இந்தோனேஷியாவில் கைதான இலங்கையர்களை நாட்டுக்குத் திருப்பி அழைத்துவர அரசு நடவடிக்கை

14indonesia.jpgஇந்தோனே ஷியாவில் கைதான 260 இலங்கையர்களையும் விடுதலை செய்து இலங்கைக்கு திருப்பி அழைத்து வருவதற்கான முயற்சிகளை வெளிவிவகார அமைச்சு மேற் கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு நேற்று கூறியது. இவர்கள் குறித்து சர்வதேச புலம் பெயர் அமைப்புடன் பேச்சு நடத்தி வருவதாகவும் குறித்த இலங்கை யர்கள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவ தாகவும் வெளிவிவகார அமைச்சு கூறியது.

அவுஸ்திரேலியாவுக்கு சட்ட விரோதமாக செல்ல முற்பட்ட இவர்கள் கடந்த 11 ஆம் திகதி இந்தோனேஷிய கடலில் வைத்து கைது செய்யப்பட்டனர். இவர்கள் தமிழில் உரையாற்றிய போதும் கைதான 260 பேரும் இலங்கையர்கள் என இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு உயரதிகாரி ஒருவர் கூறினார்.

இந்தோனேஷியாவிலுள்ள இலங்கை தூதரகத்தினூடாக இவர்கள் பற்றிய விபரங்களை திரட்டவும் இவர்களை விடுவிக்கவும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை கனடாவுக்கு சட்ட விரோதமாக செல்ல முற்பட்ட சுமார் 76 வெளிநாட்டவர்கள் பசுபிக் கடலில் வைத்து நேற்று முன்தினம் (17) கைதாகியுள்ளனர்.  இவர்கள் இலங்கையர்களாக இருக்கலாம் என நம்பப்படுவதாக அறிவிக்கப்படுகிறது. இவர்கள் குறித்த தகவல்களை திரட்டவும் வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

Show More

Your email address will not be published. Required fields are marked *

11 Comments

  • குகபிரசாதம்
    குகபிரசாதம்

    இலங்கையில் இருந்து அண்மையில் அவுஸ்திரேலியா சென்று அகதி கோரிய அலெக்ஸ் என்ற தமிழர் அங்கு தனது அகதிக் கோரிக்கைக்கு மூன்று காரணங்களை சொன்னார். இலங்கையில் தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கற்பழிக்கப்படுவதாகவும் தமிழர் இலங்கையில் உழைத்து குடும்பத்தை காப்பாற்ற முடியாதலால் தனது மனைவியையும் இரண்டு பிள்ளைகளையும் இலங்கையில் விட்டு விட்டு இருபதாயிரம் டாலர் கொடுத்து அவுஸ்திரேலியா போய் சேர்ந்ததாக ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்திருந்தார்

    இலங்கையில் சித்திரவதையும் கற்பழிப்பும் நடப்பதானால் எப்படி தன் மனைவியையும் இரண்டு பிள்ளைகளையும் இலங்கையில் விட்டு விட்டு அவுஸ்திரேலியா இவர் போக மனம் வந்தது. இலங்கையில் உழைக்க வழி இல்லாவிட்டால் எப்படி இவருக்கு இருபதாயிரம் டாலர் கிடைத்தது

    இலங்கைக்கு ஆயிரக்கணக்கானோர் ஆயிரம் வருடங்களாக வள்ளங்களில் வந்தார்கள் போனார்கள் .ஆனால் இலங்கையர் இன்னமும் இன்றும் அதிகமான நாட்டுப் பற்றோடு இலங்கையில் வாழ்கிறார்கள்.

    Reply
  • மாயா
    மாயா

    நாங்கள் புலத்துக்கு வந்து விட்டு , அடுத்தவர்களை ஏன் வருகிறீர்கள் என சிலர் கேள்வி கேட்கும் போது வயிறு குமட்டுகிறது. அடுத்தவனும் வாழத்தான் உயிரை பணயம் வைத்து இந்த முடிவை எடுக்கிறான். அவன் சொல்வதில் கொஞ்சம் பொய் இருக்கலாம். அனைத்தும் பொய்யல்ல? 1983ல் வந்த எத்தனையோ பேர் துரையப்பாவை சுட்டது தான் என்று சொன்ன போது , ஜெர்மனியின் போலீசாரே தலையை சொறிந்தனராம்?

