வெற்றி கொண்ட சுதந்திரத்தை நிரந்தரமாகத் தக்க வைத்துக் கொள்வதற்கு மனிதத்துவத்தை மதித்து, நல்ல சிந்தனைகளைக் கொண்ட சிறந்த மக்கள் சமூமொன்றை உருவாக்குவது அவசியம். அதற்கு இத்தீபாவளித் திருநாள் வழி வகுக்குமென பிரதமர் ரட்ணசிறி விக்கிரம நாயக்க தெரிவித்துள்ளார். தீபாவளித் திருநாளை முன்னிட்ட வாழ்த்துச் செய்தியிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- உலகெங்கிலுமுள்ள இந்துக்கள் கோலாகலமாகக் கொண்டாடும் தீபாவளித் திருநாள் சுபீட்சமான மனித வாழ்வின் மகத்துவத்தை சமூகத்துக்கு எடுத்துக் காட்டும் பண்டிகையாகும்.
அநீதியைத் தோற்கடித்து நீதியை வெற்றிபெறச் செய்யும் இறைசிந்தனையை அடிப்படையாகக் கொண்டு தீபங்களை ஏற்றும் இத்தீபாவளித்திருநாள் இருளை வென்று மனித மனங்களில் பரந்த சிந்தனை எனும் ஒளியை உருவாக்கும் பெறுமதியை உலகுக்கு உணர்த்துகிறது. தீயவர்களுடைய செயற்பாடுகளினால் எமது சமூகம் 30 வருடகாலமாக பீடனைகளுடன் கழித்த காலங்களை நாம் மறந்துவிட முடியாது. தற்போது புதுயுகமொன்று உருவாகியுள்ளது.
நற்குணம் படைத்த மனிதர்களினால் இலங்கைத் திருநாடு நிரம்ப வேண்டும். அதற்கு இத்திருநாள் வழிவகுக்கட்டும் என வாழ்த்துவதாகவும் பிரதமர் தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்
Arasaratnam
தீபாவளி திருநாளைக் கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!!