவர்களது ஒரே தகமை.சொரணை என்ற சொல் இவர்கள் அகராதியில் இல்லை.

  Reply
 • muthu
  muthu

  திருமலைவாசன் சுயவிமர்சனம் செய்தவர்களை இண்னொருவர் செய்த தப்புடன் சேர்த்து கேவலப்படுத்தாதீர்கள். Naane சுயவிமர்சனம் முன்னோக்கி செல்ல ஒருபோதும் தடையாக இருக்காது. புளொட்டுக்குள் அது பிரச்சினையாக வந்ததென்றால் அங்கு வேற பிரச்சினை போவதாகத்தான் அர்த்தப்படுத்தலாம்
  இதைத்தானே (சுயவிமர்சனம்) புலிசெய்த தப்புக்கு மற்றவர்களும், சில புலிஆதரவாளர்களும் கேட்கிறார்கள் செய்யச்சொல்லி. மூடிவிட்டுப் போங்கோ. பழசுகளை கதைச்சுப் பிரயோசனம் இல்லை, எதிர்காலம் பற்றி மட்டும் கதைப்பம். இவைதான் பதிலா?? சுயவிமர்சனங்களும் பொதுமக்கள் முன் நடக்கும் பட்சத்தில்தான் மாற்றம்வரும்.

  மாண்டார் திரும்பார் எனத் தெரிந்தும்தான் நாங்கள் குழறுகிறோம் செத்தவீட்டில். அப்படி அழுது அழுதுதான் மனப்பாரம் குறைந்து இலேசாகி அதை ஏற்றுக்கொண்டு வாழ்வு தொடர்கிறது. இழந்த ஒரு உறவுக்கே இந்தப் பாடுபடும் எம்மினத்திடம் ஒருமித்த இழப்புகளை மூடிவிட்டுப் போகசொல்லி கேட்கலாமா யார் மறப்பார்கள். பிழைகள் அது யார் எந்த இயக்கம் செய்திருந்தாலும் விமர்சனத்துக்கு உட்பட வேண்டும். மீண்டும் மீண்டும் அதுபற்றிக் கதைக்கப்பட வேண்டும். அதன்மூலம்தான் நாம் ஒருமித்த செயலுக்கு இறங்க வழிபிறக்கும். இல்லையேல் காலம்பூரா குடுமிபிடிதான்

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  ’..பல்லியும் பலருடன் பழகிய வகையில் கழகத்தினர்போல் யாரும் சுயவிமர்சனம் செய்யவும் இல்லை, அதேபோல் மிக தெளிவான அரசியல் சமூக பார்வையும் அவர்களில் பலருக்கு உண்டு; இதில் இன்றும் பலர் மாற்று கருத்தாளர்களாக செயல்படுகிறார்கள்…’

  நானும் அவ்வாறே நினைக்கிறேன். ஆனால் மாற்றுக்கருத்தாலர்களாக செயற்படும்போது ’ஒரிஜினல்’ புளொட் எவ்வாறு செயற்பட்டதோ அவ்வாறே அகங்காரத்துடன் செயற்படுகின்றனர் என்பதனையும் சொல்லத்தான் வேண்டும். மாற்றுக்கருத்து ஒன்றே இவர்களின் கருத்தாக இருக்கிறது.

  Reply
 • kovarthana sarma
  kovarthana sarma

  please dont published this kind of articles any more this will affect asylam seek tamil people dont play with their lives.

  srilanka is nice there is no problem please read this
  14 வயதில் கைதுசெய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதி ஒருவர் எவ்வித வழக்கு விசாரணைகளுக்கும் உட்படுத்தப்படா மல் கடந்த 15 வருடங்களாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று சுதந்திரத்திற்கான மக்கள் மேடை எனும் அமைப்பு திடுக்கிடும் தகவல் அறிவித்துள்ளது.
  பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியற் கைதிகளையும் 20 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் ஊடகவியலாளர் ஜே.எஸ்.திஸநாயகத்தையும் சந்திப்பதற்கு இந்த அமைப்பு சிறைச்சாலைகளுக்கு அண்மையில் விஜயம் செய்திருந்தது. அப்போதே 14 வயதில் சிறுவனாக கைதானவரை 29 வயது இளைஞராக அங்கு சந்தித்தது என அந்த அமைப்பு அறிவித்துள்ளது

  Reply
 • palan
  palan

  கட்டுரையாளர் வவுனியா யாழ்ப்பாண இந்துமயமாக்கப்படுவதையும் அரசுசொல்வதைப்போல் அங்கே தமிழ்மொழி மதிக்கப்படவில்லை என்பதையும் வெளிக்கொணர்ந்துள்ளார். பின்னோட்டம் விடுபவர்கள் இந்த மூலக்காரணியை மையப்படுத்தி விமர்சனம் விடுவது மேற்சொன்ன நோய்களுக்கு மருந்தாக அமையும்.

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  பல்லி,
  ரிரிஎன்னில் ஜெகன் தொடர்ந்து வேலை செய்ய விரும்பாததால், தானாகத் தான் வெளியேறி தொடர்ந்து ஐபிசி (இதுவும் அபகரிக்கப்பட்ட புலியூடகம் தானே) வானொலியில் தொடர்ந்தார்…….

  Reply
 • தேசம்நெற்
  தேசம்நெற்

  Yaro என்பவரின் பின்னூட்டம் தவறுதலாக நீக்கப்பட்டுவிட்டது. தயவுசெய்து மீளப் பதியவும்.

  தேசம்நெற்

  Reply
 • BC
  BC

  //Muthu – பிழைகள் அது யார் எந்த இயக்கம் செய்திருந்தாலும் விமர்சனத்துக்கு உட்பட வேண்டும். மீண்டும் மீண்டும் அதுபற்றிக் கதைக்கப்பட வேண்டும். அதன்மூலம்தான் நாம் ஒருமித்த செயலுக்கு இறங்க வழிபிறக்கும்.//

  மிக சரியான கருத்து.

  Reply
 • Thaksan
  Thaksan

  பல்லியை ஒருபோதும் புலிசார்பாக நான் அடையாளம் காணவில்லை (புலி சார்பாக என்பது புலிகளின் கடந்தகால செயல்களை நியாயப்படுத்தும் நபராக). மாயாவின் அஞ்சலி தொடர்பான கருத்து ஏற்புடையதே. சாவுகளை கொண்டாடடுவதும் பயன்படுத்திக் கொள்ளவதும் மனித நாகரீகத்திற்கு இழுக்கானது. துரதிஸ்டவசமாக புலிகள் இதனையே வீரமாகவும் தியாகமாவும் கற்பிதம் கொண்டிருந்தார்கள். நம்ப வைத்தார்கள். இதனை தங்களுக்கு வசதியாக பலரும் நம்பினார்கள் அல்லது நம்புவதுபோல் நடித்து கொண்டார்கள். தங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படாத வரைக்கும் கொலைகளை நியாயப்படுத்திய சமூகத்தின் பிரதிநிதிகளாகவே நாங்களும் வாழ்ந்திருந்தோம் என்பதுதான் அருவருப்பானது. வாழ்வை நேசிக்க தெரியாதவனால் விடுதலையின் அர்த்தத்தை எப்படி புரிந்து கொள்ள முடியும்?

  Reply
 • santhanam
  santhanam

  ஏன் பல்லி வவுனியனின் கருத்திற்கு பின்னோட்டம் எழுதவில்லை ஓரு முஷ்லிம் போராளியின் எழுத்துருவாக்கமான புதியதோர் உலகத்திற்கு பின்னோட்டம் விட்டுள்ளீர்.அதில் சொல்லபட்ட இந்தியமேலான்மையின் தலையீடு இலங்கையின் இனமுரண்பாட்டு சிக்கல் அது எவ்வாறு நகரும் என்ற யதார்த்ததை 1985ல் எழுதப்பட்டுவிட்டது.

  Reply
 • பல்லி
  பல்லி

  வவுனியன் கட்டுரை அவரது அனுபவம்; அதை இன்றய தேவைகருதி மிக அளகாக எழுதியுள்ளார்; அத்துடன் மிக நிதானமான ஒரு பின்னோட்டத்தையும் தந்துள்ளார், இதில் பல்லியின் பின்னோட்டம் வந்து அது கட்டுரையை திசை திருப்பகூடாது என்பதால் எழுதவில்லை, ஆனால் சுயவிமர்சனம்எவ்வளவு முக்கியம் அதனால் என்ன லாபம் என்பதையும் அத்துடன் எம்மையும் கட்டுரையாளர் தன்னுடன் பயணிக்க வைத்தபடியால் நான் மாயாவின் பின்னோட்டத்தில் இருந்து எனது கருத்தை தொடர்ந்தேன்;அத்துடன் இன்றய தேவை கருதியும் தொடர்ந்தும் மக்களை ஏமாற்ற முடியும் என ஒரு ஊடகம் புறப்பட்டு இருப்பதால் ஜெகனை இதில் கொண்டு வந்தேன்; புதியதோர் உலகம் தேசத்தில் 100தடவைக்கு மேல் பேசபட்ட ஒரு புத்தகம்; அது பற்றி பலதையும் நாம் அறிந்த நிலையில் திருமலை அதன் அர்த்தம் எமக்கு புரியவில்லை திரும்பவும் ஒருக்கா படியுங்கோ என பரவசபட்டதால் அதை தொட்டேன்;

  //ஓரு முஷ்லீம் போராளியின் எழுத்துருவாக்கமான புதியதோர் // இது சரியான தகவலாக இருக்க முடியாது என நினைக்கிறேன், இருந்தால் அதை தெரிந்து கொள்கிறேன்; சந்தானம் நான் எழுதுவதை விட பலரது பின்னோட்டம் பற்றி ஒவ்வொரு நாளும் நண்பர்களுடன் உரையாடுவேன், அதில் உங்களதும் ஒன்று; ஆனால் நண்பர்களுக்கு கூட பல்லி யாரென தெரியாததால் பல்லிவிடும் தவறையும் விமர்சிப்பார்கள்;அது எனக்கு பயனுள்ளதாகவே அமைகிறது; இதனாலேயே பல்லியை சிலர் புலியாக பார்க்கிறார்கள்;நன்றி தக்ச்சன் உங்கள் பல்லி சார்பான எண்ணத்துக்கு;

  Reply
 • குகபிரசாதம்
  குகபிரசாதம்

  புதியதோர் உலகம் புலிகளால் கொல்லப்பட்ட திருகோணமலையை சேர்ந்த நோபேர்ட் (கேசவன், கோவிந்தன்) என்பவரால் எழுதப்பட்டது.
  விசுவானந்ததேவன் கொடுத்த பணத்தில் அச்சடித்து வெளியிடப்பட்டது. பின்னர் இளங்கோவினால் இரண்டாவது பிரதி அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  புதியதோர் உலகம் மின்நூலாக இங்கே….

  http://noolaham.net/project/01/92/92.pdf

  Reply
 • குகபிரசாதம்
  குகபிரசாதம்

  தமிழன் சேற்றில் நிற்கிறான் என்று பாரதி சொன்னது நூறு வீதம் உண்மை.

  Reply
 • santhanam
  santhanam

  பால எழுதிய சோசலிஷதத்துவமும் கெரிலாயுத்தமும் என்ற புத்தகம்1984ல் எழுதப்பட்டது அது அடேலின் பெயரில் வெளியிடப்பட்டது. அதேபோல தீப்பொறியின் மிக முக்கியநபர் புளொட்டின் தனிநபர்களின் அராஐகத்தை வெளிக்கொனர்ந்து அதன் சிதைவுக்கு வித்திட்டவர் இப்போது மேற்கத்தியநாட்டில் வாழ்ந்து வருகிறார். தமிழ்முஷ்லீம் போராளி ஆனால் இப்ப எழுத நினைத்தால் இருண்டஉலகம் என்றுதான் எழுதவேண்டும்.