    தவிரவும் ஐரோப்பிய நாடுகளில் , அகதி அந்தஸ்த்து கிடைத்து வாழும் 95 சதவீதமானவர்களுக்கு அரசியல் பிரச்சனையே கிடையாது. பலர் அரேபிய நாடுகளுக்கு வேலைகளுக்கு வந்து , பின்னர் ஐரோப்பிய நாடுகளுக்கு வந்தவர்கள். இந்நிலையில் இன்று அங்கு உள்ள சூழலில் வருவோர் குறித்து பேச எவருக்கும் எந்த தகுதியும் இல்லை.

    Reply
  • பல்லி
    பல்லி

    குகபிரதாசம் தயவு செய்து உங்களை சுய விமர்சனம் செய்யவும்; ஏதோ முள்ளி வாய்க்கால் மூலையில் நின்று பின்னோட்டம் விடுமாபோல் வித்தையெல்லாம் காட்டலாமா? மாயா சொன்னதுபோல் எமக்கு பல விடயத்தை பற்றி பேச அருகதை கிடையாது; அதில் ஒன்று இந்த இந்தினோசியா விடயமும், சில தவறுகளே தவறாக இருக்க மாட்டாது என்பது கூடவா தெரியாது?

    Reply
  • குகபிரசாதம்
    குகபிரசாதம்

    ஐயா பல்லி
    முள்ளிவாய்க்காலுக்கும் எனக்கும் ஏனய்யா முடிச்சு போட்டு எதோ வித்தை காட்டுகிறேன் என்று பழி சொல்கிறீரே? என் இந்த முடிச்சு வேலை உமக்கு?

    Reply
  • குகபிரசாதம்
    குகபிரசாதம்

    பல்லி சுயவிமர்சனம் செய்ய கேட்டதால் என்னை பற்றி இதோ……
    திருகோணமலையில் பிறந்தேன். எங்கட பக்கத்து வீடு மாமா சவுதிக்கு போட்டு இரண்டு வருஷத்தில் ஊருக்கு வந்து பார்த்தால் அவர் போகும்போது அவற்றை வளவுக்கை நின்ற வேம்பும் தென்னையும் அவர் திரும்பி வரக்கை எங்கட வளவுக்குள் நிற்கப் பண்ணி வித்தை காட்டினவன் நான்.

    பரீட்சைக்கு யாழ்ப்பாணத்தில் ரியுசன் படித்து சோதனை பாஸ் பண்ணி தரப்படுத்தலால் பல்கலைகழக அனுமதி கிடைத்து பட்டம் பெற்று நல்ல வேலை எடுத்து பிறகு நல்ல சீதனம் வாங்கி என் தங்கைமாரை சீதனம் கொடுத்து கட்டி வைத்து தம்பிமாரையும் படிபித்து பிறகு முடிந்தளவு எல்லாரையும் லண்டன் சுவிஸ் என்று அனுப்பி குடும்ப பொறுப்பை செவ்வனே நிறைவேற்றி இப்போ என் நாலு பிள்ளைகளையும் டாக்குத்தராகவும் லோயராகவும் வர படிப்பித்து கொண்டிருக்கிறேன்.

    அரசியலை பொறுத்தளவில் நான் சொல்வதோடு உடன்படாத எல்லாரையும் என் எதிரியாகவே சாகும் வரை எண்ணுபவன். பள்ளிக்கூட பழைய மாணவர் சங்கத்திற்கு கடந்த பதினேழு வருடமாக தலைவராக இருக்கிறேன். என்னை அகற்றவும் சிலர் முயற்சித்து பார்த்தனர் முடியவில்லை.
    எங்கம்மா அம்மா உங்கம்மா சும்மா என்பதுதான் என் கொள்கை.

    புலிக்கும் பிச்சை குடுத்தனான். யூஎன்பீயில் கொழும்பில் தேர்தலில் நின்ற தமிழருக்கும் காசு கொடுத்தனான். என் மூக்கு அறுபட்டாலும் பல்லிக்கு சகுனம் பிழைக்க வேணும் என்று செயற்படுபவன் நான். தெருதேங்காய் எடுத்து வழி பிள்ளையாருக்கு அடிக்கிற மாதிரி பிலிம் காட்டி தேங்காயையே வீட்டை கொண்டு வருகிற சுழியன் நான்.