  Reply
 • பல்லி
  பல்லி

  குகபிராசதத்தின் தகவல் சரியானதே என நினைக்கிறேன், சந்தானம் சொல்லிய போராளி தீப்பொறியில் இருந்தவர்தான், சமிபகாலத்துக்கு முன்பு கூட தேசத்தில்; என்ன செய்யலாம்; என ஒரு ஒன்றுகூடல் லண்டனில் நடந்தது, அதில் அன்று யான் மாஸ்ற்றர் என திருகோணமலையில் கழகத்துக்காய் வகுப்புகள் நடத்திய இவர் பின்பு கழகத்தின் தவறுகளை சுட்டி காட்ட கழகத்தின் பிறப்பிடமான சுழிபுரத்தில் வகுபுகளை நடத்தினாராம்; அவரேதான் இன்று சந்தானம் சொல்லும் போராளி ரகுமான் என நினைக்கிறேன், இவரும் கேசவனும் மிக நெருங்கிய நண்பர்கள்; இதை எனக்கு ஒரு கழக முக்கியத்தர் சொன்னார்; தன்னை விட இது பற்றி மிக தெரிந்தவர் ஜெயபாலந்தான் எனவும் சொன்னார்; ஜெயபாலன் அன்றே தீப்பொறி நண்பர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி இருந்தாராம்;

  //ஓகஸ்ட் 2ல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘தமிழர்களுடைய அரசியல் எதிர்காலத்தின் குறைந்தபட்ச வரையறை’ என்ற தலைப்பிலான சந்திப்பில் தமிழீழ விடுதலைப் போராட்ட ஆரம்பகால உறுப்பினரும் பின்னர் தீப்பொறிக் குழுவாகச் செயற்பட்டவரும் தீப்பொறியின் வெளியீடாக அமைந்த உயிர்ப்பு சஞ்சிகையின் ஆசிரியருமான ரகுமான் ஜான் (ஜான் மாஸ்ரர்) ஆரம்ப உரையை வழங்கினார்.//

  //எழுத நினைத்தால் இருண்டெளலகம் என்றுதான் எழுதவேண்டும்.//
  எழுதலாம் தப்பில்லை அந்த நிலைக்கு அவரும் ஒரு காரணம்தானே;

  Reply
 • குகபிரசாதம்
  குகபிரசாதம்

  இலங்கைக்கு ஆயிரக்கணக்கானோர் ஆயிரம் வருடங்களாக வள்ளங்களில் வந்தார்கள் போனார்கள். ஆனால் இலங்கையர் இன்னமும் இன்றும் அதிகமான நாட்டுப் பற்றோடு இலங்கையில் வாழ்கிறார்கள்.

  Reply
 • Naane
  Naane

  தமிழீழ போராட்ட வரலாற்றில் வெளிவந்த படைப்புகளில் மிகவும் சிறந்தது ‘புதியதோர் உலகம்’ தான் என்பதில் எனக்கு எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.சில அல்லது பல உண்மைக்கு புறம்பான விடயங்கள் இருந்தாலும் மிகவும் நேர்த்தியான அழகான ஒரு இலக்கிய படைப்பு என்பதை எவரும் மறுக்க முடியாது.நான் இந்த நாவலை வாசித்து விட்டு இரண்டு,மூன்று நாட்கள் நித்திரை கொள்ளவே இல்லை. அவ்வளவிற்கு இந்த நாவலின் தாக்கம் இருந்தது.
  என்னுடன் புளோட்டில் ஆரம்பம் முதல் இருந்த ஒருவர் வேலை செய்கின்றார்.இடைக்கிடை அவரிடம் இருந்து உண்மையில் நடந்த விடயங்களை கேட்டு வருகின்றேன் அப்போது அவர் சொன்னார் புதியதோர் உலகம் ஒரு கூட்டுப்படைப்பு என்று.சந்ததியார், ஜான் மாஸ்ரர், நோபேட் அதில் முக்கியமானவர்கள் தீப்பொறி குழுவே அதன் அத்திவாரம் என்றும்,சந்த‌‌தியார் கொல்லப்பட்டதிற்கு இந் நாவலும் ஒரு முக்கிய காரணம்.

  Reply
 • santhanam
  santhanam

  உண்மையில் இந்தவிடுதலையின் சிதைவுக்கு டெல்லிதான் ஒருகாரணியே தவிர வேறுயாரும் இல்லை அதற்கு எதிர்ரானவர்களை களையெடுக்கும் போது உட்கட்சிபோரட்டத்திலிருந்து வெளியேற்றபட்டு இவர்களை கையாண்டார்கள்.நீங்கள் சொல்லும் நபரில்லை தீப்பொறியில் அவரில்லையே தீப்பொறியுமில்லை கோவிந்தனுமில்லை.

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  ‘…உண்மையில் இந்தவிடுதலையின் சிதைவுக்கு டெல்லிதான் ஒருகாரணியே தவிர வேறுயாரும் இல்லை ..”

  சந்தானம் நீங்கள் ஈழவிடுதலையின் சிதைவைச் குறிப்பிடுகிறீர்களா அல்லது புளொட்டின் சிதைவைச் சொல்கிறீர்களா?

  Reply
 • vavuniyan
  vavuniyan

  என் கட்டுரையின் நோக்கம் எந்த மக்களையும் புண்படுத்துவதல்ல. நான் யாழ்ப்பாண மக்களுக்கு எதிரானவனுமல்ல. ஆனால் யாழ் சிந்தனை என்ற கருத்தியலுடன் என்றுமே உடன்பட்டவனுமல்ல. வவுனியா சென்று அந்த மக்களுடன் பேசியபோது அவர்களின் மனநிலையின் வெளிப்பாடே அத்தனையும். 60களில் வன்னியில் யாழ்ஓட்டிச்சங்கம் இருந்ததாக வரலாறு கூறுகிறது. அன்றய மனோநிலையில் மக்கள் இருப்பதை உணர்ந்தே இதை வெளிக் கொண்டுவந்தேன். வன்னியிலும் ஓர் கருணா உருவாகி விடுவாரோ என்கின்ற கவலை எனக்குள்ளே.

  தேசம்நெற்றில் பின்னோட்டம் விடும் பலருக்கு அரசியல் பின்னணி இருப்பதால் இது போன்ற சமூக அரசியல் குழப்பங்களை சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு இவர்கள் மூலம் அறியத்தருவதே என் நோக்கம்.

  அரசு தமிழ் மொழிக்கு சம அந்தஸ்த்து கொடுத்துள்ளதாக பிரச்சாரம் செய்கிறது. கோட்டையிலே யாழ்தேவி புறப்படுமுன் சிங்கள மொழியிலேயே அத்தனை அறிவிப்புகளும் செய்கிறார்கள். யாழ்தேவியில் பயணிக்கும் பெரும்பான்மையினர் தமிழ் மொழி பேசுபவர்கள். இதுபோன்ற இடங்களிலும் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டால் நாட்டில் எங்கே தமிழுக்கு சம அந்தஸ்த்து என்பதே இக்கட்டுரை வாயிலாகக் கேட்கும் கேள்வி.

  ஐரோப்பியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நாடுகளில் குறிப்பாக ஆபிரிக்க நாடுகளில் அவர்களின் நில எல்லைகள் மாற்றப்பட்டு கலை கலாசாரங்கள் சிதைக்கப்பட்டு நூற்றுக்கணக்கான மொழிகள் வரலாற்றுத் தடயங்களே இன்றி அழிக்கப்பட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதே நிலை எம் கிராமங்களுக்கும் வந்துவிடக்கூடாது என்பதும் இக் கட்டுரையின் நோக்கங்களில் ஒன்று.

  Reply
 • Thaksan
  Thaksan

  “வங்கம் தந்த பாடம்” (முகுந்தனால் எழுதப்பட்டது)என்ற புளொட் 1983ல் வெளிட்ட முன்னெச்சரிக்கையை உள்வாங்க புளொட் உட்பட யாரும் அன்று தயாராகியிருக்கவில்லை என்றே நம்புகிறேன். 84ல் புளொட்க்கு கப்பலில் வந்த ஆயுதங்களை இந்திய ‘றோ’ கைப்பற்றியபோதே இந்தியாவின் உள்நோக்கத்தை விடுதலை அமைப்புகள் உணர்ந்திருக்க வேண்டும். இந்திரா காந்தியின் ஜே.ஆர். மீதான கசப்புணர்வே இலங்கையை தனது கைப்பிடிக்குள் வைத்திருக்க ஈழ விடுதலை இயக்கங்கள் பயன்படுத்தப்பட்டது. இலங்கையில் பிரிவினையை ஏற்படுத்தி தனி ஈழம் அமைப்பது இலங்கையை விட இந்தியாவுக்கே ஆபத்தானது என இந்தியா கருதுவதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. இந்தியாவின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கக்கூடிய அமைப்பாக டெலோவும் புலிகளுமே ‘றோ’வினால் அடையாளங்காணப்பட்டன. இதில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவே புலிகள் சகோதர படுகொலையை டெலோவில் ஆரம்பித்தார்கள். வரலாற்று சம்பவங்களை நிதானித்து ஆராயும் எவருக்கும் புலிகளின் இராணுவ வளர்ச்சியும் அதன் ஒட்டுமொத்த அழிவும் ஆச்சரியத்தை தந்துவிடாது. இந்தியாவை ஈழத் தமிழினம் தனக்காக பயன்படுத்தியிருக்ககூடிய அதியுச்ச சந்தர்ப்பம் 1987ல் உருவான இலங்கை-இந்திய உடன்பாடே. புலிகளின் அரசியல் வங்குரோத்து ஏக பிரதிநிதித்துவம் என்ற குறுகிய வட்டத்திற்குள் அவர்களை சுழற்றியடித்தது. ஒரு இனத்தின் சுதந்திர வாழ்வே தங்களால் துவம்சம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை 2009 மே 18 வரை அவர்களால் உணர முடியவில்லை. தங்களின் வசதிக்காவும் வாழ்வுக்காகவும் சொந்த இனத்தின் மீதான அதிகாரத்துக்காகவும் அவர்கள் அந்த இனத்தின் அழிவை பணயம் வைத்தார்கள். சரணடைந்து தலையில் கைக்கோடரியால் கொத்தப்படும்வரை கனவுகளில் மிதந்திருந்தார்கள் என்பதற்கு அவர்களின் ஊடகங்களே ஆதாரம். இவ்வளவு அழிவுகளை சந்தித்தபோதும் நடைப்பிணங்களாக அலையும் எமது உறவுகளினதும் இனத்தினதும் இருப்பிலும் வாழ்விலும் நம்பிக்கையை வளர்த்து> ‘மீண்டும் மிடுக்குடன்’ வாழ்வை எதிர்கொள்ள வைப்பதே எமது வாழ்வின் அர்த்தமாக இருக்கும். எம் முன் பல சவால்கள் மலைபோல் தெரிகின்றன. கலங்கத் தேவையில்லை. மக்கள் பலமிருந்தால் மலை முகடுகளும் தெறிக்கும். வாழ்வை நேசிப்போம். மனிதத்தை கொண்டாடுவோம்.

  Reply
 • பல்லி
  பல்லி

  //“வங்கம் தந்த பாடம்” (முகுந்தனால் எழுதப்பட்டது)என்ற புளொட் 1983ல் வெளிட்ட முன்னெச்சரிக்கையை உள்வாங்க புளொட் உட்பட யாரும் அன்று தயாராகியிருக்கவில்லை//
  இன்றும் தயாராய் இல்லை;
  ஆனால் உங்கள் பின்னோட்டம் மீண்டும் தக்ச்சனுக்கு பல்லியை சபாஸ் போட வைத்துள்ளது; மேலே குறிப்பிட்ட விடயம் தவிர்த்து;

  Reply
 • santhanam
  santhanam

  //ஈழவிடுதலையின் சிதைவைச் குறிப்பிடுகிறீர்களா அல்லது புளொட்டின் சிதைவை………//
  இரண்டையும் தான் நான் சொல்கிறேன்.

  சீனா பாகிஸ்தான் போன்ற வெளிநாடுகளின் இலங்கை மீதான ஆதிக்கத்தைக் குறைக்கும் பொருட்டுப் போர்க்காலத்தில் இலங்கைக்கு இந்தியா ஆயுதங்களை வழங்கியது உண்மையே. அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதுமட்டுமன்றி யுத்த காலத்தில் இந்தியா கப்பல்களையும் மற்றும் புலனாய்வு வசதிகளையும் இலங்கைக்கு வழங்கியதும் உண்மையே. இவ்வாறு இந்திய கொள்கை ஆய்வு மத்திய நிலையத்தின் அங்கத்தவர்களில் ஒருவரான பேராசிரியர் பிரம்மா செல்லச்சாமி தெரிவித்துள்ளார் எனினும் சரணடைந்த புலி உறுப்பினர்களும் அவர்களின் குடும்பத்தினரும் கொலை செய்யப்பட்டனர். இதற்கு இந்திய தேசிய புலனாய்வு துறையினர் பெரும் ஒத்துழைப்பு வழங்கினர்

  Reply
 • மாயா
  மாயா

  //Thaksan on October 22, 2009 7:24 pm “வங்கம் தந்த பாடம்” (முகுந்தனால் எழுதப்பட்டது)என்ற புளொட் 1983ல் வெளிட்ட முன்னெச்சரிக்கையை உள்வாங்க புளொட் உட்பட யாரும் அன்று தயாராகியிருக்கவில்லை என்றே நம்புகிறேன். 84ல் புளொட்க்கு கப்பலில் வந்த ஆயுதங்களை இந்திய ‘றோ’ கைப்பற்றியபோதே இந்தியாவின் உள்நோக்கத்தை விடுதலை அமைப்புகள் உணர்ந்திருக்க வேண்டும்.//

  ” வங்கம் தந்த பாடம் ” சந்ததியாரால் எழுதப்பட்டது. முகுந்தன் (உமா) அவர்களால் அல்ல. இப் புத்தகத்தில் குறிப்பிடும் முன்னெச்சரிக்கை புளொட்டுக்கு இருந்தது. ஆனாலும் , இப் புத்தகத்தை வெளியிடுவதில் உமாவுக்கு உடன்பாடு இருக்கவில்லை. அது இந்தியாவை பகைக்கும் செயலாக கருதினார். இந்தியா குறித்த சந்தேகப் பார்வை உமாவிடம் இருந்தது. எனவேதான் இந்தியா ஏனைய இயக்கங்களை நம்பிய அளவுக்கு , புளொட்டை நம்பவில்லை. அதை இந்தியாவும் உணர்ந்தே இருந்தது. எனவேதான் புளொட் , சிங்கள பாட்டாளி மக்களோடு இணைந்து ஒரு வர்க்கப் புரட்சியை முன்னெடுக்க வியூகங்களை வகுத்தது. அதற்காக ´தமிழீழத்தின் குரல்´ வானோலியின் சிங்கள சேவை உருவானது. இவ் வானோலி போராளிகளின் முதலாவதும் , தமிழ் – சிங்கள – ஆங்கில மொழிகளில் ஒலிபரப்புகளை செய்த வானோலியுமாகும். தவிர சிங்கள போராளிகளோடு உறவை வளர்த்து , பயிற்சிகளையும் தமிழ் நாட்டில் வழங்கியது.

  புளொட்டுக்கு வந்த ஆயுதக் கப்பல் பிடிபட்ட காரணம் வேறு. ஆயுதம் வாங்கும் போது இந்திரா காந்தி அவர்கள் உயிரோடு இருந்தார்.அவர் அதற்கான ஒப்புதலை மறைமுகமாக கொடுத்திருந்தார்.புளொட் குறைந்த விலைக்கு சீன ஆயுதங்களை வாங்கி , பஞ்சாப் காகித ஆலையொன்றின் முகவரியிட்டு சென்னை துறைமுகத்தில் இறக்கி கொண்டேனர்களில் கொண்டு செல்லும் விதமாக ஒரு திட்டம் தீட்டி ஆயுதங்களும் ஏற்றப்பட்டன. ஆயுதத்தை வாங்கி ஏற்றும் போது இந்திரா அவர்கள் உயிரோடு இருந்தார். ஆயுதம் சென்னைக்கு வரும் போது இந்திரா அவர்கள், தனது பாதுகாப்பு அதிகாரியான சீக்கியர் ஒருவரால்(பஞ்சாப் நாட்டவரால்) கொல்லப்பட்டு இருந்தார். இந்திரா கொலையின் பின் ஏற்பட்ட மாற்றங்கள் , பஞ்சாப் முகவரியிட்ட கொண்டேனர் , சென்னையில் ஏன் இறக்கப்படுகிறது என ஏற்பட்ட சந்தேகத்தை கொடுத்தது. அல்லது புளொட்டில் இருந்து பிரிந்த சந்ததியாரின் தகவல் காரணமாக ஆயுதங்கள் பிடிபட்டன என்பதே புலாய்வு தகவலாக இருந்தது.இந்த ஆயுதங்கள் குறித்து சந்ததியாரும் அறிந்தே இருந்தார் என்பது முகுந்தன் எனப்படும் உமா மகேஸ்வரனால் என்னிடம் சொல்லப்பட்டது. எனவேதான் சந்ததியார் வடபழனியில் வைத்துக் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார்.

  ஆயுதங்கள் துறைமுகத்தில் கைப்பற்ற போது , அதை திடீர் முற்றுகையிட்டு சென்னைத் துறைமுகத்திலிருந்து கடத்த புளொட்டில் இருந்த சிலர் முயன்ற போது அதை உமா மகேஸ்வரன் தடுத்தார். இது பெரும் பாதகம் ஒன்றை உருவாக்கும் என கடுமையாக வாதாடினார். அன்று அவர் அதை எதிர்க்காமல் விட்டிருந்தால் , ராஜீவின் கொலை போன்ற ஒரு முட்டாள்தனத்தை அன்றே புளொட் செய்து மாட்டியிருக்கும்? (ஆனால் மாலைதீவு விடயத்தை மட்டும், ஏன் முட்டாள் தனமாக செய்தார்கள் என்பது என்னிடம் இன்னும் கேள்விக் குறியாகவே இருக்கிறது?)

  இதில் புளொட் கோட்டை விட்டது என்றே சொல்லலாம். இந்த ஆயுதங்கள் வரும் வழியில் , கப்பல் கொழும்பு துறைமுகத்தில் , ஒரு மாதம் நின்றே சென்னை வந்தது. அதை கொழும்பிலேயே இறக்கியிருக்கலாம். அதற்கான வாய்ப்பும், வசதியும் இருந்தது. அந்த ஆயுதம் கிடைக்காதது, புளொட்டின் கெட்ட நேரமோ இல்லை மக்களின் நல்ல நேரமோ நானறியேன்? புளொட்டும் ஒரு புலியாகி இருருக்கலாம். அதாவது இந்தியாவின் உதவியோடு அழிக்கப்பட்டிருக்கலாம். காரணம் , புளொட் சீன கமியூனிசத்தில் பயணிக்கத் தொடங்கியிருந்தது?

  Reply
 • குகபிரசாதம்
  குகபிரசாதம்

  வங்கம் தந்த பாடம் முகுந்தன் எழுதவில்லை. அது சந்ததியாரால் அச்சிடப்பட்டு புளட்டின் பெயரில் வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்தை இந்திய உளவு நிறுவனங்களிடம் பல இயக்க தலைமைகள் கொடுத்து தமது விசுவாசத்தை காட்ட, பின்னர் இந்திய உளவு படையினர் உமா மகேஸ்வரனிடம் விசாரித்ததால் உமா மகேஸ்வரன் இந்த புத்தகத்தை புளட்டின் பெயரை போடாமல் வெளியிட்டிருக்கலாம் என்று கடிந்து கொள்ள வேண்டி நிலைமை ஏற்பட்டது

  Reply
 • Naane
  Naane

  டெல்கியின் சதி
  இதுவரை பலருக்கு தெரியாததை சொல்ல நினைக்கின்றேன்.எனக்கு தெரிந்தது மட்டும்.றோ,சி பி ஜை, ஜை பி, இது மூன்றுமே இந்தியாவில் இருக்கும் புலனாய்வுத்துறை.சி பி.ஜை உள்ளூர் அலுவல் மட்டும்,ஜை பி முக்கியபுள்ளிகளின் பாதுகாப்பு மட்டும் ,றோ சர்வதேச புலனாய்வுத்துறை. இது மூன்றும் சேர்ந்து தான் இந்தியாவை நடாத்துது. ஆனால் இவர்களுக்கிடையிலேயும் யார் பெரியவர் என்ற போட்டி உள்ளது உண்மை.இய‌க்கங்கள் தொடங்கும் போது இப்படி எல்லாம் இருக்கு என்று எங்கட புண்ணாக்குகளுக்கு ஒன்றும் தெரியாது.

  ப‌ய‌ங்க‌ர‌வாத‌ம் என்ற‌ சொல்லே ப‌ல‌பெய‌ருக்கு தெரியாது.சிங்களவ‌னுக்கு அடிக்க வேணும் என்ற மனப்பான்மையே பலருக்கு இருந்தது.இயக்கம் மாத்திரம் அல்ல தமிழனுக்கும் அதுதான் இருந்தது.

  சிங்கள பொலிசில் இருந்து ஓடித்தப்ப இந்தியா போனால் புதியதோர் உலகம் கண்ணில் பட்டது.தமிழ் நாட்டு அரசியல்வாதிகளில் பல பேருக்கு இங்கிருந்து போனனீர்கள் போனால் போனா இடத்தில் ஒழுங்காக வேலை செய்யாமல் ஏன் பிரச்சனை ப‌ண்ணுகின்றீர்க‌ள் என்ற உபதேசம் வேறு.

  பின்னர் எப்படி போராட்டம் இவ்வளவு பரிமாணத்துடன் முன்னெடுத்தது.அதுதான் டெல்கியின் சதி. நல்ல படம் பார்த்த மாதிரித்தான் எமது போராட்டமும் வளர்ந்தது.

  புலி,புளொட்,ஈபீர்ல்ஃப்,டெலோ,ஈரோஸ் இவர்கள் வகித்த பங்கு,இந்தியா இவர்களை அள‌விட்ட முறையில் தான் அடங்கியிருந்தது.தலைவர்களும் அவ்விதமே,நான் எழுதிய ஒழுங்கும் அதுவே.

  இதில் பின்ன‌ர் என்ன‌திற்கு எவ‌ர் என்ற‌ ஒரு க‌ணிப்பையும் போட்டார்க‌ள்.முழு இய‌க்க‌ங்க‌ளுக்கும் பயிற்சியும் கொடுத்தார்கள்.84 ம் ஆண்டு இந்தியா ருடே யில் ஒரு கட்டுரையும் படங்களுடன் வ‌ந்த‌து .புலிகளை மட்டும் தவிர்த்து,ஆனால் புலிக‌ள் தாம் இந்தியாவில் ப‌ய‌ற்சி எடுக்கின்றார்க‌ள் என்று ஒரு போதும் ஓப்புக்கொள்ள‌வில்லை.டெலோவை இந்தியாவின் கைக்கூலி என பாலசிங்கம் இடைக் இடை சத்தம் போட்டுக் கொண்டுடிருந்தார். இவற்றில்கெல்லாம் எடுபட்ட மொக்கு கோஷ்டிகள்.

  பிரபாகரனின் திட்டம் எல்லாவற்றிற்கும் ஆமா சாமி போட்டு இந்தியாவிடம் இருந்து எடுப்பதையெல்லாம் எடுத்துக்கொண்டு தருணம் வரும் போது மாறிவிட வேண்டும் என்று. படித்தது என்னவோ அவ்வளவுதான். இந்தியா யார் என்று இன்னமும் தெரியாமல் வெளிநாட்டில் இருக்கும் நாமெ பலர் நினைக்கும் போது அப்போது தலைவர் அப்படி நினைத்தது பர‌வாயில்லை. அதுக்குக் தானே இப்ப தலை கொடுத்திருக்கின்றார்.

  உம்= திம்பு பேச்சு வார்த்தை முறிவடைந்ததும் ராஜீவின் கட்டாயத்தில் அனைத்து தலைவர்களும் டெல்கிக்கு அழைக்கபட்டார்கள். அருண் நேரு தலைமையில் கூட்டம்(அன்றுதான் பல வருடங்களுக்குப்பின் உமா பிரபா சந்தித்தது.இருவரும் கதைக்கவில்லை). அருண் நேரு பேசுவதையே கேட்டுக்கொண்டிருந்த பிரபா தமிழில் பெரிதாக மற்ற தலைவர்களும் கேட்கும்படி பாலசிங்கத்திடம் சொன்னார்” இவன் சொல்லுகின்ற எல்லாத்திற்கும் தலையாட்டுங்கோ, ஆனால் நாங்கள் அங்கு அடிப்போம்”

  உமா, சொல்லத் தேவையில்லை விளக்கமானவர். பிரபாகரனே இவரை நம்பி புலிகளுக்கு செயலதிபராகப் போட்டவர். எத்தனையாயிரம் பேர் இவரை நம்பி போராட்டத்திற்கு போனார்கள்.நுணலும் தன் வாயால் கெடும் என்றதை நிரூபித்தவர். யாரையும் மதியாதவர்,எனக்கு தெரியும் நீ யார் எனக்கு சொல்ல என நினைப்பவர். றோ நம்பாத பயந்த ஒரே தலைவர் இவர்தான். டபுள் கேம் மன்னன். ஒரே நேரத்தில் பலருக்கு அல்வா கொடுக்க நினைததால் ஒருவரும் நம்பவில்லை

  உம்+ புளொட்டிற்கு வந்த ஆயுதங்கள் ப‌றித்த‌து,அதே நேர‌ம் ம‌ற்ற‌ இய‌க்க‌ங்க‌ளுக்கு ஆயுத‌ம் கொடுத்த‌து.. தமிழ் நாட்டில் தங்கு தடையின்றி மற்ற இயக்கங்களின் நடவடிக்கைகள், புளொட்டிற்கு மகா அலுப்பு. ராமதாஸ் கேட்கவே வேண்டாம்

  மற்ற மூன்றும் றோவுடனேயே நின்றன. ஈரோஸ் தனித்தன்மை கொண்டதாயினும் தனித்து செயற்படக்கூடிய நிலையில் இருக்கவில்லை.டெலோ இராணுவமயப்படுத்தப்பட்ட இயக்கம். றோவால் வளர்கப்பட்டது. தனித்துவம் ஏதும்? வெகு தூரம்.