    உங்க ஒருவரிடமும் என்னட்டை இருக்கிற வீடும் காரும் இல்லை. என் மனைவியிடம் இருக்கிற லேடெஸ்ட் நகைகளும் சாறிவகைகளும் வேறு எந்த எங்கட ஊராக்களிடமும் இல்லை. நான் காசை காசு என்று பார்க்காமல் காசை எறிந்துதான் இவ்வளவு காசும் சம்பாதித்தனான். ஒழுங்காக ஒவ்வொரு வெள்ளியும் பத்து யுரோவுக்கு செய்யிற அர்ச்சனையும் இரண்டு சாமிமாருக்கு இரண்டாயிரம் யுரோ குடுத்து பூசையில் வைத்து எடுத்த தாயத்து வேலை செய்யாது விட்டாலும் கூட செத்த பிறகு என்னட்டை இருக்கிற காசுக்கு வழியில் இருக்கிற எங்கட பொடியளிட்ட காசை கொடுத்து தலைமாத்தின புத்தகத்திலையாவது சொர்க்கத்துக்கு போய்சேருவேன் என்ற உறுதியாக இருக்கிறேன்.

    பல்லி இது சுருக்கமான சுய விமர்சனம். உமது விலாசத்தை சொல்லும். விலாசமான விலாசம் என்றால் மேலும் என்னைப்பற்றி உமக்கு சுய விமர்சனம் தருகிறேன்.

    Reply
  • BC
    BC

    இது எங்களுடை புலிப்பிரமுகர்களின் சுய விமர்சனம் அல்லவா!

    Reply
  • மாயா
    மாயா

    // எங்கட பக்கத்து வீடு மாமா சவுதிக்கு போட்டு இரண்டு வருஷத்தில் ஊருக்கு வந்து பார்த்தால் அவர் போகும்போது அவற்றை வளவுக்கை நின்ற வேம்பும் தென்னையும் அவர் திரும்பி வரக்கை எங்கட வளவுக்குள் நிற்கப் பண்ணி வித்தை காட்டினவன் நான்.//

    // செத்த பிறகு என்னட்டை இருக்கிற காசுக்கு வழியில் இருக்கிற எங்கட பொடியளிட்ட காசை கொடுத்து தலைமாத்தின புத்தகத்திலையாவது சொர்க்கத்துக்கு போய்சேருவேன் என்ற உறுதியாக இருக்கிறேன்.
    – குகபிரசாதம் //

    உங்களைப் போன்றவர்கள் இருக்கும் போது , தமிழருக்கு ஏன் விடியவே இல்லை என யாரிடமும் கேட்கத் தேவையில்லை? தலைமாத்தி போக முடிந்தால் பரவாயில்லை. சில நேரம் தலையே இல்லாமல் போகாமல் இருக்க அந்த சூரிய கடவுளை பிராத்திக்கவும்.

    Reply
  • பல்லி
    பல்லி

    குகபிரசாதம் தங்களின் சுருங்கிய விமர்சனமே தங்களுடைய பலஜென்ம சுயசரிதையை சொல்லி விட்டது; தேசநண்பர்களுக்கு புள்ளிதான் வேண்டும், கோலத்தை மிககவனமாகவும் அளகாகவும் போட்டு விடுவார்கள், நீங்களோ புள்ளியை அதிகமாகவே தந்துள்ளீர்கள்; இதை வைத்து பல்லி பலன் சொல்ல வேண்டாமா.
    தாங்கள் ஒரு அன்னகாவடி என்பதை வடிவேலு டுபாய் போய்வந்த காமடியை கொப்பி பண்ணி எங்களை சிரிக்க வைக்க முயற்ச்சி செய்தவிதம்
    அருமை; ஆனால் பல்லியின் சகுனம் தவறும்என போட்ட கணக்குதான் தலைமீது பினாமிகள் வைத்த நம்பிக்கை போல் அவநம்பிக்கையாகி போச்சு;

    //உமது விலாசத்தை சொல்லும். //

    பல்லி;
    26; பிரபா தெரு,
    பொட்டர் குளம்;
    முள்ளிவாய்க்கால்:
    வன்னி பெரும்காடு;
    ரமில் ஈலம்;

    தொல்லைபேசி:1190276:
    எத்தனை பேரின் விளக்குமாத்தில் தப்பிவந்த பல்லியை பதம்பார்க்க தம்பி குகபிரசாதம் முயலலாமா??

    Reply
  • santhanam
    santhanam

    எனக்கொரு சந்தேகம். குகபிரசாதமும் பல்லியும் ஒன்றோ??

    Reply
  • பல்லி
    பல்லி

    அதே சந்தேகம் பல்லிக்கு இதை எழுதியது சந்தானமா என??

    Reply
  • santhanam
    santhanam

    பொட்டர் குளத்து முதலையிலிருந்து தப்பித்தவர் என்றால் நீங்கள் தான் தந்தை முதலை அடுத்த தலைவர் பல்லி.

    Reply