  ஈ பி ர் ல் ஃப்.‍ அப்பழுக்கற்ற‌ தலைவன். அரசியல்மயப்படுத்தப்பட்ட போராளிகள். தனித்துவமானவர்கள். இருந்தும் ஏன் தோற்றார்கள். றோ வை முற்றும் முழுதும் நம்பினார்கள். ஆயுதத்தை விட்ட அரசியலைமட்டும் நம்பினார்கள். அனைத்து இயக்கங்களையும் ஒற்றுமைப்படுத்த எடுத்த முயற்சியில் ஒற்றுமைக்கு வரமாட்டோம் என்று நின்ற புலிகளை உள்ளிழுத்து புளொட்டை வெளியில் விட வேண்டும் என்ற சுயநலத்தால் அழிந்தவர்கள்.(அரசியலற்ற புலிகள் நிலைக்க மாட்டார்கள் என்று நம்பினார்கள், எவ்வளவு உண்மை.ஆனால் அதற்கு முதல் தங்களை அழிக்க போகின்றர்கள் என்பதை அறியாமல் விட்டு விட்டார்கள்)

  Reply
 • santhanam
  santhanam

  டெல்கியின் சதி
  நனானி இந்த உண்மையை தான் நாங்கள் உரக்க கோசமாக சொல்ல வேண்டும். அண்மையில் யாழ் பத்திரிகையாளனை சந்தித்தபோது அவர் சொன்ன விடயம் நாங்கள் கொலையை கண்டால் ஓடும் இனம் ஒரு கொலையை பலவருடம் கதைப்போம் ஆனால் அது இப்ப மலினமாகிவிட்டது இதற்கு இந்தியாதான் காரணம் என்று அழுத்தமாக சொன்னார்.

  Reply
 • chandran.raja
  chandran.raja

  /சிங்களவனுக்கு அடிக்கவேணும்….இயக்கம் மாத்திரமல்ல தமிழனுக்கும் அது தான் இருந்தது// நானி
  இதுவே நடந்த உண்மை.ஆயுதமோகமும் வெளிநாட்டு பணமும் இதை மேலும் உசுப்பேத்தி விட்டது. இந்தியா பல்லின மக்களையும் பலமதங்களையும் கொண்டநாடு தனக்கு பக்கத்தில் ஒரு சின்னத் தீவு இரண்டாக பிரிவதற்கு அனுமதியாது என்பதை விளங்கிக்கொள்வதற்கு ஒருபோதும் அனுமதியாது என்பதற்கு பெரிய படிப்பு தேவையில்லை. அனுமதித்தால் இந்தியாவில் என்ன வினைகளை தோற்றிவிக்கும் என்பதையும் அறிவார்கள்.

  புலிகளை மேற்குலகம் தடைசெய்தாலும் மறைமுக ஆதரவை தமிழருக்கு வழங்கிக் கொண்டேயிருக்கும். காரணம் இந்தியா விரும்பாத தேவை மேற்கலகத்திற்கு விரும்பியே ஆகவேண்டும். கிழக்கிந்திய கொம்பனி சிற்றரசர்களை பிரிவினை ஏற்படுத்தி கூறுபோட்டு இறுதியில் தமக்கு சொந்மாக்கினார்களோ அந்த தந்திரம் இன்னும் மாற்றம் அடையவில்லை. இலங்கையில் வர்க்கப் போராட்டமும் வராது ஐக்கிய இலங்கையும் வராது எனநினைத்தால் தமிழன் அழிந்து போவதையும் கிழக்காசியாவை காட்டிக் கொடுப்பதையும் தவிர்கமுடியாது என கணிப்பிட வேண்டியதாகவுள்ளது.

  Reply
 • மாயா
  மாயா

  // இந்திய உளவு படையினர் உமா மகேஸ்வரனிடம் விசாரித்ததால் உமா மகேஸ்வரன் இந்த புத்தகத்தை புளட்டின் பெயரை போடாமல் வெளியிட்டிருக்கலாம் என்று கடிந்து கொள்ள வேண்டி நிலைமை ஏற்பட்டது – குகபிரசாதம் on October 23, 2009 5:12 am //

  வங்கம் தந்த பாடம் , சந்ததியாரால்தான் வெளியிடப்பட்டது. உமா மகேஸ்வரனால் (முகுந்தன்) வெளியிடப்படவில்லை. இப் புத்தகம் வெளி வந்தது குறித்து உமா சினத்தோடு இருந்தார். சந்ததியார் , புளொட்டில் இருந்து வெளியேறினாலும் , அவரை புளொட்டாகவே இந்தியா கருதியது. இது கியூ பிரான்ஜுக்கு தெரிய வந்தே இருந்தது.

  அதனால்தான் சந்ததியார் கொல்லப்பட்டதை , இந்தியா பெரிதாக கண்டு கொள்ளவில்லை. சந்ததியார் புளொட்டை , தர்ம சங்கடத்தில் சிக்க வைக்க , இந்த புத்தகத்தை வெளியிட்டார் என நினைக்கிறேன். இப் புத்தகம் , இந்தியாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. சந்ததியாரால் , புளொட்டின் நடவடிக்கைகள் தர்ம சங்கடத்துக்கு ஆளாகாலாம் எனும் காரணமும் , அவரை கொலை செய்ய தூண்டியது.

  இப்படியான சில கொலைகளையே (200 முதல் 300 வரையிலான உட் கொலைகள்) புளொட் தோழர்களால் , ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனவேதான் தமிழகத்தில் இருந்த பலர் வெளியேறினர். சிலர் மட்டும் தொடர்ந்து இருந்து, சமாதான காலத்தில் இலங்கைக்கு சென்றனர். இலங்கையிலும் பலர் வெளியேற இவைதான் காரணமாயின.

  இந்த 200 – 300 க்கே புளொட் உடைந்தது. இருப்பினும் புலிகளால் ஆயிரக் கணக்கில் மக்களும் போராளிகளும் கொல்லப்பட்டும் , இன்னும் புலி கோஸம் போடுவோரை நினைத்தால் சொல்ல வார்த்தைகளே வர மாட்டேன் என்கிறது. நீங்கள் எப்போது அதற்காக குரல் கொடுப்பீர்கள்?

  Reply
 • jalpani
  jalpani

  புலிகளை மேற்குலகம் தடைசெய்தாலும் மறைமுக ஆதரவை தமிழருக்கு வழங்கிக் கொண்டேயிருக்கும். காரணம் இந்தியா விரும்பாத தேவை மேற்கலகத்திற்கு விரும்பியே ஆகவேண்டும். கிழக்கிந்திய கொம்பனி சிற்றரசர்களை பிரிவினை ஏற்படுத்தி கூறுபோட்டு இறுதியில் தமக்கு சொந்மாக்கினார்களோ அந்த தந்திரம் இன்னும் மாற்றம் அடையவில்லை. இலங்கையில் வர்க்கப் போராட்டமும் வராது ஐக்கிய இலங்கையும் வராது எனநினைத்தால் தமிழன் அழிந்து போவதையும் கிழக்காசியாவை காட்டிக் கொடுப்பதையும் தவிர்கமுடியாது என கணிப்பிட வேண்டியதாகவுள்ளது”.-chandran.raja

  நன்றே சொன்னீர்கள். இதிலிருந்து தப்பி பிழைக்க வேண்டும் எனில் சிங்கள அரசே தமிழ்மக்களின் அரசியல் உரிமைகளை அரசியல் சாசனத்தின் மூலம் உறுதி செய்ய வேண்டும். தமிழரையும் சிங்களவரையும் மோத விட்டு தமது நலன்களை அடைய வாய்ப்புக் கொடுக்க கூடாது எனில் சிங்கள அரசின் கைகளிலேயே அது உள்ளது. ஆனால் உங்களைப் போன்றவர்கள் தமிழர்கள் பிழை என்றுதான் பிரச்சாரம் செய்கிறீர்கள். அடுத்ததாய் தமிழனுக்கு என்ன உரிமை என்ற கேள்வியையும் கேட்பீர்கள்.

  Reply
 • பல்லி
  பல்லி

  Naaneயின் கருத்து புதிதாக உள்ளது நான் இதுவரை கேள்விபடாத விடயங்கள் அவர் சொல்வது, அதைவிட இதே தேசத்தில் படித்தேன் கழகத்தில் 4000 பேர் பயிற்ச்சி (தமிழகம் டெல்லி லெபனான்) எடுக்கும்போது புலியில் 265 பேர் மட்டுமே தமிழகத்தில் மதுரையை மையமாக கொண்டு பயிற்ச்சி எடுத்தார்களாம், 160பேர் லெபனான் பயிற்ச்சி எடுதார்களாம்; ஆனால் புலி டெல்லிக்கே போகவில்லையாமே; அப்படி இருக்கும்போது உங்கள் வரிசைபடுத்தல் எப்படி சரியாகும்;

  நான் அறிந்தவரை புளட்டின் பல தலைவர்கள் சகோதர யுத்தத்தை தவிர்த்ததே புலிகளின் வளர்ச்சி, 1984 பகுதியில் இன்று புலிக்கு இல்லாத மதிப்பும் மரியாதையும் கழகத்துக்கு இருந்தது; படித்தவர்கள் ஏற்று கொண்டதும் கழகத்தையே; பல்லிக்கும் கழகம் மீது ஒரு நம்பிக்கை இருந்தது; அதையும் விட இந்தியா இறுதிவரை கழகத்தின் செயல்பாட்டை கட்டுபடுத்தியே வைத்துள்ளது என பலர் சொன்னார்களே, அதையும்விட அன்று தளபதிகள் என வர்னிக்கபட்டவர்களும் கழகத்தில்தானே இருந்தனர்; ஆனாலும் கழகம் இருந்திருந்தால் மாயா சொன்னதுபோல் ஒரு முள்ளிவாய்க்கால் இல்லாவிட்டாலும் செட்டிகுளமோ சித்தம்கேணியோ வவனிகுளமோ சீரழிந்திருக்குமோ என்னும் பேச்சையும் எப்படி மறுக்கமுடியும், எது எப்படியோ பலதையும் தெரிந்து கொள்ள எமக்கு இப்படியான விமர்சனம் உதவட்டுமே;

  Reply
 • chandran.raja
  chandran.raja

  தமிழ் தலைவர்கள் பிற்போக்கு தன்மையை கொண்டிருக்கிறார்கள். அல்லது முப்பது வருடங்களும் புலியில் மூழ்கி எழுந்திருப்பார்களா? புலிகளை எப்படித்தான் குற்றம் சாட்டினாலும் இந்த சமூகமும் ஒத்துழைப்பு வழங்காது விட்டால் புலிகள் எப்படி தமது பிடியில் வைத்திருந்திருக்க முடியும்?.
  அரசு எப்பவும் அரசுதான். முதாலிளித்துவ அரசு என்பதை புரிந்துகொண்டால் மிகுதியை விளங்கிக் கொள்வது சுலபமாகயிருக்கும். அதில் ஊழல்லிருக்கும் பொய்யிருக்கும் யுத்தத்தில் பிழைப்பு தேடுகிற கூட்டமாகவே இருக்கும். இதில் விதிவிலக்காக சில மனிதர்கள் வருவதுமுண்டு. அப்படியொரு மனிதராகவே மகிந்த ராஜயபக்சாவை நான் பார்க்கிறேன்.நிற்க.

  யாழ்பாணி நாங்கள் எல்லோரும் இலங்கைத்தீவில் இருக்கிறோம். இதில் எத்தனை பேர் இலங்கைதீவை நேசித்தோம். கட்சியின் போக்குகள் எப்படியிருந்தாலும் இரு பெரியகட்சிகளான ஐக்கியதேசிய கட்சியும் சிறீலங்கா சுகந்திரகட்சியும் தமது கட்சியின் பெயருக்கு முன்னால் தமது இனத்தின் பெயரை சேர்த்ததுயுண்டா? இந்த சிறுபுரிதல்கூட இல்லாதது தானே! கடந்தகால அரசியல் தமிழ்தலைமைகள். இலங்கைதீவில் எமது இனத்தின் பெயரை நாம்வைத்துக் கொண்டு நாமே பிரிவினைக்கு வித்திட்டுகொண்டு உரிமை தா? என்றால் என்றால் என்ன அர்த்தம்.ஆயிரம் வருடம் வாழ்ந்த தமிழ்மூஸ்லீங்களை சிங்கள பகுதிக்கு விரட்டிவிட்ட அனுபவம்மல்லவா? பதிவாகியிருக்கிறது. நாளைக்கு தமிழ் சிறுபான்மைத் தமிழரையும் மலையகத்தமிழரையும் துரத்திவிடமாட்டீர்கள் என்பதற்கு என்ன? உத்தரவாதம் இருக்கிறது?

  புலியையும் பிரபாகரனையும் காப்பதற்கு லட்சக்கணக்கில் ஊர்வலம்போன நீங்கள் மூஸ்லீம் மக்களுக்காகவோ (எமதுஇனம்) சிலபத்து வருடங்களுக்காகவே சிதைந்துபோன வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிற முப்பதினாயிரம் மீன்னவக் குடும்பத்திற்காக மலையக மக்களின் பொருளாதார வாழ்வுவை உயர்த்துவதற்காக ஊர்வலமோ அல்லது ஒருகூட்டத்தை தன்னும் நடத்தியதுண்டா? ஆனபடியால்தான் பிற்போக்கான சிந்தனையுடையது என்கிறேன் நான் திருந்தமாட்டேன் நான் அயல்சமூகத்தை நேசிக்கமாட்டேன். இலங்கைத்தீவில் பக்தி கொண்டிருக்க மாட்டேன். தமிழருக்கு உரியதை தா என்று கேட்டால் இது இனத்தில் கொண்ட பற்றால் அல்ல உங்கள் வர்க்கத்தில் கொண்ட அதிகூடிய சுவாசத்தாலேயே!யாப்பாணி. இனியும் புரியமறுத்தால் யாழ்பாணியை யார்? காப்பாற்றுவர் செல்லுங்கள் யாழ்பாணி. அழிவதைதவிர வேறு வழியில்லை

  சிறுபகுறிப்பு. ஈழம் என்றாலும் இலங்கை. சிங்களம் என்றாலும் இலங்கை. அதற்கும் தேடி ஒரு முடிச்சு போட்டுவிடாதீர்கள்.

  Reply
 • பல்லி
  பல்லி

  :://இந்த 200 – 300 க்கே புளொட் உடைந்தது. இருப்பினும் புலிகளால் ஆயிரக் கணக்கில் மக்களும் போராளிகளும் கொல்லப்பட்டும் , இன்னும் புலி கோஸம் போடுவோரை நினைத்தால் சொல்ல வார்த்தைகளே வர மாட்டேன் என்கிறது. நீங்கள் எப்போது அதற்காக குரல் கொடுப்பீர்கள்?//

  மாயா 200 :300 பேர் தமிழரில் (இலங்கையில்) மிகுதியாக இருக்கும்போது என பல்லி சொன்னால் யார்தான் நம்புவார்கள்;

  Reply
 • குகபிரசாதம்
  குகபிரசாதம்

  வெள்ளி பார்த்த வெங்காயங்களின் சுத்துமாத்து பம்மாத்து பிணக் கணக்கை காட்டி கோடி கோடியாய் காசுசேர்த்து சொகுசா வாழ்வு பூமிக்கே பொறுக்காதலால்தான் கூண்டோடு ஒண்டுமில்லாமல் அழிந்து போனது.
  திமிர் பிடித்த திருகுதாள திருவிழா ஓய்ந்ததால் ஐந்து மாசமாக பிள்ளைகள் எல்லாம் பலி ஆடுகளாக பலியாகாமல் இருக்கிறார்கள்.

  Reply
 • குகபிரசாதம்
  குகபிரசாதம்

  மாயா
  உமா மகேஸ்வரனுக்கும் பிரபாகரனுக்கும் பெரிய வித்தியாசமில்லை. இவர்கள் இருவரும் வேலுபிள்ளை (SJV)செல்வநாயகத்திற்காக காங்கேசன்துறை இடைதேர்தலில் பணியாற்ற போய் சந்தித்து கொண்டவர்கள். அமிர்தலிங்கத்தின் வேண்டுகோளுக்காக இந்த இருவரும்தான் பொத்துவில் கனரத்தினத்தை கொள்ளுபிட்டியில் சுடப்போனவர்கள். பிரபாகரனின் குறி தப்பியதால் காயங்களுடன் தப்பிய கனரத்தினம் மூன்று மாதத்தின்பின் காலமானார்.

  புலிகளுக்கு முன்னரே சக போராளிகளை புளொட் சித்திரவதை செய்ய தஞ்சாவூரில் உள்ள ஒரத்தநாட்டில் சித்திரவதை முகாம் ஆரம்பித்தது நாம் மறக்க முடியாதது.உமா மகேஸ்வரன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை வாங்க வெளுக்கிட்ட முட்டாள். உமா மகேஸ்வரன், பரந்தன் ராஜன், வாமதேவன், இரா வாசுதேவா, கண்ணன், கந்தசாமி, மாணிக்கம்தாசன் போன்ற புளொட்டின் தளபதிகள் எல்லாம் புலிகளின் தளபதிகளை போலவே மக்களை மதிக்காத ஆயுதத்தை நம்பிய மொக்கு முட்டாள்களே தவிர விஷயம் தெரிந்த ஆட்கள் அல்ல இவர்களின் அறிவுக்கு சோவியத் யூனியன் சீனா இந்தியா எல்லாம் ஒன்று தான். இவர்கள் எவ்வளவு அறிவு கெட்ட சுத்த சூனியங்கள் என்று அறிந்து கொள்ள புதியதோர் உலகத்தை வாசிக்கவும் இல்லாவிட்டால் அடுத்தமுறை ரகுமான்ஜானை நேரில் சந்திக்கும் போது கேட்டு தெரிந்து கொள்ளவும்.

  சென்னையில் பிடிபட்ட புளொட்டின் ஆயுதங்கள் எல்லாம் யுத்தகளத்தில் இலங்கை படையினருக்கு எதிராக பயன்படுத்த முடியாதவை. அடைவுகடை கொள்ளை அடிக்கவும் ஆட்களை போடவும்தான் அந்த ஆயதங்கள் பிரயோசனமானவை.

  Reply
 • குகபிரசாதம்
  குகபிரசாதம்

  மாயா
  பாவம் சந்ததியார்
  புளொட்டை சிக்க வைக்கவே வங்கம் தந்த பாடம் வெளியிட்டார் என்று தெரியாமல் அநியாயமாக பழிசொல்ல வேண்டாம். இந்திரா காந்தி இலங்கை பிரச்சனைக்கு என்ன செய்வது என்று முடிவு செய்ய முன்னரே தமிழ் இயக்கங்களுக்கு உத்தரபிரதேசத்தில் பயிற்சி கொடுப்பது என்ற தீர்மானம் இந்திராகாந்தி எடுக்க முன்னரே வங்கம் தந்த பாடம் வெளி வந்துவிட்டது.
  வங்கம் தந்த பாடம் வெளியிடப்பட்டது சந்ததிதியாரின் தனி மனித முடிவும் அல்ல. சந்ததியார் இலங்கைக்கு மற்றைய தீபொறி தோழர்களுடன் சென்று இருந்தால் கந்தசாமியால் சித்திரவதை செய்து கொல்லப்பட்டிருக்கமாட்டார். புளொட்டின் மத்திய குழுவில் சேகர் என்ற றோவின் இரகசிய ஆள் புளொட்டுக்கு தெரியாமலேயே ஆரம்பம் முதல் சகல விடயங்களையும் றோவுக்கு தெரியப்படுத்தி வந்தார் சேகரை கூட றோவென்று தெரியாத முட்டாள்தான் உமா மகேஸ்வரன்

  Reply
 • santhanam
  santhanam

  உமா முட்டால் அல்ல சேகர் தான் ஒரு நக்சல்புரட்சியாளன் என்றுதான் உட்புகுந்தவர் காலப் போக்கில்தான் அவர் றோவின் மிகபெரியபுள்ளி என்பது தெரியும்.

  Reply
 • பல்லி
  பல்லி

  யார் இந்த சேகர் ஒன்றுமே புரியலே பல்லிக்கு;

  Reply
 • Naane
  Naane

  புளொட்டின் முட்டாள் தலைமைகளில் செந்திலையும், பாபுஜியையும் விட்டுவிட்டீர்கள். இஙுகு என்ன பிழை நடந்தது என வடிவாக ஆராயவேண்டும். புலி தொடங்கிய காலம் தொட்டே இவர்களும் அதில் இருந்தவர்கள். ஆயுத்ப்போராட்டத்தை ஆரம்பத்தில் கையில் எடுத்தவர்களெல்லாம் ஏதோ ஒரு வழியில் வன்முறையில் ஈடுபட்டவர்களாகவே இருந்தார்கள். ஆரம்பத்தில் நாங்களே இவர்களை ஒரு மாதிரித்தானே பார்த்தோம். 83 கலவரத்திற்கு முதல் எப்படியும் ஒரு 200 இற்கு குறைந்தவர்களே இப்படியான நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார்கள். இந்த 200 பெயரும் தான் பின்னர் தொடங்கப்பட்ட அத்தனை இயக்கங்களுக்கும் தலைமை வகித்தார்கள். உமா, பிரபா, குட்டிமணி, சிறி தொடக்கம் கிட்டு, ………..மாத்தையா, மாணிக்கம், கந்தசாமி வரை. இவர்களில் பலர் பெரிதாகப் படிக்காதவர்கள் என்பதுதான் கசப்பான உண்மை. 83 கலவரத்தின் பின் இயக்கங்கள் வ‌ளர இதே தலமைகள்தான் தொடர்ந்தும் பல பொறுப்புக்களில் இருந்ததும் புதிதாக வந்த படித்தவர்களை கண்டு பயந்ததும் உண்மை. இதில் ஆகக் கொடுமை என்னவெனில் பல முக்கிய தீர்மானங்கள் இவர்களின் முடிவாகவே இருந்தது. இதில் ஒரு உண்மை சொல்ல வேண்டும் உமா_ பிரபா உடைவில் படித்த உமா படிக்காத பலரையும் (மாணிக்கம், கந்தசாமி, வாமர், செந்தில்) படிக்காத பிரபா படித்த பலரயும்(சிவகுமார், ராகவன், பொன்னம்மான், அய்யர்). புலியின் வளர்சிக்கும்,புளொட்டின் உடைவிற்கும் இவை முக்கிய காரணங்கள்

  புளொட்டில் இருந்த த‌லமைக்கு தலைவர் விசுவாசம், கழக விசுவாசம் முக்கியம். பின்னர் வந்தவர்கள் தமிழ் மக்களின் விடுதலைக்காக கப்பல் ஏறியவர்கள். உமாவிற்கு இருந்த பழையவர்களில் மாற்றம் ஏதும் செய்ய விருப்பமில்லை, அவருக்கு விடுதலையை விட விசுவாசிகள் முக்கியமாக இருந்தார்கள். கடைசியில் விசுவாசிதான் வெடியும் வைத்தது.

  சிறீலங்கா ‌அரசு மட்டும் தான் எதிரி என்றால் புளொட்டின் உட்கட்சிப் போராட்டம் எப்போதோ முடிவிற்கு வந்திருக்கும், புலிகள் கொடுத்த பிரச்சனைகள் உமாவிற்கு சாதகமாகிவிட்டது. உமாவை முட்டாள் என்று யாரும் சொன்னால் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. 84 களில் கொடுத்த பேட்டிகளைப் பார்க்கவும்.இன்று வெளிநாடு வந்தும் பலருக்கு இப்பவும் விளங்காத பல விடயங்களை அப்பவே சரியாக‌ சொல்லியிருக்கு.

  மிகுதி எப்பவும் சந்தர்ப்பம் கிடைத்தால்

  Reply
 • senthil
  senthil

  குகபிரசாதம் பொத்துவில் கனகரத்தினம் கொலையுடன் தான் மாயாவும் கொழும்பை விட்டு தப்பியோடவேண்டிய சூழல் வந்தது. மாயாவும் இந்த கொலையுடன் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும் என நினைக்கிறேன். நாகராசா வாத்தி ரேடியோ சிலோனிலிருந்து தப்பியோடவும் வழிவகுத்தது. இது சரியா மாயா?

  பல்லி, சேகரை ஒரு வருடத்துக்கு முன்னர் ஈரல் கருகி இறந்துபோன முன்னாள் புளொட் உறுப்பினரின் மரணவீட்டில் காணமுடிந்தது. குறித்தவரின் கல்வெட்டை இந்த சேகரே தயாரித்து வடிவமைத்து அந்தியெட்டிகிரியையிலும் வெளீயிட்டிருந்தார். சேகர் புளொட்டின் 21….24 பேர் கொண்ட மத்திய குழுவில் ஒருவராக 1984இல் இணைத்துக்கொள்ளப்பட்டவர். புளொட் உடைவின் பின்னர் பரந்தன் ராஜனுடன் சேர்ந்து ஈ.என்.டி.எல்.எவ் இலங்கைக்கு வந்த போது அமைதிப்படை காலத்தில் திருமலையில் செயற்பட்டவர். பின்னர் அதிலிருந்து விலகி இப்போதும் புளொட் உறுப்பினர்களின் நட்பு ரீதியான தொடர்பில் உள்ளார்.

  எமக்கு ஈழத்தமிழர்களுக்கு தெரிந்ததெல்லாம் கறுப்பாய் இருந்தால் றோ, சிங்களம் கதைத்தால் என்.ஜ.பி, வெள்ளைக்காரனாக இருந்தால் சி.ஜ.ஏ இதுதான் எமது போராட்டத்தின் பொது விதியோ அல்லது புத்தியோ நானறியேன்.

  Reply
 • chandran.raja
  chandran.raja

  தொடுவானம் அது கிட்டயிருக்குமாப் போலதான் இருக்கும். போகபோக தொடமுடியாது என்பதை கண்டுகொள்வார்கள். இதைப் போலத்தான் இயக்கங்களைப் பற்றிய கதைகளும் முடிவில்லாமல் சென்றுகொண்டிருக்கும். என்தம்பி லண்டனில் இருக்கிறார். புளொட்டில் வேலை செய்து யாழ்.கம்பெஸ்சில் படித்துக் கொண்டிருந்தார். அவர் சொன்ன கதையைக் கேளுங்கள். புலிகள் சுடப்போக ஆமிவந்து பதிலுக்கு நின்றவனுக்கு சுட்டு வீடுகளையும் கொளுத்த கிடுகுகள் வாங்கி பாதிக்கபட்டவர்களின் உதவிகளுக்கு தயாராவோம். இந்த கதையை சொல்லி எங்கேயும் வாதாடமுடியுமா? அடுத்த இயக்கத்தில்லிருந்தவர் கேட்பார்.. அப்படியென்றால் சுளிபுரத்தில் ஆறு இளைஞர்களை வெட்டி புதைத்தது என்னமாதிரி? தேடிப் பார்த்தால் எல்லா இயக்கத்திலும் குப்பையை கிழறிகாட்ட முடியும். புலிகளில் இருந்தவர்களில் கூட மனிதநேயம் மிக்கவரை தேடிப்பிடிக்க முடியும்.

  ஆகவே வெஞ்சினம்கொண்ட இளையதலைமுறை ஆயுதத்தை கையில் எடுத்து மற்றவர்களையும் அழித்து தாமும் அழிந்தது கண்கூடான காட்சி. இனி..கட்சிக்கு (எந்தக்கட்சி? வலதா? இடதா?) மதிப்பளிப்போமா? கலந்துரையாடலுக்கு இடமளிப்போமா? வரலாற்றை புரிந்துகொண்டு தத்துவார்தத்தை தேடிப்போவோமா? மனிதநேயத்தை உயர்த்திப்பிடிப்போமா?

  Reply
 • மாயா
  மாயா

  குகபிரசாதம் , வங்கம் தந்த பாடம் எப்போது வந்ததென்பதல்ல முக்கியம் அது எப்போது இந்திய அரசின் கைகளுக்கு சென்றது. அல்லது கண்டு கொள்ளப்பட்டதென்பதே முக்கியம். அது ஆயுதம் எப்போது தயாரித்தது என்பதன் முக்கியத்தை விட அது எப்போது பயன்படுத்தப்படுகிறது என்பதே முக்கியம்.

  // புலிகளுக்கு முன்னரே சக போராளிகளை புளொட் சித்திரவதை செய்ய தஞ்சாவூரில் உள்ள ஒரத்தநாட்டில் சித்திரவதை முகாம் ஆரம்பித்தது நாம் மறக்க முடியாதது.//

  புளொட் மட்டுமல்ல, அனைத்து இயக்கங்களும் போராளிகளாக இணைந்திருந்தவர்களை, இந்தியாவில் வைத்து ஒரு சில காரணங்களுக்காக கொலை செய்தே இருக்கிறது. அவை புளொட் , தஞ்சாவூரில் வைத்து செய்த கொலைகள் போல வெளிவரவில்லை. T3S (தமிழீழ சோசலிஸ சமூக கல்வி அரசியல் பயிற்சி) என சென்னையின் கே.கே.நகர் அம்மன் கோவில் அருகே இருந்த MGR சத்துணவுத்திட்ட மண்டபத்தில் நடத்தப்பட்ட போதுதான் அதிகமான தோழர்களால் மனம் திறந்து பேச முடிந்தது. இது பல முகாம்களில் இருந்த உட் பிரச்சனைகளை வெளிப்படையாக பேச வழி செய்தது. இதற்கு முன்னமே உரத்தநாடு உட் கொலைகள் நடந்தேறியிருந்தன. இதைச் செய்தவர்களை விட யாரும் இதை நியாயப்படுத்தியதில்லை. உமாவின் கட்டுப்பாட்டை மீறிய செயலாகவே என்னால் காண முடிந்தது. பல கொலைகள் முடிந்த பின்னே , உமாவுக்கு தெரியப்படுத்தப்பட்டது. அதுவும் பெரியவரை கொல்ல சதி செய்யப்பட்டது என பொய்யாக சோடிக்கப்பட்டே உமாவிடம் தெரிவிக்கப்பட்டது. அந் நேரத்தில் இறந்தவர்களுக்காக கதைப்பதா ? அல்லது இருப்பவர்களுக்காக கதைப்பதா? என உமா திணறியதை உணர முடிந்தது. அதுவே புளொட்டின் வீழ்ச்சிக்கும் சிதறலுக்கும் முதல் அடி கோலியது. அடுத்து voice of tamileelam (தமிழீழத்தின் குரல்) வானோலியில் இருந்தவர்களது வெளியேற்றம் , புளொட்டின் வெளிநாட்டு ஆதரவாளர்களை உதவ விடாமல் தடுத்தது.

  சென்னையில் இருந்து தமிழீழத்தின் குரல் வானோலிக் கலையகம் , தஞ்சாவூர் நடிகர் டி.இராஜேந்தர் வீட்டுக்கு இடம் மாறிய போது அங்கு பணியாற்றிய பலரது மனங்களில் சந்தேகங்கள் ஆரம்பித்திருந்தன. வானோலிக்கு பொறுப்பாகவிருந்த திவாகரன் (பாரீஸ் ஈழ முரசிலும் பின்னர் TTNனிலும் இணைந்த சிவா சினப்பொடி) மேல் எவருக்கும் பெரிதாக நம்பிக்கை இருக்கவில்லை. அவருக்கு இரண்டாவதாக இருந்த இருந்த கோபி(கண்ணியா) மீது அனைவரும் நம்பிக்கையோடு இருந்தனர். இங்கு கூட வாத்தி (மட்டக்களப்பைச் சேர்ந்தவர். இவர் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார்.) மற்றும் வினோத் சிவா ( லண்டன் IBCயில் நகழ்ச்சிகளைக் கொடுத்த மல்லாவி பரமசாமி காந்தன் மற்றும் திவாகரன் (சிவா சின்னப்பொடி)ஆகியோரிடையே வானோலிக்கான தலைமைத்துவம் குறித்த போட்டிகள் நிழலாக தொடர்ந்து கொண்டேயிருந்தது. இங்கே கோபி மட்டுமே கழகத்துக்கு நேர்மையாக உழைத்தார் எனலாம். ஆங்கில விடயங்களை செய்த ஷேர்லி ( ஜெர்மன்/ இரத்மலானை கந்தையா)நடத்துவதோடு , வேறு சில பணிகளை செய்து கொண்டிருந்தார். சில குளறுபடிகளுடன் சென்னையில் வானோலி நடத்தப்பட்ட இக் காலத்தில்தான் சிங்கப்பூர் பிரசாத் ( நிக்கவரட்டிய பிரசாத்)உமாவால் அழைத்து வரப்பட்டு உள்ளே விடப்பட்டார். இக் காலத்தில்தான் லண்டன் சித்தார்த்தரும் , கிருஷ்ணனும் கொண்டு வந்த ஒளிப்பதிவுக் கருவிகளை வைத்து “வானவில்” என போராளிகளின் முதலாவது தொலைக் காட்சி உருவானது. இதற்கான முழுக் கட்டுப்பாடும் உமா மற்றும் பிரசாத் இருவருக்குள்ளும்தான் இருந்தது. உமா கேட்டுக் கொண்டதற்கு இணங்க MGRன் உதவியோடு பிரசாத் , அடையாறு திரைப்படக் கல்லூரிக்கும் சில காலம் செல்ல முடிந்தது. சிலர் புலிகளுக்குத்தான் MGR நெருங்கியவர் என நினைக்கின்றனர். அது முற்று முழுதான தவறு. MGR , பிரபாகரனை சொல் கேட்கும் ஒருவராகவும் , உமாவை (முகுந்தனை) அரசியல் விஷயம் தெரிந்த தொலைநோக்கு கொண்டவர் என்றும் கருதினார். இக் கருத்தை உமாவோடு பேசும் அல்லது பேசிய தமிழக அனைத்து அரசியல்வாதிகளும் சொல்வார்கள். அது அனைத்து இலங்கை தமிழ் அரசியல் தலைமைகளுக்கும் கூட தெரியும். உமாவின் வார்த்தைகளில் வந்த தீர்க்க தரிசன வார்த்தைகள் இன்றும் நிஜம். இருந்தாலும் தனக்காக என்று தவறு செய்தவர்களை உமா காக்க முயற்சித்ததே அவர் செய்த பெரும் தவறாகும்.

  1985களில் பெரியவரது படங்களை கழுத்தில் போட்டு தலைமை விசுவாசத்தை வளர்க்க சிலர் முற்பட்டனர். இவர்கள் கழகத்தை விட தலைமைக்கான விசுவாசம் என்பதில் தம்மை மேன்மைப்படுத்திக் கொள்ள முயன்றதை என்னைப் போன்ற , என் நண்பர்கள் கருத்துகளை முன் வைத்தார்கள். வைக்கிறார்கள். உமா, கழகத்தின் செயலதிபர் என்பதில் எமக்குள் கருத்து முரண்பாடு இருந்ததில்லை. ஆனால் தனி மனித வழிபாடு அல்லது தலைவருக்கான கழகம் என்பதில் உடன்பாடு இல்லாமை அரசியல் பயிற்சி நெறிகளால் உருவானது. தோழர்களது சந்திப்புகள் மற்றும் உறவுகள் , மனம் திறந்து பேசுதல் ஊடாக தெரிய வந்தது.

  இவற்றை அடிப்படையாகவே பின் தள மாநாட்டின் பின்னர் முகாம்களை விட்டும் ,தஞ்சாவூரில் இருந்த வானோலியை விட்டும் தோழர்கள் வெளியேறிய போது , அவர்கள் கழகத்தின் பிரச்சனைகளை உலக நாடுகளில் உள்ள ஆதரவாளர்களுக்கு அறிவித்து விட்டே வெளியேறினார்கள். அதுவே வெளிநாட்டு உதவிகளை இல்லாமல் செய்தது. வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த பல படித்த தோழர்கள் கூட வெறுத்துப் போய் வெளியேறினார்கள்.

  புளொட்டில் இருந்த தோழர்களுக்கு இருந்தது போன்ற தொடர்புகள் , வேறு இயக்க போராளிகளுக்கு பெரிதாக இருக்கவில்லை. இன்றும் முழுமையாக இல்லை. பணத்தோடு பட்டுவாடா செய்யும் கூட்டங்கள் மட்டுமே வேறு இயக்கங்களில் இன்றும் தொடர்போடு இருப்பவர்கள். உமா மற்றும் பிரபாவை MGR க்கு அறிமுகம் செய்து வைத்த , எம்ஜீஆரின் நெருங்கிய நண்பராக இருந்த நமது கழகம் சோமசுந்தரம், உலகத் தமிழ் பேரவை ஜனார்த்தனன் , ( ஜனார்த்தனனுக்கு 1980களில் ஒரு வேலைக்காக கொடுத்த 1 லட்சம் கழகத்துக்கு திருப்பித் தரப்படவில்லை) தா. பாண்டியன் , ஆகியோர் அனைவரும் புளொட்டின் முக்கிய அனுதாபிகள். எம்ஜீஆரோடு பிணக்குப் பட்டு சோமசுந்தரம் நமது கழகம் எனும் கட்சியை தொடங்கினார். இவரது தொகுதியில்தான் அனைத்து போராளிக் குழுக்களது பெரும்பாலான பயிற்சி முகாம்களும் இருந்தது. உமா மற்றும் பிரபா பாண்டி பஜாரில் வெடி வைத்துக் கொண்ட போது ” என் ரெண்டு பசங்களும் நடு ரோட்டில் வெடி வச்சுக்கிட்டு சாவ போறானுகளே?” என கண்ணீர் மல்கினார். பலரது அவர்களது நலன் கருதி பெயர்களை இணைக்க நான் விரும்பவில்லை.

  கழகத்தின் வீழ்ச்சிக்கு ஆரம்ப காலம் தொட்டு பெரியவர் (உமா) மேல் பாசமாக இருந்தவர்கள் காரணமானார்கள் என்பதை கழகம் மீளாய்வு செய்யாது சுயவிமர்சனம் செய்யாது போனால் புலத்தில் புளொட்டாக தம்மை அடையாளப்படுத்திக் கொள்வோரால் மற்றொரு அழிவுக்கு வழி கோலப்படும் என்பதை இத் தருணத்தில் சொல்லியே ஆக வேண்டும். இங்கும் கழகம் முக்கியமா அல்லது தனி மனித வழிபாடு அல்லது நட்பு முக்கியமா என்பதை சிந்திக்க வேண்டிய தருணமாகவே கருதச் சொல்கிறேன்.

  நாங்கள் எவருமே கழகத்தை வளர்க்க போராட்டத்தில் இணையவில்லை. நாம் தலைமைத்துவம் பெற போராட்டத்தில் இணையவில்லை. நாம் மக்களுக்காகவே போராட்டத்தில் இணைந்தோம் என்றால் , பதவிகளை எதிர்பார்க்காமல் மக்களுக்காக சேவை செய்ய மீண்டும் ஒன்றிணைய வேண்டிய தருணம் இதுவென்றே கருதுகிறேன். புலத்தில் கழகம் , கழகத்தின் கொள்கைள் தெரியாதவர்களால் நடத்தப்பட்டு வந்தது. அவற்றை நடத்திய பலர் , தலைமை விசுவாசம் போன்றவற்றை முன்னிலைப்படுத்தியே இயங்கி வந்துள்ளனர். வர முயல்கின்றனர். இவர்களை ஒதுக்க நான் சொல்ல வரவில்லை. அதற்கான மாற்று வழிகள் உள்ளன. தனி மனித முடிவுகள் எடுக்காமல் , ஒரு நிர்வாக சபையூடாக செயலாற்றும் கட்டுப்பாட்டுக்குள் இவை உடனடியாக கொண்டு வரப்பட வேண்டும். அதற்கான காலம் கனிந்துள்ளது.

  //(மாணிக்கம், கந்தசாமி, வாமர்,பாபுஜி, செந்தில்)//

  இவர்களுடன் சேர்க்க வேண்டிய பலர் தவறவிடப்பட்டுள்ளார்கள். வாமர் , பாபுஜி தவிர, மேலே உள்ளவர்கள் இறந்து விட்டார்கள். இவர்களது படங்களை வைத்து சிலர் , வீரமக்கள் தின நிகழ்வுகளை நடத்தும் போது எம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என என் நண்பன் நேற்று சொன்ன போது , அவன் பேச்சில் இருந்த 100 சதவீத உண்மையை மறுக்க முடியவில்லை. உமாவின் சாவுக்கு இவர்கள்தான் வித்திட்டார்கள் என தெரியாமல் , உமாவுக்கு பக்கத்திலேயே வைத்து பூஜிக்கிறார்கள்? என்ன கொடுமை?

  கனடாவில் கழகத்தின் நிர்வாக சபை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதுபோல சுவிஸ் , ஜெர்மனி , லண்டன் , பிரான்ஸ்……………. என உருவாக்கங்கள் தொடர வேண்டும். சண்டித்தனங்களோடு மக்கள் சேவை செய்ய முடியாது. கூடாது. அது சங்கிலி கந்தசாமி, மாணிக்கதாஸன் , செந்தில் போன்ற சண்டியர்களை ஏற்றுக் கொண்டு தனது சாகாக்களாலேயே கொல்லப்பட்ட உமாவின் நிலைக்கு கழகத்தை தள்ளிவிடும். இனி புலத்தின் மாற்றங்கள் ,களத்தின் நிலையை பலப்படுத்த வேண்டும். இது குறித்து விவாதியுங்கள்.

  பொத்துவில் கனகரத்தினம் கொலைக்கு மாயா ஓடவில்லை. வேறு ஒரு தாக்குதலுக்கு மாயா பொறுப்பு. அது தமிழர் கொலைகளாக இல்லை. வாமர் , இன்று வாழவும் மாயா பொறுப்பு. ஒரு மணி நேரம் கழிந்திருந்தால் வாமர் , சென்னையில் கொல்லப்பட்டிருப்பார். இதில் பகிடி என்னவென்றால் , வாமர் பம்பாய்க்கு சென்று கெப்டன் குமாராக , (நாயகன் பட கதாநாயகன் ரேன்ஜில்) வாழும் போது , சந்திக்கச் சென்ற நான் ,வாமரைக் கொல்ல வெளிக்கிட்டவர்களுக்கு வாழ்வு கொடுத்துக் கொண்டு வாழ்வதைக் கண்டு சிரிப்பாக இருந்தது. இதுதான் உலகம் என வாமரிடம் சொன்னேன். வாமரின் குடும்பத்தினரை கனடாவிலும் சந்தித்தேன்.

  //வங்கம் தந்த பாடம் வெளியிடப்பட்டது சந்ததிதியாரின் தனி மனித முடிவும் அல்ல. சந்ததியார் இலங்கைக்கு மற்றைய தீபொறி தோழர்களுடன் சென்று இருந்தால் கந்தசாமியால் சித்திரவதை செய்து கொல்லப்பட்டிருக்கமாட்டார். புளொட்டின் மத்திய குழுவில் சேகர் என்ற றோவின் இரகசிய ஆள் புளொட்டுக்கு தெரியாமலேயே ஆரம்பம் முதல் சகல விடயங்களையும் றோவுக்கு தெரியப்படுத்தி வந்தார் சேகரை கூட றோவென்று தெரியாத முட்டாள்தான் உமா மகேஸ்வரன்//

  சந்ததியார் , வடபழனியில் வைத்து அகப்பட்டு , சூழைமேடு மாயானத்தில் வைத்து உமா, கந்தசாமி , இடி , வாமர் , வாசுதேவா ஆகியோருடன் இன்னும் சிலரும் சென்றனர். அங்கே நடந்த சிறியதொரு விசாரணையின் பின் வெடி வைத்துக் கொல்லப்பட்டார். முக்கியமான கேள்வியாக கேட்கப்பட்டது ” ஆயுதக் கப்பலை காட்டிக் கொடுத்தது நீர்தானே?” என்பது. ஆம் என்பது அவரது பதில்.

  // சென்னையில் பிடிபட்ட புளொட்டின் ஆயுதங்கள் எல்லாம் யுத்தகளத்தில் இலங்கை படையினருக்கு எதிராக பயன்படுத்த முடியாதவை. அடைவுகடை கொள்ளை அடிக்கவும் ஆட்களை போடவும்தான் அந்த ஆயதங்கள் பிரயோசனமானவை.- குகபிரசாதம்//

  2 ஷொட்கன்கள் ( அதுவும் புத்தளம் உடப்பு வாசிகளது) 1 SMG , 2 கைத்துப்பாக்கிள் மற்றும் சில கிரனெட்டுகளுடன் நிக்கவெரட்டிய வங்கி , போலீஸ் நிலையம் மற்றும் கொமியுனிகேஷன் டவர் ஆகியவற்றை தகர்த்த தாக்குதல் சிங்களப் பகுதிகளின் முதலாவது தாக்குதலாகும். கழகத்துக்கு உயிரிழப்புகள் இல்லை. 1985ம் ஆண்டு கழகம் நிக்கவரட்டியாவில் எடுத்த ஆயுதங்கள் அப்போதைய ஆனமடு, குருநாகல் , புத்தளம் , சிலாபம் மற்றும் கல்பிட்டி போலீஸ் மற்றும் கடற்படையை தாக்க போதுமானது. பாதி ஆயுதங்கள் பின் தளத்துக்கும் பாதி ஆயுதங்கள் தளத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. அன்றைய நிலையில் கப்பலில் பிடிபட்ட ஆயுதங்கள் அதிகம். அதை வைத்து நடத்தும் தாக்குதல்கள் வழி , இலங்கை படையினரின் ஆயுதங்களை பெற்றிருக்க முடியும். அன்று போலீசாரோ அல்லது படையினரோ இன்று போல் ஆயுத பலத்தோடு இருக்கவில்லை. JVP யினர் கூட பெற்றோல் குண்டுகளை வைத்தே பல போலீஸ் பகுதிகளை தம் வசப்படுத்தியிருந்தனர்.

  கடைசியாக சேகர் யாராக இருந்தாலும் , அவர் புளொட்டின் பயிற்சியாளர். அவரது செயல்பாடு அவர் இருந்த முகாமுக்குள் மட்டுமே இருந்தது. அதற்கு வெளியே நடப்பது அவருக்கு மட்டுமல்ல, எவருக்குமே தெரியாது. எனக்கு தெரிந்தது மற்றவர்களுக்கு தெரியாது. இப்போது வரை நாங்கள் யாரையும் நம்பி , கதைத்ததேயில்லை. இன்று நண்பர்களாக கதைக்கும் போது பல விடயங்கள் பரிமாறப்படுகின்றன. அவற்றில் இங்கே 0.1 வீதம் கூட எழுதப்படவில்லை. கடல்………

  Reply
 • suganthyarumugam
  suganthyarumugam

  wait…wait… i have to vomit, every time when i read these Diaspora Tamil’s fact finding mission reports. everything has started because of this mad tamil.

  what a nice Sinhalese regime? no discrimination no massacres , no humanists violations.thanks god. hope those people who lost their life will forgive these people

  Reply
 • selva
  selva

  நானி நீங்கள் சொன்னது உண்மைதான். புளொட்டில் உமாவை சுற்றியிருந்த கூட்டம் சிறையுடைப்பில் வெளியில் வந்தவர்கள். பிற்காலத்தில் நாங்கள் கவலைப்பட்டது சிறையை உடைக்காமல் விட்டிருந்தால் புளட் உருப்பட்டிருக்கம். இவர்களுக்கு அடுத்ததாக நின்ற தளபதிகளும் அவர்களின் செயற்பாடுகளும் புளொட்டை உயர்த்தியிருக்கும்
  தோளர் செல்வராஜா தோளர் ராஜீவ் தோளர் சுந்தரலிங்கம் தோளர் டேவிட் தோளர் சுனில் இவர்கள் நடந்து கொண்ட முறையும் போராளிகளை பயிற்றுவித்த விதமும் முற்றிலும் மாறுபட்டது. இவர்கள் தலைமை கொடுத்திருந்தால் தமிழ்மக்களுக்கு ஏதாவது செய்திருப்பார்கள்

  Reply
 • Naane
  Naane

  செந்தில்,
  கனகரட்ண‌ம் எம்.பி சுதந்திரக்கட்சிக்கு மாறியதும் கனகரட்ணத்தை சுட உமா பிரபாவைக் கூட்டிக்கொண்டு கொழும்பிற்கு சென்றார். உமாவிற்கு ஏற்கனவே கனகரட்ணத்தை பழக்கம்,கொழும்பில் இருந்ததாலும் தமிழர் பேரவையில் இருந்ததாலும். எனக்கு கனகரட்னத்தை பழக்கம் என்றபடியால் நான் பேசிக்கொண்டிருக்கும் நீ சுடு என பிரபாவிற்கு சொல்லியிருந்தார்.அங்கு போனதும் கனகரட்னத்திற்கு பிரபாவை தனது நண்பர் என்று அறிமுகம் செய்ய கனகரட்னத்தின் அன்பான வரவேற்பில் பிரபா சற்று தடுமாறிவிட்டார்.உமா மெல்ல பிரபாவிற்கு கண்காட்ட நிலமையை சற்று விளங்கிக்கொண்ட கனகரட்னம் டீ கொண்டு வருவதாக மெல்ல எழும்பியிருக்கின்றார்.பிரபா உடனே சுட்டிருக்கின்றார், இராணுவத்தில் முன்பிருந்த அனுபவத்தில் உடனே விழுந்துபடுத்து அப்படியே ஓடி விட்டார். இருந்தாலும் காலில் குண்டு பாய்ந்திருந்தது

  பின்னர் இருவரும் பயத்தில் மலையகம் சென்று மூன்று மாதம் தங்கியிருந்தார்கள். இதன் பின்னர் தான் சி. ஜை. டி. கொள்பிட்டியில் உள்ள நாகராசா வீட்டிற்கு பாய்ந்தது. நாகராசவை பின்னர் ஒரு முறை இந்தியாவில் சந்தித்தேன். ஒரு முந்நாள் எம் பி யின் மகளை கல்யாணம் செய்து இருக்கின்றார். பிரபா தன்னை அரசியல் கதைச்சாலோ,செய்தாலொ வெடி என்றுதான் வெளியில் விட்டவராம். வாய் திறக்க மாட்டேன் என்றார். தலைவருக்கு அந்தளவுக்கு கட்ஸ் இருந்திருக்கு.

  Reply
 • மாயா
  மாயா

  //தலைவருக்கு அந்தளவுக்கு கட்ஸ் இருந்திருக்கு.//

  இதுக்கு பெயர் கட்ஸ் இல்லை. மாபியாதனம். அதனால்தான் மண்டையில போட்டது. சொறி…கொத்தினாங்கள். ‘நீ என்ன செய்கிறாயோ. அது உனக்கும் கிடைக்கும்’. சுவர்க்கம் – நரகம் எல்லாம் இங்கதான். இனியாவது பார்த்து நடங்கோ.

  Reply
 • Anonymous
  Anonymous

  திம்பு பேச்சு வார்த்தை முறிவடைந்ததும் ராஜீவின் கட்டாயத்தில் அனைத்து தலைவர்களும் டெல்கிக்கு அழைக்கபட்டார்கள்….Naane on October 29, 2009 5:23 am

  நடந்த சம்பவம்.
  கூட்டத்திற்கு காத்திருந்த இயக்கத் தலைவர்கள் முன்பே மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சில கணங்களில் ஒளி வந்த போது அத்தனை தலைகளும் ஆடாது அசையாதிருக்க, திறந்து கிடந்த அறைக் கதவின் பின் பதுங்கி நின்றது ஒரேயொரு தலை.
  கொத்திப் போகிற தலையல்ல அது.

  Reply
 • chandran.raja
  chandran.raja

  மர்மக்கதை வாசிக்கும் போல் உள்ளது. பொதுநோக்கு கருதி கொஞ்சம் விபரமாகத்தான் சொல்லுங்களேன் அனோமிமவுஸ்.

  Reply
 • Anonymous
  Anonymous

  நண்பனே! அது கதையல்ல,மர்மக்கதையல்ல. ஒரு நடந்து போன சம்பவம். விடையத்தை படிக்க நினைவுக்கு வந்தது. அவ்வளவே.

  Reply
 • santhanam
  santhanam

  பல்லி மாயாவின் பின்னோட்டத்தில் உண்மையுடன் உலாவந்துள்ளது.அவர் தான் சேகர்.

  Reply
 • பல்லி
  பல்லி

  //மர்மக்கதை வாசிக்கும் போல் உள்ளது.//

  கழுகு இயக்கம்;
  தமிழ்ஈழ தேசிய விடுதலை முன்னனி,
  தமிழ்ஈழ மக்கள் விடுதலை கழகம்,
  ஈழ மக்கள் புரட்ச்சிகர விடுதலை முன்னனி,
  இலங்கை சுகந்திர தமிழ் ஈழம்;
  ஈழ விடுதலை புலிகள்;
  ஈழ ஆய்வு நிறுவனம்;
  ஈழ புரட்ச்சிகர அமைப்பு;
  ஈழ தேச ஜனனாயக முன்னனி;
  ஈழ மக்கள் விடுதலை முன்னனி:
  ஈழதேச விடுதலை முன்னனி;
  தமிழ் ஈழ விடுதலை புலிகள்.
  தமிழ் ஈழ கெரில்லா ராணுவம்;
  ஈழ விடுதலை அமைப்பு;
  ஈழ விடுதலை பாதுகாப்பு முன்னனி;
  தமிழ் மக்கள் பாதுகாப்பு முன்னனி;
  தமிழ் மக்கள் ஜனனாயக முன்னனி;
  தமிழ் ஈழ விடுதலை இயக்கம்;
  தமிழ் ஈழரானுவம்;
  செம்பிறை கெரிலாக்கள்;
  தமிழ் மக்கள் ஆணை பிரிவு,
  தமிழ் ஈழ விடுதலை பாம்பு;
  தமிழ் ஈழ கழுகுகள் முன்னனி;
  தமிழ் ஈழ விடுதலை தீவீரவாதிகள்:
  தமிழ் ஈழ குருதி இயக்கம்;
  தமிழ் ஈழ பாதுகாப்பு சேவை பிரிவு;
  தமிழ் ஈழ விடுதலை கெரிலாக்கள்.
  தமிழ் ஈழ தேசிய ரானுவம்;
  தமிழ் ஈழ விடுதலை முன்னனி;
  தமிழ் ஈழ விடுதலை ரானுவம்;
  சோசலிச புரட்ச்சி விடுதலை;
  புரட்ச்சிகர ஈழ விடுதலை இயக்கம்;
  இந்த அமைப்புகளின் தலைவர்கள் யார்? இப்போது என்ன செய்கிறார்கள், எங்கே இருக்கிறார்கள்? விடை தேடுங்கள் (பல்லியும்தான்) தமிழ் மக்களை விடுதலை என்னும் மாயையை காட்டி எப்படி ஏமாத்தினார்கள்; ஏமாத்துகிறார்கள் என தெரியும், மேலே குறிப்பிட்ட சில அமைப்பை சேந்தவர்கள் தான் இன்றய பல புலம்பெயர் புத்திஜீவிகள், சிலரிடமும் கழகத்தை பற்றி மாயாவிடம் கேட்ப்பது போல் பல கேள்விகள் கேக்கவேண்டும், தயவு
  செய்து தவறவிட்ட அமைப்புகளை நண்பர்கள் தெரிய படுத்தவும், பின்பு தம்மை எப்படி பல்லி தவறவிடலாம் என சர்வதேச கோட்டில் பல்லியை நிறுத்தி விடுவார்கள், இதில் பல கொள்ளையர்களும் இனம்கான படுவர், ஆகா பல்லி வைச்சிட்டானைய்யா ஆப்பு என பலர் நினைக்கலாம், இருப்பினும் உங்கள் விடுதலை பற்றி எதிர்கால சந்ததி அறிய இது ஒரு வாய்ப்பல்லவா??
  தொடரும் பல்லி;;

  Reply
 • பல்லி
  பல்லி

  :://பல்லி, சேகரை ஒரு வருடத்துக்கு முன்னர் ஈரல் கருகி இறந்துபோன முன்னாள் புளொட் உறுப்பினரின் மரணவீட்டில் காணமுடிந்தது. குறித்தவரின் கல்வெட்டை இந்த சேகரே தயாரித்து வடிவமைத்து அந்தியெட்டிகிரியையிலும் வெளீயிட்டிருந்தார்//
  செந்தில் இறந்தவர் யார்? அவருக்கேன் இவர் கல்வெட்டை செய்தார்,
  திரும்பவும் பல்லிக்கு குழப்பம்தான் ,ஈரல் கருகியா?? அதெப்படி??

  Reply
 • பல்லி
  பல்லி

  நானே; உங்களிடம் ஒரு கேள்வி?
  கழகத்தின் செயற்குழு உறுப்பினர்கள் யார்??
  அவர்களில் யார் யார் உயிருடன் இருக்கிறார்கள்; கிடைத்த சந்தர்ப்பத்தை விட பல்லிக்கு விருப்பம் இல்லை;

  Reply
 • மாயா
  மாயா

  //கழகத்தின் செயற்குழு உறுப்பினர்கள் யார்??//
  அநேகர் உயிரோடு இல்லை. 2-3 பேருக்கு மேல் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை. அவர்களை விரைவில் தேடலாம். இப்போது தொடர்புகள் உருவாகி வருகின்றன. சில தகவல்கள் கசிந்தால் , அவர்களை பிடிப்பது கடினமாகிவிடும். பொறுங்கள். வரும்.

  Reply
 • chandran.raja
  chandran.raja

  என் கணக்கில் பல்லி முப்பத்தியாறு இயக்கம். நீர் திரும்பவும் தவறு விட்டுவிட்டீர். கையில் கிடைத்த கைத்துப்பாக்கியை கொண்டு வங்கியை
  கொள்ளையடிக்க புறப்பட்ட செம்படை இயக்கத்தை செம்பிறை இயக்கமாக மாற்றியுள்ளீர். மிகுதி இரண்டையும் எங்கே? தவறவிட்டீர்?.
  பொதுநலத்தின் பெயரிலோ ஒரு இனத்தின் பெயரிலே தன்சுயநலத்திற்காக போராட்டம் நடத்துபவன் மனிதஜீவன்களுள் அக்கறைகொண்ட மனிதஅல்ல.
  தமிழ்மக்களின் துன்பத்திற்கு சிங்களஅரசும் சிங்கமக்களும்தான் காரணம் என கூறிபோராட்டம் நடத்தி தம்மையை இழந்துபோனவர்கள் ஏராளம்.
  பல்லி எப்பபார்தாலும் மற்றவர்களை கொழுவலுக்கு இழுக்கிறது சம்பிரதாயமாக போயிற்று. பல்லி முப்பதாறு இயக்கங்களும் இயங்கிக் கொண்டிருக்கம் போது நீர் எங்கு இருந்தீர்?.
  சந்திரன்ராஜா இலங்கையில் இருந்திருந்தால் எப்போ மரம்தளைத்து விழுது விட்டிருக்கும்.நான்சொல்வது இயற்கையின் வளர்ச்சியைப்பற்றி. அதாவது மயானத்தைப் பற்றி மாயாவைப்பற்றி குறை சொல்வதற்கு யாருக்கு உரிமை இருக்கிறது?. எனக்கும் இல்லை. பல்லி நீர் எங்கிருந்தீர்?.

  Reply
 • UMAMAHESWARAN
  UMAMAHESWARAN

  AND ONE MORE MISSING WHICH NLFT.

  Reply
 • palli
  palli

  //பல்லி நீர் எங்கிருந்தீர்?.//
  (1) படித்து கொண்டு இருந்தேன்;
  (2)ஏதோ ஒரு அமைப்பில் இருந்தேன்;
  (3)மக்களோடு மக்களாய் இருந்தேன்:
  (4)அனைத்து அமைப்புக்களுக்கும் அன்புக்கு உரியவனாய் இருந்தேன்;
  இதில் சந்திராவுக்கு எது பிடிக்குதோ அதை எடுத்து கொள்ளவும்;
  இத்தனை பின்னோட்டத்துக்கு பின்னுமா பல்லி எங்கு எப்படி இருந்து இருக்கும் என்பது புரியவில்லை,

  Reply
 • chandran.raja
  chandran.raja

  ஒரு கோணங்கி பயல் சில உண்மைகளையும் சொல்லிவிட்டு போய்விட்டான்.
  ஆட்டிவித்தால் யார்ரெருவன் ஆடாதாரோ கண்ணா?
  மனிதன் என்பவன் தெய்வமாகலாம்.
  பாதிமனிதன் பாதிமிருகம்.
  பூஜ்யத்திற்குள்ளோ இராஜ்யியத்தை வைத்தான்.
  இவைகள் எல்லாம் சாதரண வார்தைகளா? மனிதநாகரீகத்திலும் உலகஇலக்கியத்திலும் எடுத்து கையாண்ட வார்த்தைகள் அல்லவா? ஆனபடியால் தான் கவியரசு என்ற பெயரையும் எடுத்தான்.

  பல்லி மேற்சொன்னவை சம்பந்தம் இல்லாது தெரிந்தாலும் சம்பந்தம் இருக்கிறது என்பதை புரியவைப்பதற்காக தான் குறிப்பிடுகிறேன். புரிந்து கொள்வதும் புரியாததும் உங்களைப் பொறுத்தது. இதுவாதத்திற்கு உரியதளம். யாரும் எதையும் வாதிக்கலாம். மற்றவரை சிலுவையில் ஏற்றுவதற்கு எமக்கு என்ன உரிமையிருக்கிறது?. உண்மையை வெளிக்கொண்டு வருவதாக இருந்தால் பல்லியையும் சிலுவையில் எற்றவேண்டும. சந்திரன் ராஜாவும் சிலுவையில் ஏறத்தயாராக இருக்கவேண்டும்.

  Reply
 • palli
  palli

  //உண்மையை வெளிக்கொண்டு வருவதாக இருந்தால் பல்லியையும் சிலுவையில் எற்றவேண்டும//
  மீண்டும் ஒருதரமா?? வயதான உடல் தாங்காது; வேண்டாம் அந்த பொல்லாப்பு;

  Reply
 • மாயா
  மாயா

  இங்கே 7tela (செவன்டெலா)என்ற அமைப்பும் விடுபட்டுள்ளது. இவர்களும் டெலோவிலிருந்து பிரிந்து வாழ , செவன்டெலா என செந்தில் (புளொட் செந்தில் அல்ல கட்டை செந்தில்) என்பவர் தலைமையில் புளொட் உதவியோடு இந்தியாவில் இயங்கினார்கள். பின்னர் இவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை? அதுபோல பல பிரிவுகளாக சிலர் இயங்கியிருக்கலாம். அவர்களது தகவல்கள் அவற்றில் இருந்தவர்களையோ அல்லது அவர்களுக்கு உதவியவர்களையே விட பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. புலத்தில் கூட சிலர் ஏதேதோ பெயர்களில் இயங்குகின்றனர். அது ஒருவரால் அல்லது ஒரு சிலரால் உருவாக்கப்பட்டதாக இருக்கிறது. மக்களுக்காக உண்மை சேவை மனப்பான்மையோடு இயங்குவோர் குறைவு.

  Reply
 • chandran.raja
  chandran.raja

  இங்கு பலியாகப் போவது கருத்து மட்டும் தான். உடம்பு அல்ல. அப்படியிருந்தால் மிருகத்திற்கும் எமக்கும் உமக்கும் ஏன்? தேசம்நெற்றுக்கும் தான் என்ன சம்பந்தம்?

  Reply